அவள் - 17

அனைவரும் அந்த இடத்தை விட்டு நகர...

யோகநாதனின் குரல் அனைவரையும் அங்கே நிற்க வைத்தது...

திரவியம் : அய்யா என்ன ஆச்சு...

யோகநாதன் : இங்க நீ பெரிய மனுஷனா இல்ல நா பெரிய மனுசனா...

திரவியம் : அய்யா அது வந்து நா பேசுனது தப்பா இருந்தா மன்னிச்சுருங்க... ஆனா நா எடுத்த முடிவுல மாற்றம் இல்ல... 

யோகநாதன் : உன் முடிவை மாற்ற‌ வேணாம்... நா என்னோட முடிவை கேட்டுட்டு போங்க‌‌...

துளசி : தாத்தா நீ புதுசா twist வைக்காத யா...

யோகநாதன் : "துளசி..."என்று அதற்ற...

சிவா : அடியேய் கொஞ்சம் அமைதியா இரு... 

துளசி : சரி பேசல... தாத்தா நீங்க சொல்லுங்க...

யோகநாதன் : எல்லாரும் கேட்டுக்கோங்க... திரவியம் தனிக்குடித்தனம் போக மாட்டேன் னு சொல்லிட்டான்... திரவியம் போக வேணாம்... நாங்க போறோம்...

திரவியம் : "அய்யா..."என்று 😯😯😯 அதிர்ச்சியாக பார்க்க..

நிலா :தாத்தா என்ன பேசுறீங்க...

யோகநாதன் : நா சரி தான் பேசுவேன் பேத்தி...

நிலா : இல்ல தாத்தா நீங்க என்ன‌ சொன்னாலும் நா கேட்க மாட்டேன்... என்னால ஒத்துக்க மாட்டேன்... நீங்க யாரும் எங்கேயும் போக கூடாது...

யோகநாதன் : இல்ல தாயி... நாங்க போறது தான்‌ சரி...நாங்க தனிக்குடித்தனம் போக தான் போறோம்...

துளசி : யோவ் கிழவா... இந்த வயசுல தனிக்குடித்தனம் போனா உன்னைய தான் தப்பா நினைப்பாங்க யா... 

யோகநாதன் சிவா வை பார்த்து "முத இவ வாய அடங்கி வை..."என்று சொல்ல...

சிவா : அது முடியாது அய்யா... இவ இப்படி பேசுறது தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்‌... அதுவும் இல்லாம இந்த விசயத்துல தான் எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்...

துளசி : "மாமோய்..."என்று சிவாவை காதலோடு பார்க்க...

சிவா துளசியை பார்த்து 🤤🤤🤤.வழிய...

திரவியம் : சிவா அண்ணா..

சிவா தலையை சொரிந்து கொண்டு "ஹான் போய் வேலைய பாருங்க..."என்று சொல்ல...

நிலா : "நல்லா கேட்டுக்கோங்க... யாரும் வீட்டை விட்டு போக கூடாது... எல்லாரும் போய் அவங்க அவங்க வேலைய பாருங்க..."என்று திரும்ப...

ஜனனி : ஓ... எங்களுக்கு order நீ யார்... நீ சொன்னா நாங்க போக கூடாதா... நீ சொன்னா நாங்க உடனே கேட்கனுமா‌...

நிலா அப்படியே நின்றாள்...

ரஞ்சனி : ஜனனி போதும் இதோட நிறுத்திக்கோ‌... ரொம்ப போற...‌நல்லதுக்கு இல்ல... ஆத்துல போட்டாலும் அளந்து தான் போடனும் னு சொல்லுவாங்க... உன் வார்த்தையும் அளந்து போடு...

நம்ம ஒரு ஆள் கிட்ட நல்ல விதமா நடந்துக்கலை னா அது பல பேரை பாதிக்கும்... 

ஆத்துல போட்டா அது பல இடத்துக்கு போய் சேரும்... அதே மாதிரி தான் இதுவும்... அண்ணி ய நீ மரியாதை இல்லாம பேசுற ஒவ்வொரு வார்த்தையும் அண்ணிய சார்ந்த அண்ணிக்கு பிடிச்சவங்க அண்ணிய பிடிச்சுவங்க னு எல்லாரையும் பாதிக்கும்... 

இங்க இருக்குறவங்கள உன்னையும் அம்மாவையும் தவிர வேற‌ யாராவது வெறுக்குறாங்களா... எல்லாருக்கும் அண்ணி பிடிச்சவங்களா இருக்காங்க... உங்களுக்கு மட்டும் ஏன்...நீ உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே போற....

நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் உனக்கு சரியா இருக்கலாம்... ஆனா அது தப்பு னு தெரிஞ்சும் பேசுற... அது பாக்குறவங்களுக்கு உன்னையே பாக்கும் வெறுப்பை தான் கொடுக்கும்... ஞாபகம் வச்சுக்கோ...

உன்னைய நீ மாத்திக்கிறது தான் நல்லது... நீ இங்கே இருக்க போறது இல்ல... அடுத்த வீட்டுக்கு போக போற‌... அங்கேயும் இப்படியே நடந்துக்கிட்டா உனக்கு தான் அசிங்கம்...

ஜனனி : ரஞ்சனி போதும்... அக்கா னு பேசாம இருந்தா ரொம்ப பேசுற... நா பண்ணது தப்பு னு சொல்ற... எனக்கு Advice பண்ணாத... உன் வேலை எதுவோ அத பாரு...நீ இப்படி பேசுற ஆளே இல்லையே...

ரஞ்சனி : எல்லாம் என் அண்ணி சொல்லி கொடுத்தது... எனக்கு நல்லதை மட்டும் தான் சொல்லி இருக்காங்க... ஒரு சில விசயத்தை அண்ணி ய பாத்து தெரிஞ்சுக்கிட்டேன்... 

உன்னைய மாதிரி யாருக்கு மரியாதை கொடுக்காம நம்மலை சுத்தி இருக்குறவங்கள கஷ்டப்படுத்தி கோவப்படுத்தி இருக்கனும் நா ஒரு நாளும் நினைச்சது இல்ல‌.... 

உன் கூட பிறந்துட்டு நீ இப்படி இருக்கீயே... அண்ணா அண்ணி அப்பா அய்யா மட்டும் இல்ல... நானும் உன் கூட இனி பேச மாட்டேன்‌‌... அப்போ தான் தனிமை பத்தி உனக்கு புரியும்...

ஜனனி : ஓ‌... நீயும் அவங்க கூட சேர்ந்துட்ட ல... செய் செய் என்ன செய்ய முடியும் எல்லாத்தையும் செய்... எல்லாத்துக்கும் முடிவு இருக்கு...

ரஞ்சனி : அதே தான் நானும் சொல்றேன்‌... எல்லாத்துக்கும் முடிவு இருக்கு‌... நீ பண்றதுக்கும் ஒரு முடிவு இருக்கு... அப்போ நீ எவ்ளோ கஷ்டப்பட போற னு மட்டும் பாரு‌...

ஜனனி : என்ன சாபமா...

ரஞ்சனி : நீ அப்படி நினைச்சா... அப்படியே வச்சுக்கோ...

ஜனனி : ரஞ்சனி நீ பண்றது சரி இல்ல...

ரஞ்சனி பேச வாய் திறக்கும் போது...

துளசி : ரஞ்சனி... வாலை நிமித்த முடியாது... விடு... போய் வேலைய பாப்போம்...

ஜனனி : "அப்போ என்னைய நாய் னு சொல்றீயா..."என்றாள் கடுப்பாக

துளசி : ரஞ்சனி நா அப்படி சொன்னேனா‌..‌

ரஞ்சனி : இல்லையே... அந்த வார்த்தை வரவே இல்லையே...

துளசி : ம்ம்ம் நல்லா கேட்டுக்கோ..‌. அப்புறம் ஏன் மா பொய் சொல்ற... 

ஜனனி : எது நா பொய் சொல்றேன்னா... அப்போ நீ சொன்னதுக்கான அர்த்தம் என்ன... 

துளசி : நீ அப்படி புரிஞ்சுக்கிட்டா நா ஒன்னும் பண்ண முடியாது‌... முத நா உன்னைய பாத்து சொல்லவே இல்ல... அப்புறம் எதுக்கு நீ இந்த குதி குதிக்கிற...

ஜனனி : இல்ல நீ என்னைய பாத்து தான் சொன்ன...

துளசி : நீ அப்படி நினைச்சா அதுக்கு நா ஒன்னும் பண்ண முடியல...

நிலா துளசி கையை பிடிக்க...

துளசி : அவளுக்கு வேற வேலை இல்லை... நீ உள்ள போ... திரவி நீ இவளை கூட்டிட்டு போ...

திரவியம் நிலா கையை பிடித்து அழைத்து செல்ல... சிவா துளசியை பார்த்து "போலாம்.."என்று கண்ணால் சைகை செய்ய...ரஞ்சனி அங்கே இருந்து நகர...ராஜபாண்டியும் யோகநாதனும் அவளை முறைத்து கொண்டே செல்ல...

இதில் கடுப்பான ஜனனி "இங்க நா ஒருத்தி பேசிக்கிட்டு இருக்கேன்... எல்லாரும் போனா என்ன அர்த்தம்..."என்று கத்த...

துளசி வாசலில் இருந்து மெதுவாக எட்டி பார்த்து "உன்னைய யாரும் கண்டுக்கவே இல்ல னு அர்த்தம்... நீயே புரிஞ்சுக்கிட்டா சரி தான்..."என்று சொல்ல...

அதில் கடுப்பான ஜனனி வேகமாக திரும்பி பார்க்க... துளசி ஓடியே விட்டாள்...

சிவா : எதுக்கு டி இப்படி ஓடி வர.‌‌..

துளசி : ஜனனிய நக்கல் பண்ணேன்... அவ முறைச்சா ஓடி வந்தேன்...

சிவா : நீ சும்மாவே இருக்க மாட்டீயா... 

துளசி : என்ன பண்றது என் கூடவே பொறந்தது... என்னைய விட்டு போக மாட்டேன் னு சொல்லுது...

சிவா : "சொல்லும் சொல்லும்..." என்று வீட்டிற்குள்‌ நுழைத்தான்...

துளசி : மாமா சப்பாத்தி எடுத்து வைக்கிறேன்... சாப்டுங்க...

சிவா : நிலா சாப்டாளா...

துளசி : ம்ம்ம் சாப்டா... வம்படியா இங்க சாப்ட வைச்சேன்...

சிவா பெருமூச்சு விட்டு "இனிமே நிலா சந்தோஷமா இருப்பா ல..."என்று கேட்டு கொண்டே கை கழுவி விட்டு வந்து அமர...

துளசி எதுவும் பேசாமல் சாப்பாத்தியை எடுத்து வந்து வைத்தாள்...

சிவா : நா உன் கிட்ட பேசிட்டு இருக்கேன்...

துளசி : இல்லங்க... இனிமே தான் அவ ரொம்ப வருத்தப்படுவா...

சிவா : "என்ன சொல்ற‌.."என்று புரியாமல் பார்த்தான்...

இங்க நிலா கன்னத்தில் கை வைத்து கொண்டு அமர்ந்திருக்க...

குளித்து தலையை துவட்டி கொண்டு வந்த திரவியம் நிலா வை பார்த்து "நிலா கைலி எடுத்து கொடு மா..."என்று கேட்க...

நிலா அசையாமல் அமர்ந்திருக்க...

திரவியம் அவளை பார்த்து கொண்டு கைலியை எடுத்து கட்டி கொண்டு அவள் அருகில் அமர்ந்து அவள் முகத்தையே பார்த்தான்...

திரவியம் அவள்‌ கையை தொட‌... பயந்தவாறு நிமிர்ந்து பார்க்க...

திரவியம் : ஏய் நா தான் டி... எதுக்கு டி இப்படி பயப்படுற...

நிலா : ஒன்னும் இல்லங்க...

திரவியம் : காலைல உன் கிட்ட கோச்சுக்கிட்டேனே அதுக்கு தான் சோகமா இருக்கீயா...

நிலா : அய்யோ இல்லங்க...

திரவியம் : அப்புறம் என்ன...

நிலா : உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்...

திரவியம் : என்ன மா...

நிலா : உங்களுக்கு என்னைய பிடிக்குமா...

திரவியம் : இது என்ன கேள்வி... என் நிலா வ யாருக்கு தான் பிடிக்காது... என் அம்மாவையும் தங்கச்சியையும் தவிர எல்லாத்துக்கும் உன்னையே ரொம்ப பிடிக்கும்...நிலா பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா...

  யாராவது உன்னையே பிடிக்காது னு சொல்லுவாங்களா... யார் யாருக்கோ உன்னைய பிடிச்சி இருக்கு‌... உன்னையவே சொந்தமாக்கி இருக்கேன்...இந்த நிலா எனக்கு சொந்தமான நிலா... எனக்கு உன்னைய பிடிக்காத என்ன‌‌... என் உசுரே நீ தான் டி...

நிலா :  dialogues எல்லாம் நல்லா தான் இருக்கு...

திரவியம் : உனக்கா என்ன ஆச்சு...

நிலா : இல்ல ஒரு பத்தா மாசத்துக்கு அப்புறம் என்னைய பிடிக்காம போச்சுன்னா நா என்ன பண்ணுவேன்...

திரவியம் : "எது என்ன டி பத்து மாசம்..."என்று கேட்டவன் ஏதோ 🤔🤔🤔யோசித்தவாறு 🙄🙄🙄 திருதிருவென முழிக்க...

நிலா 😄😄😄 சிரிக்க...

திரவியம் : ஏய் நீ... நீ... நீ என்ன சொன்ன...

நிலா திரவியம் தோளில் சாய்ந்து அவன் கையை பிடித்து தன் வயிற்றில் வைத்தாள்...

திரவியம் கண் கலங்க அவளை பார்த்தான்‌...

நிலா : நம்ம குழந்தைங்க...

திரவியம் அவளிடம் இருந்து விலகி எழுந்து அவள் முன் அமர்ந்து அவள் வயிற்றை பார்த்து "என்னைய பார்க்க உங்களுக்கு இத்தனை நாள் ஆச்சா குட்டி... அப்பா அம்மா மேல் எங்களுக்கு என்ன கோவம் குட்டி... இத்தனை நாளா பாக்காம இப்ப வந்து இருக்கீங்க‌‌..."என்று கண் கலங்க...

நிலா கண்களில் கண்ணீர் வடிய...திரவியத்தை தன் வயிற்றோடு அணைத்து கொண்டாள்‌....

     

               தொடரும்.....

# நானிஷா....