ரணமாய் - 27


வாசலில் விழுந்து கிடந்த திலீப்பை தலையை சொரிந்து கொண்டு பார்த்தான் பிரதீப்

"இவனுக்கு இந்த பழக்கமே இல்லையே..."என்று சாருவை பார்க்காமல் தாரணியிடம் கேட்க...

அழுது கொண்டு இருந்த சாரு இன்னும் அழுகையை அதிகப்படுத்த...

"அட கிரகப்புடிச்சவனே அவளே தன்னால் தான் நினைச்சு அழுதுக்கிட்டு இருக்கா இதுல நீ வேற டா டேய்..."என் பிரதீப்பை திட்டி விட்டு சாருவை சமாதானம் செய்தாள்...

"டேய் திலீபு வா உள்ள போலாம்..."என கையை பிடிக்க...

"நா வலலா..."

"ஏதே ஒழுங்கா பேசு டா புரியல..."

"இல்லைனா மட்டும் உனக்கு புரியவா போகுது..."என்ற தாரணியை முறைத்து "சும்மா இரு தாரு..."

"லூசா பயலே அவனே போதைல உலர்றான் டா நா வரலானு சொல்றான் இது கூட புரியல உனக்கு..."என நெற்றில் அடித்து கொள்ள...

"உன் அளவுக்கு நா தெளிவு இல்ல மா உன் திறமை யாருக்கு வரும் அது சரி ஒரு குடிக்காரனோட பேச்சு இன்னொரு குடிக்காரனுக்கு தான் தெரியும்னு சொல்லுவாங்க அது உண்மை தான் உனக்கும் அந்த பழக்கம் இருக்கு அது தான் அவன் பேசுனதை சரியா மொழி மாற்றம் செஞ்சு சொல்ற..."

"உன்னோட உதவி இப்ப தேவைங்குறதுக்காக தான் நான் இப்ப பேசாம இருந்தேன் இல்ல உன்ன கொன்றுவேன் என் கிட்ட அடி வாங்காம வேலைய பாரு.."

"உண்மைய சொன்னா கோவம் வருது நான் என்ன பண்ணட்டும் குற்றம் உள்ள நெஞ்சு தான் க குறுகுறுக்கும்..."

"அடி செருப்பால பைத்தியக்கார நாயே வேலைய பாருடா எனக்குன்னு பிரண்டு வந்து வாச்சு

இருக்கா பாரு ஒருத்தன் இப்படி இன்னொருத்தன் இப்படி மாட்டிகிட்டு நாங்க தான்டா கஷ்ட போறோம் போது அவனை தூக்கிட்டு வந்து உள்ள போடுற மானத்தை வாங்குகிறான்..."

"சரி சூடாகாத நான் கூட்டிட்டு வரேன் நீ அவளை கூட்டிட்டு உள்ள போ அவ பார்க்க பார்க்க இன்னும் அதிகமா அழுதுகிட்டே இருக்கா..."

"இந்த எழவா முதலேயே செஞ்சிருக்கலாம்..."என தாரணி சாரு அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்...

"டேய் குடிகார பயலே எழுந்து வா டா..."என பிரதீப் திலீப் தோளில் அடித்து கையை பிடித்து தூக்க "ஏக்கு டா எனை அக்கிற என் பொண்டாட்டிட சொலி வைகிறேன்‌.."என போதையில் உலர 

"அச்சோ கொடுமையே ஏன் டா இப்படி இம்சை பண்ற translate பண்ற ஆளையும் உள்ள அனுப்பிட்டேன் சோதிக்காம உள்ள வா டா..."என் தூக்கி இழுத்து கொண்டு உள்ளே சென்றான்...

"ஏ என்லோன வேடு மாதிலி இக்கு..."என உலரினான்...

"கொல்லானே ச்சை என்னையும் அப்படியே பேச வைக்கிறான் பாவி சாரு இவனை ரூம்ல படுக்க வைக்கிறேன் நீயே பாத்துக்கோ சாமி என்னால் முடியாது ஏதோ புரியாத பாஸ் எல்லாம் பேசிட்டு இருக்கான் ஆனா சத்தியமா அது தமிழ் இல்ல ஆனா தமிழ் தான் கொல்றான்..."

"சாரு என் சாரு..."என்று திலீப் கத்த

"உன் சாரு தான் டா இம்சை புடுச்சவனே..."என ‌இழுத்து சென்று கட்டிலில் பொத் என்று போட்ட தொப்பென விழ தன் இடுப்பை பிடித்து கொண்டு நிற்க

பின்னால் வந்த சாரு திலீப்பை பார்த்து " அச்சோ பிரதீப் என்ன நீ..."என ‌பதறி போய் திலீப் அருகில் அமர்ந்து உடம்பை தொட்டு பார்க்க...

"அம்மாடி உன் புருஷனுக்கு எந்த சேதாரமும் இல்ல நல்லா தான் வந்து இருக்கான் என்ன போதைல வந்து இருக்கான் அவ்ளோ தான் விசயம் இனிமேலாவது உன் புருஷன தொலைக்காம பத்திரமா பாத்துக்கோ அப்புறம் என் புருஷனை காணோம்னு அழுது கிட்டு இருக்கு வந்து நிக்க கூடாது..."

அவன் பின் தலையில் தட்டிய தாரணி "ரொம்ப பேசாம கிளம்பு அவ பாத்துக்கோ தேவை இல்லாம பேசி அவளை கஷ்டப்படுத்தாதே நீ கிளம்பு வெளியே வா...."என சாருவை பார்த்து " நாங்க கிளம்புறோம் டி பாத்துக்கோ போதையில மறுபடியும் எங்கேயாவது போயிட போறான் அப்புறம் திரும்ப எங்களுக்கு கூப்டு என் புருஷனை காணோம்னு சொல்வ..."என்றவளை முறைத்து "நீங்க முத கிளம்புங்க ஒரு உதவி கேட்டதுக்கு நக்கல் பண்றீயா கொன்றுவேன் நீ முத இங்க இருந்து கிளம்பு என் புருஷனை நா பாத்துக்குறேன்..."

"அது தானே டி நானும் சொன்னேன் பைத்தியமே..."என பிரதீப்பையும் இழுத்து கொண்டு கிளம்பி விட்டாள்...

கதவை பூட்டி விட்டு குழந்தையை தூங்க வைத்து கட்டிலில் விழுந்து கிடந்த திலீப்பை பார்த்தாள்

போதையில் ஏதேதோ உலறி கொண்டு இருந்தான் ஆனால் அதில் தெரிந்தது ஒன்று மட்டுமே "என் சாரு.."என்ற வார்த்தையே மட்டும் சொல்லி கொண்டே இருந்தான்...

மது வாடையுடன் வேர்வையும் கலந்து அறை முழுவதும் நாத்தம் அடிக்க பழக்கம் இல்லாமல் முதல் முறை குடித்ததால் கட்டிலிலேயே வாந்தி அதுலேயே படுத்திருந்தான்...

அதை பாரத்தவளுக்கு கண்ணீர் மட்டுமே வந்தது முகம் சுளிப்போ அருவருப்போ வர வில்லை இது எல்லாத்துக்கு காரணமே நா தான் என்பதை புரிந்து சாரு கஷ்டப்பட்டு தூக்கி தன்னோடு அணைத்தவாறு குளியலறைக்குள் நுழைந்து அவனை சுவற்றில் சாய்த்து நிற்க வைத்து வெளியே வந்து மெத்தை விரிப்பை எடுத்து கீழே சிதறி இருந்த வாந்தியை துடைத்து சுத்தம் செய்து குளியலறைக்குள் நுழைய திலீப் கீழே விழுந்து கிடந்தான்...

"என்னங்க..."என பதறி தூக்கி அமர வைத்து ஷவரை திறந்து விட உடம்பில் தண்ணீர் பட்டதும் "மல மல வது வீட்ல மல.."என சுற்றும் முற்றும் பார்த்து திலீப் கத்த அழுதவாறே 

டி சர்டில் இருந்த வாந்தியை துடைக்க தண்ணீரில் வலிந்து ஓடியது...

உடையை கலைத்து அவனை குளிக்க வைத்து தன்னையும் சுத்தப்படுத்தி கொண்டு அவன் இடுப்பில் துண்டை கட்டி  குளியலறையை விட்டு வெளியே வந்து கூட்டி வந்து கட்டிலில் அமர வைக்க குளித்த தில் அடித்த போதை குறைய தெளிந்த முகத்துடன் அவளை பார்த்திட கண்ணில் கண்ணீர் வடிந்தவாறே இருந்தது...

உடையை எடுத்து அவனுக்கு போட்டு விட போதை குறைந்தாலும் நிற்க முடியாமல் தள்ளாடி நின்றான் அவனால் அவளை பார்க்க முடியவில்லை தலை குனிந்து இருக்க அவளும் உடை மாற்றி விட்டு  வர திலீப் கட்டிலில் அமர்ந்திருந்தான்... 

தூங்கிய தன் குழந்தையை பார்த்து கட்டிலின் மறுபுறத்தில் படுத்து கொள்ள சற்று தயக்கத்துடனே அவனும் படுத்தான்‌ இருவருக்கும் தூக்கம் எட்டாத தூரத்தில் இருந்தது 

சிறிது நேரம் கழிய சாருவின் மேல் திலீப் கை படர அதை கண்டும் காணாதது போல் இருக்க திலீப் அவளை நெருங்கி பின்னால் இருந்து அணைக்க கண்களை இறுக்க மூடி கொண்டாள்...

அவளை இன்னும் நெருங்கி அவள் காது மடலில் தன் உதடு உரச "சாரி டி.."என்றிட அவன் பிடியில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றாள்...

"ப்ளீஸ் டி..."என கெஞ்சியவாறு விடாமல் அணைத்த எலும்பு மட்டும் தான் உடைய வில்லை வலித்தது அவன் பிடியை விலக முயல..

"விலகாத டி வலிக்குது..."என்றதும் உலுக்கு அழுதாள்...

"சாரு..."என அவளை திருப்பி அவள் முகத்தை தாங்க அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள்...

"அழாத டி தப்பு தான் நா குடிச்சு தப்பு தான் தெரியாம பண்ணிட்டு மன்னிச்சுடு  நீ என்னைய விட்டு போயிடுவீயோங்குற பயம் என்னை புரிஞ்சுக்கலையோங்குற பயம் என் வாழ்க்கை முடிச்சுட்டுச்சோங்குற பயம் எல்லாம் சேர்த்து குடிக்க வைச்சுடுச்சு டி மனசுக்கு தெரியுது ஆனா புத்திக்கு எட்டலையே என்‌ மேல கோவப்படாம ஒத்த வார்த்தை என்னைய மன்னிச்சுட்டேன்னு சொல்லு டி தாங்கிக்க முடியல எனக்கு வலிக்குதுங்குறத விட நா பண்ண காரியத்தால உனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்குமோனுங்குற என் யோசனை சத்தியமா இனி குடிக்க மாட்டேன் என் பையன் மேலா சத்தியமா என் பொண்டாட்டி மெல் சத்தியமா அது இனி தொட கூட மாட்டேன் என் மேல கோவத்தை கூட காட்டு டி ஆனா விட்டு போயிடாத நீ இல்லேனா சத்தியமா சொல்றேன் சாரு செத்துருவேன்..."என்றதும் நிமிர்ந்து அவன் இரு விழியை பார்த்தாள்

தொடரும்

# nancy