அவள் - 16
அவளுக்கான சந்தோஷம் அவளுக்கு கிடைத்து விட்டது... ஆனால் யார் மனத்தையும் புண்ப்படுத்த கூடாது என்று இருந்தவள் இன்று கை நீட்டி அறைக்கின்ற அளவுக்கு சென்றதுக்கான காரணம்...?
துளசி : போச்சு...🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
சிவா : ஆத்தி நிலாவுக்கு இவ்ளோ கோவம் வருமா... 😮😮😮
அனைவரும் அவளை😳😳😳 அதிர்ச்சியாக பார்த்தனர்...
துளசி : அவளுக்கு அசிங்கமான வார்த்தை ய பேசுனா சுத்தமா பிடிக்காது...நானே ஒரு தடவ தெரியாம ஒரு வார்த்தையை விட்டுட்டேன்... அதை அவ கேட்டுட்டா... அவ்ளோ தான் என்னைய கழுவி கழுவி ஊத்திட்டா... இன்னொன்னு சொன்னா எனக்கு தான் வெட்கம்... ச்சை அப்பவே முடிவு பண்ணிட்டேன்... இனிமே இப்படி பேசக்கூடாது னு... இப்படி பேசுறவங்களை பார்த்தா அவளுக்கு வெறுப்பா இருக்கும்... இதுல அவ புருஷனை திட்டும் போது சும்மா இருப்பாளா...அது தான் விட்டா...
சிவா : ஓஹோ...
நிலா ஜனனி முன் ஆள்காட்டி விரல் நீட்டி "அசிங்கமா பேசுன... நா சும்மா இருக்க மாட்டேன்... யார் யார் கிட்ட எப்படி பேசனும் னு முத கத்துக்கோ... அதுக்கு அப்புறம் நீ குறை சொல்லுவ... இப்படியே பேசிட்டு இருந்தா எப்பவும் போல நா பேசாம இருந்துருவேன் மட்டும் நினைக்காத... அடிச்சா கூட வாங்கிட்டு பேசாம இருப்பேன்... அசிங்கமா பேசுனா எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. this's a first and last warning... Mind it..."என்று எச்சரிக்க...
அனைவரும் அவள் கோவத்தை பார்த்து மிரண்டு நின்றனர்...
திரவியம் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக இருக்க...
சிவா : டேய் திரவியா... என்ன டா உன் பொண்டாட்டி இவ்ளோ கோவப்படுறா...
திரவியம் 😀😀😀 சிரித்துக் கொண்டே "உங்களுக்கு அவ கோவத்தை பத்தி இப்போ தான் தெரியுமா..."என்று கேட்க...
துளசி : அதானே... உங்களுக்கு தெரியாதா...
சிவா : அப்போ உங்க ரெண்டு பேரும் அவ கோவப்படுவா னு தெரியுமா..
நிலா ' என்ன சிவா மாமா நா என்ன எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாம பொம்மையா... எனக்கு எல்லாம் கோவமே வர கூடாதா...
சிவா : அப்படி சொல்லல மா... நீ கோவப்படவே மாட்டீயே தான் கேட்டேன்...
திரவியம் : நல்லா கேட்டீங்க போங்க... சொன்னா வெட்கக்கேடு...
நிலா : ஏங்க 🤫🤫🤫
திரவியம் : சொன்னா என்ன தப்பு... தெரியட்டும் அப்போவாச்சும் கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க...
சிவா : என்ன டா ஆச்சு...
திரவியம் : ஒரு நாள் நா கெட்ட வார்த்தைய சொல்லிப்புட்டேன்... Room க்குள்ள வந்ததும் விட்டா பாருங்க ஒரு அறை ஒரு நிமிசம் கதி கலங்க போயிட்டேன்...
சிவா :என்னது 😲😲😲
துளசி 😄😄😄 சிரித்துக் கொண்டே "உனக்காவது ஒரு அறையோட போச்சு... ஆனா எனக்கு அந்த நாள் முழுக்க அடி தான்... அக்கா என்னால முடியல... நீங்களா இப்படி பேசுறீங்க னு சொல்லி சொல்லியே நினைச்ச நேரம் அடிச்சா...அதுல நொந்து போய் இனிமே கெட்ட வார்த்தையே பேச கூடாது னு முடிவு பண்ணிட்டேன்..."என்று சொல்ல...
சிவா :ஓ அதனால தான் இப்ப எல்லாம் அப்படி பேசுறது இல்லையா... என்ன டா என் பொண்டாட்டி திடீர் னு நல்லா பேசுறா...கெட்ட வார்த்தையே பேசுறது இல்லையே னு யோசிச்சேன்... இப்ப தானே தெரியும் அதுக்காக காரணம் நிலா னு...
நிலா : சிவா மாமா be serious...
சிவா : ok... Sorry... You carry on... I will not bother you...
துளசி : அட நீங்க வேற... சும்மா English பேசிக்கிட்டு... அடியேய் உன் வேலை முடிச்சுருச்சு ல.. யோவ் திரவி நீ சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்ட தானே...வாங்க நம்ம வேலைய பாப்போம்... பஞ்சாயத்து முடிஞ்சுருச்சு... இனி யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க...
திரவியம் : இல்ல துளசி இன்னும் சொல்ல வேண்டியது இருக்கு...
துளசி : இது என்ன additional paper மாதிரியா...
சிவா : Almost...
நிலா : ஏங்க போதுங்க... என்னால முடியல...
துளசி : என்ன டி ஆச்சு... ரொம்ப tired ஹ இருக்கா...
நிலா : அப்படி தான் தெரியுது...
துளசி : இந்த நேரத்துல அப்படி தான் டி இருக்கும்...ஏன் டி இது திரவிக்கு தெரியாது தானே...
நிலா : "ம்ஹீம்..."என்று தலையை ஆட்ட
துளசி : நா சொல்லவா...
நிலா : வேணாம் கா நா சொல்லிக்கிறேன்... அவரை இதோட விட்டுட்டு வர சொல்லுங்க...
திரவியம் : என்ன பேசிட்டு இருக்கீங்க...
துளசி : ஒன்னும் இல்ல... இனிமே அவங்க ஒழுங்கா இருப்பாங்க டா திரவி... இனிமே இப்படி பண்ணா அப்போ பேசிக்கலாம் டா...
திரவியம் : இல்ல துளசி... கையோட முடிக்கனும்... அது தான் சரி வரும்...போனா போகுது னு விட்டா நம்ம தலை மேலேயே ஏறி உட்காருவாங்க...
துளசி : சொன்னா புரிஞ்சுக்கோ திரவி... இங்க நடக்குறதை பாத்து இவ தான் ரொம்ப tension ஆகுறா... இப்ப அவ tension ஆக கூடாது...
திரவியம் : "இல்ல பேசி முடிக்கனும்..."என்று ஜனனி பார்த்து " நல்லா கேட்டுக்கோ ஜனனி... அவங்களுக்கு சொன்ன அதே தான் உனக்கும்... நானும் என் பொண்டாட்டியும் உங்க ரெண்டு பேர் கூட பேச மாட்டோம்... ஆனா சின்ன மாற்றம்...
உனக்கு தேவையான எல்லாத்தையும் அதாவது உன்னோட சாப்பாடு முதற்கொண்டு எல்லாத்தையும் நீயே தான் பாத்துக்கணும்...உனக்காக நிலா செஞ்சு வைப்பா னு நீ கொஞ்சம் கூட நினைக்க கூடாது... நீயும் வேலைக்கு போற தானே...
அதனால உன் சாப்பாட்டுக்கு நீயே வாங்கி நீயே சமைச்சு நீயே சாப்டு... உன்னோட ஒவ்வொரு தேவையும் நீயே பாத்துக்கணும்... உனக்கு உடம்பு முடியலைனாலும் நீயே தான் பாத்துக்கணும்... அப்புறம் நீ இந்த வீட்டுல தங்கி இருக்குற...
நீ என்ன பண்றனா current bill பாதி pay பண்ணு... இல்ல வேணாம் கால்வாசி pay பண்ணா போதும்... அப்புறம் சமைக்க gas use பண்ணுவ... அதையும் கொஞ்சம் Share பண்ணிரு..."என்று சொல்ல...
துளசி 😄😄😄 சிரிக்க...
ஜனனி துளசியை முறைத்தவாறு "நா முடியாது னு சொன்னா..."என்று கேட்க...
திரவியம் : பிரச்சனை இல்ல... நா தான் சொல்லிட்டேன் ல நிலா உனக்கு சமைக்க மாட்டா னு நீ இங்க ஒரு தண்ணிய கூட எடுத்த குடிக்க கூடாது... வேணும்னா நீயே புடிச்சு வைச்சு குடி... நா உன்னைய எதுவும் சொல்ல மாட்டேன்...
இப்ப வரைக்கும் நா தான் current bill... Cable bill... Gas bill... grocery items... Vegetables எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கேன்... நீ என்ன சம்பாத்தியத்துல சாப்டனும் நினைக்காத... அப்படி நா எதுக்குமே தரமாட்டேன் னு சொன்னா வேலை விட்டா வந்ததும் மாடில போய் இருந்துக்கோ...
இவ்ளோ திமிர் உனக்கு... அப்புறம் கடைசியா ஒன்னு சொல்றேன்... உனக்கு நல்லது நடந்தா நாங்க கலந்துக்க மாட்டோம்... நாங்கனா நானும் என் மனைவியும் எல்லாரும் கேட்பாங்க ல... ஏன் உன் அண்ணனும் அண்ணியும் வரல னு பதில் சொல்லிங்கோ...அவ்ளோ தான்...
துளசி : ஆக மொத்ததுல நீ இந்த வீட்டுல ஒரு செல்லா காசு மாதிரி... எனக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை...அப்படி தானே திரவி...
திரவியம் : ம்ம்ம்...
துளசி : சரி... இந்த Rules and regulation க்கு நானும் என் புருஷன் கட்டுப்படுறோம்... நாங்களும் இதையே follow பண்றோம்...என்னங்க நா சொல்றது சரி தானே...
சிவா :100% OK...
திரவியம் : இங்க பாரு நிலா... அவங்க கூட எனக்கு பிரச்சனை இல்ல... நீ தான்... நீ தான் எனக்கு பிரச்சனை...
நிலா புரியாமல் "நா என்னங்க பண்ணேன்..."என்று கேட்க..
திரவியம் : நீ அடங்கி இருக்க மாட்டீயே... வேகமாக அப்போ அவங்களுக்கு சேவை செய்வ...
துளசி : சரியா சொன்ன திரவி... இவ கண்டிப்பா செய்ய கூடிய ஆள்... முத இவளை கண்டிச்சு வை...
நிலா பாவமாக முழித்தாள்...
சிவா வாயை பொத்தி சிரித்தான்...
இதை எல்லாம் பார்த்த ஜனனிக்கு கோவம் வர "வாய மூடுங்க..."என்று கத்தினாள்...
அனைவரும் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பி கொள்ள...
ஜனனிக்கு இன்னும் கோவம் அதிகமானது...
ஜனனி : என்னைய ஒதுக்கி வச்சுட்டு நீங்க சந்தோஷமா இருந்திருவீங்களா...
ரஞ்சனி : ஜனனி அடங்கு... இது சரி இல்ல... தப்புக்கு மேல தப்பு பண்ணிட்டு இருக்க...
ஜனனி : நீ பேசாத... எல்லாரும் சேர்ந்து என் சந்தோஷத்தை கெடுக்கலாம் னு நினைக்கிறீங்களா...
ரஞ்சனி : எது டி சந்தோஷம்... அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி பாக்குறதா...
ஜனனி : நீ தேவை இல்லாம பேசுற...
ரஞ்சனி : எது தேவை இல்லாத பேச்சு... நீ தான் தேவை இல்லாம பேசிட்டு இருக்க...
ஜனனி : நீ தான் ரஞ்சனி தேவை இல்லாம பேசிட்டு இருக்க... கூட பொறந்த எனக்கு support பண்ணி பேசாம அவங்களுக்கு support ஹ பேசிட்டு இருக்க... அண்ணா சும்மா பேருக்கு னு இருந்தான் அவன் தான் இப்படி பேசுறான் பார்த்தா... அக்கா நீயும் இப்படி பண்றீயே...
ரஞ்சனி : நீ ஒழுங்கா இருந்தா நா உனக்கு support பண்ணி பேசுவேன்... நீ என்னமோ சினிமா ல வர்ற வில்லி range பண்ற... இதோட நிறுத்திக்கோ...அவ்ளோ தான் நா சொல்லுவேன்...
துளசி : ரஞ்சனி குட்டி எவ்ளோ சொன்னாலும் திருந்தாத ஜென்மம்... எதுக்கு தேவை இல்லாம பேசி உன் energy waste பண்ற... போங்க போய் அவங்க அவங்க வேலைய பாருங்க... வந்த வேலை சிறப்பா முடிஞ்சுச்சு...
திரவியம் நிலா பார்த்து "உள்ள வா.."என்று சைகை செய்து நகர... சிவாவும் துளசி வாசலை நோக்கி நடக்க..
யோகநாதன் : ஒரு நிமிசம்...
அனைவரும் அப்படியே நின்று திரும்பி பார்த்தனர்...
தொடரும்.......
# நானிஷா....
4 Comments
Semmmma akka ippadi than irukanum 😊😊😊janani evalo thimiru evalo sollium adangurala kolluppu avaluku nalla venum 😁😁😁😁akka konjam Seekeram podunga wait Panna mudiyala 😞😞 I am pavam
ReplyDeleteThank u 😍😍😍.. but enaku time ila... FB la Vera page la stry poduren... So ennala quick ahh poda mudiyala... But try panren...
DeleteSemaa sissy🥰🥰🥰🥰🥰 nala punishment 😂😂venum.janani ku ana apo kuda adaklyaa inum nala padatum 😤😤
ReplyDeleteNila chellam apdi podu..🤩🤩🤩🤩🤩🤩thiravi ava adanga maata janani ya veeta vittu thorathu da appo dhaan vaaya vechitu summa iruppa
ReplyDelete