மழைக் காலம்

ஆதி : ( ஸ்கூல்க்கு ரெடி ஆகி சமீரா வீட்டுக்கு வந்தான்) அம்மா அம்மா...

சமீரா அம்மா : வா டா ஆதி சாப்பிடுறியா...😊

ஆதி : இல்ல அம்மா சாப்பிட்டுட்டு தான் வந்தேன் அவ எங்க...🤔

சமீரா அம்மா : அவ இன்னும் எழுந்திரிக்கவே இல்ல டா.

ஆதி : இது தெரிஞ்ச விஷயம் தான மா அதான் நான் சீக்கிரம் கிளம்பி வந்துட்டேன்.

சமீரா அம்மா : ம்ம்ம் போய் அவள கிளப்பி கொண்டு வா.

சமீரா ரூம்,

சமீரா : நல்லா இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருந்தா... 😴😴😴

ஆதி : சமி எழுந்திரி டா.

சமீரா : 😪😪😪

ஆதி : ஏய் எழுந்திரி டி.

சமீரா : முடியாது போ டா...

ஆதி : நீ இப்போ எழுந்திரிக்கலனா தண்ணி எடுத்து மேல ஊத்திடுவேன்...⛲

சமீரா : ( எழுந்தா) இந்த டைம்ல தண்ணி ஊத்துனா நான் அப்படியே உறைச்சிடுவேன் டா அவ்ளோ ஜில்லுனு இருக்கு...🥶🥶🥶

ஆதி : சீக்கிரம் ஸ்கூல் கிளம்பி வா டி டைம் ஆச்சி...🕗

சமீரா : ஹேய் போடா ( அப்படியே எழுந்து கீழ போனா)

ஆதி : எங்க டி போற.

சமீரா : போய் டிவிய ஆன் பண்ணிட்டு சோஃபால உட்கார்ந்தா...📺

ஆதி : ஏய் எரும நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடி பண்ணுற...🤨

சமீரா : கொஞ்ச நேரம் அமைதியா இரு ( நியூஸ் சேனல் வச்சா)

ஆதி : நீ நியூஸ் எல்லாம் பார்க்க மாட்டியே.

சமீரா : டிவி கிட்ட போய் Breaking news பார்த்தா...

ஆதி : ( அப்படி என்ன இவ உத்து பாக்குறா ) அவனும் போய் பார்த்தான்.

மழை பெய்றதால நிறைய மாவட்டத்துல உள்ள ஸ்கூல்க்கு லீவ் விட்ருந்தாங்க அதுல சென்னையும் வந்துச்சி...

ஆதி : 😳😳😳 என்ன "ஸ்கூல் லீவ் வா..."

சமீரா : ( சோஃபால ஏறி குதிச்சா) 😄😄 ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்களே.

ஆதி : 😨😨😨

சமீரா : "போகாத ஸ்கூல்க்கா இவ்ளோ அழகா கிளம்பி வந்துருக்க..."( அவன் முடிய கலைச்சி விட்டா, டை கழட்டி தூற எறிஞ்சா, இன் பண்ண சட்டைய எடுத்து விட்டா)

ஆதி : 😷😷😷

சமீரா : 😂😂😂 அழகா இருக்க டா...

சமீரா அம்மா :😬 அடியே புள்ளைய என்னடி பண்ணி வச்சிருக்க, எவ்ளோ அழகா வந்தான் இப்படி மாத்தி வச்சிருக்க...🤨

ஆதி : பாருங்க அம்மா 😕 ( அவங்க பக்கத்துல போய் நின்னான் )

சமீரா அம்மா : 😤 ஸ்கூல் கிளம்பாம என்னடி பண்ற...

சமீரா : மா ஸ்கூல் லீவ் மா டிவிய நல்லா பாரு.

சமீரா அம்மா : அட ஆமா.

சமீரா : சமீரா அவ ரூம்க்கு போய் வொய்ட் டீ ஷர்ட், ப்ளு ஜீன்ஸ் போட்டு முடி எல்லாத்தையும் சேர்த்து போனி டெயில் போட்டுட்டு கீழ இறங்கி வந்தா.

சமீரா அம்மா : எங்க டி கிளம்பிட்ட...🤔

சமீரா : ஆதி வீட்டுக்கு.

சமீரா அம்மா : மழை பெய்யுது தான ஸ்கூல் லீவ் விட்டாங்க வீட்டுல இருக்க மாட்டியா...🤨

சமீரா : அம்மா கார்ல தான போறோம் ஒன்னும் கறைஞ்சிட மாட்டேன்....ஆதி வா டா.

சமீரா அம்மா : "நான் உன்னை சொல்லல என் பையன நனையாம பார்த்துக்க டி..."

சமீரா : 😏😏😏

ஆதி வீடு,

சமீரா : அப்பா அப்பா ( கத்திட்டே உள்ள போனா)

ஆதி : அப்பா ஆபிஸ் போய்ட்டாரு டி.

ஆதி அப்பா : சமி குட்டி வா வா.

ஆதி :😓 அப்பா நீ ஆபிஸ் போலயா.

ஆதி அப்பா : "சமி தான் ஆபிஸ் போகா வேண்டாம்னு சொன்னா..."

ஆதி : இது எப்போ நடந்தது.

சமீரா : நான் ரூம்க்கு கிளம்ப போய்ருந்தேன்ல அப்போ.

ஆதி : 😤😤  தலைல அடிச்சிகிட்டான்...🤦🏻‍♂️

சமீரா : அப்பா போலாமா.

ஆதி அப்பா : எங்க.

சமீரா : ஊர் சுத்த தான்.

ஆதி : ஏய் பைத்தியமே மழை பெய்யுது டி...

சமீரா : கார்ல தான போறோம் வாங்க வாங்க...🚗 ( அவங்கள இழுத்துட்டு போனா)

( கார் கொஞ்ச தூரம் போனதும்)

சமீரா : அப்பா ஐஸ்க்ரீம் ஐஸ்க்ரீம்...🍨

ஆதி : வேண்டா சளி புடிக்கும்.

ஆதி அப்பா : டேய் குட்டிமா கேட்குறால போய் வாங்கிட்டு வா எனக்கும் சேர்த்து...🍨🍨

ஆதி : அப்பா அவ கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போய்ட்ட...😏

ஆதி அப்பா, சமீரா : போடா போடா.
( ஹை-ஃபை பண்ணிகிட்டாங்க)

ஆதி : போய் வாங்கிட்டு வந்து குடுத்தான்...

ஆதி அப்பா, சமீரா : சின்ன பிள்ளை மாதிரி ட்ரெஸ்ல எல்லாம் ஒழுக விட்டுட்டு மாத்தி மாத்தி ஊட்டி விட்டுட்டு சாப்பிட்டாங்க.

ஆதி : "அப்பா அங்க பாரு உன் பிஸ்னஸ் பாட்னர்..."

ஆதி அப்பா : ( ஐஸ்க்ரீம்ம கீழ போட்டுட்டு ட்ரெஸ்ல உள்ள எல்லாத்தையும் அவசர அவசரமா துடைச்சாரு) எங்க எங்க டா.

ஆதி : 😂😂😂 அந்த பயம் இருக்கட்டும்.

சமீரா : அப்பா அவன் சும்மா சொன்னான்.

ஆதி அப்பா : என் ஐஸ்க்ரீம் போச்சே... 😕😕

சமீரா : "இந்தாங்க..."( அவளோடத குடுத்தா)

ஆதி : புடிங்கிட்டான்.

சமீரா : டேய்ய்ய்ய்...😈

ஆதி : ஃபுல்லா சாப்பிட்டுட்டான்...

அப்பறம் கார்லயே நல்லா ஊர் சுத்துனாங்க, லாஸ்ட்டா சமீரா வீட்டுக்கு வந்துட்டாங்க.

சமீரா : "இறங்கி போய் மழைல டான்ஸ் ஆடுனா..."

ஆதி : "பின்னாடியே குடை தூக்கிட்டு ஓடி வந்தான்..."

சமீரா : அதை புடிங்கி தூர போட்டுட்டு அவனையும் புடிச்சி டான்ஸ் ஆட வச்சா...🚶🏻‍♀️🚶🏻

ஆதி அப்பா : "அவரும் ஜாயின் பண்ணிகிட்டாரு..."

சமீரா அம்மா : ( வெளில வந்து பார்த்தாங்க)  என்ன நடக்குது இங்க.

மூனு பேரும் வீட்டுகுள்ள ஓடுனாங்க.

சமீரா அம்மா : "போய் ட்ரெஸ் மாத்திட்டு வாங்க..."

கட கடனு ஓடி போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்தாங்க, ஆதி, ஆதி அப்பா அடிக்கடி இங்க வரதால அவங்களுக்குனு தனி ரூம்மே இங்க இருக்கு.

மூனு பேரும் சோஃபால வாய்ல கை வச்சிட்டு உட்கார்ந்து இருந்தாங்க.

சமீரா அம்மா : அண்ணா அவங்க தான் சின்ன பிள்ளைங்க நீங்களுமா...🧐

ஆதி அப்பா :"இல்ல மா பிள்ளைங்க ஆசை பட்டுட்டாங்க அதான்..."

சமீரா : தும்மல் வந்துடுச்சி...🤧🤧🤧

சமீரா அம்மா : ஆரம்பிச்சிட்டா...

ஆதி :🤧🤧🤧

சமீரா அம்மா : "அச்சோ என் புள்ளைக்கும் ஜலதோஷம் வந்துடுச்சே..."

ஆதி அப்பா : 🤧🤧🤧

சமீரா அம்மா : "அவர் வரட்டும் இருக்கு உங்களுக்கு..."

(அதே நேரம் சமீரா அப்பாவும் வீட்டுக்கு வந்துட்டாரு)

சமீரா அப்பா : ஃபுல்லா நனைஞ்சி போய் வாசல்ல நின்னாரு....

சமீரா அம்மா : 😱 என்னங்க நீங்களும் இப்படி வந்து நிக்குறீங்க...

சமீரா அப்பா : கார் பன்சர் மா கேப் புக் பண்ணலாம்னு பார்த்தா மொபைல்ல ஜார்ஜ் இல்ல சரினு ஆட்டோல வந்தா அவன் நம்ம தெரு முனைலயே இறக்கி விட்டுட்டு போய்ட்டான், அதான் நனைஞ்சிட்டே வந்துட்டேன்.

சமீரா அம்மா : அங்கயே ஓர மா ஒதுங்கி நின்னுட்டு மழை நின்ன பிறகு வந்தா என்ன...🤨

சமீரா அப்பா : 😅😅 ஆமால... ( தலைய சொரிஞ்சாரு)

சமீரா அம்மா : "நான் கட்டுனதும் சரியில்ல பெத்ததும் சரி இல்ல..."

சமீரா அப்பா, சமீரா : 😆😆😆

சமீரா அம்மா : "டாக்டர்க்கு கால் பண்ணி வீட்டுக்கு வர சொல்லி நாலு பேருக்கும் ஊசி போட்டு விட சொல்லிட்டாங்க..."

முற்றும்.

Sandhiya