வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 75, என்னுயிர் நீயடி - 9

ஹாஸ்பிட்டல் வந்ததும் தமிழ்மாறன் சஞ்சனாவையும் தூக்கிட்டே உள்ள போய் ஸ்ட்ரக்சர் கொண்டு வந்தான், கௌதம் கயலை தூக்கி ஸ்ட்ரக்சர்ல படுக்க வச்சதும் உள்ள தள்ளிட்டு போனாங்க...

கயல் : 😭😭😭 கௌதம் ( அவன் கைய இறுக்கி புடிச்சிகிட்டா)

கௌதம் : 😢😢😢 கொஞ்ச நேரம் தான் பொறுத்துக்க டா ( அவ தலைய கோதி விட்டான்)

சஞ்சனா : அம்மா அம்மா 😭😭😭

தமிழ்மாறன் : சஞ்சு குட்டி அழாத டா நீ அழுதா அம்மா இன்னும் அழுவாங்க...

சஞ்சனா : சரி அங்கிள் நான் அழல ( கண்ணை துடைச்சிகிட்டா)

தமிழ்மாறன் : சமத்து பாப்பா...

கயலை ஆப்ரேஷன் தியேட்டர் உள்ள அழைச்சிட்டு போனதும் அங்க ஒரு லேடி டாக்டர் வந்தாங்க...

டாக்டர் : தமிழ் நீ இங்க என்ன பா பண்ணுற...

தமிழ்மாறன் : அக்கா இவங்க எனக்கு தெரிஞ்சவங்க இவங்களோட மனைவிக்கு தான் பிரசவ வலி வந்துருக்கு கொஞ்சம் என்னனு பாருங்க...

டாக்டர் : நான் டாக்டராக தேவேந்திரன் ஐயா தான் காரணம் சோ நான் அவங்களை பார்த்துக்குறேன் தமிழ் ( கௌதம் பக்கம் திரும்புனாங்க) உங்க மனைவியும் குழந்தையும் நல்ல படியா வருவாங்க...

கௌதம் : தேங்க்ஸ் டாக்டர்...

டாக்டர் உள்ள போனதும் மத்த எல்லாரும் வந்துட்டாங்க...

தமிழ்மாறன் : உதய் வீட்டுக்கு போய் அம்மா, சீதா அத்தைய அழைச்சிட்டு வா டா, இவங்க கூட பெரியவங்க யாரும் வரல நமக்கும் என்ன பண்ணுறதுனு தெரியாது அவங்க வந்தா உதவியா இருக்கும்...

உதய் : சரி டா இப்பவே போறேன் நீ எல்லாரையும் பார்த்துக்க...

அரைமணி நேர போராட்டத்திற்க்கு பிறகு சஞ்சய் பிறந்தான்...

நர்ஸ் குழந்தை தூக்கிட்டு வந்து கௌதம் கைல குடுத்தாங்க... சஞ்சனா தமிழ் கைல இருந்தே சஞ்சய்ய பார்த்து கொஞ்சிட்டு இருந்தா...

அப்பறம் நர்ஸ் குழந்தைய வாங்கிட்டு போய்ட்டாங்க...

கௌதம் : தமிழ் உங்க உதவிக்கு ரொம்ப நன்றி நீங்க மட்டும் இல்லனா ரொம்ப கஷ்டமாகிருக்கும்...

தமிழ்மாறன் : நான் பெருசா எதுவும் பண்ணிடல நன்றி எல்லாம் சொல்லாதீங்க...

கௌதம் : நாங்க ஆம்புலன்ஸ் வச்சி கயல், குழந்தைய அழைச்சிட்டு சென்னை கிளம்புறோம்...

தமிழ்மாறன் : ஏன் இப்படி சொல்லுறீங்க கயல்க்கு சிரமமா இருக்கும் இப்போ பிறந்த குழந்தைய அவ்ளோ தூரம் ஆம்புலன்ஸ்ல கொண்டு போறது கஷ்டம்...

கௌதம் : எங்களுக்கு பரவாயில்ல ஆனா கயல்க்கு பத்திய சாப்பாடு குடுக்கனும், நாலு குழந்தைங்க வேற இருக்காங்க, ஆதிரா வேற 8 மாசம் கற்பம் அவங்களுக்கு எல்லாம் ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காது... இங்க இருந்தா ரொம்ப கஷ்டம் வீட்டுக்கு போனா தான் நல்லது...

தமிழ்மாறன் : நீங்க எதுக்கும் கவலை படாதீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மாவும் அத்தையும் வந்துடுவாங்க... அவங்க கயல், குழந்தைக்கு தேவையானதை பார்த்துப்பாங்க... சுகபிரசவம்ங்குறதால 3 நாள் ஹாஸ்பிட்டல்ல இருக்க சொல்லுவாங்க அதுவரை எல்லாரும் எங்க வீட்டுல இருக்கலாம் ஹோட்டல்ல காலி பண்ணிடுங்க...

கௌதம் : உங்களுக்கு ஏன் அவ்ளோ சிரமம் நாங்க எப்படியாவது சென்னை போய்டுறோம்...

தமிழ்மாறன் : சிரமம் இல்ல மூனு நாள் தான தயவு பண்ணி நான் சொல்லுறதை கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க... கயலும் எனக்கு தங்கச்சி மாதிரி தான் ஏற்கனவே குழந்தை பிறந்தது உடம்பு வலி இருக்கும் அதோட ஏன் பயணம் பண்ணனும் அவளுக்கு கஷ்டமா இருக்கும்...

கௌதம் : ( கயல்க்கு கஷ்டம்னு சொன்னதும் கொஞ்சம் யோசிச்சான்) சரி மூனு நாள் இருக்கோம் ஆனா நாங்க ஹோட்டல்லயே தங்கிக்கிறோம்...

தமிழ்மாறன் : குழந்தைகளுக்கும், அந்த கற்பினி பொண்ணுக்கும் கஷ்டமா இருக்கும் எங்க வீடு பெரிய வீடு தான் உங்ககளுக்கு எந்த கஷ்டமும் இருக்காது கௌதம்...

கௌதம் : அச்சோ நான் அதுக்காக சொல்லல உங்களுக்கு சிரமம் தர வேண்டானு தான் அப்படி சொன்னேன் தப்பா எடுத்துக்காதீங்க...

தமிழ்மாறன் : இல்ல கௌதம் நான் எதுவும் நினைக்கல விடுங்க...

அப்பறம் கௌதம் லெட்சுமிக்கு கால் பண்ணி சொல்லவும் அவங்க உடனே கயல் அப்பா, அம்மா கிட்ட விஷயத்தை சொல்லி 3 பேரும் கார்ல தஞ்சாவூர் கிளம்பிட்டாங்க...

உதய் வீட்டுக்கு போனதுமே மகாலெட்சுமி, சீதா கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான் அவங்களும் வீட்டுல இருந்த ஃப்ளாஸ்க், டம்ளர் எல்லாம் எடுத்துகிட்டு போற வழில குழந்தைக்கு தேவையான சாஃப்ட் டவல், ட்ரெஸ் கயல்க்கு நைட்டி, பேஸ்ட், ப்ரஸ் எல்லாம் வாங்கிட்டு போனாங்க...



அவங்க வந்ததும் உதய் மிரு, அஞ்சலி, அர்ஜீனை ஜீப்ல வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டான்... தமிழ் மத்தவங்க கூட ஹோட்டல் போய் அவங்க திங்க்ஸ் எல்லாம் எடுத்துகிட்டு ரூம் வெக்கேட் பண்ணிட்டு அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போனான்...

அஞ்சலி, மிரு, ஆச்சி இன்னும் வீட்டு வேலைக்கு வந்த இரண்டு பெண்களை கூட சேர்த்துகிட்டு எல்லாருக்கும் பெரிய பெரிய பாத்திரத்துல மதிய சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணாங்க...

ட்ராவல் பஸ் வீட்டு கேட் குள்ள நுழைஞ்சதுமே எல்லாரும் கீழ இறங்கி வீட்டை ஆச்சர்யமா பார்த்தாங்க...

ஹரி : தமிழ் அண்ணா உங்க வீடு சூப்பரா இருக்கு...

தமிழ்மாறன் : நன்றி எல்லாரும் உள்ள வாங்க...

பஸ் சத்தம் கேட்டு அர்ஜுன், உதய் வெளில வந்தாங்க... பாய்ஸ் எல்லாரும் லக்கேஜ் தூக்கிட்டு உள்ள போனாங்க...

தாத்தா : வாங்க பசங்களா எல்லாரும் வாங்க...

எல்லாரும் தாத்தாக்கு வணக்கம் சொல்லிட்டு உள்ள போனாங்க...

தமிழ் ஒரு பெரிய பெட்ஷீட் விரிச்சி போட்டான்... கேர்ள்ஸ் எல்லாரும் பிள்ளைகளோட அதுல உட்கார்ந்தாங்க பாய்ஸ் சிலர் கீழயும் சிலர் சேர்லயும் உட்கார்ந்தாங்க...

மிரு, அஞ்சலி எல்லாருக்கும் தண்ணி கொண்டு வந்து குடுத்தாங்க...

ஆச்சி : தமிழ் எல்லாரையும் கொல்லை புறம் அழைச்சிட்டு போய் கை, கால் கழுவிட்டு வர சொல்லு நாங்க சாப்பாடு எடுத்து வைக்குறோம்...

தமிழ்மாறன் : ம்ம்ம் சரி ஆச்சி...

தமிழ் எல்லாரையும் கொல்லைபுறம் அழைச்சிட்டு போனான்...

அவங்க போனதும் மிரு, அஞ்சலி பாய் போட்டு வாழை இலைய வரிசையா போட்டு தண்ணி தெளிச்சாங்க...

குழந்தைங்க மூனு பேருக்கும் ஏற்கனவே பருப்பு சாதம் ஊட்டி விட்டுட்டுட்டாங்க இப்போ தூங்குறாங்க...

ஆறு ஜோடிகளும் ஜோடியா உட்கார்ந்தாங்க அவங்க கூடவே ஆச்சி, தாத்தா, அர்ஜுன், உதய், தமிழ் உட்கார்ந்து சாப்பிட்டாங்க...

மிரு, அஞ்சலி எல்லாருக்கும் பரிமாறிட்டு அவங்களும் உட்கார்ந்து சாப்பிட்டாங்க...

எல்லாரும் சாப்பிட்டு முடிச்சதும் தமிழ்மாறன் ஹாஸ்பிட்டல்ல உள்ளவங்களுக்கு சாப்பாடு கேரியர்ல எடுத்து வைக்க சொல்லிட்டு சட்டை மாத்த ரூம்க்கு போனான்...

மிருனாழினியும் அவன் பின்னாடியே போனா...

தமிழ்மாறன் : வேற சட்டை மாத்திட்டு பர்ஸ்ல பணம் எடுத்து வச்சான்...

மிருனாழினி : அவன் முன்னாடி போய் நின்னா...

தமிழ்மாறன் : என்ன மா எதாவது வேணுமா...

மிருனாழினி : மாறன் நானும் வரவா குழந்தைய பார்க்கனும் போல ஆசையா இருக்கு...

தமிழ்மாறன் : நாளைக்கு போலாம் டா இன்னைக்கு வந்தவங்களுக்கு தேவையானதை கேட்டு நல்லா பார்த்துக்க நாளைக்கு அழைச்சிட்டு போறேன்...

மிருனாழினி : ம்ம்ம் மாறன் நீங்க சொன்ன மன்னர் பேர் அருண்மொழிவர்மன் பேர் நல்லா இருக்குல...

தமிழ்மாறன் : ஆமா அழகான தமிழ் பெயர்...

மிருனாழினி : நம்ம குழந்தைக்கு அந்த பேர் வைக்கலாமா...

தமிழ்மாறன் : ( முதல்ல அதிர்ச்சியாகி அப்பறம் சிரிச்சிட்டான் )😄😄😄 சரி வைக்கலாம்...

மிருனாழினி : நமக்கு எப்போ குழந்தை பிறக்கும்...

தமிழ்மாறன் : முதல்ல படிச்சி முடி அப்பறம் இதை பத்தி பேசிக்கலாம்...

மிருனாழினி : 😔😔😔 சாரி மாறன் எனக்கு எப்போ என்ன பேசுறதுனே தெரியல எதாவது பேசிடுறேன் அப்பறம் யோசிச்சி பார்த்தா என் பேச்சு எனக்கே குழந்தை தனமா இருக்கு, கூட இருந்து நல்லது, கெட்டது சொல்லி தர யாருமே இல்ல மாம், டாட்க்கு எப்போதும் பிஸ்னஸ் தான் முக்கியம் என்னை கவனிக்க அவங்களுக்கு நேரம் இல்ல..

தமிழ்மாறன் : அதான் இப்போ நான் இருக்கேன்ல, உன்னை பாத்துக்க வேண்டியது என் கடமை நீ என்ன பேசுனாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் புரியுதா...

மிருனாழினி : ம்ம்ம் ( தலை குனிஞ்சிட்டே இட வலமா தலை ஆட்டுனா)

தமிழ்மாறன் : அவ கையோட இவன் கை கோர்த்து அவ தலையோட இவன் தலை முட்டி நின்னான்...

மிருனாழினி : நிமிர்ந்து பார்த்தா...

தமிழ்மாறன் : 😘😘😘 ( அவ நெத்தில முத்தம் குடுத்தான்) இன்னைக்கு நீயும் கேட்கல நானும் மறந்துட்டேன் 😄

மிருனாழினி : சீக்கிரம் வந்துடுவீங்கள...

தமிழ்மாறன் : ம் சாப்பாடு குடுத்துட்டு  அவங்களுக்கு தேவையானதை செய்து குடுத்துட்டு வந்துடுறேன்...

மிருனாழினி : ம்ம்ம்...

அப்பறம் தமிழ்மாறன் சாப்பாடு எடுத்துட்டு கிளம்புனான் அவன் கூடவே கார்த்திக், மீரா போனாங்க... கௌதம், சஞ்சனாவ வீட்டுக்கு அனுப்பிட்டு கார்த்திக், மீரா அவங்க கூட இருக்கலாம்னு தமிழ்மாறன் கூட போனாங்க...

தொடரும்...

# Sandhiya.