வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 100 இறுதி அத்தியாயம்

மூன்று வருடத்திற்க்கு பிறகு,

ஞாயிற்றுக்கிழமை காலை,

மிருனாழினி : நல்லா தூங்கிட்டு இருந்தவ மெதுவா கண் திறந்து பார்த்தா...

தமிழ்மாறன் மேல அழகா தூங்கிட்டு இருந்தா அவங்களோட 2 வயசு பெண் குழந்தை தன்ஷிகா...

தமிழ்மாறன் : மிருவ ஒரு கையால அணைச்சா மாதிரியும் இன்னொரு கைய குழந்தை மேலயும் வச்சி தூங்கிட்டு இருந்தான்...

மிருனாழினி : தன்ஷிகாவுக்கும் தமிழுக்கும் நெத்தில முத்தம் குடுத்துட்டு எழுந்து போய்ட்டா...

மிரு போனதுமே தமிழும் தூக்கம் கலைஞ்சி எழுந்தான்...

தமிழ்மாறன் : பாப்பாவ பெட்ல படுக்க வச்சி சுத்தி தலையணை வச்சிட்டு கீழ போய்ட்டான்...

மிருனாழினி குளிச்சி சாமி கும்பிட்டுட்டு மேல வரும் போது தன்ஷிகா தூக்கம் கலஞ்சி எழுந்தா...

மிருனாழினி : தன்ஷி குட்டி எழுந்துட்டீங்களா...

தன்ஷிகா : 😳 மலங்க மலங்க விழிச்சா...

மிருனாழினி : என்ன டா அப்பா மேல படுத்துருந்தமே அப்பா எங்கனு தேடுறியா...

தன்ஷிகா : ( ஆமானு தலை ஆட்டுனா) ப்பா ப்பா...

மிருனாழினி : கீழா இருக்காரு வா...

பாப்பாவ கீழ தூக்கிட்டு போனா...

தமிழ்மாறன் : அப்போ தான் குளிச்சிட்டு தலை துவட்டிட்டு வந்தான்...

தன்ஷிகா : ( அவன் மேல தாவுனா) அப்பா...

தமிழ்மாறன் : தங்க புள்ள எழுந்துட்டீங்களா...

தன்ஷிகா : ம்ம்ம்...

மிருனாழினி : ஏன்டி குரங்கு குட்டி மாதிரி எப்போ பார்த்தாலும் அவர் மேலயே தொத்திட்டு இருக்க என்கிட்ட இருந்தா என்ன...

தன்ஷிகா : மிரு திட்டவும் அவளை பார்த்து முறைச்சா...

மிருனாழினி : முறைக்குறா பாருங்க...

தமிழ்மாறன் : ஏய் புள்ள கூட வம்பு பண்ணாம போய் பாப்பாக்கு பால் எடுத்துட்டு வா...

தன்ஷிகா : ம்ம் எத்தா ( மழலை மொழில சொன்னா)

மிருனாழினி : இரண்டு பேரையும் முறைச்சிட்டு போனா...

எல்லாரும் காபி குடிச்சிட்டு இருந்தாங்க, தன்ஷிகா தமிழ் மடில உட்கார்ந்து பாட்டில் பால் குடிச்சிட்டு இருந்தா...

அப்போ அர்ஜுன், அஞ்சலி வந்தாங்க அஞ்சலி கைல அவங்களோட ஒரு வயசு பையன் தீபக்க தூக்கிட்டு வந்தா...

தன்ஷிகா : ஐஐஐ தம்பி தம்பி ( எழுத்து குதிச்சிட்டே அஞ்சலி கிட்ட ஓடுனா)

அர்ஜுன் : ( அவளை தூக்கிட்டான்) எங்க மாமா கிட்ட வரமா தம்பிய பார்க்க ஓடுற...

தன்ஷிகா : மாமா தம்பி...

அர்ஜுன் : அவன் தூங்குறான் வா நாம விளையாடலாம்...

மிருனாழினி : ( தீபக்க தூக்குனா) வா அஞ்சலி உட்காரு நான் காபி கொண்டு வரேன்...

அஞ்சலி : ம்ம்ம் சரி டி... அண்ணா நல்லா இருக்கியா ( அவன் பக்கத்துல உட்கார்ந்து தோள்ல சாஞ்சிகிட்டா)

மிருனாழினி : தீபக்க தொட்டில்ல போட்டுட்டு கிட்சன் போய்ட்டா...

ஆச்சி : ஏன்டி நாங்க எல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா...

அஞ்சலி : முதல்ல அண்ணன் அப்பறம் தான் எல்லாரும்...

அர்ஜுன் : இனிமேல் அப்படி சொல்ல முடியாது தன்ஷி மா அத்தை அப்பா மேல சாஞ்சிருக்கா பாரு போய் தள்ளி விடு...

தன்ஷிகா : வேண்டா மாமா அத்தை பாவம்...

அஞ்சலி : அச்சோ என் செல்லக்குட்டி வா டா ( தன்ஷிகாவ தூக்கி கொஞ்சுனா)

மிருனாழினி : அவ அப்படியே அவ அப்பா மாதிரி அர்ஜூ அஞ்சு மேல அவ்ளோ பாசம்...

அர்ஜுன், அஞ்சலிக்கு காபி குடுத்தா... அப்பறம் காலை சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணாங்க...

முதல்ல உதய், கனி அவங்களோட மூன்று வயது பையன் ரிஷ்வந்த் வந்தாங்க...

அவங்க வந்த கொஞ்ச நேரத்துலயே கதிரேசனும் அவன் மனைவி நிவேதாவும் வந்தாங்க...

நிவின் அக்கா நிவேதாவ தான் கதிர் கல்யாணம் பண்ணிருக்கான்... நிவின், யாதவ், கதிர், ராஜாராமன் ஹாஸ்பிட்டல்ல இருந்த சமயத்துல மல்லிகா ராஜாராமனை கவனிச்சிகிட்டதால கதிர்க்கு தேவையான சில உதவிகளை நிவேதா தான் பண்ணா, அதனால கதிர்க்கு நிவேதாவ புடிச்சிபோய்டுச்சி...

அப்பறம் நிவேதாக்கு கல்யாணம் பண்ணனும்னு மாப்பிள்ளை பார்த்தாங்க அது தெரிஞ்ச கதிர் உதய் கிட்ட நிவேதாவ புடிச்சிருக்க விஷயத்தை சொன்னான்... உதய்ய தமிழ்மாறன் நிவின் வீட்டுல பேசி இரண்டு பேருக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணான்...

இப்போ நிவேதா ஐந்து மாதம் கற்பமா இருக்கா...

நிவின், யாதவ்க்கும் கல்யாணம் ஆகிடுச்சி, எல்லாரும் சேர்ந்து இரண்டு பேருக்கும் கல்யாண கிஃப்டா சென்னை ஒரே அப்பார்ட்மெண்ட்ல இரண்டு ஃப்ளாட் வாங்கி குடுத்துட்டாங்க...

இப்போ அவங்களும் அவங்க மனைவிகளோட தமிழ் வீட்டுக்கு வந்துருந்தாங்க...

அன்னைக்கு ஃபுல்லா தமிழ் வீட்டுல இருந்து நல்லா என்ஜாய் பண்ணிட்டு திரும்ப போய்டுவாங்க...

சென்னை,

ஒருநாள் காலை,

தீபக் அழவும் அஞ்சலி எழுந்து அவனை மடில படுக்க வச்சி பால் குடுத்துட்டு தட்டி குடுத்துட்டு இருந்தா...

அர்ஜுன் : அவனும் அவ மடில படுத்தான்...

அஞ்சலி : மாமா தம்பி எழுந்துடுவான் தள்ளி போங்க...

அர்ஜுன் : அவன் தான் பால் குடிச்சிட்டு சமத்தா தூங்குறானே, இப்போ எழுந்திரிக்க மாட்டான்...

அஞ்சலி : அப்போ போய் ஆபிஸ் கிளம்புங்க...

அர்ஜுன் : அஞ்சு மணிக்கே ஆபிஸ் போய் வாட்ச்மேன் வேலை பார்க்க சொல்லுறியா டி...

அஞ்சலி : ஓஓஓ இன்னும் டைம் ஆகலயா அப்போ கொஞ்ச நேரம் தூங்குங்க...

அர்ஜுன் : நீ தூங்கு டி இவன் பாரு அடிக்கடி உன்னை எழுப்பி விட்டு இப்போ நல்லா தூங்குறான்..

அஞ்சலி : குழந்தைங்கனா அப்படி தான் மாமா, இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும், இப்போ தூங்குனா அப்பறம் எழுந்திரிக்க லேட் ஆகிடும் அதனால நீங்க தூங்குங்க...

அர்ஜுன் : நீ சொன்னா கேட்க மாட்ட...

தீபக்க தூக்கி தொட்டில்ல போட்டுட்டு அஞ்சலிய ஹக் பண்ணி படுத்தான்...

அஞ்சலி : பச் மாமா என்ன பண்றீங்க...

அர்ஜுன் : தூங்கு டி ( அவ தலைய கோதி விட்டான்)

அஞ்சலி : தூக்கம் வரல ( அவன் மீசை முடிய புடிச்சி இழுத்தா)

அர்ஜுன் : ஆஆஆ வலிக்குது டி...

அஞ்சலி : வலிக்கட்டும்னு தான் புடிச்சி இழுத்தேன்...

அர்ஜுன் : கொழுப்பு டி உனக்கு...

அஞ்சலி : சரி சரி தூங்குங்க ( அவனுக்கு தட்டி குடுத்தா)

அர்ஜுன் : அஞ்சு மா ஒருவேளை நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலனா என்ன டி பண்ணிருப்ப...

அஞ்சலி : வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்துருப்பேன்...

அர்ஜுன் : பச் என்னடி அப்போ நான் உன்னை நல்லா பார்த்துக்கலயா...

அஞ்சலி : 😁 சும்மா சொன்னேன் மாமா... உன்னை விட என்னை யாரும் இவ்ளோ சந்தோஷமா பார்த்துக்க முடியாது... என் குடும்பத்தை மிஸ் பண்ண விடாம நீங்க வாராவாரம் ஊருக்கு அழைச்சிட்டு போறது எனக்காக தான்னு தெரியும் மாமா... நீங்க கிடைக்க நான் குடுத்துவச்சிருக்கனும்...

அர்ஜுன் : நானும் தான் அஞ்சு மா ( அவ நெத்தில முத்தம் குடுத்தான்)

அப்பறம் இரண்டு பேருமே தூங்கிட்டாங்க...

தமிழ்மாறன் வயல்ல வேலை இருக்குனு காலைல போகும் போது தன்ஷிகாவும் அவன் கூட போய்ட்டா...

அதனால மிரு பாப்பாக்கு பருப்பு சாதம் ஒரு பாக்ஸ்லயும் தமிழ்மாறன்க்கு கேரியர்ல சாப்பாடும் எடுத்துகிட்டு வயல்க்கு வந்தா...

அங்க ஆளுங்க எல்லாம் களை எடுத்துட்டு இருந்தாங்க அவங்களுக்கு நடுவுல தமிழும் அவன் பக்கத்துலயே தன்ஷிகாவும் நின்னா...

தமிழ் பிடிங்கி போடுற புல் ல எடுத்து தன்ஷி அவ களை பறிச்சா மாதிரி காட்டுவா...

தன்ஷிகா : ப்பா ப்பா ( அவ குட்டி கைல கொஞ்ச புல்ல தூக்கி காட்டுனா)

தமிழ்மாறன் : சூப்பர்டா குட்டி சமத்து இப்படி தான் பண்ணனும்...

தன்ஷிகா : அவன் பாராட்டுனதும் 😂😂😂 சத்தமா சிரிச்சிட்டு திரும்பவும் புல் பறிக்குறனு அவ போட்ருந்த பாவாடை சட்டை எல்லாம் சேர் ஆகிட்டு நின்னா...

மிருனாழினி : என்ன நடக்குது இங்க ( வரப்புல நின்னு இடுப்புல கைய வச்சிட்டு இரண்டு பேரையும் பார்த்து முறைச்சா)

தமிழ்மாறன் : அச்சோ அம்மா வந்துட்டா டா ( தன்ஷிகாவ பார்த்தான்)

தன்ஷிகா : வாய்ல கை வச்சி நிமிர்ந்து தமிழ பார்த்தா...

தமிழ்மாறன் : வா ஓடிடுவோம் ( தன்ஷிய தூக்கிட்டு ஓடுனான்)

மிருனாழினி : எப்ப பாரு உங்களுக்கு இதே வேலையா போச்சி, ஒழுங்கா அவ ட்ரெஸ்ஸ கழட்டிட்டு குளிப்பாட்டி கூட்டிட்டு வாங்க நான் வேற ட்ரெஸ் எடுத்துட்டு வந்துருக்கேன்...

தமிழ்மாறன் : சரி யாழினி மா கோவபடாத ( தன்ஷிய தூக்கிட்டு போய்ட்டான்)

மிருனாழினி : வாழையிலை விரிச்சி வச்சி அதுல சாப்பாட்டை எடுத்து வச்சி வெய்ட் பண்ணா அவங்க ஆளையே காணும் மிரு எழுந்து போய் பார்த்தா அங்க அப்பாவும் பொண்ணும் தண்ணில விளையாடிட்டு இருந்தாங்க...

மிருனாழினி : இரண்டு பேரையும் அதட்டி அழைச்சிட்டு வந்து சாப்பிட வச்சா...

மிரு தன்ஷிகாவுக்கு ஊட்டி விட்டா தமிழ்மாறன் மிருக்கு ஊட்டி விட்டு அவனும் சாப்பிட்டான்...

அந்த நேரம் உதய், கனிமொழி, ரிஷ்வந்த் வந்தாங்க...

தமிழ்மாறன் : என்னடா வேலை முடிஞ்சிட்டா...

உதய் : ஆமா டா முடிஞ்சிடுச்சி அதான் உங்கள பார்த்துட்டு வீட்டுக்கு போலாம்னு வந்தோம்...

மிருனாழினி : ரிஷ்வந்த் குட்டி இங்க வா நீயும் பாப்பாவோட சாப்பிடு...

ரிஷ்வந்த் : வேண்டா அத்தை பாப்பாக்கு பத்தாது...

மிருனாழினி : அச்சோ நிறைய இருக்கு டா தங்கம் கிட்ட வாங்க...

கனிமொழி : வேண்டா அண்ணி இப்போ வீட்டுக்கு தான் போக போறோம் நீங்க பாப்பாக்கு குடுங்க...

தமிழ்மாறன் : என்ன கனி வீட்டுக்கு போற வரை ரிஷ்வந்த் எப்படி பசி தாங்குவான் அவனும் பாப்பாவோட சேர்ந்து சாப்பிடட்டும்...

உதய் : நீங்களே உங்களுக்குள்ள பேசிக்காம கொஞ்சம் குழந்தைங்களை பாருங்க...

மூனு பேரும் பார்த்தாங்க அங்க தன்ஷிகா அவ குட்டி கையால ரிஷிக்கு ஊட்டி விட்டா அதுல பாதி சாப்பாடு கீழ தான் கொட்டுச்சி...

ரிஷ்வந்தும் திரும்ப தன்ஷிக்கு ஊட்டி விட்டான்...

மிருனாழினி : அப்படியே உங்களை மாதிரியே பசங்களும் இருக்காங்க பாரு...

தமிழ்மாறன் : கடைசி வரை இதே ஒற்றுமையோட இருக்கனும்...

உதய் : இருப்பாங்க டா ( தமிழ் தோள்ல கை போட்டான்)

எல்லாரும் ஒற்றுமையா சந்தோஷமா இருந்தாங்க...

முற்றும்...

வணக்கம் நண்பர்களே இதுவரை நீங்கள் கதைக்கு குடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.

# Sandhiya.