எனக்குள் உறைந்தவளே - 73

குழந்தை பிறந்த கொஞ்ச நேரத்துலயே சந்தோஷ், அவன் தாத்தா, பாட்டி வந்துட்டாங்க...

ஜெனிய நார்மல் வார்டுக்கு மாத்துனதும் எல்லாரும் உள்ள போனாங்க...

ஜெனி டயர்டா படுத்துருந்தா பக்கத்துலயே குழந்தை அழகா கண்மூடி தூங்கிட்டு இருந்தது...

சந்தீப் : உள்ள போனதுமே ஜெனிய கைய புடிச்சிகிட்டு அவளையே பார்த்துட்டு இருந்தான்...

மத்த எல்லாரும் ஜெனி கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு சந்தீப், ஜெனிக்கு தனிமை குடுத்துட்டு வெளில போய்ட்டாங்க...

சந்தீப் : ஜெனி ரொம்ப வலிக்குதா 😔

ஜெனி : இல்லங்க...

சந்தீப் : வலி தாங்காம ரொம்ப துடிச்ச இப்போ வலிக்கலனு சொல்லுற...

ஜெனி : இவன் முகத்தை பார்த்ததும் வலி எல்லாம் போய்டுச்சி ( குழந்தை கைய புடிச்சிட்டே சொன்னா)

சந்தீப் : 😞😞😞 சாரி ஜெனி...

ஜெனி : எதுக்கு...

சந்தீப் : என்னால தான உனக்கு இப்படி ஆச்சி...

ஜெனி : 😒😒😒 அவனை புரியாம பார்த்தா...

சந்தீப் : தன்ஷிய காப்பாத்துனதுக்காக உன்னை பழி வாங்குறனு உன்கிட்ட அத்துமீறி நடந்து அதனால குழந்தை உருவாகி இன்னைக்கு நீ இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டனா அதுக்கு நான் தான காரணம்..

ஜெனி : 😨 அவன் பேசுறதையே ஆச்சர்யமா பார்த்தா...

சந்தீப் : நான் உண்மைய தான் பேசுறேன் ஜெனி மனசார உன்கிட்ட மன்னிப்பு கேட்குறேன் என்னை மன்னிச்சிடு மா... எல்லார் மாதிரியும் நானும் மனைவி, குழந்தைனு வாழ ஆசைபடுறேன் அது நீ என்னை மன்னிச்சி ஏத்துகிட்டா மட்டும் தான் நடக்கும்...

ஜெனி : அவனையே மெய் மறந்து பார்த்துட்டு இருந்தா...

சந்தீப் : எதாவது பதில் சொல்லு மா ( அவளையே ஏக்கமா பார்த்தான்)

ஜெனி : நீங்க தான் பேசுறீங்களானு ஆச்சர்யமா இருக்கு...

சந்தீப் : கெட்டவன் எப்போதும் கெட்டவனா தான் இருக்கனுமா திருந்த கூடாதா...

ஜெனி : கண்டிப்பா திருந்தலாம் நான் உங்களை மன்னிச்சி ஏத்துக்குறேன்...

சந்தீப் : 😍 நிஜமாவா ( சந்தோஷத்துல லைட்டா கத்திட்டான்)

அவன் சத்தம் கேட்டு குழந்தை அழ ஆரம்பிச்சிட்டான்...

சந்தீப் : 😱 அச்சோ குழந்தை அழறான் எதாவது பண்ணு ஜெனி ( பதட்டமா குழந்தைய சமாதானம் பண்ண ட்ரை பண்ணான்)

ஜெனி : 😄😄😄 அவன் முகத்தை பார்த்துட்டு லைட்டா சிரிச்சா...

சந்தீப் : என்னமா சிரிக்குற எதாவது பண்ணு...

ஜெனி : அவன் பசில அழறான் போல அத்தைய வர சொல்லுங்க...

சந்தீப் : அப்படியா இதோ சொல்லுறேன் ( வெளில போய்ட்டான்)

ஜெனி : 😃😃😃 அவனை பார்த்து சிரிச்சிட்டு குழந்தைய தூக்கி மடில படுக்க வச்சா...

அப்பறம் பார்வதி வந்ததும் குழந்தைக்கு பசி ஆத்திட்டு மூனு நாள் ஹாஸ்பிட்டல்லயே இருந்துட்டு மூனாவது நாள் வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்க...

அந்த மூனு நாளும் இளமாறன், தன்ஷி அவங்க கூடவே இருந்துட்டு சென்னை கிளம்பிட்டாங்க...

குழந்தை பிறந்த பதினாறவது நாள் சந்தீப் வீட்டுல புண்ணியாதானம் பண்ணி குழந்தைக்கு பெயர் வைக்குற ஃபன்க்ஷன் ஏற்பாடு பண்ணிருந்தாங்க...

அதுக்காக இளமாறன், தன்ஷி அவங்க குடும்பத்துல உள்ள எல்லாரையும் இன்வைட் பண்ணிருந்தாங்க...

ஜெனி : அவ ரூம்ல குழந்தைக்கு ட்ரெஸ் பண்ணிட்டு இருந்தா...

சந்தீப் : ஜெனி...

ஜெனி : சொல்லுங்க...

சந்தீப் : தம்பி ரெடியாகிட்டானா...

ஜெனி : அவனா எப்படி ரெடியாவான் நான் தான் ரெடி பண்ணிட்டு இருக்கேன்...

சந்தீப் : சரி மா நீ தான் ரெடி பண்ண போதுமா அதுக்கு ஏன் கோவபடுற...

ஜெனி : நான் கோவபடல இவனை கொஞ்ச நேரம் வச்சிக்கோங்க நான் கிளம்புறேன் எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க...

சந்தீப் : சரி நான் பார்த்துக்குறேன் நீ டென்சன் ஆகாம கிளம்பு ( பெட்ல சாஞ்சி உட்கார்ந்து குழந்தைய காலுல வச்சிகிட்டு கொஞ்சிட்டு இருந்தான்)

ஜெனி : இரண்டு பேரையும் பார்த்துகிட்டே அவசரமா கிளம்பிட்டு இருந்தா...

சந்தீப் குழந்தை கிட்ட பேசவும் குழந்தையும் அழகா கை, கால ஆட்டி அவனை பார்த்து சிரிச்சிட்டு இருந்தது...

ஜெனி கிளம்புனதும் சந்தீப் பக்கத்துல உட்கார்ந்து அவளும் குழந்தை கூட விளையாடிட்டு இருந்தா...

இளமாறன் : ( அவங்க ரூம்க்கு வந்தான்) குழந்தைய கொஞ்சுனது போதும் சீக்கீரம் கீழ தூக்கிட்டு வாங்க என் மருமகன்க்காக எல்லாரும் வெய்ட்டிங்...

சந்தீப் : சரி உங்க மருமகன்க்கு என்ன பெயர் யோசிச்சி வச்சிருக்கீங்க...

இளமாறன் : அதெல்லாம் சீக்ரெட் உங்க கிட்ட சொல்ல முடியாது...

சந்தீப் : உங்க சீக்ரெட் கீழ போனதும் தெரிஞ்சிட போகுது...

இளமாறன் : அப்ப தெரிஞ்சா பரவாயில்ல...

ஜெனி : மாமனும் மச்சானும் பேசுனது போதும் கீழ வாங்க ( குழந்தைய தூக்கிட்டு கீழ போய்ட்டா)

சந்தீப், இளமாறன் அவங்களும் கீழ போய்ட்டாங்க...

ஐயர் யாகம் வளர்த்து பூஜை பண்ணிட்டு இருந்தாரு அவருக்கு பக்கத்துல அலங்காரம் பண்ண தொட்டில் ஒன்னு இருந்தது...

ஜெனி வந்ததும் குழந்தைய தொட்டில்ல போட்டுட்டு சந்தீப்பும் ஜெனியும் ஐயர் முன்னாடி உட்கார்ந்தாங்க...

பூஜை முடிஞ்சதும் குழந்தைக்கு அத்தை முறைல உள்ளவங்களை கூப்பிடவும் தன்ஷி வந்தா, அவ கிட்ட சர்க்கரை தண்ணி குடுத்து குழந்தை வாய்ல தொட்டு வைக்க சொல்லிட்டு காதுல மூனு முறை பேர் சொல்ல சொன்னாங்க...

தன்ஷிகா : குழந்தை வாய்ல சர்க்கரை தண்ணி தொட்டு வைச்சிட்டு " சுதர்சன், சுதர்சன், சுதர்சன் " னு மூனு முறை சொன்னா...

ஜெனி : பேர் சூப்பர் டி...

தன்ஷிகா : தேங்க் யூ...

இளமாறன் : அவனும் குழந்தைக்கு சர்க்கரை தண்ணி தொட்டு வச்சி பேரை மூனு முறை சொல்லி குழந்தை கழுத்துல கோல்டு செயின் போட்டு விட்டான்...

இதே மாதிரி எல்லாரும் குழந்தை காதுல பேர் சொல்லி ஒவ்வொரு கிஃப்ட் குடுத்தாங்க...

அப்பறம் லேடீஸ் எல்லாரும் சேர்ந்து சமைச்சி ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டாங்க...

சாப்பிட்டு முடிச்சதும் சந்தோஷ், தீபனா தோட்டத்துல ஒன்னா உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க...

தீபனா : சந்தோஷ் குட்டி பையன் அழகா இருக்கான்ல...

சந்தோஷ் : ஆமா...

தீபனா : உங்களுக்கு என்ன குழந்தை புடிக்கும்...

சந்தோஷ் : பையனும் புடிக்கும் ஆனா பெண் குழந்தைய ரொம்ப புடிக்கும்...

தீபனா : அப்போ நமக்கு முதல்ல பெண் குழந்தை தான் பிறக்கனும் ( அவன் தோள்ல சாஞ்சிகிட்டா)

சந்தோஷ் : 😄😄😄 சரி மா...

தீபக் : டேய் சந்தோஷ் ( கத்தி கூப்பிட்டான்)

சந்தோஷ் திரும்பி பார்க்கும் போது அங்க மொத்த குடும்பமும் இவங்களை பார்த்துட்டு நின்னுச்சி...

சந்தோஷ் : 😱😱😱 அதிர்ச்சியாகி அவன் மேல சாஞ்சிருந்த தீபனாவ விலக்கி விட்டான்...

தீபனா : அப்போ தான் அங்க எல்லாரும் இருக்குறதை பார்த்தா 😱😱😱

தொடரும்...

# Sandhiya.