வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 98
ஷ்யாம்க்கு குற்றம் நிறுபனம் ஆகி பத்து ஆண்டுகள் சிறைதண்டனை கிடைச்சி இப்போ ஜெயில்ல இருக்கான்...
அர்ஜுன், அஞ்சலி கல்யாணத்தை தஞ்சாவூர்லயும் ரிசப்ஷனை சென்னைலயும் வச்சிக்கலாம்னு முடிவு பண்ணிருந்தாங்க...
கல்யாண பத்திரிக்கை அடிச்சி சொந்தபந்தம், ஊர்மக்கள்னு எல்லாருக்கும் குடுத்து முகூர்த்த புடவை, நகை, சீர் வரிசை எல்லாம் வாங்கி மண்டபம் புக் பண்ணி எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சி...
நாளைக்கு கல்யாணம் முதல்நாள் ஈவ்னிங் சென்னைல இருந்து வந்தவங்க நேரா மண்டபத்துக்கு போய்ட்டாங்க...
அர்ஜுன்க்கு துணையா நிவின், யாதவ் அவன் கூட இருந்தாங்க... தமிழ்க்கு துணையா உதய், கதிரேசன் அவன் கூடவே இருந்து கல்யாண வேலைல உதவி பண்ணாங்க...
மிருனாழினி அடிப்பட்ட வலது கைல ரொம்ப அசைக்காம அவளால முடிஞ்ச வேலை எல்லாத்தையும் பண்ணா...
கனிமொழியும் கற்பமா இருக்குறதால அதிக வேலை எதுவும் செய்யாம முடிஞ்ச அளவு அவளால முடிஞ்சதை பண்ணா...
அன்னைக்கு நைட் பெண் அழைப்புக்காக மண்டபத்துல இருந்து அருணா, மாலதி இன்னும் சில பெண்கள் தமிழ்மாறன் வீட்டுக்கு வந்தாங்க...
வந்தவங்களை வரவேற்று சாப்பிட வச்சாங்க அதுக்குள்ள அஞ்சலிய மிரு, கனி, நிவேதா அலங்காரம் பண்ணி அழைச்சிட்டு வந்தாங்க...
அஞ்சலிக்கு அந்த வீட்டு பெண்ணா அவளோட கடைசி நாள் இன்னைக்கு காலைல இருந்து சோகமா இருந்தவ இப்ப அழவே ஆரம்பிச்சிட்டா...
தமிழ்மாறன் : பாப்பா அழாத டா நினைச்ச நேரம் அர்ஜுன் இங்க அழைச்சிட்டு வந்துடுவான் நாங்களும் அடிக்கடி உன்னை பார்க்க வரோம்...
அஞ்சலி : உங்க எல்லாரையும் அப்பறம் நம்ம வீட்டை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அண்ணா 😭😭😭
தமிழ்மாறன் : அழாத பாப்பா அங்க பாரு அப்பா, அம்மா, ஆச்சி, தாத்தா எல்லாரும் நீ அழறதை பார்த்து சோகமாகிட்டாங்க...
அஞ்சலி : அவ அப்பா, அம்மா, ஆச்சி, தாத்தா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு மிரு, கனிய ஹக் பண்ணி அழுதா...
அப்பறம் கிளம்புற நேரம் மாமா முறைக்கு உதய் வந்து அஞ்சலி கழுத்துல மாலை போட்டு சாமி கும்பிட்டுட்டு மண்டபத்துக்கு அனுப்பி வச்சாங்க...
அவங்க எல்லாம் மண்டபத்துக்கு வந்ததுமே ஆரத்தி எடுத்து அஞ்சலிய உள்ள அழைச்சிட்டு போனாங்க..
அர்ஜுன் மேல அவன் ரூம்க்கு வெளில வந்து அஞ்சலிய பார்க்க எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தான்...
நிவின், யாதவ் வந்து அவன் கண்ணை மூடி ரூம் உள்ள இழுத்துட்டு போய்ட்டாங்க...
அர்ஜுன் : டேய் ஏன்டா இப்படி டார்ச்சர் பண்ணுறீங்க அவளை பார்த்தே இருபது நாள்க்கு மேல ஆகுது சரி இப்பவாது பார்க்கலாம்னு பார்த்தா அதுவும் பார்க்க விட மாட்றீங்களே...
நிவின் : கல்யாணத்து முன்னாடி நீங்க அஞ்சலிய பார்க்க கூடாதுனு தான் எங்களை அனுப்பி வச்சிருக்காங்க அதையும் மீறி நாங்க எப்படி உங்களை பார்க்க விடுறது...
அர்ஜுன் : இதெல்லாம் ரொம்ப அநியாயம் டா, உங்களுக்கும் கல்யாணம் ஆகும்ல அப்போ கவனிச்சிக்குறேன் உங்களை...
யாதவ் : இன்னும் நாங்க காலேஜ்ஜே முடிக்கல அர்ஜூ... காலேஜ் முடிச்சி வேலைக்கு போய் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணுறதுக்குள்ள நீ குடும்பம் குட்டினு செட்டில் ஆகிடுவ அப்போ எங்களை கவனிச்சிக்க உனக்கு நேரம் இருக்குமா...
அர்ஜுன் : நான் எந்த நிலைமைல இருந்தாலும் உங்க கல்யாணத்துல உங்களை ஒரு வழி ஆக்காம விட மாட்டேன் டா...
நிவின் : சரி சாபம் விட்டது எல்லாம் போதும் அர்ஜூ போய் தூங்கு அப்போ தான் காலைல ஃப்ரஷ்ஷா இருக்க முடியும்...
யாதவ் : ஆமா அர்ஜூ அப்பறம் காலைல தூக்க கலக்கத்துல அஞ்சலிக்கு பதிலா ஐயர் கழுத்துல தாலி கட்டிட போற...
அர்ஜுன் : கடுப்ப கிளப்பாதீங்க டா போய் தூங்குங்க ( பெட்ல குப்புற விழுந்தான்)
நிவின், யாதவ்வும் படுத்து தூங்கிட்டாங்க...
அடுத்தநாள் காலை,
தமிழ்மாறன் வந்து மூனு பேரையும் எழுப்பி கிளம்ப சொல்லிட்டு போனான்..
அதே மாதிரி அஞ்சலி சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு வந்ததும் ப்யூட்டிசியன் அவளை ரெடி பண்ண ஆரம்பிச்சாங்க...
தமிழ்மாறன், மிருனாழினி மண்டபம் வாசல்ல நின்னு எல்லாருக்கும் சந்தனம், குங்குமம் குடுத்து வரவேற்றாங்க...
ஐயர் முதல்ல அர்ஜுனை வர சொல்லி சில சடங்கு பண்ணி நட்ராஜ், அருணாக்கு பாத பூஜை பண்ண சொல்லி பட்டு சட்டை, வேஷ்டிய குடுத்து மாத்திட்டு வர சொன்னாங்க அவன் கூட பாய்ஸ் எல்லாரும் போய்ட்டாங்க..
அடுத்து அஞ்சலிய உட்காரவச்சி சில சடங்கு பண்ணி தேவேந்திரன், மகாலெட்சுமிக்கு பாத பூஜை பண்ண சொல்லி முகூர்த்த பட்டு புடவைய குடுத்து மாத்திட்டு வர சொன்னாங்க அவ கூட மிரு, கனி, நிவேதா போனாங்க...
அர்ஜுன் பட்டு சட்டை, வேஷ்டி கட்டி மாலை போட்டு அக்னி முன்னாடி வந்து உட்கார்ந்தான்...
அப்பறம் ஐயர் பொண்ணை வர சொல்லவும் அஞ்சலிய அழைசிட்டு வந்தாங்க சிவப்பு கலர் பட்டு புடவைல தேவதையா வந்து அர்ஜுன் பக்கத்துல உட்கார்ந்தா...
அவங்க பின்னாடி தமிழ், மிரு இரண்டு பேரும் நின்னாங்க...
நிவேதா தான் தாலி இருந்த தட்டை வாங்கிட்டு போய் எல்லார் கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்தா...
எல்லார் கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்ததும் ஐயர் கெட்டிமேளம் சொல்லி தாலிய எடுத்து அர்ஜுன் கைல குடுத்தாரு...
அர்ஜுன் தாலிய வாங்கி அஞ்சலி கழுத்துல இரண்டு முடிச்சி போட்டான் மூனாவது முடிச்சி மிருனாழினி போட்டா...
அப்பறம் ஐயர் குடுத்த குங்குமத்தை வாங்கி அஞ்சலி தலைய சுத்தி அவ நெத்திலயும் வகுடுலயும் குங்குமம் வச்சான்...
தாலிலயும் குங்குமம் வச்சி அக்னிய மூனு முறை சுத்தி வந்தாங்க.. அப்பறம் அர்ஜுன் அஞ்சலி கால் விரல்ல மெட்டி போட்டு விட்டான்...
எல்லாம் முடிஞ்சதும் பெரியவங்க கிட்ட எல்லாம் ஆசிர்வாதம் வாங்கி கிட்டாங்க...
அப்பறம் மணமக்கள் மேடைல நின்னு உறவினர்கள் கூட ஃபோட்டோ எடுத்துக்க ஆரம்பிச்சாங்க...
பெரியவங்க எல்லாரும் வந்தவங்களை சாப்பிட அனுப்பி வச்சாங்க, சிரியவர்கள் பந்தி பரிமாற போய்ட்டாங்க...
அப்பறம் கடைசியா மணமக்களும் மத்தவங்களும் சாப்பிட்டுட்டு தமிழ் வீட்டுக்கு போய் பால், பழம் சாப்பிட்டுட்டு அப்பவே சென்னைக்கு கிளம்பிட்டாங்க...
எல்லாரும் சென்னை போகவே ஈவ்னிங் ஆகிடுச்சி வந்ததும் அஞ்சலிய அர்ஜுன் வீட்டுல விளக்கு ஏத்த வச்சி சாமி கும்பிட்டுட்டு பால், பழம் குடுத்து சாப்பிட வச்சிட்டு அவங்களை ரெஸ்ட் எடுக்க அனுப்பி வச்சாங்க...
மறுநாள் தான் ரிசப்ஷன் அதனால தமிழ் வீட்டுல இருந்து வந்தவங்க எல்லாரும் இங்க அர்ஜுன் வீட்டுலயே தங்கிட்டாங்க...
மாலதி மிரு, தமிழ் கூட பேச வந்தாங்க...
மாலதி : மிரு...
மிருனாழினி : சொல்லுங்க ( அவங்க முகத்தை கூட பார்க்காம எங்கயோ பார்த்து சொன்னா)
மாலதி : மிரு அம்மா முகத்தை கூட பார்க்க மாட்டியா டா...
மிருனாழினி : என்ன விஷயம் அதை மட்டும் சொல்லுங்க...
மாலதி : நான் பண்ணது எல்லாம் தப்பு தான் டா, நான் இதுவரை உன்கூட நெருங்கி பழகுனது இல்ல பாசமா பேசுனது இல்ல ஆசையா சாப்பாடு ஊட்டி விட்டது இல்ல வெளில எங்கயும் கூப்பிட்டு போனது இல்ல எல்லாம் என் தப்பு தான் ஆனா இப்போ அந்த தப்பு எல்லாத்தையும் சரி பண்ணனும்னு நினைக்குறேன் அம்மா கூட பேசு டா...
மிருனாழினி : அமைதியா இருந்தா...
தமிழ்மாறன் : யாழினி மா அவங்க தான் இவ்ளோ தூரம் சொல்லுறாங்கள பேசு டா...
மிருனாழினி : அவங்க என்னை பத்தி மட்டும் தான சொன்னாங்க ஆனா உங்களை அவங்க மாப்பிள்ளையா ஏத்துகிட்டதா இன்னும் சொல்லலயே அப்படி இருக்கும் போது நான் எப்படி பேசுறது...
மாலதி : மிரு அப்போ மாப்பிள்ளையயும் அவர் குடும்பத்தையும் பத்தி தெரியாம அப்படி பேசிட்டேன் இப்போ நான் அவங்களை பத்தி நல்லா புரிஞ்சிகிட்டேன் மிரு அம்மா கூட பேசு டா 😭 ( அவ கைய புடிச்சி அழுதாங்க )
மிருனாழினி : அவளும் அவ அம்மாவ ஹக் பண்ணி அழுதா 😭😭😭
அப்பறம் இரண்டு பேரும் பேசி சமாதானம் ஆகிட்டாங்க... மாலதி, ராஜன் தமிழ் குடும்பத்தை அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்க, மத்தவங்க எல்லாம் அர்ஜுன் வீட்டுல தான் இருந்தாங்க...
கல்யாணத்துக்கு பிறகு முதல் முறை வரதால மாலதி தமிழ், மிருக்கு ஆரத்தி எடுத்து உள்ள அழைச்சிட்டு போனாங்க...
அவங்க மேற்பார்வைல நைட் டின்னர் ரெடி பண்ணி அவங்களே தமிழ் குடும்பத்துல உள்ளவங்களுக்கு சாப்பாடு பரிமாறி நல்லா கவனிச்சிகிட்டாங்க...
அவங்க மாறுனதே எல்லாருக்கும் சந்தோஷமா இருந்தது...
அஞ்சலிய கனியும் நிவேதாவும் முதல் இரவுக்கு ரெடி பண்ணி அர்ஜுன் ரூம்க்குள்ள அனுப்பி வச்சாங்க...
அஞ்சலி : டோர் லாக் பண்ணிட்டு பால் சொம்ப டேபிள்ல வச்சிட்டு ரூம்ம சுத்தி பார்த்தா...
அர்ஜுன் : அவளை பின்பக்கம் ஹக் பண்ணான்...
அஞ்சலி : மாமா என்ன பண்றீங்க...
அர்ஜுன் : நீ என்ன டி பண்ணுற நீ பாட்டுக்கு நான் ஒருத்தன் இருக்குறதையே கண்டுக்காம ரூம்ம சுத்தி பார்க்குற...
அஞ்சலி : உங்க ரூம்க்கு முதல் முறை வரேன்ல அதான் மாமா சுத்தி பார்த்தேன்...
அர்ஜுன் : என் ரூம் இல்ல நம்ம ரூம்...
அஞ்சலி : 😊😊😊 வெட்கப்பட்டு தலை குனிஞ்சா...
அர்ஜுன் : ( அவளை திருப்பி குனிஞ்சி அவ முகத்தை பார்த்தான்) எனக்கும் அந்த வெட்கத்தை காட்டலாம்ல...
அஞ்சலி : ச்சி போங்க மாமா ( அவன் நெஞ்சுல சாஞ்கிகிட்டா)
அப்பறம் அவங்க வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணிட்டாங்க...
மிருனாழினி : அம்மா நான் அங்க அஞ்சலிய அலங்காரம் பண்ண போனும்னு சொல்லுறேன் நீ என்ன உன் ரூம்க்கு அழைச்சிட்டு வர...
மாலதி : இன்னைக்கு அஞ்சலிக்கு மட்டும் இல்ல உனக்கும் ஃபர்ஸ்ட் நைட் தான், வா நான் உன்னை அலங்காரம் பண்ணி விடுறேன்...
மிருனாழினி : 😱 என்ன மா சொல்லுறீங்க ஏன் இப்ப அதெல்லாம் வேண்டாம் மா...
மாலதி : நீ தான் காலேஜ் முடிக்க போறல மிரு இதுக்கு பிறகு ஏன் தள்ளி போடனும்...
மிருனாழினி : ம்மா இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்...
மாலதி : சம்பந்தி அம்மா சொன்னாங்க இப்ப அவங்களும் பூ எடுத்துட்டு வந்துடுவாங்க நீ போய் புடவைய கட்டிட்டு வா போ...
மிருனாழினி : ம்மா ( தயங்குனா)
மாலதி : போ மா..
அப்பறம் மகாலெட்சுமி வந்ததும் இரண்டு பேரும் மிருவ அலங்காரம் பண்ணி நிறைய அட்வைஸ் எல்லாம் பண்ணாங்க...
உதய் : தமிழ்மாறனை ஒரு ரூம்க்கு அழைச்சிட்டு போனான்...
தமிழ்மாறன் : என்னடா பண்ற ஏன் இப்படி இழுத்துட்டு வர...
உதய் : இந்தா இந்த வேஷ்டி சட்டைய போடு...
தமிழ்மாறன் : தூங்க போற நேரத்துல ஏன்டா ட்ரெஸ் மாத்த சொல்லுற...
உதய் : இன்னைக்கு உனக்கு முதல் இரவு அதான் ரெடியாக சொல்லுறேன்...
தமிழ்மாறன் : 😱 என்னடா இப்படி சொல்லுற அவ இன்னும் படிச்சி முடிக்கல அப்பறம் கை அடிப்பட்டது வேற இன்னும் பூரண குணம் ஆகல இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா...
உதய் : எனக்கு ஒன்னும் தெரியாது டா மாமா தான் உன்னை ரெடி பண்ணி ரூம்க்கு அனுப்பி வைக்க சொன்னாங்க எதா இருந்தாலும் மாமா கிட்ட கேட்டுக்க...
தமிழ்மாறன் : அப்பாவே சொன்னாங்களா சரி நான் ரெடி ஆகுறேன்...
தமிழ் ரெடி ஆனதும் உதய் அவனை மிருனாழினி ரூம்ல விட்டுட்டு போய்ட்டான்...
மிருனாழினி ரூம் ஃபுல்லா பூவால அலங்காரம் பண்ணி ரூம் ஸ்ப்ரே அடிச்சி ரொமாண்டிக்கா இருந்தது ஆனா தமிழ்க்கு தான் கொஞ்சம் நெருடலா இருந்தது, என்னதான் தமிழ் மிரு கிட்ட காதலை சொல்லிருந்தாலும் மிரு படிப்பு முடிஞ்சி வேலைக்கு போகனும்னு ஆசை இருந்தா இந்த விஷயம் அதுக்கு தடை ஆகிடுமேனு நினைச்சி பயந்தான்...
தொடரும்...
# Sandhiya.
5 Comments
Arjunkum marriage mudinchathu malathi maarunathe periya visayam ivlo naal kalichu ippo than purinchikitanga apdiye kathirkum nivethava pair pannidalam
ReplyDeleteThank you
DeleteSuper nalla husband ipadi tha puruchu itukanu
ReplyDeleteHappada..oru vazhiya shyam ku punishment thandhu....miru life settle agidichii..
ReplyDeleteArju anju happy married life..🥰😆😁
Thank you
Delete