எனக்குள் உறைந்தவளே - 67

மிருனாழினி யோட காலேஜ் ஃப்ரண்ட்ஸ் நிவின், யாதவ்க்கு மேரேஜ் ஆகும் போது அவங்களுக்காக தமிழ்மாறன், அர்ஜுன் மத்த எல்லாரும் சேர்ந்து சென்னைல ஒரு அப்பார்ட்மெண்ட்ல இரண்டு ஃப்ளாட் வாங்கி கல்யாண பரிசா குடுத்தாங்க...

அதே அப்பார்ட்மெண்ட்ல தான் இப்போ இளா, தன்ஷிக்காக ஒரு ஃப்ளாட் வாங்கி குடுத்துருக்காங்க...

தன்ஷிக்காக வாங்குன மொத்த சீர்வரிசை பொருளும் இங்க புது வீட்டுக்கு கொண்டு வந்துட்டாங்க...

தன்ஷி, இளா கூட சூர்யா, தமிழ்மாறன் ஃபேமிலி அப்பறம் அர்ஜுன் ஃபேமிலியும் வந்துருந்தாங்க... அப்பறம் நிவின் அவன் மனைவி நந்தினி அவங்க பையன் நந்தகுமார், யாதவ் அவன் மனைவி ரம்யா அவங்களோட பையன் யாஷிக் அவங்களும் வந்துருந்தாங்க...

புது வீட்டுல எல்லாத்தையும் செட் பண்ணிட்டு நல்ல நேரம் பார்த்து அடுப்பை பத்தவச்சி மிருனாழினி பால் காய்ச்சி எல்லாருக்கும் பால் கொண்டு வந்து குடுத்தா...

மிருனாழினி : நிவின், யாதவ் பசங்களை பார்த்துக்கோங்க உங்களை நம்பி தான் விட்டுட்டு போறோம்...

நிவின் : என்ன மிரு இதை நீ சொல்லி தான் செய்யனுமா நாங்க பார்த்துப்போம் நீ கவலை படாத...

தமிழ்மாறன் : நீங்க எப்போ டா பிஸ்னஸ் ஆரம்பிக்க போறீங்க...

யாதவ் : இளா, தன்ஷி கிட்ட மொத்த பொறுப்பையும் ஒப்படைச்சிட்டு கொஞ்ச நாள் அவங்களுக்கு உதவியா இருந்துட்டு அப்பறம் நாங்க தனியா ஆரம்பிச்சிடுவோம் அண்ணா...

தமிழ்மாறன் : சரி டா...

அர்ஜுன் : மாமா நாங்க பார்த்துக்குறோம் நீங்க பயப்பிடாம ஊருக்கு போங்க...

தமிழ்மாறன் : நீ என்ன டா எங்களை ஊருக்கு கிளப்பி விடுறதுலயே குறியா இருக்க...

அர்ஜுன் : அய்யோ மாமா நான் அப்படி சொல்லல...

அஞ்சலி : அண்ணா அவர் லூசு மாதிரி பேசுவாரு அதை எல்லாம் கண்டுகாதீங்க, அங்க வந்து ஒருநாள் தங்கிட்டு போங்க...

அர்ஜுன் : 😱 லூசா...

தமிழ்மாறன் : சரி பாப்பா வரோம்...

தீபக் : மாமா கல்யாண வயசுல நாங்க இருக்கோம் இன்னும் அம்மாவ பாப்பானு சொல்லுறீங்களே...

தமிழ்மாறன் : எத்தனை வயசானாலும் அவ என் பாப்பா தான் டா ( அஞ்சலி தோள்ல கை போட்டு சொன்னான்)

மிருனாழினி : சரி போதும் பாசமலர் படம் ஓட்டுனது, வாங்க நாம எல்லாரும் அர்ஜுன் வீட்டுக்கு போலாம் இளா, தன்ஷி ரெஸ்ட் எடுக்கட்டும்...

தமிழ்மாறன் : சரி...

அவங்க போனதும் இளா, தன்ஷி, சூர்யா மட்டும் இருந்தாங்க...

சூர்யா : நானும் கிளம்புறேன் அண்ணா...

தன்ஷிகா : சூர்யா இன்னமும் ஏன் நீ தனியா ரூம் எடுத்து தங்கனும் இப்போ தான் நாம வந்துட்டோம்ல, இங்க நம்ம கூடவே இருக்கலாமே...

சூர்யா : வேண்டா அண்ணி நான் ஏன் உங்களுக்கு டிஸ்டர்ப்பா இருந்துகிட்டு...

தன்ஷிகா : இது இரண்டு பெட் ரூம் ஃப்ளாட் தான சூர்யா நாங்க ஒரு ரூம்ல நீ ஒரு ரூம்ல இருக்க போற இதுல என்ன டிஸ்டர்ப் இருந்துட போகுது...

சூர்யா : இல்ல அண்ணி வேண்டா ( தயக்கமா சொன்னான்)

தன்ஷிகா : என்ன இளா எங்க வாய பார்த்துட்டு இருக்கீங்க அவன் கிட்ட சொல்லி இங்கயே தங்க சொல்லுங்க...

இளமாறன் : அதான் தன்ஷி சொல்லுறாள இப்போ போய் ரெஸ்ட் எடு டா ஈவ்னிங் போய் உன்னோட திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடலாம்...

சூர்யா : சரிங்க அண்ணா...

தன்ஷிகா : உங்க அண்ணா சொன்னா தான் கேட்பியா சூர்யா...

சூர்யா : அப்படி இல்ல அண்ணி சாரி...

தன்ஷிகா : உன் சாரிய ஏத்துக்கனும்னா ஒரு கண்டிஷன் இருக்கு...

சூர்யா : என்ன அண்ணி...

தன்ஷிகா : மதியம் நீயும் உன் அண்ணாவும் சேர்ந்து எனக்கு சமைச்சி போடனும்...

சூர்யா : ஓகே அண்ணி...

இளமாறன் : டேய் என்ன டா என்னை கேட்காம நீ பாட்டுக்கு ஓகே சொல்லுற...

சூர்யா : அண்ணி முதல் முறை ஆசையா கேட்குறாங்கள அண்ணா நாமளே சமைக்கலாம்...

இளமாறன் : அடியே முதல் நாளே என்னை சமைக்க விடுறியே இதெல்லாம் அநியாயமா இல்லயா...

தன்ஷிகா : இல்ல...

இளமாறன் : அடிப்பாவி...

தன்ஷிகா : சரி நேரம் இல்ல சீக்கிரம் சமைக்க ஆரம்பிங்க ( சொல்லிட்டு ரூம்க்கு போய்ட்டா)

சூர்யா : அண்ணா பிரியாணி பண்ணுவோமா...

இளமாறன் : இன்னைக்கு தான பால் காய்ச்சினோம் முதல் நாளே நான்வெஜ் வேண்டாம் வெஜ் பண்ணலாம்...

சூர்யா : சரி அண்ணா...

அப்பறம் இரண்டு பேரும் சேர்ந்து சாம்பார், ரசம், கூட்டு, பொறியல் எல்லாம் பண்ணி குக்கர்ல அரிசிய வச்சிட்டு தன்ஷிய பார்த்துக்க சொல்லிட்டு குளிக்க போய்ட்டாங்க...

அவங்க குளிச்சிட்டு வரதுக்குள்ள தன்ஷி எல்லாத்தையும் டைனிங் டேபிள்ல எடுத்து வச்சிட்டா...

மூனு பேருமே ஒன்னா உட்கார்ந்து அவங்கவங்களுக்கு தேவையானதை எடுத்து வச்சிகிட்டு சாப்பிட ஆரம்பிச்சாங்க...

தன்ஷிகா : வாவ் நீங்க சமைச்சது ரொம்ப சூப்பரா இருக்கு இளா...

இளமாறன் : அதுக்குனு டெய்லி எங்களை சமைக்க வச்சிடாத மா ( பாவமா சொன்னான்)

தன்ஷிகா : 😂😂😂 நீங்க சமைக்க வேண்டாம் உதவி மட்டும் பண்ணா போதும்...

இளமாறன் : அப்போ சரி...

அவங்க சாப்பிட்டு முடிச்சதும் இளா சூர்யா கூட போய் அவன் தங்கிருந்த ரூம்ம காலி பண்ணிட்டு திங்க்ஸ் எல்லாம் கொண்டு வந்துட்டாங்க... அடுத்த நாள் தமிழ்மாறன் குடும்பம் தஞ்சாவூர் கிளம்பிட்டாங்க...

கோயம்பத்தூர்,

இப்போ எல்லாம் டாக்டர் காலைல ஜெனிய வாக்கிங் போக சொன்னதால ஷ்யாம், சந்தீப் வாக்கிங் முடிச்சி வீட்டுக்குள்ள போனதுக்கு அப்பறம் அவ வாக்கிங் போவா...

இதை தெரிஞ்சிகிட்ட சந்தீப் ஒருநாள் வேணும்னே ஷ்யாம் கூட போகாம ஜெனிக்காக மறஞ்சி நின்னான்... ஷ்யாம் வீட்டுக்குள்ள வந்ததும் ஜெனியும் பொறுமையா வீட்டை சுத்தி நடக்க ஆரம்பிச்சா...

அவ நடக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே சந்தீப் அவளுக்கும் கொஞ்சம் தள்ளி நடக்க ஆரம்பிச்சான்..

ஜெனி : ( சந்தீப்ப திரும்பி பார்த்தா) 😒😒😒 ( m.v ) இவன் போய்ட்டான்னு நினைச்சா என்ன இப்போ தான் வரான்...

சந்தீப் : முன்னாடி பார்த்துகிட்டே அப்பப்போ ஜெனியயும் திரும்பி பார்த்துட்டு வந்தான்...

ஜெனி : இப்போ எதுக்கு அடிக்கடி என் மூஞ்ச திரும்பி பார்க்குற...

சந்தீப் : நான் ஒன்னும் உன்னை பார்க்கல சும்மா சுத்தி பார்த்துட்டு வந்தேன்...

ஜெனி : சுத்தி பார்க்க இது என்ன தாஜ்மஹால்லா நீ டெய்லி பார்க்குற இடம் தான...

சந்தீப் : டெய்லி பார்த்தாலும் ஒவ்வொரு நாளும் புதுசா தெரியுதே 😍😍😍 ( ஜெனிய பார்த்துட்டே சொன்னான்)

கற்பமா இருக்குறதால ஒவ்வொரு நாளும் ஜெனியோட முகத்துல பொலிவு கூடிட்டே இருந்தது, சந்தீப் இப்போ எல்லாம் அவனையும் மீறி ஜெனிய ரசிக்க ஆரம்பிச்சான்...

ஜெனி : என்ன புதுசா தெரியுது 😠😠😠

சந்தீப் : இந்த மரம், செடி, கொடிய சொன்னேன் நீ ஏன் மா கோவபடுற...

ஜெனி : ஓஹோ ( அவனை பார்த்துட்டே போய் முன்னாடி உள்ள கல்லுல கால் தடுக்கி கீழ விழ போய்ட்டா)

சந்தீப் : ( அவளை விழாம தாங்கி புடிச்சான்) ஹேய் அறிவில்ல, இந்நேரம் கீழ விழுந்துருந்தா என்ன ஆகிருக்கும் ( அவ வயித்துல கை வச்சிட்டே பதட்டமா கேட்டான்)

ஜெனி : இப்ப கூட என் வயித்துல வளர்ர உங்க குழந்தைக்காக தான பதட்டப்படுறீங்க...

சந்தீப் : இல்ல அது...

ஜெனி : (கை நீட்டி அவன் பேசுறதை தடுத்தா) நீங்க எதுவும் சொல்ல வேண்டாம், என் குழந்தைய பார்த்துக்க எனக்கு தெரியும் ( சொல்லிட்டு வீட்டுக்குள்ள போய்ட்டா)

சந்தீப் : 😥 தலைல கைய வச்சிட்டு அவ போறதையே பார்த்துட்டு இருந்தான்...

சென்னை,

தன்ஷி, இளா இரண்டு நாள் ஜாலியா ஊரை சுத்தி பார்த்துட்டு என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்க...

தன்ஷிகா : இளா நாளைக்கு முதல் நாள் ஆபிஸ் போக போறோம், அதனால இன்னைக்கு கோவில்க்கு போய் சாமி கும்பிட்டுட்டு வருவோமா..

இளமாறன் : ம்ம்ம் சரி போலாம் நீ சீக்கிரம் குளிச்சிட்டு புடவை கட்டு நான் சூர்யா ரூம்ல போய் கிளம்பி வரேன்...

தன்ஷிகா : அப்போ நீங்களும் வேஷ்டி தான் கட்டனும் பேண்ட் போட கூடாது சரியா...

இளமாறன் : சரி..

இளா குளிச்சிட்டு ப்ளூ ஷர்ட், வேஷ்டி கட்டிட்டு கிளம்பி அவங்க ரூம்க்கு போனான், தன்ஷி புடவை கட்ட போராடிட்டு இருந்தா...

இளமாறன் : ஹேய் தன்ஷி மா உனக்கு தான் புடவை கட்ட தெரியுமே அப்பறம் ஏன் இப்படி டென்சன் ஆகுற...

தன்ஷிகா : இது பட்டு புடவை இளா யாராவது ஹெல்ப் பண்ணா தான் நல்லா கட்டலாம்...

இளமாறன் : சரி நான் ஹெல்ப் பண்ணுறேன்...

தன்ஷிகா : இந்த கொசுவம் தான் சரியா வரல அதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணு...

இளமாறன் : சரி...

தன்ஷிகா அழகா பட்டை எடுக்கவும் இளா அவளுக்கும் கீழ மண்டி போட்டு உட்கார்ந்து சரி பண்ணான்...

தன்ஷிகா : ம்ம்ம் அவ்ளோ தான்...

இளமாறன் : சூப்பர் 😍😍😍

அப்பறம் இரண்டு பேரும் அங்க பக்கத்துல உள்ள கோவிலுக்கு போனாங்க...

சாமி கும்பிட்டு அர்ச்சனை பண்ணதும் ஐயர் கொண்டு வந்து குடுத்த குங்குமத்தை இளா தன்ஷி நெத்திலயும் வகுடுலயும் வச்சி விட்டான்... தன்ஷி இளாக்கு விபூதி வச்சி ஊதி விட்டா...

அப்பறம் பிரகாரத்தை மூனு முறை சுத்தி வந்து அங்கயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டாங்க...

தொடரும்...

# Sandhiya.