எனக்குள் உறைந்தவளே - இறுதி பாகம்

மூன்று வருடத்திற்க்கு பிறகு,

வருசா வருசம் தஞ்சாவூர்ல நடக்குற அதே சித்திரை திருவிழால அந்த ஊரே கொண்டாட்டமா இருந்தது...

தன்ஷிகாவும் அனன்யாவும் மதிய சமையல் சமைச்சிட்டு இருந்தாங்க...

தன்ஷிகா : ( ஆப்பிள் கட் பண்ணி ஜூஸ் போட்டா) இந்தா அனு போய் அந்த மேடத்து கிட்ட குடு...

அனன்யா : அக்கா பாவம் பாப்பா ஏன் இப்படி சொல்லுறீங்க...

தன்ஷிகா : எல்லாரும் சேர்ந்து அவளுக்கு ஓவர் செல்லம் குடுக்குறீங்க...

அனன்யா : சரி வேகமா பேசாதீங்க அவளுக்கு கேட்டுட போகுது ( ஜூஸ் எடுத்துட்டு வெளில போனா)

அங்க சோஃபால இளா, தன்ஷியோட மூனு வயசு பெண் குழந்தை இஷிகா கால நீட்டி போட்டு உட்கார்ந்து இருந்தா சூர்யா அவ கால அமுக்கி விட்டுட்டு இருந்தான்... அவங்களுக்கு பக்கத்துலயே சூர்யா அனன்யாவோட ஆறு மாச பெண் குழந்தை ஆதிரா தூங்கிட்டு இருந்தது...

அனன்யா : பாப்பா இந்தா டா ஜூஸ்...

இஷிகா : 😁 தேங்க்ஸ் சித்தி ( வாங்கி குடிச்சா) ம்ம் சூப்பர் 😝 ( சப்பு கொட்டி குடிச்சா)

இளமாறன் : ( வாழை இலை அறுத்துட்டு வந்தான்) சூர்யா ஏன்டா  பாப்பா கால அமுக்கிட்டு இருக்க...

சூர்யா : பாப்பா காலைல எவ்ளோ கஷ்டப்பட்டு பால் குடம் தூக்குனா கால் வலிக்கும்ல அண்ணா...

தன்ஷிகா : யாரு அந்த மேடமா தூக்கிட்டு நடந்தா, நீங்க தான அவளை தோள்ல தூக்கி வச்சிட்டு பால் குடத்தையும் புடிச்சிட்டு நடந்தீங்க...

சூர்யா : இருந்தாலும் பாப்பா பாவம் தான அண்ணி மா...

தன்ஷிகா : இவ பாவமா? எங்கயாவது நாம பேசுறதை காது குடுத்து கேட்குறாளா பாருங்க...

இஷிகா : தூங்கிட்டு இருந்த ஆதிரா கைய புடிச்சி விளையாடிட்டு இருந்தா...

இளமாறன் : மாசமா இருக்கும் போது ஏன்டி இப்படி மூச்சு வாங்க பேசிட்டு இருக்க, போ போய் அமைதியா உட்காரு...

தன்ஷிகா : ( 5 மாத கற்பமா இருக்கா) சரி சமைச்சி முடிச்சாச்சி எல்லாத்தையும் கொண்டு வந்து ஹால்ல வைங்க ( கால நீட்டி கீழ உட்கார்ந்துட்டா)

கண்ணன் : (பஞ்சு மிட்டாய், பலூனோட உள்ள வந்தாரு) அம்மு குட்டி...

இஷிகா : ஐஐஐ தாத்தா ( சோஃபால இருந்து குதிச்சி ஓடுனா)

கண்ணன் : அம்மு மா இந்தாங்க பஞ்சு மிட்டாய் சாப்பிடுங்க...

இஷிகா : தாத்தா பாப்பாக்கு வாங்கலையா...

கண்ணன் : பாப்பா இப்போ இதெல்லாம் சாப்பிட கூடாது டா நீங்க சாப்பிடுங்க...

இஷிகா : சரி ( பஞ்சு மிட்டாய் வாங்கிட்டு ஓடிட்டா)

கண்ணன் : தன்ஷி மா அம்மு சாப்பிட்டாளா...

தன்ஷிகா : முன்னாடியே குடுத்துட்டேன் மாமா நீங்க உட்காருங்க...

இளமாறன், சூர்யா : சாப்பாடு எல்லாத்தையும் கொண்டு வந்து வச்சாங்க...

அனன்யா : வாழைஇலை போட்டு பரிமாற ஆரம்பிச்சா...

அப்பறம் எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டு முடிச்ச நேரம் ஷ்யாம், பார்வதி, சந்தீப், ஜெனி அவங்க பசங்க சந்தோஷ், தீபனா அவங்க பொண்ணு எல்லாரும் வந்தாங்க...

இஷிகா : ஐஐஐ எல்லாரும் வந்துட்டாங்க ( குதிச்சிகிட்டு அவங்க கிட்ட ஓடுனா)

சுதர்சன் : இஷிகா ( ஓடி வந்து அவ கைய புடிச்சான்)

இஷிகா : வா போய் விளையாடலாம் ( சுதர்சன் அவன் தங்கை சுபத்ரா அப்பறம் சந்தோஷ், தீபனாவோட பொண்ணு தியாவ அழைச்சிட்டு வெளில போய்ட்டா)

தன்ஷிகா : காலைல வர சொன்னா மதியம் வறீங்க உங்களை எல்லாம் என்ன பண்ணுறது...

ஜெனி : இவர் தான் ஆபிஸ், மீட்டிங்னு லேட் பண்ணிட்டாரு...

சந்தீப் : ஆமா என்னால தான் லேட் எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க, ஆனா லேட்டா வந்தாலும் மூனு நாள் தங்குறா மாதிரி தான் வந்துருக்கோம்...

இளமாறன் : சரி டா மச்சான் விடு வாங்க சாப்பிடலாம்...

ஜெனி : வரும் போது தமிழ்மாறன் மாமா வீட்டுக்கு போய்ட்டு வந்தோம் அண்ணா, அவங்க எங்களை சாப்பிட வச்சி தான் அனுப்புனாங்க...

இளமாறன் : அப்போ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, ஈவ்னிங் கோவில்க்கு போகனும்...

கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து குளிச்சிட்டு கிளம்பி நேரா தமிழ்மாறன் வீட்டுக்கு போய் அங்க இருந்து எல்லாரும் ஒன்னா கோவில்க்கு போனாங்க...

கோவில்க்கு போய் தீமிதி முடிஞ்சதும் சாமி கும்பிட்டுட்டு பசங்க கேட்குற எல்லா பொருளையும் வாங்கி குடுத்து வீட்டுக்கு அழைச்சிட்டு போனாங்க...

மறுநாள் ஊருக்குள்ள சாமி ஊர்வலம் முடிஞ்சதும் மஞ்சள் தண்ணி விளையாட்டும் சூப்பரா நடந்தது...

தமிழ்மாறன் வீட்டுல தான் எல்லாரும் இருந்தாங்க...

ஒருபக்கம் தேவேந்திரன், மகாலெட்சுமி, சீதா, ராஜன், மாலதி, நட்ராஜ், அருணானு பெரியவங்க எல்லாரும் ஒன்னா திண்ணைல உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க...

இன்னொரு பக்கம் தமிழ்மாறன், உதய், அர்ஜுன், கதிரேசன், ஷ்யாம் அவங்களோட மனைவிகள் மிருனாழினி, கனிமொழி, அஞ்சலி, நிவேதா, பார்வதி எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிச்சிட்டு இருந்தாங்க...

அப்பறம் இப்போ உள்ள ஜோடிகள் எல்லாரும் அவங்க குழந்தைகளோட சேர்ந்து அவங்களும் குழந்தையா மாறி மஞ்சள் தண்ணி ஊத்தி விளையாடிட்டு இருந்தாங்க...

இப்படி நான்கு தலைமுறைகளும் ஒரே இடத்துல ஒன்னா சந்தோஷமா மன நிறைவோட இருந்தாங்க...

முற்றும்.

# Sandhiya.