வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 93

அடுத்தநாள் காலை,

கனிமொழி : முதல்ல எழுந்தா...

உதய் : அவளை ஹக் பண்ணி தூங்கிட்டு இருந்தான்...

கனிமொழி : அவன் கைய எடுத்து விட்டு எழுந்தா...

உதய் : திரும்பவும் அவளை இழுத்து ஹக் பண்ணிகிட்டான்...

கனிமொழி : மாமா விடு டைம் ஆகுது அத்தை எழுந்துடுவாங்க...

உதய் : நைட் தூங்க லேட் ஆச்சில பேசாம தூங்கு டி...

கனிமொழி : எனக்கு தூக்கம் வரல நீங்க தூங்குங்க மாமா ப்ளீஸ் என்னை விடுங்க...

உதய் : சரி கன்னத்துல ஒரு முத்தம் குடுத்துட்டு போ...

கனிமொழி : போ மாமா..

உதய் : அப்போ விட மாட்டேன்...

கனிமொழி : உன்னோட ஒரே இம்சை மாமா ( அவன் கன்னத்துல முத்தம் குடுத்தா) 😚😚😚

உதய் : இந்த கன்னம் ( இன்னொரு பக்கம் திரும்பி காட்டுனான்)

கனிமொழி : 😚😚😚 அங்கயும் குடுத்தா...

உதய் : இங்க நெத்தில ( நெத்தில கை வச்சி காட்டுனான்)

கனிமொழி : அவன் கன்னத்துல அடிச்சா...

உதய் : 😱 ஏன்டி அடிச்ச...

கனிமொழி : அதான் கன்னத்துல குடுத்துட்டேன்ல அப்பறம் என்ன இன்னொரு கன்னத்துல குடு நெத்தில குடுனு கேட்டுட்டு இருக்க இன்னொரு முறை முத்தம் கேட்டா இன்னொரு கன்னத்துலயும் அடி விழும் பார்த்துக்க...

உதய் : புருஷனை அடிச்சதும் இல்லாம இன்னொரு முறை அடிப்பனு வேற சொல்லுறியா ( அவ கன்னத்துல கடிச்சான்)

கனிமொழி : ஆஆஆ மாமா வலிக்குது...

உதய் : அடிச்சா இதான் தண்டனை நியாபகத்துல வச்சிக்க ( அவளை விட்டு தள்ளி போய் படுத்தான்)

கனிமொழி : ( ஓடி போய் கண்ணாடி எடுத்து பார்த்தா) 😰 மாமா இங்க பாரு உன் பல் தடம் அப்படியே தெரியுது அய்யோ அத்தை பார்த்தா என்ன நினைப்பாங்க...

உதய் : என்ன நினைப்பாங்க மகனும் மருமகளும் சந்தோஷமா இருக்குறதா நினைப்பாங்க ( தலைக்கு பின்னாடி கை கோர்த்து கால ஆட்டிகிட்டே அவளை பார்த்து சொன்னான்)

கனிமொழி : 😠😠😠 என்ன நக்கலா ( தலையணை எடுத்து அவனை அடிச்சா)

உதய் : அடியே ஒழுங்கா போய்டு இல்லனா நைட் விட்டதை இப்போ ஆரம்பிச்சிடுவேன் பார்த்துக்க 😉

கனிமொழி : 😏😏😏 ச்சி ப்பே ( அவ குளிக்க போய்ட்டா)

உதய் : திரும்பவும் படுத்து தூங்கிட்டான்...

கனிமொழி : குளிச்சிட்டு வந்து சாமி கும்பிட்டா...

சீதா : அவங்களும் அப்போ தான் குளிச்சிட்டு வந்தாங்க...

கனிமொழி : சாரி அத்தை இன்னைக்கு எழுந்திரிக்க லேட் ஆகிடுச்சி...

சீதா : பரவாயில்ல டா ( கனி முக பொலிவ பார்த்தே கண்டுபுடிச்சிட்டாங்க அவங்க வாழ்க்கைய தொடங்குனதை)

கனிமொழி : 😊😊😊 என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை ( அவங்க கால்ல விழுந்தா)

சீதா : தீர்க்க சுமங்கலியா இரு மா, சீக்கிரமே பேரனோ, பேத்தியோ பெத்து குடுத்துடு மா...

கனிமொழி : இன்னும் பத்து மாசத்துல மாமாவே எங்களுக்கு குழந்தையா வந்து பிறப்பாங்க பாருங்க...

சீதா : 😢😢😢 சந்தோஷம் மா...

கனிமொழி : அழாதீங்க அத்தை ( அவங்க கண்ணீரை துடைச்சி விட்டா)

அப்போ மல்லிகாவும், கதிரேசனும் அங்க வந்தாங்க...

சீதா, கனிமொழி : வாங்க வாங்க...

மல்லிகா : மாமியாரும் மருமகளும் என்ன பேசுறீங்க...

சீதா : எங்களுக்குள்ள ஆயிரம் ரகசியம் இருக்கும் அண்ணி அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல மாட்டோம் என்ன கனி...

கனிமொழி : ஆமா அத்தை...

கதிரேசன் : பின்ன என்ன மா வா நாம போலாம் நம்ம கிட்ட சொல்ல மாட்டாங்களாம்...

சீதா : டேய் கதிர் உடனே கிளம்பிடாத அப்படியே என் அண்ணனுக்கு தப்பாம பிறந்துருக்கான்...

மல்லிகா : அவனை விடுங்க அண்ணி...

கனிமொழி : என்ன மா அதிசயமா காலைலயே வந்துருக்கீங்க...

கதிரேசன் : அப்பா எதோ வேலை விஷயமா சென்னை போய்ருக்காரு அதான் அம்மா காலைலயே இங்க அழைச்சிட்டு வந்துட்டாங்க...

கனிமொழி : சென்னையா அவருக்கு அங்க என்ன வேலை இருக்கு...

மல்லிகா : தெரியல டி எல்லாத்தையும் எங்க கிட்ட சொல்லிட்டா பண்றாரு அவர் இஷ்டத்துக்கு எதோ பண்றாரு...

கதிரேசன் : ஆமா கனி என்ன உன் கன்னம் சிவந்து வீங்கி இருக்கு அவன் அடிச்சானா உன்னை ( கொஞ்சம் தூரத்துல இருந்ததால அவனுக்கு பல் தடம் தெரியல)

கனிமொழி : 😱 ( m.v ) அவளோ தேச்சி குளிச்சும் பல் தடம் போலயா, கன்னத்துல கை வச்சி திரு திருனு முழிச்சா...

மல்லிகா : என்ன அடிச்சானா ( அவ கைய எடுத்துட்டு பார்த்தாங்க, பல் தடம் தெரியவும் அவங்களுக்கு எல்லாம் புரிஞ்சுடுச்சி ) 😄😄😄 கனி சந்தோஷமா இருக்கியா டி...

கனிமொழி : 😊😊😊 ஆமா மா...

கதிரேசன் : ம்மா என்ன நான் அவன் அடிச்சிட்டானானு பதறி போய் கேட்குறேன் நீ சந்தோஷமா இருக்கியானு கேட்குற லூசா மா நீ...

மல்லிகா : ஆமா டா லூசு தான் கழுத வயசாகியும் இன்னும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம இருக்கேன் பார்த்தியா நான் லூசு தான்...

கதிரேசன் : நான் என்ன கேட்குறேன் நீ என்னமா பதில் சொல்லுற...

கனிமொழி : அண்ணா அவர் என்னை அடிக்கலாம் இல்ல நாங்க சந்தோஷமா தான் இருக்கோம், அவர் ரூம்ல தூங்கிட்டு இருக்காரு போய் எழுப்பி கூட்டிட்டு வா...

கதிரேசன் : இன்னும் தூங்குறானா அவன் ( எழுந்து அவன் ரூம்க்கு போனான்)

உதய் : 😪😪😪 நல்லா தூங்கிட்டு இருந்தான்...

கதிரேசன் : உதய் உதய் எழுந்திரி டா...

உதய் : பச் கனி போ டி தூக்கம் வருது...

கதிரேசன் : மணி 7 ஆகுது இன்னும் என்ன தூக்கம் எழுந்திரி டா...

உதய் : டிஸ்டர்ப் பண்ணாத கனி அப்பறம் இன்னொரு கன்னத்துலயும் கடிச்சிடுவேன் ஒழுங்கா போய்டு...

கதிரேசன் : 😨 தலைல அடிச்சிகிட்டான் ( m.v ) அதான் கனி கன்னம் சிவந்து இருந்துதா, இது தெரியாம நான் தான் லூசு மாதிரி பேசிட்டேனா அம்மா சொன்னதுல தப்பே இல்ல...

டேய் உதய் நாயே எழுந்து தொல உன்னால என் மானம் போச்சி...

உதய் : கனி உன் வாய்ஸ் எவ்ளோ ஸ்வீட்டா இருக்கும் இன்னைக்கு ஏன் கர கரனு உன் அண்ணன் அந்த தடிமாடு இருக்கானே அவனை மாதிரியே இருக்கு ( தூக்கத்துல என்ன பேசுறதுனே தெரியாம உலரிட்டு இருந்தான்)

கதிரேசன் : உதய் இப்போ எழுந்திரிக்கலனா தண்ணிய எடுத்து மூஞ்சில ஊத்திடுவேன் டா...

உதய் : ( பட்டுனு எழுந்து உட்கார்ந்தான் ஆனா கண்ணை திறக்கல) நைட்டும் தூங்கல இப்பவும் தூங்க விடாம டிஸ்டர்ப் பண்ணுற கனி, என்னடி உன் ப்ரச்சனை இரு வாய கடிச்சி வைக்குறேன் அப்பறம் எப்படி பேசுவ ( கதிர் கைய புடிச்சி கிட்ட இழுத்தான்)

கதிரேசன் : டேய் டேய் நாசமா போறவனே கண்ணை திறந்து பாரு டா, முதல்ல கைய விடு ( கைய உதறிட்டு தள்ளி போனான்)

உதய் : ( m.v ) கனி கை இப்படி இருக்காதே சாஃப்டா இருக்குமே

கண்ணை திறந்து பார்த்தான் அங்க கதிர் நின்னுட்டு இருந்தான்...

உதய் : 😱 நீ நீ நீ எப்படி இங்க வந்த எப்ப வந்த...

கதிரேசன் : உன்னை எழுப்ப வந்த பாவத்துக்கு என்னலாம் பண்ணுற,  என் தங்கச்சி தான் பாவம் எப்படி தான் உன்னை சமாளிக்குறாளோ, இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாது பா ( வெளில போக போனான்)

உதய் : டேய் டேய் யார் கிட்டயும் சொல்லிடாத ( எழுந்து வந்தான்)

கதிரேசன் : ச்சி நாயே முதல்ல சட்டைய போட்டுட்டு வா டா ( விறு விறுனு வெளில போனான்)

உதய் : அவசர அவசரமா ஒரு டீ ஷர்ட்ட எடுத்து போட்டுட்டு வெளில ஓடுனான்...

கதிரேசன் : அம்மா கிளம்பும் போது ஃபோன் பண்ணு வந்து அழைச்சிட்டு போறேன் ( சொல்லிட்டே வாசல்க்கு போய்ட்டான்)

உதய் : டேய் டேய் ( அவனும் வெளில ஓடிட்டான்)

சீதா, மல்லிகா அவங்களை விசித்திரமா பார்த்துட்டு திரும்ப பேச ஆரம்பிச்சாங்க...

கதிரேசன் : யப்பா சாமி ஆள விடு ( கையெடுத்து கும்பிட்டு பைக் ஸ்டார்ட் பண்ணி கிளம்பிட்டான்)

உதய் : அவன் பயந்து ஓடவும் இவனுக்கு சிரிப்பு வந்துடுச்சி 😂😂😂 பயங்கரமா சிரிச்சான்...

கனிமொழி : மாமா என்ன பண்ண அண்ணண் ஏன் இப்படி அவசரமா போறாங்க...

உதய் : நீ னு நினைச்சி ஒரு லிப் டு லிப் கிஸ் அடிக்க போனேன் அதுக்குள்ள உன் அண்ணன் பயந்து ஓடிட்டான் 😂😂😂

கனிமொழி : சிரிக்காத மாமா ( அவன் முதுகுல அடிச்சிட்டு உள்ள போய்ட்டா)

உதய் : அவனும் கதிரை நினைச்சி சிரிச்சிட்டே உள்ள போய்ட்டான்...

( இன்னும் இரண்டு பேரும் சரியா பேசிக்கல ஆனா மாமா, மாசான்னு  நிறைய வம்பு பண்ணிப்பாங்க... இரண்டு பேருக்கும் நடுவுல கனி தான் மாட்டிகிட்டு முழிப்பா)

தொடரும்...

# Sandhiya.