வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 95

மிருனாழினி : வீட்டுக்கு வந்ததும் அவசரமா இறங்கி உள்ள ஓடுனா...

உதய் : பைக் நிறுத்திட்டு அவ பேக்கயும் எடுத்துட்டு உள்ள போனான்...

மிருனாழினி : தாத்தா அவர் எங்க...

தாத்தா : ரூம்ல இருக்கான் மா...

மிருனாழினி : ரூம்க்கு ஓடுனா...

அங்க தமிழ்மாறன் தரைல பாய் போட்டு படுத்துருந்தான் அடிப்பட்ட காலுக்கு இரண்டு தலையணை வச்சி அதுக்கு மேல கால் வச்சி படுத்துருந்தான்...

மிருனாழினி : அவனை அப்படி பார்க்கவும் அவளுக்கு அழுகை வந்துடுச்சி 😭😭😭

தமிழ்மாறன் : ( அழுகுற சத்தம் கேட்கவும் கண் விழிச்சி பார்த்தான்) யாழினி...

மிருனாழினி : ( ஓடி வந்து அவன் பக்கத்துல உட்கார்ந்தா) 😭😭 மாறன் என்ன ஆச்சி உங்களுக்கு, காலுல என்ன இவ்ளோ பெரிய கட்டு...

தமிழ்மாறன் : ஒன்னும் இல்ல மா பைக்ல இருந்து கீழ விழுந்துட்டேன் சின்ன காயம் தான் ஆனா டாக்டர் இவ்ளோ பெரிய கட்டு போட்டு விட்டுட்டாரு...

மிருனாழினி : எனக்கு காலைல இருந்து மனசே சரியில்ல நான் காலைலயே வந்துருப்பேன் இந்த நிவின், யாதவ் தான் விடல 😭😭😭

தமிழ்மாறன் : யாழினி மா சின்ன அடி தான் அழாத...

மிருனாழினி : நீங்க பார்த்து தான பைக் ஓட்டுவீங்க எப்படி கீழ விழுந்தீங்க உண்மைய சொல்லுங்க என்ன நடந்தது...

தமிழ்மாறன் : உன்னை காலேஜ்ல விட்டு வரும் போது வளைவுல திரும்பும் போது பின்னாடி வந்தவன் வந்து என் வண்டில விட்டுட்டான் அதான் வண்டி சரிக்கிடுச்சி நானும் கீழ விழுந்துட்டேன், நீ பயப்புடுற அளவு ஒன்னும் ஆகல...

மிருனாழினி : பெட்ல படுக்கலாம்ல ஏன் கீழ படுத்தீங்க உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல எழுந்திரிங்க முதல்ல...

தமிழ்மாறன் : என்ன டி திட்டுற...

மிருனாழினி : பின்ன திட்டாம கொஞ்சுவாங்களா எழுந்திரிங்க முதல்ல ( அவன் கை புடிச்சி தூக்குனா)

தமிழ்மாறன் : அவளை புடிச்சிகிட்டே எழுந்தான்...

மிருனாழினி : அவனை பெட்ல படுக்க வச்சிட்டு பாய் எடுத்து ஓரமா வச்சிட்டு வந்து அவன் பக்கத்துல உட்கார்ந்தா...

😞😞😞 அவனையே பார்த்துட்டு இருந்தா...

தமிழ்மாறன் : என்ன யாழினி...

மிருனாழினி : வலிக்குதா உங்களுக்கு...

தமிழ்மாறன் : ம்ம்ம் லைட்டா...

மிருனாழினி : என்னை காலேஜ்ல விட வந்ததால தான் இப்படி ஆகிடுச்சி...

தமிழ்மாறன் : ஏய் லூசு மாதிரி பேசாத டி இத்தனை நாளும் நான் தான வந்து விட்டுட்டு வருவேன் இன்னைக்கு எதோ தெரியாம நடந்துடுச்சி அதுக்குனு உன் மேல பழி போட்டுக்காத...

மிருனாழினி : உங்களை பார்க்கவே கஷ்டமா இருக்கு...

தமிழ்மாறன் : அப்போ பார்க்காத...

மிருனாழினி : பச் மாறன் ( சினுங்குனா)

தமிழ்மாறன் : சரி சரி சும்மா சொன்னேன் மூஞ்ச அப்படி வச்சிக்காத...

மிருனாழினி : 😠😠😠 அவனை பார்த்து முறைச்சா...

தமிழ்மாறன் : இது இன்னும் கேவலமா இருக்கு...

மிருனாழினி : உங்களுக்கு அடிப்பட்ருக்கேனு பார்க்குறேன் இல்லனா அவ்ளோ தான் ( கை நீட்டி மிரட்டுனா)

தமிழ்மாறன் : 😂😂😂 என் யாழினிக்கு எவ்ளோ கோவம் வருது...

உதய் : உள்ள வரலாமா...

மிருனாழினி : ( எழுந்துட்டா) வாங்க அண்ணா...

உதய் : இந்தா மா உன் பேக்...

மிருனாழினி : ( வாங்கி டேபிள்ல வச்சா) ஏன் அண்ணா அப்பவே சொல்லல இவர்க்கு அடிப்பட்ட விஷயத்தை...

உதய் : நீ ஏற்கனவே டென்சனா இருந்த இதுல நானும் இதை சொல்லி ஏன் உன் பயமுறுத்தனும் அதான் சொல்லல...

மிருனாழினி : சரி விடுங்க...

உதய் : தமிழ் நிவின், யாதவ் உன் கூட பேசனும்னு சொன்னானுங்க பேசு ( ஃபோன் குடுத்தான்)

தமிழ் இவங்கள்ட பேசுற நேரம் மிருனாழினி அர்ஜுன்க்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லிட்டா...

தமிழ் நிவின் யாதவ் கிட்ட பேசி முடிச்சதும் அர்ஜுன் கூட பேசுனான், அர்ஜுன் உடனே வரதா சொன்னான் தமிழ் வேண்டா நாளைக்கு அப்பா, அம்மாவோட வா னு சொல்லி வச்சிட்டான்...

தமிழ் பேசி முடிச்சதும் உதய் கீழ போய்ட்டான்...

மிருனாழினி : இங்க இருக்கீங்களா இல்ல கீழ போலாமா...

தமிழ்மாறன் : கீழ போலாம்...

மிருனாழினி : சரி ( அவன் கை புடிச்சி தோள்ல போட்டுகிட்டு கீழ அழைச்சிட்டு போனா)

மகாலெட்சுமி : கொஞ்ச நேரம் தூங்கலாம்ல ஏன் கீழ வந்த...

தமிழ்மாறன் : மதியத்துல இருந்து தூங்கிட்டு தான மா இருக்கேன் இப்போ தூக்கம் வரல...

மகாலெட்சுமி : சரி...

அன்னைக்கு ஈவ்னிங் அஞ்சலி வந்த பிறகு தான் தமிழ்க்கு அடிப்பட்ட விஷயம் அவளுக்கு தெரியும் அவளும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அப்பறம் அவளை சமாதானம் பண்ணாங்க...

அடுத்தநாள் காலை,

மிருனாழினி : காலேஜ் கிளம்பாம தமிழ்க்கு தேவையான உதவி பண்ணிட்டு இருந்தா...

தமிழ்மாறன் : யாழினி காலேஜ் கிளம்பாம இன்னும் என்ன பண்ணுற...

மிருனாழினி : நான் காலேஜ் போல...

தமிழ்மாறன் : ஏன் போல...

மிருனாழினி : உங்களை கவனிச்சிக்கனும் அப்பறம் இன்னைக்கு அஞ்சலிய பொண்ணு பார்க்க மறந்துட்டீங்களா...

தமிழ்மாறன் : எனக்கு சின்ன அடி தான் பட்ருக்கு யாழினி நானே கூட தனியா நடப்பேன், அப்பறம் அர்ஜுன் வீட்டுல இருந்து வரது நம்மள தவிற வீட்டுல யாருக்கும் தெரியாது... அவங்க வரதுக்கு மதியத்துக்கு மேல ஆகிடும் அதுக்குள்ள நீ காலேஜ்ல இருந்து வந்துடலாம்.

பாப்பாவே இன்னைக்கு வேலைக்கு போவா நீ வீட்டுல இருந்து என்ன பண்ண போற...

மிருனாழினி : கண்டிப்பா போகனுமா...

தமிழ்மாறன் : நான் என்ன கால் முறிஞ்சி படுக்கைலயா இருக்கேன்...

மிருனாழினி : ( அவன் வாய்லயே அடிச்சா) ஏன் இப்படி பேசுறீங்க 😢😢😢

தமிழ்மாறன் : வலிக்குது டி ( அவன் உதட்டை தேச்சி விட்டான்) இப்போலாம் உனக்கு ரொம்ப கை நீளுது...

மிருனாழினி : சாதாரணமா அடிப்பட்டதுக்கே என்னால தாங்க முடியல இதுல கால் முறியல அது இதுனு சொல்லுறீங்க... போங்க பேசாதீங்க ( முகத்தை திருப்பிகிட்டா)

தமிழ்மாறன் : யாழினி மா சாரி டா இனிமேல் இப்படி சொல்லல சரியா ( அவ தாடைய புடிச்சி கெஞ்சுனான்)

மிருனாழினி : சரி விடுங்க நான் கிளம்புறேன் ( காலேஜ் கிளம்ப போய்ட்டா)

அஞ்சலி மிருனாழினிய காலேஜ்ல விட்டுட்டு அப்படியே வேலைக்கு போய்ட்டா...

தமிழ் வீட்டுல தான் இருந்தான், அர்ஜுன் வீட்டுல இருந்து வரது யாருக்கும் தெரியாததால எல்லாரும் சாதாரணமா தான் இருந்தாங்க...

மதியம் அர்ஜுன் அவன் அப்பா, அம்மா, ராஜன் நாலு பேரும் தமிழ் வீட்டுக்கு வந்தாங்க... மாலதிக்கு அர்ஜுன்க்கு அஞ்சலிய பொண்ணு கேட்குறது புடிக்கல அதனால வரலனு சொல்லிட்டாங்க...

வந்தவங்களை வரவேற்று மதிய சாப்பாடு சாப்பிட வச்சி எல்லாரும் பேசிட்டு இருந்தாங்க...

நட்ராஜ் : சம்பந்தி நாங்க அர்ஜுன்க்கு இந்த வருஷம் கல்யாணத்தை முடிக்கலாம்னு பார்க்குறோம்...

தேவேந்திரன் : ரொம்ப சந்தோஷம் சம்பந்தி எந்த மாதிரி பொண்ணு வேணும்னு சொல்லுங்க அர்ஜுன்க்கு நல்ல பொண்ணா பார்த்துடலாம்...

அருணா : அண்ணா எங்களுக்கு அஞ்சலிய ரொம்ப புடிச்சிருக்கு எப்படியும் அவளுக்கு கல்யாணம் பண்ணி தான ஆகனும் அது ஏன் அர்ஜுன்க்கா இருக்க கூடாது..

நட்ராஜ் : உங்களுக்கே அர்ஜுன் பத்தி நல்லா தெரியும் இப்போ என் பிஸ்னஸ்ஸ அவன் தான் எடுத்து நடத்துறான்... நாங்க அஞ்சலிய எங்க பொண்ணா பார்த்துப்போம் உங்களோட விருப்பத்தை சொன்னா மேற்கொண்டு பேசலாம்...

தேவேந்திரன் : திடீர்னு நீங்க கேட்கவும் எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியல அர்ஜுன் ரொம்ப நல்ல பையன் அஞ்சலிய நல்லா பார்த்துப்பான் அதுல எனக்கு சந்தேகமே இல்ல, இருந்தாலும் குடும்பத்துல உள்ள எல்லார் கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்குறேன்...

அருணா : தாராளமா கேளுங்க அண்ணா, நாங்க ரூம்க்கு போறோம் நீங்க எல்லாரும் சேர்ந்து பேசி முடிவு பண்ணிட்டு சொல்லுங்க...

தேவேந்திரன் : சரி மா...

நட்ராஜ், அருணா, அர்ஜுன், ராஜன் ரூம்க்கு போனதும் தேவேந்திரன் எல்லார் விருப்பத்தையும் கேட்டாரு எல்லாரும் சம்மதம் சொல்லவும் உதய் வீட்டுக்கும் ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லி இங்க வர சொல்லிட்டாரு...

உடனே அஞ்சலிக்கு கால் பண்ணி பேங்க்ல லீவ் சொல்லிட்டு வர சொல்லிட்டாங்க.. மிரு, நிவின், யாதவ்வ அழைச்சிட்டு வர உதய் தமிழ் ஜீப் எடுத்துட்டு கிளம்பிட்டான்...

மகாலெட்சுமி, சீதா : பஜ்ஜி, கேசரி, டீ ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க...

அஞ்சலி வந்ததும் கனிமொழி அவளை ரூம்க்கு அழைச்சிட்டு போய் பட்டு புடவை கட்டி அழகா ரெடி பண்ணா...

மிரு வந்ததும் அஞ்சலி ரூம்க்கு வந்துட்டா, நிவின், யாதவ் அர்ஜுன் ரூம்க்கு போய்ட்டாங்க...

எல்லாரும் ஹால்ல வந்து உட்கார்ந்தாங்க, அவங்களுக்கு நடுவுல பூ, பழம், ஸ்வீட் எல்லாம் வரிசையா அடுக்கி வச்சிருந்தாங்க...

அஞ்சலி கைல காபி ட்ரே குடுத்து அவ கூட கனிமொழி, மிருனாழினி வந்தாங்க...

அஞ்சலி : முதல்ல நட்ராஜ், அருணாக்கு காபி குடுத்துட்டு அர்ஜுன்க்கு நேரா நீட்டுனா...

அர்ஜுன் : காபி எடுக்காம அவளையே பார்த்துட்டு இருந்தான்...

அஞ்சலி : எடுங்க...

அர்ஜுன் : அதை என்னை பார்த்து சொல்லு கீழ என்னா பார்த்துட்டு இருக்கு, மாமாவ பார்த்து வெட்கமா...

அஞ்சலி : எல்லாரும் இருக்குறாங்களேனு பார்க்குறேன்...

அர்ஜுன் : இல்லனா என்ன செல்லம் பண்ணுவ மாமாக்கு கிஸ் குடுப்பியா...

அஞ்சலி : சுட சுட காபிய எடுத்து மூஞ்சில ஊத்திடுவேன் ஒழுங்கா எடுத்துக்கோங்க...

அர்ஜுன் : 😳😳😳 என்னடி இப்படி மிரட்டுற...

நிவின் : அவ பொறுமையா சொல்லும் போதே எடுத்துடு அர்ஜுன் சொன்னா மாதிரி மூஞ்சில ஊத்திட போறா...

அர்ஜுன் : நீ என்னா பக்கத்துல உட்கார்ந்து ஒட்டு கேட்குறியா போ டா அந்த பக்கம் ( அவனை தள்ளி விட்டுட்டு காபி எடுத்துகிட்டான்)

அஞ்சலி : மத்த எல்லாருக்கும் குடுத்துட்டு ஓரமா போய் நின்னுகிட்டா...

நட்ராஜ் : ஏன் சம்பந்தி இந்த ஃபார்மலிட்டீஸ் எல்லாம் எங்களுக்கு தான் அஞ்சலிய பத்தி நல்லா தெரியுமே...

தேவேந்திரன் : இருக்கட்டும் சம்பந்தி இது எல்லாம் காலங்காலமா பண்ணுற வழக்கம் தான...

அருணா : அம்மாடி அஞ்சலி உனக்கு அர்ஜுனை புடிச்சிருக்கா...

அஞ்சலி : 😊😊😊 புடிச்சிருக்கு அத்தை...

தேவேந்திரன் : அர்ஜுன் உனக்கு அஞ்சலிய புடிச்சிருக்கா...

அர்ஜுன் : புடிச்சிருக்கு மாமா..

தேவேந்திரன் : இங்க உள்ள எல்லாருக்கும் சம்மதம் தானே...

எல்லாரும் சம்மதம் சொல்லிட்டாங்க...

தேவேந்திரன் : சரி நிச்சயதார்த்தம் பொண்ணு வீட்டுல தான் வைப்போம் அடுத்த வாரத்துல நல்ல நாள் பார்த்து இங்கயே வச்சிக்கலாம்... சம்பந்தி உங்க சைடு எத்தனை பேர் வருவாங்க, ஆளுங்க நிறைய இருந்தா மண்டபத்துல வச்சிக்கலாம் இல்லனா வீட்டுலயே வச்சிடலாம்..

நட்ராஜ் : வீட்டுலயே வச்சிக்கலாம் சம்பந்தி எங்க சைடு நிறைய பேர்லாம் வர மாட்டாங்க ஒரு 20, 25 பேர் தான் வருவாங்க...

தேவேந்திரன் : அப்போ சரி...

அப்பறம் அர்ஜுன் வீட்டுல சென்னை கிளம்பிட்டாங்க, உதய் நிவின், யாதவ்வ ஹாஸ்ட்டல்ல போய் விட்டுட்டு வந்துட்டான்...

நாட்கள் வேகமா போக நித்தயதார்த்த நாளும் வந்துடுச்சி, தமிழ்க்கு பட்ட காயமும் இப்போ குணமாகிடுச்சி...

ஈவ்னிங் நடக்க போற நிச்சயத்துக்கு காலைல இருந்தே வீட்டுல பயங்கரமா வேலை நடந்துட்டு இருந்தது...

நிவின், யாதவ் அவங்க வீட்டுல உள்ளவங்களையும் அழைச்சிட்டு வந்துருந்தாங்க...

நிவின்க்கு அப்பா, அம்மா ஒரு அக்கா.. யாதவ்க்கு அப்பா, அம்மா மட்டும் தான்...

அஞ்சலிய மிரு, கனி, நிவின் அக்கா நிவேதா மூனு பேரும் ரெடி பண்ணாங்க...

தமிழ், உதய், நிவின், யாதவ் வீட்டை அலங்காரம் பண்ணாங்க...

கனி அப்பா ராஜாராமன்க்கு தெரியாம அவ அம்மா மல்லிகாவும் கதிரேசனும் தமிழ் வீட்டுக்கு வந்தாங்க...

மல்லிகாவ விட்டுட்டு கதிர் புறப்படலாம்னு நினைக்குற நேரம் உதய் அவனை பார்த்து உள்ள அழைச்சிட்டு போய்ட்டான்...

தேவேந்திரன் : வா பா கதிரு அப்பா வரலயா...

கதிரேசன் : வரல பெரியப்பா ( தயங்கிட்டே சொன்னான்)

தேவேந்திரன் : உதய் இவனுக்கு எடுத்த ட்ரெஸ் என் ரூம்ல இருக்கு போய் எடுத்து குடுத்து மாத்திட்டு வர சொல்லு...

உதய் : சரி மாமா,  வா மச்சான்...

கதிரேசன் : எனக்கு ஏன் புது ட்ரெஸ் அதெல்லாம் வேண்டாம்...

உதய் : நீ என் மச்சான் உனக்கு எடுக்காம இருப்போமா பாரு நாம பாய்ஸ் எல்லாரும் ஓரே கலர் ஷர்ட்..

ப்ளூ கலர் ஷர்ட் அண்ட் வேஷ்டி எடுத்து குடுத்தான்...

உதய் : சீக்கிரம் மாத்திட்டு வா நிறைய வேலை இருக்கு ( சொல்லிட்டு போய்ட்டான்)

கதிரேசன் : ட்ரெஸ் மாத்திட்டு வெளில போய் நின்னு என்ன வேலை செய்யுறதுனு தெரியாம முழிச்சிட்டு நின்னான்...

மகாலெட்சுமி : கதிர் இதுல அஞ்சலி தலைக்கு வைக்க பூ இருக்கு போய் குடுத்துட்டு வந்துடு பா ( அவன் கைல குடுத்துட்டு போய்ட்டாங்க)

கதிரேசன் : 😳😳😳 அஞ்சலி ரூம் எங்க இருக்குனு உதய் கிட்ட கேட்டு அங்க போனான்...

தமிழ் வீட்டுல எல்லாரும் கதிர் கூட சாதாரணமா பேசுறாங்க பழகுறாங்க ஆனா இவனால தான் சாதாரணமா இருக்க முடியாம தவிச்சான்...

கதிரேசன் : அஞ்சலி ரூம்க்கு போய் கதவை தட்டுனான்...

நிவேதா : வந்து கதவை திறந்தா...

கதிரேசன் : ( இது யாரு புதுசா இருக்கா) பாப்பா இல்லயா...

நிவேதா : இங்க எந்த பாப்பாவும் இல்ல ( கதவை மூடிட்டா)

கதிரேசன் : திரும்பவும் தட்டுனான்...

நிவேதா : என்னயா வேணும் உனக்கு...

கதிரேசன் : அஞ்சலி கிட்ட இந்த பூ வ குடுங்க...

நிவேதா : ஓஓஓ அஞ்சலிய தான் பாப்பானு சொன்னீங்களா தெளிவா சொல்லிருக்கலாம்ல ( பூவ வாங்கிட்டு போய்ட்டா)

கதிரேசன் : நிவேதா யார்னு தெரியாம குழப்பத்துலயே கீழ போனான்...

உதய் : மச மசனு நிக்காம எதாவது வேலை பார்க்கலாம்ல...

கதிரேசன் : என்ன வேலை டா பார்க்குறது எதாவது சொன்னா தான பண்ணலாம்...

உதய் : சரி வா என்கூட ( அவனை இழுத்துட்டு போய்ட்டான்)

அப்பறம் நல்ல நேரத்துல அர்ஜுன் வீட்டுல இருந்து எல்லாரும் ஒரு ட்ராவல் பஸ்ல தமிழ் வீட்டுக்கு வந்துட்டாங்க...

தமிழ்மாறன், மிருனாழினி : வாசல்ல நின்னு சந்தனம் குடுத்து எல்லாரும் வரவேற்றாங்க...

அதுல மிரு அம்மா மாலதி மட்டும் முகத்தை சுளிச்சிட்டு உள்ள போய்ட்டாங்க, மத்த எல்லாரும் மிரு கூட பேசிட்டு போனாங்க...

அப்பறம் ஊர் மக்கள் வந்ததும் இரண்டு பக்கமும் ஆளுங்க உட்கார்ந்து அஞ்சலியயும் அழைச்சிட்டு வந்து உட்கார வச்சி ஐயர் பத்திரிக்கை வாசிச்சாரு, இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் வச்சிக்கலாம்னு முடிவு பண்ணிருந்தாங்க...

பத்திரிக்கை வாசிச்சி முடிச்சதும் இரண்டு பக்கமும் சாட்சி கையெழுத்து போட்டு தட்டை மாத்திகிட்டாங்க...

தட்டு மாத்துனது அர்ஜுன், அஞ்சலிய மோதிரம் மாத்திக்க சொன்னாங்க...

எல்லாம் நல்லபடியா முடிஞ்சதும் வந்தவங்களை சாப்பிட அழைச்சிட்டு போய்ட்டாங்க...

மாலதி சாப்பிட கூட இல்ல நிச்சயம் முடிஞ்சதும் அவங்க வந்த கார்ல கிளம்பிட்டாங்க...

மல்லிகா, கதிரேசன் வீட்டுக்கு போனப்ப ஏன் அங்க போனீங்கனு கேட்டு ராஜாராமன் சண்டை போட்டாரு ஆனா அவங்க அவர் பேச்சை கொஞ்சம் கூட மதிக்காம ரூம்க்கு போய்ட்டாங்க...

மறுநாள் காலைல தான் நிவின், யாதவ் குடும்பம் அவங்கவங்க வீட்டுக்கு போனாங்க...

தொடரும்...

# Sandhiya.