ரணமாய் - 29

குழந்தைக்கு தூக்கி சமாதானம் செய்து கொண்டே "என்னங்க அங்க தட்டுல அஸ்வத்க்கு ஊத்தப்பம் வச்சு இருக்கேன் பால் ஊற்றி எடுத்துட்டு வாங்க..."என சாரு நடு கூடத்தில் இருந்து குரல் கொடுக்க 

திலீப் முனுமுனுத்தவாறு ஊத்தப்பத்தில் பாலை ஊற்றி பிசைந்து கொண்டே அஸ்வத்க்கு ஊட்டி விட அவனும் சாப்டு முடித்தான்...

"பரவா இல்லைங்க நா இல்லைனா கூட நீங்க குழந்தைய நல்லா பாத்துக்குவீங்க போல..."என்றதும் நிமிர்ந்து அவளை முறைத்தவன் ஓங்கி பளாரென கன்னத்தில் அறைந்தான்...

"பிச்சுடுவேன் என்ன வார்த்தை டி பேசுற நீ பேசுனதுக்கான அர்த்தம் தெரிஞ்சு பேசினீயா இல்ல தெரியாம பேசுனீயா டி அப்படியே வச்சேன்னு வையி..."என மறுபடியும் கையை ஓங்க கண்ணௌ மூடி கொண்டு முகத்தை திருப்பி நிற்க கையை இறக்கி வேகமாய் தன் அறைக்குள் செல்ல...

தன் நெற்றிக் அடித்து கொண்டு "உனக்கு உன் வாய் தான் டி சனி மனுசன் இப்ப தான் நல்லா இருந்தாரு உன்னை என்ன தான் டி பண்றது..."என சமையலறைக்குள் சென்று சுடசுட நெய் தோசை ஊற்றி எடுத்து கொண்டு தன் அறைக்கு செல்ல...

கண் மூடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான் திலீப்...

குழந்தை கட்டிலில் அமர வைத்து திலீப் அருகில் அமர்ந்து சாரு தோசையை பிய்த்து சட்னியில் தொட்டு அவன் வாய் அருகே நீட்ட முகத்தை திருப்பினான்..

"Sorry please சாட்டுங்க என் மேல தானே கோவம் சாப்பாடு மேல காட்டாதீங்க இன்னொரு அடி கூட அடிச்சுடுங்க தயவுசெய்து சாப்டுங்க எனக்கு பசிக்குதுங்க..."என்றதும் வேகமாக அவளை பார்த்து "ஏன் டி இப்படி என்னைய சித்திரவதை பண்ற நீ இல்லைனா நா செத்துருவேன் டி.."என்றதும் பதறி தட்டை கட்டிலில் வைத்து அவன் வாயை பொத்தி தாவி அவனை கட்டி கொண்டாள்...

அவன் தோள்பட்டையில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை கொடுத்து "இனிமே இப்படி பேசாதீங்க..."என ‌விலகி அவன் கன்னத்தை தாங்கி நெற்றியில் முத்தமிட்டு "சாப்டுங்க..."என்றவளை இழுத்து எலும்பு உடையும் அளவிற்கு இறுக்கி அணைத்து "என்னை விட்டு போயிடுவேன்னு மட்டும் எந்த விதத்திலும் சொல்லாத டி என்னால தாங்க முடியல..."

அவன் அணைப்பு வலித்தாலும் பொறுத்து கொண்டு முகத்தை சுழித்தவாறு "இனிமே அப்படி சொல்ல மாட்டேன் பசிக்கிதுங்க..."என்றது தான் தாமதம் கட்டிலில் இருந்து தட்டை எடுத்து அவள் பிய்த்து வைத்த தோசை அவளுக்கு ஊட்ட வறுக்காமல் வாங்கி கொண்டு இருவரும் சாப்டு முடித்து அணைப்பில் கலைந்த சட்டையை மாற்றி விட்டு நடு கூடத்திற்கு வந்து மென்மையாய் அணைத்து பெற்றதில் முத்தமிட்டு "ஆபிஸ் போய் வரேன் ஈவினிங் வெளிய போலாம்..."

"வெளிய வா நா நைட் வேற ப்ளான் பண்ணி இருந்தேனே..."என முக வாட்டத்துடன் சொல்ல...

"சாரு..."என ஆர்வத்துடன் அவளை நெருங்க அவன்‌ மார்பில் கை வைத்து தடுத்து "இப்ப இல்ல ராத்திரி தான் கிளம்புங்க..."

அவளை ஒரு மார்க்கமாய் பார்த்து கண்ணடித்து உதட்டை குவித்து "லைட்டா டி..."என கெஞ்சும் குரலில் கேட்க...

"Chance less கிளம்புங்க முத..."என அவனை விலக முயல அவன் விலகாமல் தலை சாய்த்து அவள் கழுத்து வளைவில் மூக்கால் கோமிட அழைப்பு மணி அடித்தது...

பொறுமை இழுத்து பல்லை கடித்து பெருமூச்சு "எனக்குனே வருவாங்களா..."என்க

சாரு உதட்டில் கை வைத்து சிரித்தவாறு "நா தான் கிளம்புங்கனு சொன்னேன்ல..."

"சிரிக்காத டி சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விட்டு பேசுற பேச்ச பாரு.."

அவளோ காதில் வாங்காமல் சிரித்தவாறு கதவை திறக்க சிரிப்பை தொலைத்து நின்றாள்...

"சாரு யார் வந்து இருக்கா..."என்று திலீப் கேட்க சிலையாக நின்றாள்...

"சின்னும்மா..."என்ற அழைப்பில் நடுக்கத்துடன் பின்னால் நகர்ந்து "திலீப்..."என அலறி கொண்டு ஓடி போய் திலீப்பை கட்டி கொள்ள...

"சாரு சாரும்மா என்ன டா என்ன ஆச்சு..."என அவனும் அணைத்து கொண்டு பதற்றத்துடன் கேட்க..

அவன் மார்பில் முகம் புதைத்தவாறு வாசலை நோக்கி கை நீட்ட அவளை அணைத்தவாறே நகர முயல சட்டையை இறுக்கி வேணாம் என்பது போல் தலையை ஆட்ட...

"சாரு நா இருக்கேன்..."என்று அவளை அணைத்தவாறே வாசலை நோக்கி நடக்க வாசலில் இருந்து ஒரு உருவம் உள்ளே நுழைந்தது அதை கண்டதும் ஒரு நிமிசம் அதிர்ந்து தான் போனான்...

"அஸ்வின்..."

அவன் அணைப்பில் இருந்த சாருவை பார்த்தவாறு "சின்னு சின்னும்மா எனக்கு வேணும் திலீப் எனக்கு கொடுத்திடு..."என்க...

திலீப் அசையாமல் நிற்க சாரு அதிர்ந்து அவனை விட்டு விலகி அஸ்வினை பார்த்தாள்...

"வந்துடு சின்னு உன் அஸ்வின் வந்து இருக்கேன் உனக்காக நீ இத்தன நாளா பட்ட கஷ்டம் நான் பட்ட கஷ்டம் எல்லாம் முடிவுக்கு வரப்போகுது இனி உனக்கு நான் எனக்கு நீ குழந்தைய அவன் கிட்டே குடுத்துட்டு வந்துரு உன்னுடன் ஞாபகமா குழந்தைய வளர்க்கட்டும் என் குழந்தையும் நான் அவ கிட்டயும் கொடுத்துட்டு வந்துட்டேன் நமக்குன்னு ஒரு வாழ்க்கை நமக்குன்னு ஒரு குழந்தைன்னு நம்ம எங்கேயாவது போய் சந்தோசமா வாழலாம் சின்னும்மா மனசுல உன்னைய நானும் என்னை நீயும் சுமந்துக்கிட்டு நான் இன்னொருத்தி கூடவும் நீ இன்னொருத்தன் கூட வாழ்றது ரொம்ப கஷ்டம் சின்னு நீ வந்துடு நம்ம வாழ்க்கைய நம்ம பாத்துக்கலாம் அவன் வாழ்க்கை அவன் பார்த்துக்குவான் எல்லாத்துக்கும் காரணம் அவன் தானே அவனுக்கு தண்டனை கிடைக்க வேணாமா அவனை விட்டுட்டு வா சின்னு உனக்காக நா எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன் என் பொண்டாட்டி பொண்ணு யாருமே வேணாம் நீ போதும் நீ மட்டும் போதும் இந்த ஊரை விட்டு ஏன் இந்த நாட்டை விட்டே போயிடலாம் இவங்க யார் கண்ணுலையும் படாம தூரமா நம்ம வாழ்க்கைக்கு எந்த கஷ்டமும் வராத இடத்துக்கு போயிடலாம் சின்னும்மா உனக்கு இவன் வேணாம் இந்த குழந்தையும்..."என  சொல்லும் போதே அவன் கன்னத்தில் விழுந்த அறையில் தடுமாறி நின்றான்...

கண்கள் சிவந்து கோவமாய் நின்ற சாரு விரல் நீட்டி "ஒரு நிமிசம் கூட நீ இங்க இருக்க கூடாது ஓடிடு என் புருஷன் கையால் அடி வாங்கி செத்துருவ உன்னை காதலிச்சு பாவத்துக்கு நா தடுக்க மாட்டேன்..."

அஸ்வின் திலீப்பை பார்க்க மனம் உடைந்து சோர்ந்து போய் கண்ணீரோடு சோர்ந்து போய் நின்றான் அதன் கண்டு சிரித்த அஸ்வின் "யாரு இவனா என்னைய அடிச்சு கொன்றுவானா அவனே செத்தப்பய எப்படி இருக்கான்னு பாரு நீ என் கூட வந்துடு சின்னும்மா அவன் உனக்கு வேணாம் நா உன்னையே நல்லா பாத்துக்குவேன் இவன் கூட வாழ்ந்த இந்த வருச வாழ்க்கை உனக்கு சந்தோஷமா இருந்துச்சா சின்னு இருக்காது கண்டிப்பா நீ சந்தோஷமா இருந்திருக்க மாட்ட உன்னைய பத்தி எனக்கு நல்லாவே தெரியும் சின்னு உன்‌ மனசு முழுக்க நா தான் நா மட்டும் தான் இருக்கேன் உன்‌ மனசாட்சி தொட்டு சொல்லு அவன் கூட இருக்கும் போது எல்லாம் என்ன ஞாபகம் வரல நீ என்னை நினைச்சு கூட பாக்கலனு சொல்லு பாக்கலாம்..."என்றிட மறுபடியும் ஓங்கி அறைந்தாள்...

கன்னத்தை பிடித்தவாறு கோவத்துடன் நிமிர ரௌத்திரமாய் நின்றவளை கண்டான்...

தொடரும்...

# nancy