எனக்குள் உறைந்தவளே - 70

அந்த இரண்டு காரும் சென்னைக்குள்ள நுழைஞ்சதும் இளா வீட்டுக்கு போற வழில சந்தோஷ் வீடு இருந்ததால அவனை அங்க இறக்கி விட்டுட்டு மத்த எல்லாரும் இளா வீட்டுக்கு வந்தாங்க...

சந்தீப், ஜெனிய வெளிலயே நிக்க வச்சிட்டு தன்ஷி உள்ள போய் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வந்தா...

இளமாறன் : சீக்கிரம் மா ஜெனியால ரொம்ப நேரம் நிக்க முடியாதுல...

தன்ஷிகா : எனக்கு என்ன பத்து கையா இருக்கு இவ்ளோ அவசரப்படுத்துனா நான் என்ன பண்ணுறது...

இளமாறன் : சரி சரி டென்சன் ஆகாத மா..

ஜெனி : 😄😄😄 அண்ணா எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்ல அவளை டென்சன் பண்ணாதீங்க...

தன்ஷிகா : இரண்டு பேரையும் சேர்த்து நிக்க வச்சி ஆரத்தி எடுத்து உள்ள அழைச்சிட்டு போனாங்க...

சூர்யா : சந்தீப், ஜெனிக்கு ஜூஸ் கொண்டு வந்து குடுத்தான்...

ஜெனி : சூர்யா நீ ஏன் இதெல்லாம் பண்ணுற...

சூர்யா : பாவம் அண்ணிமா எவ்ளோ வேலை செய்வாங்க அதான் என்னால ஆன உதவி பண்ணுறேன்...

ஜெனி : தன்ஷி குடுத்து வச்சவ தான், எங்க அவளையும் அண்ணாவயும் காணும்...

சூர்யா : அவங்க டின்னர் ரெடி பண்ணிட்டு இருக்காங்க...

ஜெனி : ஓஓஓ சரி...

சந்தீப் : வீட்டை சுத்தி பார்த்துட்டு இருந்தான் ( m.v ) இரண்டு ரூம் தான் இருக்கு, ஜெனி மட்டும் வந்துருந்தாளாவது ஜெனி தன்ஷி கூடவும் இளா சூர்யா கூடவும் இருந்துருப்பான், இப்போ நானும் வந்ததால என்ன பண்ணுறதுனு தெரியலையே, பேசாம தாத்தா, பாட்டி, சந்தோஷ் இருக்குற வீட்டுக்கு போய்டலாமா, அப்படி போனா இவங்க தப்பா நினைப்பாங்களே அப்படினு யோசிச்சிட்டு இருந்தான்...

சூர்யா : ( அவன் கைய புடிச்சி ஆட்டுனான்) என்ன மாமா யோசிச்சிட்டு இருக்கீங்க...

சந்தீப் : ம்கூம் ஒன்னும் இல்ல...

இளமாறன் : சாப்பாடு ரெடி மூனு பேரும் சாப்பிட வாங்க...

அப்பறம் எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டாங்க...

சூர்யா : சாப்பிட்டு முடிச்சதும் அவன் ரூம்ல இருந்த அவனோட திங்க்ஸ் கொஞ்சத்தை கொண்டு வந்து பால்கனி பக்கம் இருந்த டேபிள்ல வச்சான்...

இளமாறன் : ஏன்டா எல்லாத்தையும் இங்க கொண்டு வந்து வைக்குற...

சூர்யா : ஜெனியும் மாமாவும் அங்க தங்கிக்கட்டும் அண்ணா அதான் என்னோடதை இங்க கொண்டு வந்துட்டேன்...

இளமாறன் : அச்சோ இதை மறந்துட்டனே டா ( தலைல கைய வச்சிட்டு நின்னான்)

சந்தீப் : நாங்க வேணும்னா சந்தோஷ் கூட தங்கிட்டு அப்பப்ப இங்க வந்துட்டு போறோமே...

சூர்யா : இல்ல மாமா எனக்கு எந்த ப்ரச்சனையும் இல்ல நைட் இங்க சோஃபால படுத்துப்பேன், காலைல ஆபிஸ் போய்டுவேன் இதுக்கு ஏன் நீங்க அங்கயும் இங்கயும் அலையனும்...

தன்ஷிகா : சரி சூர்யா உன் திங்க்ஸ்ஸ எங்க ரூம்ல எடுத்து வச்சிடு, நீ அங்கயே குளிச்சிட்டு ஆபிஸ் கிளம்பி போகலாம்.. ஜெனி இங்க இருக்குற வரை நான் ஆபிஸ் போக மாட்டேன்...

சூர்யா : சரி அண்ணிமா...

ஜெனி, சந்தீப் சூர்யா ரூம்க்கு போனதும், தன்ஷி சூர்யாவுக்காக பில்லோ,பெட்ஷீட் கொண்டு வந்து குடுத்துட்டு போனா...

சூர்யா : சோஃபால படுத்துகிட்டான்...

அடுத்தநாள் காலைல தன்ஷி சீக்கிரம் எழுந்து எல்லாருக்கும் காபி போட்டா, இளா குளிச்சிட்டு வந்ததும் சூர்யாவ எழுப்பி குளிக்க போக சொல்லிட்டு தன்ஷிக்கு ஹெல்ப் பண்ணான்...

சந்தீப் எழுந்து குளிச்சிட்டு காபி குடிக்கலாம்னு கிட்சன் போனான் ஆனா அங்க இளா தன்ஷிய பின்பக்கமா ஹக் பண்ணிகிட்டு அவ கூட எதோ பேசிட்டு இருந்தான் அதனால சந்தீப் அவன் வந்த தடமே தெரியாம சோஃபால வந்து உட்கார்ந்துட்டான்...

தன்ஷிகா : அவனுக்கு காபி கொண்டு வந்து குடுத்தா...

சந்தீப் : தேங்க்ஸ், ஜெனிக்கு...

ஜெனி : இதோ இருக்கு நான் குடுத்துடுறேன் ( ஜெனி இருந்த ரூம்க்கு போனா)

சூர்யா : குளிச்சிட்டு தலை துவட்டிட்டே கிட்சன் போய் காபி எடுத்துட்டு வந்து சந்தீப் பக்கத்துல உட்கார்ந்தான்...

குட் மார்னிங் மாமா...

சந்தீப் : குட் மார்னிங்...

தன்ஷிகா : வெளில வந்தவ சூர்யா தலைல கொட்டுனா...

சூர்யா : 😨 அண்ணிமா ஏன் கொட்டுனீங்க...

தன்ஷிகா : ஒன்னு தலை துவட்டிட்டு காபி குடிக்கனும் இல்லனா காபி குடிச்சிட்டு தலை துவட்டனும் இரண்டையும் ஒரே நேரத்துல பண்ணாதனு எத்தனை முறை சொல்லிருக்கேன் ( திட்டிட்டே அவன் கைல இருந்த டவலை வாங்கி அவனுக்கு தலை துவட்டுனா)

சூர்யா : இதை கொஞ்சம் திட்டாம கொட்டாம செய்யலாம்ல அண்ணிமா...

தன்ஷிகா : திரும்பவும் அவன் தலைல நங்குனு கொட்டிட்டு கிட்சன் போய்ட்டா...

சந்தீப் : 😁😁😁 வாய்ல கை வச்சி சிரிச்சான்...

சூர்யா : ஏன் மாமா சிரிக்குறீங்க அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்...

சந்தீப் : 😄 அது சரி...

அப்பறம் சூர்யா ஆபிஸ் கிளம்ப போய்ட்டான், இளாவும் தன்ஷிக்கு ஹெல்ப் பண்ணிட்டு வந்து ஆபிஸ் கிளம்புனான்...

தன்ஷிகா : எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வச்சா.. சாப்பிட்டு முடிச்சதும் இளா, சூர்யா ஆபிஸ் போய்ட்டாங்க... தன்ஷி ஜெனி கூட கதை பேசிட்டே அவளுக்கு புடிச்சது எல்லாம் சாப்பிட செஞ்சி குடுத்து அவளை சாப்பிட வச்சா...

சந்தீப் : அவங்க பேசுறதை கேட்குறது, டிவி பார்க்குறது தூங்குறதுனு அந்த நாளை ஓட்டிட்டு இருந்தான்...

அடுத்தநாள் காலைல சந்தோஷ் அவங்க வீட்டுக்கு வந்தான்...

தன்ஷிகா : வா சந்தோஷ் எப்படி இருக்க...

சந்தோஷ் : நல்லா இருக்கேன் அக்கா...

அப்பறம் எல்லாரும் ஹால்ல கூடிட்டாங்க...

இளமாறன் : என்ன சந்தோஷ் காலைலயே வந்துருக்க எதாவது விஷயமா இல்ல சந்தீப், ஜெனிய பார்க்க வந்தியா...

சந்தோஷ் : அவங்களை பார்த்துட்டு ஒரு இரண்டு நாள் எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாமானு கேட்க வந்தேன் மாமா...

இளமாறன் : இது என்ன டா கேள்வி அவங்க உன் அண்ணா, அண்ணி அழைச்சிட்டு போக உனக்கு முழு உரிமை இருக்கு...

சந்தோஷ் : தேங்க்ஸ் மாமா... அண்ணா, அண்ணி இரண்டு நாள்க்கு உள்ள ட்ரெஸ் மட்டும் எடுத்துட்டு வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்...

சந்தீப் : 😞😞😞 அங்கயா ( தயங்கி நின்னான்)

சந்தோஷ் : ஏன் அண்ணா உனக்கு அங்க வர புடிக்கலயா...

சந்தீப் : ஷ்யாம் டாட் என்னை அவங்க புள்ளையா ஏத்துகிட்டாலும் நான் அவங்க குடும்ப வாரிசு இல்லயே நான் எப்படி அங்க வரது அவங்களுக்கு என்னை பார்த்தா வேற்று ஆளா தான தெரிவேன் 😢😢😢 ( கண் கலங்கி தலை குனிஞ்சி சொன்னான்)

எல்லாருக்கும் சந்தீப்ப பார்க்க பாவமா இருந்தது, ஜெனி அவன் கிட்ட வந்து அவன் கைய புடிச்சி லைட்டா அழுத்துனா...

சந்தீப்க்கு அவளோட அந்த அழுத்தம் அவனுக்கு அவ இருக்கானு சொல்லாம சொல்லுச்சு...

சந்தோஷ் : அண்ணா அப்படிலாம் இல்ல அவங்க அப்படிலாம் நினைக்க மாட்டாங்க நீங்க வாங்க...

இளமாறன் : சந்தீப் நாம யார் கூடவும் பேசாத வரைக்கும் அவங்க நமக்கு தூரமா தான் தெரிவாங்க அன்பா பேச ஆரம்பிச்சா நெருக்கமாகிடுவாங்க நீ போ எல்லாம் நல்லதா நடக்கும்...

சந்தீப் : ம்ம்ம்...

சந்தோஷ் சந்தீப், ஜெனிய அவன் வீட்டுக்கு அழைச்சிட்டு போனான்...

ஷ்யாம் அப்பா, அம்மா அவங்களை வாசல்க்கே வந்து அழைச்சிட்டு போனாங்க...

சந்தீப் : தயங்கிட்டே உள்ள போனான்...

ஷ்யாம் அப்பா : ஏன் சந்தீப் உனக்கு இங்க வர புடிக்கலயா...

சந்தீப் : அய்யோ அப்படி இல்ல தாத் ( தாத்தானு சொல்ல வந்ததை அப்படியே நிறுத்திட்டு தயங்கி நின்னான்)

இதுவரை இரண்டு, மூன்று முறை இவங்க நேரா சந்திக்குற வாய்ப்பு இருந்தும் சந்தீப் ஷ்யாம் அப்பா, அம்மா கூட உரிமையா பேசுனது இல்ல அவங்களும் சந்தீப்க்கு புடிக்கலயோனு நினைச்சி பேசாம தான் இருந்துருக்காங்க அதனால தான் சந்தீப்க்கு இவ்ளோ தயக்கம்...

சந்தோஷ் : சந்தீப் இளா வீட்டுல இருந்தப்ப சொன்ன காரணத்தை சொன்னான்...

ஷ்யாம் அப்பா : ஆமா சந்தீப் நீ என் பையனுக்கு பிறந்தவன் இல்ல தான்...

சந்தீப் : இப்படி இவங்க சொல்லிட கூடாதுனு நினைச்சி தான் பயந்து வராம இருந்தான் ஆனா இவங்களே இப்படி சொல்லவும் இங்க இருக்க முடியாம திரும்பி நடக்க போனான்...

ஜெனி : அவன் கைய புடிச்சி போக விடாம நிறுத்துனா...

ஷ்யாம் அப்பா : நீ ஷ்யாம்க்கு பிறந்தவனா இல்லாம இருந்தாலும் எங்களுக்கு பொண்ணா இருந்து இத்தனை வருஷம் எங்களை பார்த்துகிட்ட பார்வதிக்கு பிறந்தவன் ஆச்சே உன்னை எப்படி பா நாங்க வெறுப்போம்...

சந்தீப் : தாத்தா...

ஷ்யாம் அப்பா : ஆமா உன் தாத்தா தான் சந்தோஷ்க்கு இங்க இருக்குற எல்லா உரிமையும் உனக்கும் இருக்கு அதை மறந்துடாத...

சந்தீப் : தேங்க்ஸ் தாத்தா...

ஷ்யாம் அம்மா : சரி பேசுனது போதும் எல்லாரும் சாப்பிட வாங்க...

ஷ்யாம் அப்பா, அம்மா இரண்டு நாளும் அவங்களை நல்லா பார்த்துகிட்டாங்க, அப்பறம் இளமாறன் வீட்டுல போய் ஒரு வாரம் தங்கிட்டு சந்தீப் ஜெனிய கோயம்பத்தூர் அழைச்சிட்டு போய்ட்டான்...

தொடரும்...

# Sandhiya.