ரணமாய் -  24

திலீப் வீட்டிற்குள் நுழைந்த போது கூடத்தில் சாரு இல்லை  அவளை தேடி கொண்டு செல்ல குழந்தையுடன் எதிரே வந்தாள்...

"ஏ அஷ்வா எழுந்தாச்சா அப்பா கிட்ட வாங்க..."என்று குழந்தைய நோக்கி கை நீட்ட அந்த குழந்தையும் அவனிடம் தாவியது

"பாத்தியா ரெண்டு நாள்ல அம்மாவ மறந்துட்டல நீ போ அம்மா பேச மாட்டேன்..."என்று செல்ல கோவத்துடன் திரும்பி கொள்ள திலீப் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்

சாரு திரும்பி அவனை முறைத்திட "நா இல்ல பையன் தான் அம்மா கோவமா இருக்காங்க எனக்கு பதில நீங்க அம்மாவுக்கு முத்தம் கொடுத்து சமாதானம் செய்ங்கனு சொன்னான் அது தான் கொடுத்தேன் நா‌ கொடுக்கலப்பா  நான் கொடுக்கிறதா இருந்தா அங்கேயா கொடுத்து இருப்பேன்..."என அவள் உதட்டை பார்த்தவாறு சொல்ல

"திலீப்..."என்று சிணுங்கினாள்

திலீப் சிரித்து கொண்டே "சரி இந்தா குழந்தைய பிடி நா போய் பால் எடுத்துட்டு வரேன்..."என்று குழந்தையை கொடுத்து விட்டு சமையலறைக்கு சென்று பால் காய்ச்சி எடுத்த வந்து சாரு அருகில் அமர்ந்து குழந்தையை வாங்கி அவனே பாலை புகட்ட சாரு அவன் தோளில் சாய்ந்தாள்...

"I love you திலீப்..."

"ம்ம்ம்..."

சாரு அவன் முகத்தை பார்த்து "நீங்களும் love you சொல்ல மாட்டீங்களா..."என எதிர்பார்ப்புடன் பார்க்க...

"என் பொண்டாட்டிக்கு சொல்லாம வேற யார் கிட்ட சொல்ல போறேன் எனக்குள்ள அவ்ளோ காதல் இருக்கு ஆனா நா இப்ப சொல்ல மாட்டேன் அதுக்கான நேரம் வரும் அப்போ சொல்லுவேன் காதலை சொல்லாததால காதலிக்காம இருக்க மாட்டேன் உருகி உருகி காதலிப்பேன் நீ சலிக்கிற அளவுக்கு அய்யோ போதும்னு கதறுவ..."

அவன் மேற்கையை இறுக்கி தோளில் சாய்த்து "அதெல்லாம் கதற மாட்டேன்..."என்று சிணுங்கினாள் 

"அப்படியா..."

"ம்ம்ம்..."

"அப்புறம்..."என ‌இழுக்க...

"என்ன சொல்லுங்க..."

"அது வந்து நா உன் கிட்ட..."என திணற...

"நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்க ஆனா என் மேல கோவமானு மட்டும் கேட்காதீங்க..."

திலீப் திருதிருவென முழிக்க...

"So that's what you came to say..."

"Yeah..."

சாரு அவளை முறைத்தாள்...

"Hey sorry again அதையே சொல்றேன்னு தப்பி நினைக்காத சாரு என்னால மறுபடியும் உன்னையே இழக்க முடியாது ஏற்கனவே உன்னை இழந்து எவ்ளோ தவிச்சேன்னு எனக்கு தான் தெரியும் அது தக்க வச்சுக்க எவ்ளோ போராடுனேன்னு எனக்கு தான் தெரியும் என்னை விட்டு போயிட்டா என்னால தாங்கிக்க முடியாது சாரு நா எல்லாத்தையும் சொல்றேன் நீ எனக்கு கிடைக்கனும்னு நா தப்பு பண்ணி இருக்கேன் நீ என்னைய மன்னிக்கனும் அது தான் எனக்கு வேணும்..."என்று அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து "காலேஜ்ல உன்ன முத தடவ பாத்தப்போவே எனக்கு உன்னைய பிடிச்சு போச்சு அதனால தான் நானும் பிரதீப் ஹ வலுக்கட்டாயமா இழுத்துட்டு வந்து உன் கிட்ட பழகி நண்பனானேன் சொல்ல போனா கண்டதும் காதல் உன்ன காதலிச்சதால பிரதீப் தான் ரொம்ப கஷ்டப்பட்டான் அவனை பாடா படுத்தி எடுத்துட்டேன் நாலு வருச கல்லூரி வாழ்க்கையில நா நல்லா படிச்சேனோ இல்லையோ உன்னையே நல்லா காதலிச்சேன் பிரதீப் கடுப்புல என்ன அசிங்க அசிங்கமா பேசுவான் அது எல்லாம் என் காதுல விழாது நா தான் காதல் மயக்கதுல இருக்கேனே எப்படி விழும் பிரதீப் என்னைய திட்டுனாலும் அவன் உன் கிட்ட காதலை சொல்ல சொல்லி கட்டாயப்படுத்துனான் எனக்குள்ள ஒரு பயம் ஒரு நண்பனா நீ என் கிட்ட நல்லா பழகுன நா என் காதலை சொல்ல போய் நீ என்னைய விட்டு விலகிட்டா என்ன பண்றது அந்த யோசனை தான் அப்படி எல்லாம் எதுவும் நடக்காது டா போய் முத சொல்லுனு பிரதீப் சொன்னத அப்பவே கேட்டு இருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது அப்போ தான் பிரதீப்பும் அனிதாவும் காதலிச்சாங்க எனக்கும் அதிர்ச்சி தான் எப்பவும் பிரதீப்பும் தாரணியும் தான் சண்டை போட்டுட்டு இருப்பாங்க நானும் கூட அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு wave இருக்குமோனு நினைச்சேன் ஆனா பிரதீப் திடீர்னு அனிதாவ காதலிக்கிறேன் னுசொல்லிட்டான்..."என்று பேச்சை நிறுத்து ஒரு நிமிடம் யோசித்து "campus interview select ஆகி நீயும் தாரணியும் கோயம்புத்தூர் போயிட்டீங்க என்னால் தான் interview ல கலந்துக்க முடியல வெளிய தேடுனேன் ரொம்ப அலைய விடல வேலையும் கிடைச்சுது பிரதீப்பும் அவங்க அப்பா business னு போயிட்டான் சுத்தமா தொடர்பே இல்லாம போச்சு நம்ம எல்லாருக்கும் அப்போ தான் வேலை விசயமா கோயம்புத்தூர் வந்தப்போ எதேச்சையா உன்னைய பாத்தேன் உன்ன  follow பண்ணேன் உன் office ஹ கண்டுபிடிச்சேன் காலேஜ்ல இருந்த மாதிரியே அப்பவும் அந்த பயம் அந்த பயம் தான் உன்னையே பாத்ததும் பேச கூட விடல உனக்கு தெரியாமலேயே உன்னை follow பண்ணேன் அப்போ தான்..."என்று பேச்சை நிறுத்த அவன் முகம் வாடி போய் இருந்தது உள்ளுக்குள் ஒரு பயம் படர்ந்தது ஏன் என்று புரியாமலே கலங்கிய விழியை துடைத்து குரல் நடுக்கத்துடன் "என்னால இப்ப கூட நினைச்சு பாக்கும் போது உயிரே போற மாதிரி இருக்கு சாரு அப்போ இருந்த அதே வலி..."என்று தன் நெஞ்சை தொட்டு "இப்பவும் உணர்றேன் தைரியத்தை எங்கே இருந்தோ பிடிச்சு இழுத்துட்டு வந்து வச்சுக்கிட்டு உன் கிட்ட என் காதலை சொல்ல வந்தேன் அப்போ தான் நீ நீ நீ அந்த அஸ்வின் கூட..."என்று அவன் கையில் இருந்த அவள் கையை இறுக்கூ பிடித்த நெற்றில் வைத்து உடைந்து அழுதான்...

ஏனோ அவன் அழுவதை பார்த்த அவளுக்கு கண் கலங்கியது...

"திலீப்..."

நிமிர்ந்து பார்த்து தன் இரு தோளிலும் கண்ணை துடைத்து "சத்தியமா முடியல சாரு என்னால என்னையா இன்னொருத்தன் தூண் பாக்கவே முடியல அந்த நேரம் அப்படியே வர்ற வண்டில் விழந்துடலாம்னு தோணுச்சு..."

"ஏங்க..."என அவள் பதற

"அப்படி பண்ண முடியல சாரு அப்போ உன் கூட என்னால வாழ முடியாதே உள்ளுக்குள்ள ஏதோ ஒரு நப்பாசை நீ எனக்கு கிடைப்பனு அது தான் என் முடிவ மாத்திக்கிட்டேன் அப்போ தான் எனக்கு புரிஞ்சுது கண்டிப்பா நீ இல்லாம வாழ முடியாதுனு அப்ப தான் முடிவு பண்ணேன் எதாவது ஒரு வழியில‌ வாய்ப்பு கிடைக்கும் ஆனா அதுக்காக பாதை எல்லாம் அடைச்ச மாதிரி இருந்துச்சு என்ன பண்றதுன்னு புரியாமல் இருந்தப்போ அவ்ளோ எனக்கு நீ இல்லனு கூட நினைச்சேன் உன்னை விட்டு போகவும் முடியல நரகவேதனை அஸ்வின் கிட்ட பேசலாம்னு தோணுச்சு அவனை பின்தொடர்ந்தேன் அஸ்வின் மேல் எனக்கு கோவம் இருந்துச்சு அந்த கோவம் கொலை வெறியா மாறுச்சு அந்த நேரத்துல தான் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல சிக்குனான் சத்தியமா சொல்றேன் சாரு அவனை சொல்லனும்னு எண்ணம் எனக்கு துளி கூட இல்ல உன் கிட்ட இருந்து பிரிக்கனும் என் அவசர புத்தியால என்ன பண்றதுன்னு தெரியாமல் புத்தி கெட்டு போய் நா தான் அவனை accident பண்ணேன்..."என சொல்ல நினைத்ததை பேச்சை நிறுத்தாமல் ஒரு வழியாக சொல்லி தன் பாரத்தை இறக்கியது போல் பெருமூச்சு விட்டு அவள் முகத்தை பார்த்தான்...

சாரு அசையாமல் அமர்ந்திருந்தாள்..

அவள் முன் மண்டியிட்டு இரு கரங்களை பிடித்து "சாரும்மா ப்ளிஸ் டா மா எதாவது பேசு மா என்‌ மேல கோவப்படு அடி திட்டு ஆனா இப்படி பேசாம மௌனமா இருக்காத மா எனக்கே என் மேல வெறுப்பா வருது செஞ்ச பாவத்தை இறக்கி வைக்க முடியாம சுமந்துக்கிட்டு செத்துக்கிட்டு இருந்தேன் இப்ப உன்‌ முன்னாடி இறக்கி வச்சு இருக்கேன் நீ எந்த முடிவு எடுத்தாலும் பரவா இல்ல ஆனா என்னை விட்டு போகனும்னு‌ அந்த முடிவு மட்டும் எடுத்துறாத சாரு கூட இருந்து எவ்ளோ தண்டனை கெடுத்தாலும் அதை ஏத்துக்க தயாரா தான் இருக்கேன்..."என்று கெஞ்சி கதற தன் கையை உறுவினாள்..

வலியோடு அவளை பார்த்திட அவன் பார்வையை சந்திக்காமல் எங்கோ வெறித்து கொண்டு "அ அஸ் ப்ச் அவனை hospital ஹ admit பண்ணது..."

"நா தான் ஏதோ குருட்டு தைரியத்துல பண்ணேன் அப்படியே விட்டு போக மனசு இல்ல accident நடந்ததும் அவன் துடிச்சதை பாத்து கொலை பண்ற அளவுக்கு போயிட்டியே டா னு என் மேலே எனக்கு வெறுப்பு என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்னு hospital ல சேர்த்துட்டு போயிட்டேன் அந்த பக்கமே எட்டி பாக்கல ரெண்டு நாள் கழிச்சு மனசு கேட்காம போய் பாத்தேன் பொழச்சுட்டான் சந்தோஷமா இருந்துச்சு அதே நேரம் வருத்தமா இருந்துச்சு அவன் சாகனும்னு accident பண்ணி பொழக்கனும்னு hospital admit பண்ணி எதுக்கு இந்த வேலையனு மனசாட்சி கேவலமா பேசி காரி துப்புச்சு மனசு இல்ல வலுக்கட்டாயமாக ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கட்டும்னு நினைச்சேன் நா எதிர்ப்பார்க்காத ஒன்னு அவனுக்கு பழசு மறந்தது தான் அவனுக்கு தானே மறந்துட்டு உனக்கு மறக்கலையே உசுர விட்டு வெறும் சடமா அந்த இருந்து கிளம்பி வந்துட்டேன் உன்ன மறுபடியும் பாக்குற வரைக்கும் நா நானாகவே இல்ல உசுரோட இருக்கவும் பிடிக்கல சாகவும் தைரியம் இல்ல உன் நினைப்ப சுமந்துக்கிட்டு வாழ முயற்சி பண்ணேன் முடியல செத்துப்போலாம்னு முடிவு பண்ணேன்..."என்றது தான் தாமதம் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்...

தொடரும்

# nancy