எனக்குள் உறைந்தவளே - 75

சென்னைல பெரிய மண்டபத்துல சந்தோஷ், தீபனாக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிருந்தாங்க...

மித்ராக்கு இது ஒன்பதாவது மாசம் அதனால அவ, கதிரேசன், நிவேதாவ தவிர மத்த எல்லாரும் வந்துருந்தாங்க...

தன்ஷிக்கு இது ஆறாவது மாசம் வயிறு கொஞ்சம் பெருசா இருந்தது, இளமாறன் அவ கூடவே இருந்து அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து பண்ணிட்டு இருந்தான்...

சந்தோஷ் : மணமகன் அறைல பட்டு சட்டை, வேஷ்டி கட்டி அழகா ரெடியாகிட்டு இருந்தான்...

தீபக் : அவன் கூடவே நின்னு உதவி பண்ணிட்டு இருந்தான்...

சந்தீப் : ( சுதர்சனை தூக்கிட்டு வந்தான்) என்னடா ரெடியா...

சந்தோஷ் : ரெடி தான் அண்ணா நீ ஏன் இவனை தூக்கிட்டு அழைஞ்சிட்டு இருக்க...

சந்தீப் : ஜெனி கிளம்பனும்னு என்கிட்ட குடுத்தா, எனக்கு வேலை இருக்கேனு அம்மா,அப்பா கிட்ட குடுக்கலாம்னு பார்த்தா அழ ஆரம்பிச்சிடுறான்...

சந்தோஷ் : உன்னை நல்லா அடையாளம் கண்டு வச்சிருக்குறான் அண்ணா அதான் உன்னை தவிர யார்கிட்டயும் போக மாட்டுறான்...

சந்தீப் : சரி டா ஐயர் கூப்பிடுறாரு போலாமா...

சந்தோஷ் : போலாம் அண்ணா...

சந்தோஷ் கழுத்துல மாலை போட்டு மணமேடைல போய் உட்கார வச்சாங்க...

தீபனாவ ஜெனியும் தன்ஷியும் அழைச்சிட்டு வந்து சந்தோஷ் பக்கத்துல உட்காரவச்சாங்க...

தீபனா : சந்தோஷ்ஷ இடிச்சிட்டு வந்து உட்கார்ந்தா...

சந்தோஷ் : அவளை நிமிர்ந்து பார்த்தான்...

தீபனா : 😉😉😉 அவனை பார்த்து கண் அடிச்சா...

சந்தோஷ் : 😳😳😳 திரு திருனு முழிச்சிட்டே அவளை பார்த்தான்...

ஐயர் : மாப்பிள்ளை மந்திரம் புரியலனா கேளுங்க திரும்ப சொல்லுறேன் அதுக்கு ஏன் இப்படி முழிக்குறீங்க...

தீபனா : ஐயர் சொன்னதை கேட்டு சிரிச்சா...

சந்தோஷ் : 😠 ( அவளை பார்த்து முறைச்சான்) அதெல்லாம் இல்ல ஐயரே நீங்க மந்திரத்தை சொல்லுங்க...

அப்பறம் ஐயர் மந்திரம் சொல்ல மேள தாளத்தோட சந்தோஷ், தீபனா கழுத்துல இரண்டு முடிச்சி போட மூனாவது முடிச்சி நாத்தனார் முறைக்கு தன்ஷி போட்டா...

அப்பறம் அக்னிய மூனு முறை சுத்தி வந்து அம்மி மிதிச்சி தீபனா கால் விரல்ல மெட்டி போட்டு பெரியவங்க எல்லார் காலுலயும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகிட்டாங்க...

தன்ஷிகா : இளா...

இளமாறன் : சொல்லு மா எதாவது வேணுமா...

தன்ஷிகா : நம்ம சூர்யாக்கும் இதே போல சூப்பரா பொண்ணு பார்த்து க்ராண்டா கல்யாணம் பண்ணனும்ங்க...

இளமாறன் : அதுக்கு என்ன மா பண்ணிடலாம்...

தன்ஷிகா : சீக்கிரம் ஏற்பாடு பண்ணனும்ங்க சந்தோஷ்ஷ விட சூர்யா பெரியவன்...

இளமாறன் : சரி மா பண்ணிடலாம்...

தன்ஷிகா : சூர்யா எங்க போய்ட்டான் ( சுத்தி பார்த்தா ) 😒 இளா சூர்யா கூட இருக்குற அந்த பொண்ணு யாரு...

இளமாறன் : தெரியல மா! கூட வேலை பார்க்குற பொண்ணா இருக்கும், அர்ஜுன் சித்தப்பா தான் ஆபிஸ்ல உள்ள எல்லாரையும் மேரேஜ்க்கு இன்வைட் பண்ணிருக்காங்கள சூர்யாவும் அங்க தான வேலை பார்க்குறான்...

தன்ஷிகா : ஆமாங்க ஆனா அந்த பொண்ணு கிட்ட பேசும் போது அவன் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுதுல...

இளமாறன் : ஒளிவட்டமா? என்னக்கு தெரியலையே...

தன்ஷிகா : ( அவன் கைல கிள்ளுனா) ஒரு பேச்சுக்கு சொன்னா அதை ஆராய்ச்சி பண்ணுவீங்களா...

இளமாறன் : சரி சரி இரு அவனை கூப்பிட்டு விசாரிப்போம்...

டேய் சூர்யா இங்க வா...

சூர்யா : சொல்லுங்க அண்ணா...

இளமாறன் : யார் அந்த பொண்ணு...

சூர்யா : 😳😳😳 எந்த பொண்ணு அண்ணா...

இளமாறன் : அதான் இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தியே அந்த பொண்ணு...

சூர்யா : 😍 அவளா! அவ பேர் அனன்யா ஆபிஸ்ல ஒன்னா வேலை பார்க்குறோம்...

தன்ஷிகா : ஒன்னா வேலை மட்டும் தான் பார்க்குறீங்களா கொழுந்தனாரே...

சூர்யா : அய்யோ அண்ணி ஏன் இப்படி கேட்குறீங்க...

தன்ஷிகா : இப்போ தான் உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு பேசிட்டு இருந்தோம், அதான் அந்த பொண்ணு எப்படினு தெரிஞ்சிகிட்டு பொண்ணு கேட்கலாம்னு இருக்கோம்...

சூர்யா : 😍😍😍 ஐஐஐ நிஜமாவா...

தன்ஷிகா : என்னங்க மாட்டிகிட்டான் பார்த்தீங்களா...

இளமாறன் : 😠 அதான என்ன டா இதெல்லாம் அந்த பொண்ணை லவ் பண்ணுறியா...

சூர்யா : அய்யயோ இல்லணா ஜஸ்ட் க்ரஸ் அவ்ளோ தான்...

இளமாறன் : அப்போ வேற பொண்ணு பார்த்துடலாமா...

சூர்யா : வேண்டா வேண்டா ( வேகமா தலை ஆட்டுனான்)  அந்த பொண்ணையே பாருங்க...

இளமாறன் : ( அவன் காதை புடிச்சி திருகுனான்) அப்பறம் ஏன்டா சீன் போடுற, போய் அந்த பொண்ணை வர சொல்லு பேசி பார்க்குறோம்...

சூர்யா : 😁😁😁 சரி அண்ணா...

இளமாறன் : அந்த பொண்ணு மட்டும் தான் வரனும் நீ டைனிங் ஹால் போய் சாப்பாடு சரியா பரிமாறுறாங்களா, யாராவது எதாவது குறை சொல்லுறாங்களானு பாரு....

சூர்யா : 😔😔😔 அண்ணா நீங்க என்ன பேசிக்குறீங்கனு நான் தெரிஞ்சிக்க வேண்டாமா...

இளமாறன் : நான் பேசிட்டு சொல்லுறேன் அதுவரை இந்த பக்கம் வந்துடாத போ...

சூர்யா : ம்ம்ம் 😔😔😔 ( அனன்யாவ இளாகிட்ட பேச சொல்லிட்டு டைனிங் ஹால் போய்ட்டான்)

அனன்யா வந்ததும் இளா, தன்ஷி அவ கிட்ட எந்த ஊர் அப்பா, அம்மா யாருனு எல்லாம் கேட்டுட்டு சூர்யாவ புடிச்சிருக்கானு கேட்டாங்க... அவளும் வெட்கபட்டுட்டே புடிச்சிருக்குனு சொல்லி அவனை ஒருவருஷமா ஒன் சைடா லவ் பண்ணுறதாவும் சொன்னா... வீட்டுல பேசிட்டு பொண்ணு பார்க்க வரோம்னு சொல்லி அவளை அனுப்பி விட்டாங்க...

சந்தோஷ், தீபனாக்கு ஃபோட்டோ ஷூட் எல்லாம் முடிஞ்சதும் சாப்பிட்டுட்டு சந்தோஷ் தாத்தா, பாட்டி வீட்டுக்கு போய்ட்டாங்க...

அங்க அவங்களுக்கு பண்ண வேண்டிய சடங்கு எல்லாம் முடிஞ்சதும் அர்ஜுன் வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்க...

அங்கயே அவங்க முதலிரவு முடிஞ்சதும் இரண்டு நாள் அர்ஜுன் வீட்டுலயே தங்கிட்டு சந்தோஷ் தீபனாவ அவன் வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டான்...

சந்தோஷ் சென்னைலயும் மத்த எல்லாரும் கோயம்பத்தூர்லயும் இருக்குறது கஷ்டமா இருக்குறதால சந்தீப் அவன் பிஸ்னஸ்ஸை சென்னைக்கு மாத்துறதுக்கு தேவையான எல்லாத்தையும் பண்ணிட்டு இருந்தான்...

சூர்யாக்கு அனன்யாவ பொண்ணு கேட்டு போய் அவங்க வீட்டுல சம்மதம் சொன்னதும் அவங்க கல்யாணத்தை தன்ஷி வளைகாப்புக்கு அப்பறம் வச்சிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க...

இதுக்கு இடைல ரிஷ்வந்த், மித்ராக்கு அழகான பெண் குழந்தை பிறந்துருந்தது...

அப்படியே நாட்கள் வேகமா போக தன்ஷிக்கு ஏழாவது மாசம் ஆரம்பிச்சதும் தஞ்சாவூர்ல இளமாறன் வீட்டுல வளைகாப்பு ஃபன்க்ஷன் வச்சிருந்தாங்க...

சொந்தபந்தம் ஊர்மக்கள் முன்னாடி தன்ஷிய ஒற்றை சோஃபால உட்கார வச்சி இளமாறன் அவ கழுத்துல மாலை போட்டதும் மகாலெட்சுமி முதல்ல தன் பேத்தி தன்ஷிக்கு வேம்பு காப்பு, வெள்ளி காப்பு போட்டு சந்தனம், குங்குமம் வச்சி அர்ச்சதை தூவி ஆசிர்வாதம் பண்ணாங்க...

அப்பறம் இளமாறனையும் அதே போல பண்ண சொல்லிட்டு மத்த பெண்கள் எல்லாரும் தன்ஷிக்கு சந்தனம், குங்குமம் வச்சி கண்ணாடி வளையல் போட்டு ஆசிர்வாதம் பண்ணிட்டு போனாங்க...

அப்பறம் எல்லாருக்கும் ஏழு வகையான சாப்பாடு போட்டு அனுப்பி வச்சாங்க...

எல்லாம் முடிஞ்சதும் தன்ஷி அவ ரூம்க்கு போய் அவ திங்க்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு இருந்தா...

இளமாறன் : தன்ஷி நீ ஏன் இதெல்லாம் பண்ணுற நான் எடுத்து வைக்க மாட்டனா...

தன்ஷிகா : 😏😏😏 எனக்கு கை இருக்கு யார் ஹெல்ப்பும் எனக்கு வேண்டாம்...

இளமாறன் : ஏன் மா என்ன கோவம்...

தன்ஷிகா : செல்லம் நம்ம அப்பாவோட டூடூடூ விட்டுடலாம் அப்பா பேட் பாய் ( வயித்துல கை வச்சி சொன்னா)

இளமாறன் : அப்பா மேல என்னடா கோவம் நீங்க சொல்லுங்க ( தன்ஷி வயிறு கிட்ட குனிஞ்சி கேட்டான்)

தன்ஷிகா : அப்பா நம்மள தனியா விட்டுட்டு சென்னை போறாங்கள அதனால கோவம்னு சொல்லுங்க டா...

இளமாறன் : ( நிமிர்ந்து தன்ஷிய பார்த்தான்) புரிஞ்சிக்க தன்ஷி மா இப்போ அந்த ஆபிஸ் மொத்தத்துக்கும் நாம தான பொறுப்பு அப்போ நாம தான எல்லாத்தையும் சரியா பார்த்துக்கனும்...

தன்ஷிகா : புரியுதுங்க ஆனா உங்களை பார்க்காம நாங்க எப்படி இருப்போம்...

இளமாறன் : வாரத்துல இரண்டு நாள் கட்டாயம் வந்துட்டு போவேன் டா நீ உங்க அம்மா, அப்பா வீட்டுல பத்திரமா இரு...

தன்ஷிகா : ம்ம்ம்...

இளமாறன் : மிஸ் யூ தன்ஷி மா ( அவ உதட்டுல முத்தம் குடுத்தான்)  உன்னையும் மிஸ் பண்ணுவேன் செல்லம் ( குனிஞ்சி வயித்துல முத்தம் குடுத்தான்)

அப்பறம் நல்ல நேரம் பார்த்து தன்ஷிய அவ வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்க...

தொடரும்...

# Sandhiya.