மைவிழி பார்வையிலே - சிறு கதை
வணக்கம் நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க... நான் " மைவிழி பார்வையிலே " ஸ்டோரி ரைட்டர் சந்தியா...
நான் கதை எழுதி ஒரு வருடத்திற்க்கு மேல ஆகுது, அதுக்குள்ள என்னை யாரும் மறந்திருக்க மாட்டீங்கனு நம்பி ஒரு குட்டி கதை போடுறேன் படிச்சிட்டு லைக்ஸ் & கமெண்ட் பண்ணிடுங்க...
ஹீரோ - கௌதம்
ஹீரோயின் - கயல்விழி
( இரண்டு பேரும் எதிர் எதிர் வீட்டுல தான் இருக்காங்க... )
கார்த்திக் - கௌதமோட மாமா பையன் அப்பறம் கயல்க்கு உடன்பிறவா சகோதரன்... கயல் வீட்டுக்கு பக்கத்துல தான் இவனோட வீடு இருக்கு...
மீரா - கௌதமோட இரட்டை சகோதரி...
( வாங்க கதைக்குள்ள போகலாம்)
கயல் : அவ வீட்டு மாடில நின்னு எதிர் வீட்டையே பார்த்துட்டு இருந்தா 😐😐😐
கார்த்திக் : உடற்பயிற்சி பண்ண மேல வந்தவன் கயல பார்த்துட்டு இரண்டு வீட்டுக்கும் இடைல இருந்த குட்டி மாடி சுவரை தாண்டி அவ கிட்ட வந்தான்...
கயல் : அவன் வந்ததையே கவனிக்காம எதிர் வீட்டையே பார்த்துட்டு இருந்தா...
கார்த்திக் : கயல்...
கயல் : 😷😷😷
கார்த்திக் : அம்மாடி கயல் நான் கூப்பிடுறது கேட்குதா இல்லயா...
கயல் : 😷😷😷
கார்த்திக் : அவ தலைல கொட்டுனான்...
கயல் : ஆஆஆ 😨😨😨 எவன் டா அது ( தலைய தேச்சிட்டே பின்னாடி திரும்புனா)
கார்த்திக் : 😎 கைய கட்டிகிட்டு அவளை பார்த்துட்டு இருந்தான்...
கயல் : 😁😁😁 கார்த்தி அண்ணா நீயா! என்ன இந்த பக்கம்...
கார்த்திக் : நான் வரது இருக்கட்டும் நீ என்ன எங்க அத்தை வீட்டையே வச்ச கண் எடுக்காம பார்க்குற...
கயல் : ச்ச ச்ச நான் ஏன் அங்க பார்க்குறேன்...
கார்த்திக் : வேற யாரை பார்க்குற...
கயல் : 😳😳😳 ( என்ன சொல்லுறது! அவசரத்துக்கு பொய் கூட வர மாட்டுது)
கார்த்திக் : என்ன முழிக்குற பதில் சொல்லு...
கயல் : பால் காரர் வராரானு பார்த்துட்டு இருக்கேன் அண்ணா...
கார்த்திக் : அவர் வந்தா வீட்டுக்கே வந்து குடுப்பாரு நீ ஏன் பார்த்துட்டு இருக்க...
கயல் : 😁😁😁 சும்மா தான் அண்ணா... ஆமா நீ ஏன் காலைலயே மாடிக்கு வந்த...
கார்த்திக் : உடற்பயிற்சி பண்ண வந்தேன் ( எதிர் வீட்டை பார்த்துட்டே சொன்னான்... அங்க மீரா துணி காய வச்சிட்டு இருந்தா)
கயல் : ( கார்த்திக், மீராவ மாறி மாறி பார்த்தா) ஓஹோ புரிஞ்சிடுச்சி அண்ணா, நீ எதுக்கு அதிசயமா உடற்பயிற்சி பண்ண வந்துருக்கனு...
கார்த்திக் : என்ன புரிஞ்சது...
கயல் : அத்தை பொண்ண சைட் அடிக்க வந்துட்டு உடற்பயிற்சி பண்ண வந்தேனு சொன்னா நான் நம்பிடுவனா...
கார்த்திக் : நான் என் அத்தை பொண்ண சைட் அடிக்குறது தப்பு இல்ல மா நீ என் அத்தை பையனை சைட் அடிக்குறது தான் ரொம்ப தப்பு...
கயல் : ( 😨😨😨 அச்சோ இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது) இல்ல அண்ணா நான் ஏன் அவங்களை பார்க்க போறேன், நான் பால் காரர் வராரானு பார்த்தேன்...
கார்த்திக் : பால் காரர் வராரானு ரோட்டை பார்க்காம ஏன் எதிர் வீட்டை பார்த்துட்டு நிக்குற...
கயல் : 😳😳😳 அது அது...
கார்த்திக் : நீ எதுவும் சொல்ல வேண்டாம் போய் சீக்கிரம் கிளம்பு, இன்னைக்கு தான உனக்கு முதல் நாள் காலேஜ் அழகா ரெடியாகி வா...
கயல் : ஓகே அண்ணா ( எப்படியோ தப்பிச்சா போதும்னு அவளும் ஓடிட்டா)
கார்த்திக் : அவனும் காலேஜ் கிளம்ப போய்ட்டான்...
( கௌதம், கார்த்திக், மீரா மூனு பேரும் M.Sc முதலாம் ஆண்டு படிக்க போறாங்க, கயல் அதே காலேஜ்ல B.Com ஜாயின் பண்ணிருக்கா)
கயல் : முதல் நாள் காலேஜ்ங்குறதால அழகா ரெடியாகி கார்த்திக் வீட்டுக்கு போனா...
கார்த்திக் : அப்போ தான் சாப்பிட்டுட்டு இருந்தான்...
கயல் : அண்ணா என்ன இப்போ தான் சாப்பிடுற, முதல் நாள் காலேஜ்க்கு சீக்கிரம் போகனும்னு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல அண்ணா உனக்கு...
கார்த்திக் : உனக்கு தான் அது புது காலேஜ், ஆனா நான் அங்க மூனு வருஷம் படிச்சிருக்கேன் அதனால நான் எப்போ வேணாலும் போவேன்...
கயல் : உன்னை நம்பி உன் கூட வரலாம்னு வந்தேன் பாரு என்னை சொல்லனும், நான் அப்பாவோடயே போறேன் போ ( வெளில போக போன)
கார்த்திக் : ஏய் வாலு இரு சாப்பிட்டு முடிச்சிட்டேன் சேர்ந்தே போகலாம்...
கயல் : 😎 ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்...
கயல் வெளில வந்து நிக்கவும் கார்த்திக் அவன் பைக் எடுத்துட்டு வந்தான்...
அதே நேரம் கௌதம், மீராவும் காலேஜ் போறதுக்காக வெளில வந்தாங்க, கௌதம் அவன் பைக் எடுத்துட்டு வந்தான்...
கௌதம் : கார்த்தி யாரு டா இந்த குட்டி பாப்பா...
( கௌதம் ஃபேமிலி இப்போ தான் இங்க புது வீடு கட்டி குடி வந்துருக்காங்க, அதனால அக்கம், பக்கம் உள்ளவங்களை அதிகம் தெரியாது)
கார்த்திக் பேசுறதுக்கு முன்னாடி கயல் பேச ஆரம்பிச்சா...
கயல் : ஹலோ நான் ஒன்னும் குட்டி பாப்பா இல்ல நானும் ஸ்கூல் முடிச்சி இப்போ காலேஜ் ஜாயின் பண்ணிட்டேன் 😤😤😤
கௌதம் : ஓஓஓ சரிங்க குள்ளச்சி தெரியாம குட்டி பாப்பானு சொல்லிட்டேன்...
கயல் : ஹலோ திரும்ப திரும்ப என் ஹைட் பத்தி பேசாதீங்க... தென்னைமர உயரத்துல இருக்குற உங்களுக்கு யாரை பார்த்தாலும் குள்ளமா தான் தெரியும் அதுக்காக என்னை குள்ளச்சினு சொல்லாதீங்க 😏😏😏
கௌதம் : அப்போ நீ குள்ளச்சி இல்ல அதான...
கயல் : ஆமா நார்மலா கேர்ள்ஸ் எல்லாரும் இருக்குற ஹைட்ல தான் நான் இருக்கேன் சோ குள்ளச்சினு சொல்லாதீங்க..
கௌதம் : அப்போ ஏன் என் தங்கச்சி உன்னை விட ஹைட்டா இருக்கா? அவளும் பொண்ணு தான...
கயல் : தென்னை மரத்தோட தங்கச்சி பனைமரம் உயரம் இருக்குறதுல ஒன்னும் தப்பு இல்ல, அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது...
கார்த்திக் : 😂😂😂 ( மீராவ பனைமரம்னு சொல்லவும் கார்த்திக் சிரிச்சிட்டான் )
மீரா : 😡😡😡 அவனை பார்த்து முறைச்சா...
கார்த்திக் : 😷😷😷 கயல் காலேஜ்க்கு டைம் ஆகுது வா போலாம்...
கயல் : போலாம் அண்ணா 😏😏😏 ( கௌதம்ம பார்த்துட்டே கார்த்திக் பைக்ல ஏறுனா )
கௌதம் : போ டி குள்ளச்சி...
கயல் : போ டா தென்னை மரம் 😏
இரண்டு பேரும் முறைச்சிக்கிட்டே காலேஜ்க்கும் போய்ட்டாங்க...
தொடரும்...
இதோட தொடர்ச்சி நாளைக்கு போடுறேன் ஃப்ரண்ட்ஸ் ரொம்ப நாள்க்கு அப்பறம் டைப் பண்ணுறதால டைப் பண்ண கஷ்டமா இருக்கு...
லைக்ஸ் & கமெண்ட் வந்தா கண்டினியூ பண்ணுவேன் இல்லனா இதோட ஸ்டாப் பண்ணிடுறேன்...
# Sandhiya
2 Comments
Eppavum pola namma maivizhi parvayiley spr sis🤩yen neega ivloo days haa story podalaa... Naa romba miss pannen unga story yaa😌oru new story podunga sis 🖤 plzzzzz🙏
ReplyDeleteHii writer rae..romba naal kalichu poduriga welcome welcome 🤩🤩..kayal Gowtham Karthik Meera ellam kekurapa munadi pottathu thaa niyabakam vanthathu.. athuvum especially kullachi thenai maram sonna pa lam munnadi padichathu matum thaa niyabakam varuthu🔥🔥🔥🔥😍😍...
ReplyDelete