ரணமாய் - 26
தன் இரு சக்கர வாகனத்தில் பாதை போன போக்கில் சென்றான் திலீப்
அவன் காதை சுத்தி சாரு பேசிய வார்த்தை மட்டுமே ஒலித்தது...
"அப்போ அந்த பேரு உறுத்துது..."என மீண்டும் மீண்டும் அவன் காதுக்குள் கணீர் என்று கேட்க தன் வண்டியை நிறுத்தி ரோட்டோர மரத்தடியில் அமர்ந்தான்...
"ஏன் சாரு என்னைய நீ புரிஞ்சுக்கல நா பண்ணது தப்பு தான் இல்லனு சொல்லலேயே ஆனா நா என்ன பண்ணட்டும் நீ வேணும்னு தானே அவ்வளவும் பண்ணேன் நீயே என்னைய புரிஞ்சுக்கலைனா இவ்வளவும் செஞ்சு என்ன பிரயோஜனம் இனி நா உன் கண்ணுக்கு தப்பாவானா தானே தெரிவேன் நா நல்லது பண்ணாலும் என்னைய நம்ப மாட்டல நா எது பண்ணாலும் உனக்கு தப்பா தானே தோணும் இது எல்லாம் எங்க இருந்து தொடங்குச்சு எல்லாத்துக்கும் காரணம் நா தான் என் காதலை முன்னாடியே சொல்லி இருக்கனும் சொல்லல அப்படியே மறந்து இருக்கனும் மறக்கல சாரு வேற ஒருத்தனை காதலிக்கிறான் உன் தெரிஞ்சு ஒதுக்கி இருக்கனும் ஒதுங்கல அவங்களை பிரிக்கனும்னு நினைச்ச பிரிச்ச சாரு கல்யாணம் பண்ணனும்னு நினைச்ச பண்ண உண்மைய மறைக்கனும்னு நினைச்ச மறைக்க வேண்டியது தானே தான் ஏன் டா குழி தோண்டி புதைச்ச உண்மைய மறுபடியும் தோண்டி எடுத்து மாட்டிக்கிட்டு முழிக்கிற என் கூட வாழ்ந்த வாழ்க்கை பொய்யா சாரு நீ என்னைய நம்பலையா என்னைய பார்த்து அப்படி ஒரு கேள்விய கேட்டதுக்கு என்னை கொன்றுக்கலாம் நீ என்னைய சந்தேகப்பட்டு இருந்தாலும் பரவா இல்லையே உன்னைய நீயே அசிங்கப்படுத்திக்கிறீயே டி..."என புலம்பி கொண்டு இருந்தவனுக்கு தான் புரியல அவனை சாரு நன்றாக புரிந்து இருக்கிறாள் என்று இத்தனை வருட திருமணம் வாழ்க்கையில் அவன் அவளை நெருங்கிய போது விலகியதும் இல்ல அவளாக அவனிடம் நெருங்கியதும் இல்ல முத்தத்தை அவன் தான் கொடுப்பான் அணைப்பை அவன் தான் கொடுப்பான் கூடலையும் அவன் தான் தொடங்குவான் அவளாக முத்தத்தை கொடுத்தது இல்ல கட்டி அணைத்தது இல்ல கூடலுக்காக நெருங்கியதும் இல்ல ஆனா இன்று அணைத்துப் அவள் தானே செய்தாள் முத்தமிட்டதும் அவள் தான் கட்டி அணைத்ததும் அவள் தான் அவனை நெருங்கி அழகிய கூடலை தொடங்கியதும் அவள் தான் அதை அவன் உணர்ந்திருந்தால் அவளை விட்டு வந்து இருக்க மாட்டான் அவள் உண்மைய அறியும் முன்னே அவனுடன் ஒன்றாக கலந்தாள்
அவள் தப்பு செய்தான் என்பதை விட அவள் தன்னை தவறாக நினைத்து விட்டாளோ என்ற நினைவு தான் அவனை மிகவும் வாட்டியது...
நேரம் கடந்ததே தவிர அவன் வரவில்லை...
அவன் கோபத்தில் போனதாக நினைத்தாள் சாரு ஆனால் அவன் கோபத்தில் போகவில்லை அவளை எதிர்கொள்ள முடியாமல் தான் சென்றான்...
மாலை கடந்து இரவும் வந்தது சாருவுக்கு பயம் தொற்றி கொண்டது குழந்தையை அணைத்து கொண்டு வாசலையே வெறித்து பார்த்தது அழுகை முட்டி கொண்டு வந்தது அடங்கி கொண்டு திலீப் வருகையைக்காக காத்திருந்தாள் அவன் வரவில்லை இன்றைக்கு பாரு மணியும் என்னவோ சதி செய்வது போல் வேகமாக எடுத்து ஓடியது பொறுக்க முடியாமல் பிரதீப்க்கு அழைத்தாள்...
அழைப்பு காத்திருப்பில் இருந்தது மீண்டும் அழைக்க எடுத்தான்
"ஹலோ..."
எதிர்முனையில் மௌனம் மட்டுமே...
"ஹலோ சாரு சாரு நா பேசுறது கேட்குதா சாரு இருக்கீயா ஹலோ ஹலோ கேட்குதா..."
விசும்பல் சத்தம் வர பதறிய பிரதீப் "சாரு என்னாச்சு மா..."
சாரு அழுது கொண்டே "அவரு இன்னும் வீட்டுக்கு வரல பிரதீப் பயமா இருக்கு கோபமா போனாரு அஸ்வத் கூட நா தனியா இருக்கேன் எனக்கு என்ன பண்றதுனு தெரியல..."
"சாரு ரிலாக்ஸ் முத அழாத என்ன நடந்துச்சுனு சொல்லு..."
சாரு நடந்தது சொல்லி "காலைலேயே போனாரு இப்ப வரைக்கும் வரல..."
"அவனுக்கு கால் பண்ணியா..."
"இல்ல..."
"ஏன்..."
"அவரு தான் என் மேல கோபமா இருக்காரே எடுக்க மாட்டாரு..."
"நீயா முடிவு பண்ணாத சாரு நீ முத அவனுக்கு கூப்டு..."
" இல்ல அவரு எடுக்க மாட்டாரு..."
"அச்சோ சாரு அவன் எடுக்குறான் எடுக்கல அத அப்புறம் பாத்துக்கலாம் நீ முத கூப்டு..."
"இல்ல எனக்கு பயமா இருக்கு பிரதீப் நீ வீட்டுக்கு வா..."
"நா அங்க வந்தா அவனை யாரு தேடுறது தாரணிய வேணும்னா வர சொல்லவா..."
" வேணாம் பிரதீப் ரெண்டு நாள் அவ கூட இருந்து இடைஞ்சலா இருந்திருக்கேன் இன்னக்கி தான் எந்த டிஸ்டர்ப் இல்லாம இருப்பா எதுக்கு தேவை இல்லாம அவளை இங்க வர சொல்லி அவ நிம்மதிய கெடுக்கனும் வேணாம் பிரதீப் நீ வா..."
"அடி செருப்பால யாரு டி இடைஞ்சல் உனக்கு அசிங்கமா எதாவது கேட்டுற போறேன் பேச்சுறா பாரு பேச்சு பைத்தியக்காரி..."என தாரணி இடையில் கத்த..
அதிர்ந்து சாரு "தாரணி எப்படி..."என இழுக்க
"மயிரு வாய மூடு டி பேசுனா கொன்றுவேன் நா அங்க வந்துட்டு தான் இருக்கேன் அஞ்சு நிமிஷத்துல நா அங்க இருப்பேன் தேவை இல்லாம பேசி என் கிட்ட நல்லா வாங்கிக்காத சொல்லிட்டேன்..."
"இல்ல தாரணி அது வந்து..."
" பேசாதனு சொன்னேன்..."
"பிரதீப்..."என சாரு பாவமாக அழைக்க...
" சாரி சாரு நீ கால் பண்ணும் போது நா அவ கிட்ட தான் பேசிட்டு இருந்தேன் அது தான் அவளுக்கும் கான்ஃபரன்ஸ் போட்டேன் நீ அமைதியா இருக்கும் போது ஏதோ சரி இல்லனு அவ உன்ன பாக்க போறேன்னு மெசேஜ் பண்ணிட்டு கிளம்பிட்டா..."
" சரி சாரு நா வந்துட்டேன் கதவை திற அப்புறம் அவன் எப்போ போனான்..."என் தாரணி கேட்க
"ஒரு 11 மணி இருக்கும்..."
"அடிப்பாவி இப்ப மணி என்னனு தெரியுமா ராத்திரி 9 மணி இப்ப தான் சொல்ற..."என கேட்டு கொண்டு தன் காரில் வந்த தாரணி ஏதோ உற்று பார்த்தவாறு சாரு வீட்டு முன் வண்டியௌ நிறுத்தி " சாரு கதவ திற..."என வண்டியில் இருந்து இறங்கி சாரு வீட்டின் வெளிப்புற கதவில் சாய்ந்து அமர்ந்திருந்தான் திலீப்...
"ஏ திலீப்..."என வேகமா அவனை நெருங்கி தோளை உலுக்க
கண் மூடி சாய்ந்திருந்த திலீம் நிமிர்ந்து "ஹான்..."என மீண்டும் கதவில் சாய்ந்து கொள்ள அவன் மேல் இருந்த வந்த வாடையில் மூக்கை பொத்தினாள்...
கதவை திறந்து வெளியே வந்த சாரு கீழே கிடந்த திலீப் பை பார்த்த பதறி "ஏங்க..."என் அவள் அமர்ந்து அவனை அணைக்க நெருங்கி அவன் மேல வந்த மது வாடையில் முகம் சுருக்கினாள்...
"குடிச்சு இருக்கான் சாரு..."
அதிர்ந்து சாரு வாயை பொத்தி கொண்டு அழுதாள்
"சாரு அழாத இவனை உள்ள கூட்டிட்டு போலாம் தூக்கு..."
இருவரும் சேர்ந்து அவனை தூக்க முயல "சாரு சாரு என் பொண்டாடி என் மேல கோவமாக்கா..."என அவன் உலரியதை கேட்டு மேலும் அழுக
கடுப்பான தாரணி "ஏ அழுகைய நிறுத்தி டி பேச்சுறதையும் பேசிட்டு இப்ப அழுதா சரி ஆகிடுமா நீ அவனை புரிஞ்சுக்குவனு தானே பண்ண எல்லாத்தையும் சொன்னான் ஆனா நீ என்ன பண்ணி வச்ச நா உன் கூட இருக்கும் போதெல்லாம் அஸ்வின் நினைச்சுகிட்டு தான் இருந்தேன்னு அவனை நினைத்து தான் குழந்தைக்கு அஸ்வத் னு பேரு வச்சேன் அந்த பேரு உன்னையே உறுத்துதுலனு கேட்டு அவனை கஷ்டப்படுத்திட்டு இப்ப அழுதா சரியாகிடுமா..."என தாரணி திட்ட அழுகையை நிறுத்தி நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்து கண்ணை அழுத்தி துடைத்து விட்டு "உன் மொபைல் கொடு..."என்க
"எதுக்கு.."
"கொடு..."
தாரணி எடுத்து கொடுக்க அதில் இருந்து பிரதீப் அழைத்தாள்..
அவன் எடுத்த உடன் "தாரணி நீ போயிட்டீயா நா திலீப் ஹ தான் தேடிட்டு இருக்கேன் சாரு கூட இரு..."
"பிரதீப் சாரு பேசுறேன்.."
"ஹான் சாரு அழாத அவனை கண்டுபிடிச்சுடலாம்..."
"பிரதீப் அவரு வந்துட்டாரு..."
"வந்துட்டானா அவன் கிட்ட கொடு மா..."
"இல்ல பிரதீப் அவரு குடிச்சுருக்காரு வீட்டு வாசல்ல இருக்காரு நிதானம் இல்ல எங்களால அவரை தூக்க முடியல கொஞ்சம் இங்க வா பிரதீப்..."
"வரேன் வரேன்..."என அழைப்பை துண்டிக்க மொபைலை அவளிடம் கொடுத்து விட்டு தள்ளி போய் சுவரில் சாய்ந்து நின்றாள்...
தொடரும்
# Nancy
0 Comments