வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 74, என்னுயிர் நீயடி - 8
( என்னுயிர் நீயடி கதைல டூர் போன எல்லாரும் தஞ்சை பெரிய கோவில்க்கு தான் முதல்ல வராங்க, இரண்டு கதையும் ஒன்னா இந்த எபிசோட்ல இருக்கும்)
சனி, ஞாயிறு இரண்டு நாள் தமிழ் வீட்டுல தங்க அர்ஜுன் வந்துருக்கறதால பசங்க ஐந்து பேரும் எங்கயாவது வெளில போலாம்னு ப்ளான் பண்ணி தஞ்சை பெரிய கோவில்க்கு போனாங்க...
மிருனாழினி சிவப்பு கலர்ல பட்டுப்புடவை கட்டிருந்தா தமிழ் அவளுக்கு மேட்சா சிவப்பு சட்டையும் வெள்ளை வேஷ்டியும் கட்டிருந்தான்...
அஞ்சலி க்ரீன் கலர் ஹால்ஃப் சேரி கட்டிருந்தா... உதய், அர்ஜுன் ப்ளூ ஷர்ட் வொய்ட் வேஷ்டி கட்டிருந்தாங்க...
தமிழ்மாறன் : செட்ல இருந்த ஜீப் கொண்டு வந்து வாசல்ல நிறுத்துனான்...
மிருனாழினி : உதய், அர்ஜுன், அஞ்சலிய முந்திகிட்டு வந்து ஜீப் முன் சீட்ல உட்கார்ந்தா...
அஞ்சலி : என்ன டி அவ்ளோ அவசரம் எங்களை தாண்டி வர...
மிருனாழினி : மேரேஜ்க்கு அப்பறம் முதல் முறை ஜீப்ல போறோம் இதுவரை உங்க அண்ணா என்னை முன் சீட்ல உட்கார விட்டதே இல்ல இப்போ தான் மேரேஜ் ஆகிடுச்சுல எனக்கு முழு உரிமை இருக்கு...
தமிழ்மாறன் : 😄😄😄 அவ சொன்னதை கேட்டு சிரிச்சான்...
அர்ஜுன் : உனக்கு மேரேஜ் ஆகிடுச்சினு நிமிஷத்து ஒரு முறை சொல்லி காட்டாத டி காது வலிக்குது ( காதுல ஒரு விரலை விட்டு ஆட்டுனான்)
மிருனாழினி : 😏😏😏 ப்பே ( தமிழ் கையோட இவ கை கோர்த்து ஒட்டி உட்கார்ந்தா)
உதய் : உன் புருஷனை யாரும் தூக்கிட்டு போய்ட மாட்டாங்க மா தள்ளி உட்காரு...
மிருனாழினி : ( சினுங்குனா) உதய் அண்ணா நீங்களுமா...
தமிழ்மாறன் : ஹேய் போதும் என் பொண்டாட்டிய கலாய்ச்சது போய் உட்காருங்க...
அர்ஜுன் : பார்றா சப்போர்ட்ட மாமா நல்ல முன்னேற்றம் தான்...
தமிழ்மாறன் : போய் உட்காருங்க டா நேரம் போய்ட்டே இருக்கு...
உதய், அர்ஜுன், அஞ்சலி பின்னாடி உட்கார்ந்ததும் தமிழ் ஜீப் ஸ்டார்ட் பண்ணி போனான்...
அஞ்சலி அர்ஜுனை பார்த்தலே அவன் கண் அடிப்பான் அதனால அவன் பக்கமே அவ திரும்பல உதய் கூட தான் பேசிட்டு வந்தா...
டூர் வந்த நம்ம ஏழு ஜோடிகளும் ஒரு ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கிட்டு காலைல குளிச்சிட்டு கோவிலுக்கு வந்தாங்க...
கோவில்க்கு எதிர்ல உள்ள பார்க்கிங்ல ட்ராவல் பஸ் நிப்பாட்டிட்டு ரோட் கிராஸ் பண்ணி கோவில் குள்ள வந்தாங்க...
கௌதம் : சஞ்சனாவ கைல தூக்கிட்டு கயல்ல கை தாங்கலா பொருமையா நடக்க வச்சி அழைச்சிட்டு வந்தான்...
கயல் : ரொம்ப மூச்சு வாங்க நடந்து வந்தா...
கௌதம் : இதுக்கு தாண்டி இந்த மாதிரி நேரத்துல அலைச்சல் வேண்டானு சொல்லுறது சொன்னா கேட்குறியா...
கயல் : கௌதம் டாக்டர் குடுத்த டேட்க்கு இன்னும் பத்து நாள் இருக்கு அதுவரை கொஞ்சம் என்ஜாய் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப திட்டுற டா மாமா நீ 😞😞😞
கௌதம் : சரி சரி கோச்சிக்காத தண்ணி குடிக்குறியா...
கயல் : இல்ல வேண்டாம்...
அப்பறம் ஏழு ஜோடிகளும் சாமி கும்பிட்டுட்டு கோவில் சுத்தி வந்து அங்க உள்ள கல்வெட்டு, சிற்பங்கள் எல்லாத்தையும் பாத்துட்டு குரூப்பா, ஜோடியா நின்னு ஃபோட்டோஸ் எல்லாம் எடுத்துட்டு புல் தரைல நிழல் உள்ள பக்கமா வந்து உட்கார்ந்தாங்க...
குழந்தைங்க நாலு பேரும் அங்க விளையாடிட்டு இருந்தாங்க...
தமிழ், மிரு, அர்ஜுன், அஞ்சலி, உதய் ஐந்து பேரும் சாமி கும்பிட்டுட்டு கௌதம் கேங் பக்கத்துலயே வந்து உட்கார்ந்தாங்க...
அர்ஜுன் : மாமா இந்த கோவில் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...
உதய் : முதல்ல இந்த கோவில் யார் கட்டுனாங்கனு சொல்லு டா பார்க்கலாம்...
அர்ஜுன் : முதலாம் ராஜராஜசோழன் கட்டுனது... நாங்களும் படிச்சிருக்கோம்ல...
அஞ்சலி : அதை தவிர மத்தது எதும் படிக்கலயா...
அர்ஜுன் : நெட்ல சர்ச் பண்ணா எல்லாம் கிடைச்சிடும் இருந்தாலும் உங்க ஊர் கோவிலை பத்தி நீங்க தான பெருமையா சொல்லனும்...
தமிழ்மாறன் : சரி நான் சொல்லுறேன்... இந்த கோவில் ராஜராஜசோழனால் 1003 வது வருஷம் ஆரம்பிச்சி 1010 ல கட்டி முடிச்சாங்க, 2010 ஓட இந்த கோவில் கட்டி ஆயிரம் வருஷம் ஆகுது..
மிருனாழினி : ஆயிரம் வருஷம் ஆகிடுச்சா இன்னும் புதுசா இருக்கு பாருங்களேன்...
தமிழ்மாறன் : ஆமா கருங்கல் பாறைகளே இல்லாத சமவெளி பகுதில கருங்கல் வச்சி கட்டிருக்காங்கனா அது எவ்ளோ பெரிய விஷயம் பாருங்க...
இக்கோவிலில் தமிழின் சிறப்புக்களும் மாமன்னர் இராஜ ராஜ சோழனின் தமிழ் பற்றும் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்...
கயல் : வாவ் சூப்பர்ல இந்த கோவில் ஃபுல்லா தமிழால நிறைஞ்சிருக்கு...
சத்தம் கேட்டு ஐந்து பேரும் திரும்பி பார்த்தாங்க அங்க கயல் வயித்துல ஒரு கையும் கன்னத்துல ஒரு கையும் வச்சிட்டு தமிழ் பேசுறதை கேட்டுட்டு இருந்தா...
எல்லாருமே தமிழ் கோவில் பத்தி சொல்லுறதை தான் கேட்டுட்டு இருந்தாங்க... அவங்க பக்கத்துலயே இருந்ததால தமிழ் பேசுனது அவங்களுக்கு நல்லா கேட்டுது...
அவங்க திரும்பி பார்க்கவும் கயல் சுய உணர்வு வந்து நிமிர்ந்து உட்கார்ந்தா...
கயல் : 😁😁😁 சாரி நீங்க பேசுறதை நான் ஒட்டு கேட்குறனு நினைச்சிக்காதீங்க... நான் பாட்டுக்கு இங்க அமைதியா உட்கார்ந்து இருந்தேன் நீங்க கோவில் பத்தி பேசுறது நல்லா என் காதுல கேட்டுதா அதான் ஆர்வமா கேட்க ஆரம்பிச்சிட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க...
கௌதம் : ஆமா ப்ரோ கோவில் பத்தி நீங்க சொல்லவும் தான் நாங்களும் அமைதியாகிட்டோம் சாரி உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்கு...
தமிழ்மாறன் : அதெல்லாம் இல்ல இதுல என்ன இருக்கு நான் உங்களுக்கும் சேர்த்தே சொல்லுறேன்...
கோவில் பத்தி இன்னும் சில விஷயங்கள் சொன்னான்...
தஞ்சைப் பெருவுடையார் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருண்மொழிவர்மன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பெருவுடையார் மேல் விழுகிறது.
மிருனாழினி : ஆமா மன்னர் அருண்மொழிவர்மன்னு சொன்னீங்களே அது யாரு...
தமிழ்மாறன் : மன்னர் இராஜராஜசோழன் தான் அவரோட இயர்பெயர் அருண்மொழிவர்மன்...
கயல் : வாவ் பேர் சூப்பரா இருக்கு கௌதம் நமக்கு பையன் பிறந்தா அந்த பேரே வைக்கலாமா...
சஞ்சனா : கயல் முன்னாடி வந்து நின்னு இடுப்புல கைய வச்சிட்டு அவளை பார்த்து முறைச்சா...
கயல் : ஏன்டி முறைக்குற...
சஞ்சனா : எனக்கு தம்பி தான் வேணும் அவன் பேரு சஞ்சய், நீ சொல்லுற பேர் எல்லாம் வைக்க முடியாது புரியுதா ( குழந்தை மொழில அழகா கை நீட்டி மிரட்டுனா)
கயல் : புரியுது தாயி போ அந்த பக்கம் என்னை மிரட்டுனும்னா மட்டும் எங்க இருந்து தான் வருவியோ...
கௌதம் : ஏய் புள்ளைய திட்டாத டி...
கயல் : அதான இவளை எதுவும் சொல்லிட கூடாது உடனே மூக்கு வேர்த்துடுமே 😏😏😏
உதய் : உங்க குழந்தையா அழகா இருக்கா ( சஞ்சனாவ தூக்கி மடில வச்சிகிட்டான்)
கௌதம் : ஆமா பேர் சஞ்சனா அதான் அவ தம்பிக்கு சஞ்சய்னு பேர் வைக்கனும்னு சொல்லுறா...
அர்ஜுன் : சோ ஸ்வீட் ( சஞ்சனா கன்னத்தை கிள்ளி கிஸ் பண்ணான்)
அவன் கிஸ் பண்ணவும் நிஷாந்த், மயூரன் அர்ஜுன் கிட்ட வந்து அவனை பார்த்து முறைச்சாங்க...
அர்ஜுன் : ( இந்த இரண்டு குட்டி வாண்டும் எதுக்கு நம்மள இப்படி முறைக்குது ) என்ன டா செல்லங்களா என்ன வேணும்..
நிஷாந்த் : எதுக்கு அவளை கிள்ளுனீங்க...
மயூரன் : ஆமா வலிக்கும்ல பேட் பாய், வா சஞ்சு போலாம் ( அவளை இழுத்துட்டு விளையாட போய்ட்டாங்க)
அர்ஜுன் : இப்போ நான் என்ன பண்ணிட்டனு இந்த இரண்டு வாண்டும் என்னை திட்டிட்டு போது...
கார்த்திக் : சாரி ப்ரோ அவனுங்க தான் சஞ்சுக்கு பாடிகார்ட் மாதிரி அதான் இப்படி பண்ணுறானுங்க...
அர்ஜுன் : இப்பவே இப்படியா...
மித்ரன் : 😂😂😂 ஆமா...
அப்பறம் எல்லாரும் எந்த ஊர் என்ன பண்றீங்கனு ஆரம்பிச்சி ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க...
திடீர்னு கயல்க்கு ஒரு மாதிரி வேர்க்க ஆரம்பிச்சிடுச்சி கௌதம் கைய இறுக்கி புடிச்சா...
கௌதம் : கயல் என்ன டா என்ன ஆச்சி...
கயல் : கௌதம் வலிக்குது ( பல்ல கடிச்சிட்டு சொன்னா)
கௌதம் : 😱 அச்சோ என்ன டி சொல்லுற இதுக்கு தான் எங்கயும் போக வேண்டானு சொன்னேன் கேட்டியா... இப்போ தெரியாத ஊர்ல எந்த ஹாஸ்பிட்டல் போறது ( கௌதம் ஒருமாதிரி டென்சன் ஆகிட்டான்)
தமிழ்மாறன் : கௌதம் பயப்பிடாதீங்க நாங்க இருக்கோம்ல வாங்க இங்க பக்கத்துல தான் ஹாஸ்பிட்டல் இருக்கு அங்க எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க தங்கச்சிய தூக்குங்க நான் கார் ஏற்பாடு பண்ணுறேன்...
தமிழ் கோவில் வெளில போய் ஒரு கார் மறிச்சி அதுல தமிழ், கௌதம், கயல் போனாங்க, கயல் அழறதை பார்த்து சஞ்சனா அழுததால தமிழ் சஞ்சனாவ அவன் மடில வச்சிகிட்டு முன்னாடி உட்கார்ந்துகிட்டான்....
தமிழ் உதய் கிட்ட ஹாஸ்பிட்டல் பேர் சொல்லி அங்க வர சொல்லிட்டு முன்னாடி போய்ட்டான்...
உதய், மிரு, அர்ஜுன், அஞ்சலி ஜீப்லயும் அவங்க தொடர்ந்து மத்த ஆறு ஜோடிகளும் ட்ராவல் பஸ்லயும் ஜீப்ப பின் தொடர்ந்து போனாங்க...
தொடரும்...
# Sandhiya.
9 Comments
Wow super sis 2 storyium serthutinga semmma 😊❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ antha 2 vandukum kovatha paaru 😂😂😂😂🤭
ReplyDeleteThank you
DeleteThank you
DeleteSuper 😍😍
ReplyDeleteThank you
DeleteAda ellarayum ore edathula pakurathu super ah iruku ennuyir neeyadi plot change pannitinga pola ithuvum nalla than iruku tamizh kovil pathi neraya therinchi vachirukan inga kayalku sanjay Tanjore la poraka poran
ReplyDeleteThank you
DeleteOh god..rendu story um serthuteenga..appo inime indha 7 pairs um story la vara maadgiri seyunga sissy ma..i cant miss all of ur hero heroins..they are all very inspiring in real life..🤗🤗🤗🤗🤗🤗edhuvanalum romba happy ah iruku...epdiyo story rendu read panniyachuu
ReplyDeleteசூப்பர் சிஸ்டர் இரண்டு ஸ்டோரியையும் ஒண்ணா போட்டதுக்கு தஞ்சாவூர் ஸ்டோரி ரொம்ப சூப்பர் பயனுள்ள செய்தி வாழ்வின் வரமாய் வந்தவளே என் உயிர் நீயடி இரண்டும் கிளப்பண்ணி போட்டதுக்கு ரொம்ப சூப்பர்
ReplyDelete