எனக்குள் உறைந்தவளே - 72
( கடைசி எபிசோட்ல தன்ஷிகா கன்சீவ்வா இருக்குறது தெரிஞ்சி எல்லாரும் வந்து பார்த்துட்டு போனாங்க, அப்பறம் சந்தீப் அவன் குழந்தையோட பேசி சந்தோஷப்பட்டான்)
இரண்டு மாதத்திற்க்கு பிறகு,
ஜெனிக்கு பிரசவ தேதி கொடுத்துட்டதால எல்லாரும் ரொம்ப ஜாக்கிரதையா இருந்தாங்க...
ஜெனி : பெட்ரூம்ல புக் படிச்சிட்டு இருந்தா...
சந்தீப் : ஆபிஸ் முடிஞ்சி அப்போ தான் வீட்டுக்கு வந்தான்...
ஜெனி : அவனை நிமிர்ந்து பார்த்துட்டு திரும்பவும் புக் படிக்க ஆரம்பிச்சா...
சந்தீப் : அவளை பார்த்துட்டே போய் ட்ரெஸ் ஜேன்ஜ் பண்ணிட்டு வந்தான் " ஜெனி பெய்ன் எதாவது இருக்கா " கேட்டுட்டே அவ பக்கத்துல வந்து உட்கார்ந்தான்...
ஜெனி : இல்ல...
சந்தீப் : " செல்லக்குட்டி எப்போ வெளில வந்து அப்பாவ பார்ப்பீங்க, நீங்க பாய்யா இல்ல கேர்ள்லா " ஜெனி வயித்துல கை வச்சி குனிஞ்சிட்டே பேசுனான்...
ஜெனி : 😒😒😒 ( m.v ) குழந்தை கிட்ட பேசனும்னா மட்டும் கிட்ட வரான் இடியட்...
சந்தீப் : ஜெனி குழந்தை பிறந்ததும் குட்டியா அழகா இருக்கும்ல...
ஜெனி : ஆமா...
சந்தீப் : என்ன குழந்தைனு தெரிஞ்சதும் பாப்பாக்கு தேவையான எல்லா வகையான ட்ரெஸ்ஸும் வாங்கி ஒரு கப்போர்டு ஃபுல்லா அடுக்கி வச்சிடனும்...
ஜெனி : ம்ம்ம்...
சந்தீப் : என்ன நான் குழந்தைய பத்தி ஆசையா பேசுறேன் நீ ஒரு வார்த்தைல பதில் சொல்லுற...
ஜெனி : அதான் நீங்களே சொல்லிட்டீங்களே குழந்தைய பத்தி பேசுறனு அப்பறம் நான் என்ன பதில் சொல்லுறது 😠
சந்தீப் : இல்ல ஜெனி அது ( எதோ சொல்ல வந்தான்)
ஜெனி : ( அவனுக்கு நேரா கை நீட்டுனா) நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்...
சந்தீப் : சரி மா கோவபடாத சாப்பிட போலாமா...
ஜெனி : ம்ம்ம் வாங்க...
சந்தீப் : அவ கை புடிச்சி கீழ அழைச்சிட்டு போனான்...
ஜெனி : கீழ இறங்கும் போதே வயிறு லைட்டா வலிக்கவும் சந்தீப் கைய இறுக்கி புடிச்சான்...
சந்தீப் : ஜெனிய பார்த்தான்...
ஜெனி : அவன் கைய புடிச்சிகிட்டே கண்ணை இறுக்க மூடிகிட்டா, முகம் லைட்டா வேர்க்க ஆரம்பிச்சது...
சந்தீப் : ஜெனி என்ன மா...
ஜெனி : 😨 வலிக்குதுங்க ( அப்படியே படில உட்கார போனா)
சந்தீப் : ஹேய் ஜெனி ( அவளை அப்படி தூக்கிட்டு வந்து சோஃபால படுக்க வச்சான்)
ஜெனி : ஆஆஆ அம்மா ( வயித்தை புடிச்சிகிட்டு கத்துனா)
இவ சத்தம் கேட்டு ஷ்யாம், பார்வதி ஓடி வந்தாங்க...
பார்வதி : சந்தீப் என்ன டா...
சந்தீப் : மாம் வயிறு வலிக்குதுனு கத்துறா எதாவது பண்ணுங்க...
பார்வதி : டேய் சூட்டு வலியா இருக்கும் இரு சீரக தண்ணி குடுப்போம் வலி நிக்கலனா ஹாஸ்பிட்டல் போகலாம்...
சந்தீப் : மாம் அவ வலி தாங்காம கத்துறா இப்போ போய் இப்படி சொல்லுறீங்க..
பார்வதி : நீ அவ பக்கத்துலயே இரு டா வந்துடுறேன் ( கிட்சன் போய்ட்டாங்க)
சந்தீப் : ஜெனி கைய புடிச்சிட்டே சோஃபாக்கு கீழ உட்கார்ந்தான்...
ஜெனி : வலில வயித்துல கை வச்சிட்டே அழுதுட்டு இருந்தா...
சந்தீப் : 😰 ஜெனி அழாத மா ( அவ கண்ணீரை துடைச்சி விட்டான் )😢 பாப்பா அம்மாக்கு வலி தராதீங்க டா அம்மா பாவம்ல ( அவ வயித்துல தடவி விட்டான்)
பார்வதி : சீரக தண்ணி கொண்டு வந்து குடுத்தாங்க...
அதை குடிச்சும் ஜெனிக்கு வலி நிக்கல, உடனே ஹாஸ்பிட்டல் போறதுக்காக ஜெனிக்கு எடுத்து வச்சிருந்த திங்க்ஸ் இருந்த பேக் எடுத்துகிட்டு வீட்டை பூட்டிட்டு ஜெனி கூட மூனு பேரும் போய்ட்டாங்க...
ஹாஸ்பிட்டல் போற வழிலயே சந்தீப் இளமாறன், சந்தோஷ் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டான்...
இளமாறன் தன்ஷி, சூர்யாவ அழைச்சிட்டு கிளம்பிட்டான் அதே போல சந்தோஷ் அவன் தாத்தா, பாட்டியோட கோயம்பத்தூர் கிளம்பிட்டாங்க...
ஜெனிக்கு விட்டு விட்டு வலி வந்துட்டே இருந்தது ஆனா குழந்தை பிறக்குறதுக்கான பிரசவ வலி இன்னும் வராததால ஒரு ரூம்ல நடந்துட்டே இருந்தா அவ கூடவே பார்வதி இருந்தாங்க..
சந்தீப் அவ அப்பப்ப வலில துடிக்குறதை பார்க்க முடியாம வெளிலயே இருந்தான் அவன் கூடவே ஷ்யாம் இருந்தாரு...
நேரம் போக போக ஜெனிக்கு வலி அதிகமாகவும் ஆப்ரேஷன் தியேட்டர்க்கு அழைச்சிட்டு போய்ட்டாங்க... அவளை உள்ள அழைச்சிட்டு போன கொஞ்ச நேரத்துலயே இளா, தன்ஷி, சூர்யா வந்துட்டாங்க...
இளமாறன் : சந்தீப் ஜெனி எங்க குழந்தை பிறந்துடுச்சா...
சந்தீப் : இப்போ தான் உள்ள அழைச்சிட்டு போனாங்க...
தன்ஷிகா : ஜெனி கத்துற சத்தம் கேட்கவும் அவளுக்கு உடம்பு நடுங்க ஆரம்பிச்சது...
( நடுராத்திரி 2 மணிங்குறதால ஹாஸ்பிட்டல் அமைதியா இருக்கவும் ஜெனி கத்துற சத்தம் மட்டும் தான் கேட்டுது)
இளமாறன் : பார்வதி கூட பேசிட்டு இருந்தான்...
தன்ஷிகா : அவளும் கன்சீவ்வா இருக்குறதால பயத்துல மயக்கம் வந்து கீழ விழ போனா..
சந்தீப்பும் அந்த ரூம்கிட்டயே நின்னதால கீழ விழ போன தன்ஷிய தாங்கி புடிச்சான்...
இளமாறன் : 😱 தன்ஷி என்ன ஆச்சி ( அவளை சேர்ல உட்கார வச்சான்)
சந்தீப் : டேய் அறிவில்லயா உனக்கு அவ தான் கன்சீவ்வா இருக்காள அவளை ஏன் இவ்ளோ தூரம் அழைச்சிட்டு வந்த...
இளமாறன் : அவன் திட்டுனதை எல்லாம் காதுல கேட்காம தன்ஷி கன்னத்துல தட்டி அவளை எழுப்ப ட்ரை பண்ணான்...
சூர்யா : தண்ணி கொண்டு வந்து தன்ஷி முகத்துல தெளிச்சான்...
தன்ஷிகா : ( மயக்கம் தெளிஞ்சி எழுந்தா ) இளா ஜெனி பாவம் நமக்கு பாப்பா பிறக்கும் போதும் எனக்கும் இப்படி தான வலிக்கும் ( உதடு துடிக்க கண்ணு கலங்க இளாவ பார்த்து கேட்டா)
இளமாறன் : இல்ல மா அதெல்லாம் இல்ல பயப்பிடாத ( அவனோட சேர்த்து அணைச்சிகிட்டான்)
தன்ஷிகா : அவனுக்குள்ள புதையுற அளவு அவனை அணைச்சிகிட்டா...
இளமாறன் : ஒன்னும் இல்ல மா நான் தான் இருக்கேன்ல பயப்பிடாத ( அவ முதுகுல தட்டி குடுத்து சமாதானம் பண்ணான்)
அந்த நேரம் ஜெனி கத்துறதோட சேர்ந்து குழந்தையோட அழுகை சத்தமும் கேட்டுது...
அப்பதான் எல்லாருக்கும் கொஞ்சம் நிம்மதியா இருந்தது...
சந்தீப் : ரூம் வாசல்ல போய் நின்னு எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தான்...
கொஞ்ச நேரத்துலயே நர்ஸ் குழந்தைய க்ளீன் பண்ணி வெளில தூக்கிட்டு வந்தாங்க...
நர்ஸ் : சார் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துருக்கு ( குழந்தைய அவனுக்கு நேரா நீட்டுனாங்க)
சந்தீப் : கை நடுங்க குழந்தைய எப்படி தூக்குறதுனு தெரியாம முழிச்சிட்டு நின்னான்...
பார்வதி : குழந்தைய வாங்கி அவன் கைல வச்சாங்க...
சந்தீப் : மாம் பேபி குட்டியா அழகா இருக்கான் ( குழந்தைய ஆசையா பார்த்தான்)
பார்வதி : என் பேரனை என்கிட்ட குடு டா ( குழந்தைய வாங்கி கிட்டாங்க)
ஷ்யாம் : பார்வதி கைல குழந்தை இருக்கும் போதே கொஞ்சுனான்...
பார்வதி : இளா, தன்ஷி, சூர்யா கிட்ட குழந்தைய காட்டுனாங்க...
தன்ஷிகா : குழந்தைய பார்த்ததும் இவ்ளோ நேரம் இருந்த நடுக்கம் போய் குழந்தையோட கை, கால்னு தொட்டு பார்த்தா...
அப்பறம் நர்ஸ் வந்து குழந்தைய வாங்கிட்டு போய்ட்டாங்க...
தொடரும்...
# Sandhiya.
2 Comments
Jeni manasula ippovum avan babykaga than avalta pesuranu nenaichitu iruka athan Sandeep puriya vachirukanum innum puriya vaikama irukan ava ithuku aprm kooda feel pannuva
ReplyDeleteJeni ku inum andha insecurity feel iruku...sandheep avan love ah veli kaatama irukaan
ReplyDelete