அவள் - 19
Sorry readers... Some personal issue... And amma ku knjm udambu sari ila...so ennala stry ahh continuous write panna mudiyala...
And stry ahh 15 part la end kodukalam nu think panne... But neenga end koduka venama nu sonnenga... So contine panne... But I'm sorry... Personal ahh knjm problem... Ennala stry ahh ipa eluntha mudiyathu... Next part end koduka poren... Again say to sorry...
ஆளாளுக்கு ஒரு மூலையில் நின்று கொண்டு இருக்க... குமரேசன் ஒரு நாற்காலியில் அமர்ந்து அனைவரையும் பார்த்தான்...
நிலா ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வந்து குமரேசனுக்கு கொடுக்க...
குமரேசன் : நீ தான் மா நா வந்தா தண்ணி கொடுக்குற...
துளசி : என்ன சித்தப்பு நா உங்களுக்கு தண்ணி கொடுக்குறது இல்லையா...
குமரேசன் : நா அப்படி சொல்லல மா... நா உன் வீட்டுக்கு வந்தா கொடுக்குற... இங்க வந்தா நிலா தான் வந்த உடனே கொடுப்பா...
துளசி : ஏன் உங்க அக்கா இருக்காங்க தானே...
குமரேசன் சலிப்பாக "என்னத்த சொல்ல..."என்று சொல்ல
துளசி : என்ன சித்தப்பா ரொம்ப சலிப்பா சொல்றீங்க...
குமரேசன் : "அது எதுக்கு மா... விடு..."என்று நிலா வை பார்த்து 'என்ன மா உன்னோட முகம் பலிச்சுனு இருக்கு...என்ன விசயம்..."என்று கேட்க...
துளசி : அதுவா...ஒன்னு இல்ல நீங்க தாத்தா ஆக போறீங்க...
குமரேசன் : என்ன மா சொல்ற... டேய் சிவா ரொம்ப சந்தோஷம் டா...
சிவா 🙄🙄🙄 திருதிருவென முழித்து கொண்டு "அட நீங்க வேற மாமா... மாசமா இருக்குறது துளசி இல்ல... நிலா..."என்று சொல்ல...
குமரேசன் : "அப்படியா..."என்று நிலா வை பார்க்க...
நிலா கன்னம் சிவக்க 😊😊😊 வெட்கத்துடன் திரவியம் முதுகு பின்னால் மறைந்தாள்...
குமரேசன் 😃😃😃 சிரித்து கொண்டே "என்ன மா வெட்கமா... உன் புருசன் பின்னாடி போய் ஒளிஞ்சுக்கிட்ட..."என்று கேட்டு கொண்டே திரும்ப...
குமுதவல்லி பேசாமல் குமரேசனையே பார்த்து கொண்டு இருந்தார்...
குமரேசன் குமுதவல்லியை உற்று பார்த்து கொண்டே இருந்தார்...
குமுதவல்லி : தம்பி சாப்டுறீயா...
குமரேசன் : "ஓ...சாப்பாடா... சரி..."என்று கேட்டு கொண்டே நிலா வை பார்த்து "அம்மாடி உன் கையால டீ குடிச்சு ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்குது... ஒரு டீ போட்டு தரியா மா..."என்று கேட்க...
நிலா வேகமாக "இதோ போட்டு வரேன் சித்தப்பா..."என்று நகர...
குமரேசன் : பாத்து போ மா...
நிலா : ம்ம்ம்...
குமரேசன் நிலா தலை மறையும் வரை அமைதியாக இருக்க... நிலா வெளிய செல்லவும்...
துளசியை பார்த்து "துளசி கதவை சாத்து மா..."என்று சொல்ல...
துளசி :"சம்பவம்..."என்று நினைத்து கொண்டு வேகமாக கதவை சாத்தினாள்...
குமரேசன் குமுதவல்லியை 😡😡😡 முறைத்து கொண்டு "என்ன கேட்ட... சாப்டுறீயா னா... நா வந்து எவ்ளோ நேரம் ஆச்சு... உடனே அந்த பொண்ணு தண்ணி கொடு வந்து கொடுத்தா... நீ பெத்ததுல ஒரு ஆச்சும் மாமா வந்து இருக்காரே னு தண்ணி கொடுத்தாங்களா...இல்ல நீ தான் தம்பி வந்து இருக்கான் னு கொடுத்துட்டியா...
இப்ப மட்டும் ஏன் இத கேட்குற... ஆனா இப்ப ஒரு வார்த்தை சொன்னீயே... எனக்கு தெரிஞ்சு இத்தனை வருசத்துல இப்ப தான் சரியா பேசி இருக்க னு தோணுது... ஆனா ஒரு சின்ன மாற்றம்... உன்னைய சரியா வளர்க்கல னு ஜனனி ய பார்த்து கேட்ட...
அது சரிதானா னு நீயே சொல்லு... நீ கடமைக்கு னு மூனு பிள்ளைய பெத்தியே தவிர...நீயா வளர்த்த... இல்லையே... இவங்களை வளர்த்தது எல்லாம் அவங்க அத்தைங்க தானே... ஏதோ ரெண்டு மூனு வருசம் வேலை இல்லாம வீட்டுல இருந்த அப்போ இவ..."என்று ஜனனியை சுட்டி காட்டி
"சின்ன குழந்தையா இருந்தா அவளை நீ பாத்துக்குற மாதிரி ஆகிருச்சு... நீ வளர்த்த... அது தான் அவ உன்னைய மாதிரியே உன் குணத்தோடு இருக்கா...கொஞ்சம் கூட மாறல... நீ சொன்னது சரி உன் வளர்ப்பு தப்பு... நீ ஒரு பிள்ளைய வளர்த்த அதுவும் உன்னைய மாதிரியே உன் குணத்தோடு வளர்த்து இருக்க...
அவங்க ரெண்டு பேரையும் அவங்க அத்தை தான் வளர்த்தாங்க... அவங்க எப்படி இருக்காங்க... இவ எப்படி இருக்கா... ஏன் கா உன் கிட்ட பல தடவ சொல்லி இருக்கேன்... இப்படி இருக்காத னு... ஒரு தடவையாவது நா சொன்னதை கேட்டியா...
அது கூட சரி...ஆனா அந்த பொண்ணு உன்னைய என்ன கா பண்ணா... எதுக்கு இப்படி கொடுமை படுத்துறீங்க... நா கல்யாணத்துக்கு முன்னாடியே உன் கிட்ட சொன்னேன்... அந்த பொண்ணு அவ சித்தப்பா ரொம்ப பிடிக்கும்... அவருக்கு பெண் குழந்தை ரொம்ப பிடிக்கும்... அவருக்கு ரெண்டுமே பையனா இருக்குறதால நிலா தன் பொண்ணா பாக்குறாரு...
அந்த பொண்ணு ரொம்ப பாசமாக இருக்காரு... நீங்க தான் பொறுப்பு... என் பொண்ணை நல்லா பாத்துக்கோங்க னு சொன்னாரு... பெத்த பசங்களை விட நிலா மேல தான் எனக்கு பாசம் அதிகம்... ரொம்ப செல்லமா தான் வளர்ந்தா...
நிலா அம்மா கூட நா திட்ட விட மாட்டேன்... ஏதாவது ஒன்று சொன்னா அடுத்த நிமிசம் சித்தப்பா னு என் வீட்டுக்கு வந்துருவா... அவ கண்ணுல இருந்து கண்ணீர் கூட வர விட்டது இல்ல... ஏதாவது தப்பு பண்ணா பொறுமையா சொல்லுங்க...
அவ புரிஞ்சுப்பா... அவளுக்கு ஏதுவாக இருந்தாலும் சட்டு னு புரிஞ்சுக்குற பழக்கம்... கண் பார்த்தா கை செய்யும்... அதனால் எதாவது னா இப்படி பண்ண கூடாது னு பொறுமையா சொல்லுங்க... கேட்டுக்குவா...
ஆனா திட்டாதீங்க... அவ தாங்கிக்குவா... ஆனா என்னால தாங்கிக்க முடியாது னு சொல்லி கண் கலங்கி நின்றாரு... அவ்ளோ பெரிய மனுசன்... அவரை விட நா சின்னவன் தான்... ஆனா பாத்து கை கூப்பி என் பொண்ணை பாத்துக்கோங்க னு சொல்லும் போது என் மனசு தாங்கல...
என் கிட்ட கண் கலங்கி நிக்கிறாரே... அப்போ அந்த பொண்ணை எவ்ளோ பாசமா வளர்த்து இருப்பாரு னு தோணுச்சு... நா பாத்துக்குறேனா வாக்கு கொடுத்தேன்... கல்யாணத்துக்கு முன்னாடியே நா உன் கிட்ட வந்து பேசுனேன்...
உன்னோட சேட்டை எல்லாம் அந்த பண்ணு கிட்ட காட்டாத... அப்புறம் நா மனுசனா இருக்க மாட்டேன் னு சொன்னேன்... ஆனா அதையும் மீறி நீயும் ஆனா பொண்ணும் அந்த பொண்ணை படாத பாடு படுத்தி இருக்கீங்க...
ஏக்கவோவ் நீ அந்த பொண்ணை கஷ்டப்படுத்தும் போது உனக்கு உன் ரெண்டு பொண்ணுங்களும் தெரிஞ்சாங்களா இல்லையா...
அது சரி தெரிஞ்சா நீ ஏன் இப்படி பண்ண போற..."என்று குமதவல்லியை ☹️☹️☹️வெறுப்பாக பார்க்க...
கதவு தட்டும் சத்தம் கேட்க... குமரேசன் துளசியிடம் கண் காட்ட... துளசி கதவை திறந்து விட்டாள்...
நிலா உள்ளே நுழைந்து "ஏன் கதவை சாந்தி வைச்சிங்க..."என்று கேட்டு கொண்டே அனைவருக்கும் டீ கொடுத்து கொண்டே வந்து கடைசியில் ஜனனி குமதவல்லியிடம் நீட்ட...
திரவியம் : நிலா...
நிலா திரவியத்தை பார்த்து "எல்லாரும் குடிக்கிறாங்க... குடிக்கட்டுமே..."என்று 🥺🥺🥺 கெஞ்சும் குரலில் கேட்க...
துளசி : நா தான் அப்போவே சொன்னேன்...
நிலா துளசியை 😡😡😡முறைக்க...
துளசி : என்ன முறைப்பு உண்மைய தானே சொன்னேன்...
நிலா : சும்மா இரு கா...
திரவியம் : "நிலா என் பேச்சை கேட்பீயா மாட்டியா..."என்று பேச்சில் அழுத்தம் கொடுக்க...
நிலா அமைதியா அங்கே நகர்ந்து வந்து துளசி அருகில் நின்றாள்...
குமரேசன் : திரவியம் என்ன மா நடக்குது...
திரவியம் எல்லாத்தையும் சொல்ல...
குமரேசன் : நல்ல முடிவு எடுத்து இருக்க திரவியம்... இப்படி பண்ணா தான் எல்லாம் திருந்தும்...
துளசி : எங்க திருந்துச்சு... உங்க அக்கா கொஞ்சு மாறியாச்சு... ஆனா இந்த சிறிசு சுத்தம்... அதே வீம்பு...எவ்ளோ பட்டாலும் திருந்தா ஜென்மம் போல...
குமரேசன் ஜனனியை பார்க்க...
ஜனனி குமரேசனை பார்த்து பயந்தாலும் வெளியே பயத்தை காட்டாமல் மறைக்க முயற்சி செய்தாள்...
குமரேசன் : "என்ன டி இது..."என்று அதட்டும் தோனில் கேட்க...
ஜனனி எச்சிலை விழுங்கி கொண்டு நின்றாள்...
குமரேசன் : "உன்னை தான் கேட்குறேன்..."என்று கத்த...
அந்த கத்தலில் ஜனனி பயந்து ரெண்டடி பின்னால் நகர...
நிலா பயந்து உடல் குலுங்கி பயந்து கை இருந்த தட்டை கீழே போட...
துளசி அவளை பிடித்து கொண்டு "சித்தப்பா நிலா இப்ப மாசமா இருக்கா... பயந்தா நல்லது இல்ல..."என்று சொல்ல...
திரவியம் பதறியவாறு நிலா வை தன்னோடு 🤗🤗🤗 அணைத்து கொண்டான்...
குமரேசன் கண் முடி பெருமூச்சு விட்டு "துளசி நிலா வ கூட்டிட்டு உள்ள போ..."என்று சொல்ல...
நிலா குமரேசனை பார்த்து "சித்தப்பா வேணாம்... ஏற்கனவே அவங்க ரொம்ப திட்டு வாங்கிட்டாங்க... போதுமே... எதுக்கு பிரச்சனை... விடுங்க சித்தப்பா..."என்று சொல்ல
துளசி :"அட இவ வேற..."என்று நினைத்து கொண்டு "அடியேய் வாய மூடிட்டு வா டி..."என்று உள்ளே இழுத்து சென்று கதவை சாத்தினாள்...
நிலா : அக்கா பாவம் கா...
துளசி : "இவளை என்ன பண்ண தேவலாம்..."என்பது போல் பார்த்தாள்...
குமரேசன் ஜனனி அருகில் சென்று "உனக்கு என்ன தான் பிரச்சனை... எதுக்காக இப்படி பண்ற..."என்று கேட்க...
ஜனனி : மாமா...
குமரேசன் : நிலா இந்த வீட்டுக்கு வந்த புதுசு ல நீ அவ கூட சகஜமா தானே பேசிட்டு இருந்த... இந்த ஆறு மாசத்துல நீ இப்படி பண்ற... எதுக்காக உனக்கு நிலா மேல இவ்ளோ கோவம்...
ஜனனி எச்சிலை விழுங்கி கொண்டு பயந்தவாறு நிற்க...
குமரேசன் : பேச மாட்ட ல... ஏன் னு நா சொல்லட்டா...
ஜனனிக்கு பயம் வேகமாக தொற்றி கொண்டது...
குமரேசன் : தேவா...
ஜனனி : "மாமா வேணாம் மாமா..."என்று பதற...
திரவியம் : "தேவா..."என்று புரியாமல்...
குமரேசன் : ஆமா தேவா தான்...
சிவா : அது நிலாவோட சித்தப்பா பையன் தானே...
குமரேசன் : ம்ம்ம்...
திரவியம் : தேவாக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்...
குமரேசன் : உன் தங்கச்சியையே கேளு...
திரவியம் : நா அவ கிட்ட பேச மாட்டேன் மாமா...
குமரேசன் ஜனனியை முறைத்தவாறு "நிலா சித்தப்பாவோட பெரிய தேவா இங்க நிலா பாக்க அடிக்கடி வருவானா..."என்று கேட்க...
திரவியம் : "ஆமா... தேவா மட்டும் இல்ல அவன் தம்பி ஜீவாவும் தான் வருவான்... இதுல என்ன இருக்கு..."என்று கேள்வியாக பார்க்க...
குமரேசன் : அதுல ஒன்னும் இல்ல... ஆனா இந்த ஜனனி தேவா வ காதலிச்சு இருக்கா... ஆறு மாசத்துக்கு முன்னாடி தேவா கிட்ட அவளோட காதலை சொல்லி இருக்கா... ஆனா தேவா நிராகரிச்சுட்டான்... அது தான் அந்த கோவம் தான்... தேவா மேல காட்ட முடியாம நிலா மேல காட்டுறா...
திரவியம் : இதுல எல்லாம் ஒரு காரணமா... தேவாக்கு இப்ப கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்க... அவன் சரியா முடிவு தான் எடுத்து இருக்கான்...
ஜனனி அதிர்ச்சியாக அவனை பார்க்க...
திரவியம் : நல்ல வேலை என் மச்சான் ரொம்ப நல்ல பையன்... காதலுக்கு சரி னு சொல்லி வாழ்க்கையை கெடுத்துக்கல... இது மட்டும் தேவா காதுக்கு போச்சு... ஜனனி அவ்ளோ தான்...
அவன் அக்கா வ பத்தி நா ஏதாவது ஒரு குறை சொன்னாளே என் கிட்ட சண்டைக்கி நிப்பான்... இந்த விசயம் அவனுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்...யாரு என்ன னு கூட பாக்க மாட்டான்... அடிச்சுருவான்...ஒழுங்கா இருக்க சொல்லுங்க மாமா...
ஜனனி : என்ன டா மிரட்டுறீயா...
திரவியம் : மாமா என் கிட்ட பேச வேணாம் னு சொல்லுங்க...அப்புறம் என்ன நடக்கும் னு எனக்கு தெரியாது...
குமரேசன் ஜனனியை 😡😡😡 முறைத்தார்....
தொடரும்...
# நானிஷா.
5 Comments
Story kku end card podathiga sis continue pannuga pls...
ReplyDeleteSry sister some personal problem...
DeleteOhho deva love reject pannadhuku punishment nila ku kudukurala indha janani 😡😡 nalla vela andha paiyan reject pannita illana avan life poyirukum 😏😤 next episode story mudiya pogudhu naa indha story miss pannuva 😟😔
ReplyDeleteIla sis... Innum two or three episodes podalam nu iruken...
Delete😔😔😔😔😔ponga sissy ma..enaku romba varuthama iruku
ReplyDelete