ரணமாய் - 28

அவள் பார்வை வீச்சை தாங்க முடியாமல் கண்ணை இறுக்க மூடி கொண்ட திலீப் "மன்னிச்சுடு டி திரும்ப இப்படி பண்ண மாட்டேன்..."என்றது தான் தாமதம் அவன் மார்போடு ஒன்றி இருந்தாள்...

"உசுரே இல்லங்க இனிமே இப்படி பண்ணாதீங்க நீங்க குடிச்சு கூட பிரச்சினை இல்ல என்னை விட்டு மட்டும் போயிடாதீங்க என்னால இருந்த கொஞ்ச நேரம் பிரிவையே தாங்க முடியல உங்களுக்கு என் மேல கோவம்னா அடிச்சுடுங்க..."என்றதும் அவள் வாயை பொத்தினான்

"உன்னை அடிச்சா என்னால தாங்க முடியாது டி..."என அணைத்து கொண்டு அழ அவளும் அவனை அணைத்து கொண்டாள்...

"என்னால நீங்க இல்லாம இருக்க முடியாதுங்க அப்படி இருந்தும் நீங்க ஒரு நாள் முழுக்க என்னை தனியா விட்டுட்டு போயிட்டீங்க உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு என்னை விட்டு போக..."என அவன் மார்பில் முகம் புதைத்து இருந்த சாரு ரோமம் படர்ந்த மார்பில் அழுத்தமாய் முத்தமிட்டாள்..

"என்னால மட்டும் இருக்க முடியும் நினைக்கிறாயா சத்தியமா முடியாது டி..."


"இப்படி தான் சொல்லுவீங்க அப்புறம் விட்டுட்டு போயிருவீங்க அப்படி நான் என்ன பண்ணிட்டேன் நீங்க இல்லாம நான் என்ன பண்ணுவேன் நீங்க யோசிக்க மாட்டீங்களா உங்களுக்காக வாசல்லேயே காத்துக்கிட்டு இருந்தேன் தெரியுமா நம்ம பையன் அழுத்துக்கிட்டே இருந்தான்..."


அவள் நெற்றியில் முத்தமிட்டு "சாரி டி இனிமே போ மாட்டேன்..."


நிமிர்ந்து அவன் முகம் பார்த்து "எனக்கு ஒரு சத்தியம் பண்ணுங்க எல்லாம் முடிஞ்சுருச்சு இனிமே இத பத்தி பேசவோ நினைக்கவோ கூடாது past is past அது எனக்கு தேவை இல்ல எனக்கு நீங்க மட்டும் போதும் வேற எதுவும் தேவை இல்லை..."

"இல்ல டி சாரு நா..."

"Enough is enough..."என அவனை பேச முகம் முழுவதும் முத்தத்தை கொடுக்க கிறங்கி போய் தன்னை அடங்க முடியாமல் அவள் மேல் படர்ந்து ஆடைகளை கலைந்து எறிந்தான் அவன் வேகத்தில் திக்குமுக்காடி போன சாரு அவன் புஜத்தை இறுக்க பற்றி "திலீப்..."என கண் சொருக கிடந்தவளை கண்டு வேகத்தை குறைத்து கழுத்தில் தன் உதட்டால் முத்தமிட்டு வலம் வந்து அவளை கொஞ்சம கொஞ்சமாக எடுக்க மீசை தந்த குறுகுறுப்பில் சிலிர்த்து அவன் பின் தலை முடியை விரலால் கோதி இறுக்கி தன்னை மொத்தமாய் தன்னவனுக்கு கொடுத்து மயங்கி கிடக்க அவள் மீது சரிந்து தன் கூடல் முடித்து கழுத்து வளைவில் அழுத்தமான முத்தத்தை கொடுத்து உறிஞ்சு எடுத்து அப்படியே இறுக்கி அணைத்து கொண்டான்

கூடல் தந்த களைப்பிலும் போதையிலும் தன்னவள் ‌மார்பிலேயே தூங்கி விட தன்னை அணைத்து உறங்கும் தன்னவனின் கோசத்தை வருடியவாறே அவன் அணைப்பில் உறங்கி போனாள்

மறுநாள் விடியல் அழகாய் விடிந்தது...

தன் ஆடையற்ற வெற்று மார்பில் முகத்தை புதைத்து இருந்த தன்னவனை கண்டு வெட்கம் கொண்டு மெதுவாய் அவனை விலகி துண்டை எடுத்து உடலில் சுற்றி கொண்டு திலீப் மேல் போர்வையை போர்த்தி வெட்கத்துடன் கூடலின் போது களைந்து எறிந்த ஆடையை தேடி எடுத்து துவைக்கும் இடத்தில் போட்டு விட்டு குளியல் அறைக்கும் நுழைத்தாள்...

குளித்து துண்டால் உடலை மூடி தலையில் தண்ணீர் சொட்ட வந்த சாரு தலையை பிடித்து கொண்டு நின்ற திலீப்பை தான் பார்த்தாள்...

மெதுவாய் அவனை நெருங்கி தலையை தொட நிமிர்ந்து பார்த்து விழி விரித்தான்...

"என்ன ஆச்சுங்க hangover ஹ..."என்றவளை இமைக்க மறந்து பார்த்தான்...

"ஏங்க அப்படி பாக்குறீங்க..."

"இப்படி வந்து நிக்கிறீயே டி நா என்ன பண்ணுவேன்..."என இழுத்து வயிற்றில் முகம் புதைக்க...

"அய்யோ விடுங்க இப்ப தான் குளிச்சுட்டு வரேன்..."என அவனை விலக முயல

"முடியாது..."என்பது போல் அவள் வயிற்றில் முகத்தை அழுத்தவாறு வலது இடதுமாய் தலையை ஆட்ட அதில் சிலிர்த்து போனவளாய் "வேண்டாங்க‌..."என்றவளுக்கு சத்தம் தான் வரவில்லை நொடியும் தாமதிக்காமல் அவளை இழுத்து கட்டிலில் கிடத்தி அவள் உடல் மேல் சாய மயக்கத்தில் இருந்தவளுக்கு அவனின் உடல் பாரம் தெரியவில்லை 

ரெண்டாவது குளியல் போட்டு உடை மாற்றி தலையை துவட்டி கொண்டே திலீப் பை முறைத்தாள் சாரு அவனோ அவளை கண்டு கொள்ளாமல் கட்டிலில் கால் மேல் கால் போட்டு ஆட்டியவாறு படுத்திருந்தான்...

குழந்தை தூங்கி எழுந்து அழுக தூக்கி வந்து அவனிடம் நீட்டிய சாரு "பிடிங்க பால் கொண்டு வரேன்..."என்றிட எழுந்து அமர்ந்து குழந்தையை வாங்கி கன்னத்தில் முத்தமிட்டு "என் தங்கமே செல்லக்குட்டி எந்த தொந்தரவும் பண்ணாம அமைதியா தூங்கி இருக்கீங்க இப்ப எழுந்த நீங்க அப்போ எழுந்திருந்தா என்ன ஆகி இருக்கும் அப்பா உனக்கு தங்கச்சி ரெடி பண்ற processes பாதியிலே நின்று இருக்கும் என் புள்ள என்னைய புரிஞ்சு நல்லா பிள்ளையா இருந்திருக்கான் என் புள்ள டா..."என்றவன் தலையில் தலையணையில் ஓங்கி அடித்த சாரு ஏதோ முனுமுனுத்து கொண்டு பால் காய்ச்ச சமையலறைக்கு சென்றாள்...

பாலை காய்ச்சி ஆற்றி கொண்டு வந்த சாரு பாட்டிலில் ஊற்றி குழந்தையை வாங்கி கொடுத்து "எல்லாம் உங்களால தான் மணி 8 ஆச்சு சமைக்க கூட இல்ல வர வர நீங்க ரொம்ப கெட்டு போயிட்டீங்க உங்களுக்கு என்ன புதுசா கல்யாணம் ஆன மாப்பிள்ளைனு நினைப்பா இதுல குழந்தை கிட்ட போய் என்ன பேசுறீங்க எழுந்து போய் குளிங்க ஆபிஸ் போக வேண்டாமா..."என்று பொய் கோவத்துடன் கேட்டவளை நெருங்கி "ஆபிஸ்க்கு போயிக்கலாம் டி..."என்று  ராகம் பாடியவனை அருகில் பார்த்ததும் தள்ளி விட்டு "ஒழுங்கா போய் குளிச்சு கிளம்புங்க என் பக்கத்துல வந்தீங்க அவ்ளோ தான் பாத்துக்கோங்க உங்க சேட்டை அதிகமாகிடுச்சு..."என்று அவன் தோளில் அடித்து விரட்ட 

அடித்த இடத்தை தடவி கொண்டே "என்ன டி புருஷன அடிக்கிற நீ தான் டி மாறிட்ட..." 

"போறீங்களா என்ன..."

"மாமா எவ்ளோ ஆசையா பக்கத்துல வரேன்..."என சினுங்கலுடன் நெருங்க 

"போங்க..."என தள்ளி விட...

"போ டி நா கோவமா போறேன்..."என்று குளியலறைக்குள் சென்று கதவை அடைத்தவனை பார்த்து சிரித்தவள் குழந்தையை தூக்கி கொண்டு "அஸ்வா சமத்தா இங்கு உட்காந்து விளைய்டிக்கிட்டு இருப்பீங்களாம் அம்மா சமைச்சுட்டு வந்து உங்க கூட விளையாடுவேனாம் அப்பா ஆபிஸ்க்கு போகனும்ல..."என நடு கூடத்தில் பொம்மையுடன் விளையாட விட்டு சமையலறைக்கு சென்றாள்...

சாம்பாரும் வேர்க்கடலை சட்னியும் தயார் செய்ய திலீப்பும் கிளம்பி சமையலறைக்கு வந்தவன் பின்னால் இருந்து அவளை அணைத்தவன் கையை தட்டி விட்டு திரும்பி ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தாள்...

அவள் கொடுத்த எதிர்ப்பாராத அறையில் தலை சுற்றி கண் மங்களாக தலையை உலுக்கி கொண்டு கன்னத்தை பிடித்தவாறு அவளை பார்க்க மார்பில் குறுக்கே கை கட்டி கொண்டு அவனை முறைத்த சாரு அவன் வலது சட்டை காலரை கொத்தாய் பிடித்து இழுத்து "உனக்கு எவ்ளோ தைரியம் ராத்திரி குடிச்சுட்டு வர என்னனென்ன சேட்டை எல்லாம் பண்ண நீ எதுவும் தெரியாத மாதிரி அமைதியா இருந்தா நா விட்டுவேனா எதுக்கு டா குடிச்ச சொல்லு..."என கோவத்தில் கத்தியவளை பாவமாய் பார்த்தான்...

"நா வேணும்னு பண்ணல தெரியாம குடிச்சுட்டேன் சாரி இனிமே இப்படி பண்ண மாட்டேன்..."என சிறு குழந்தை போல் பேசியவனை பார்த்து மெலிதாய் சிரித்த சாரு தன் அருகே இழுத்து அணைத்து கன்னத்தில் இருந்த கையை எடுத்து அடித்த இடத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு கன்னத்தை வருடி "வலிச்சுச்சா..."என்றிட 

கையை தட்டி விட்டு "இல்ல குளுகுளுனு இருந்துச்சு..."என கையை கட்டி கொண்டு திரும்பி நிற்க பின்னால் இருந்த அணைத்த சாரு முதுகில் முகம் புதைத்து முத்தமிட்டாள்...

சிரித்தவாறு கோவத்துடன் இருப்பது போல் அவன் நடிக்க...

"ஏங்க..."

".........."

"ஏங்க..."

"............."

"என்னங்க..."

"அய்யோ கிறங்க வைக்கிறாளே பாவி..."என முனங்கி கொண்டு திரும்பி "சொல்லு..."என எங்கேயோ பார்த்தவாறு கேட்க...

"கோவமா..."என்று சட்டையை சரி செய்தவாறு கேட்க..

அவனும் வீராப்பாய் "ஆமா கோவம் தான்..."என்றிட

அவன் சட்டை பட்டனை திருகி கொண்டே வெட்கத்துடன் "தப்பு பண்ணலாமா..."என்றதும் விழி விரிய தன் கால் முட்டியில் கை ஊன்றி அவள் உயரத்துக்கு குனிந்து முகத்தை பார்த்து "என்ன டி தங்கம் சொன்ன..."என உற்று பார்க்க...

"ஒன்னு இல்ல எனக்கு வேலை இருக்கு தோசை உத்தனும்..."என விலகி சொல்ல முயன்றவளை இழுத்து அணைத்து முத்தமிட முயல அஸ்வத் அழும் சத்தத்தில் இருவரும் விலகி நிற்க...

திலீப் அவளை பாவமாய் பார்த்திட வேகமாக அஸ்வத் காண ஓடினாள்...

தொடரும்...

"Nancy