ரணமாய் - 31
சாரு அவன் முகத்தை பார்க்க பிடிக்காமல் கதவை அடைக்க முயல அவன் காலால் எட்டி உதைக்க தடுமாறி கீழே விழ போன் சாரு தாங்கி பிடித்தான் திலீப்...
"எல்லாத்துக்கும் நீ ஒருத்தன் மட்டும் தான் டா காரணம் நம் இல்லைனா என் சாரு என் கூட டா வா சாருனு கண்ணை காட்டுனாலே வந்து இருப்பா என்னை அவ்ளோ காதலிச்சா டா ஆனா இப்போ என்னை பாத்து பயப்படுறா எல்லாம் யாரால உன்னால மட்டும் தான் எங்க வாழ்க்கைய விட்டு போயிடு நாங்க சந்தோஷமா இருப்போம் அதுக்கு மேல உனக்கா ஒரு துணை வேணும்னா என் பொண்டாட்டி இருக்கா உனக்காக நா அவளை விட்டு கொடுக்குறேன்..."என வெட்கமே இல்லாம சொல்ல...
சாரு காதை பொத்தி கொள்ள "ச்சீ.."என முகத்தை சுளித்து திலீப் "நீ எல்லாம் என்ன பிறவி டா கட்டுன பொண்டாட்டி போய் அந்த பொண்ணு உன் கூட வாழ்க்கையே கொச்சைப்படுத்தியே டா நீ எந்த மாதிரி வேலை பாக்குறது தெரியுமா டா அந்த பொண்ணை பத்தி நினைச்சு பாத்தீயா டா..."
"எனக்கு அவளை பத்தி கவலை இல்ல எனக்கு சாரு மட்டும் தான் வேணும் கண்டவளை பத்தி யோசிக்கனும்னு அவசியம் இல்ல..."
ஏதோ சொல்ல வாய் திறந்த திலீப் பின்னால் பார்த்து அதிர்ந்து போனான்...
அழுகையும் கோவமும் கலந்த முகத்தோடு தர்ஷினி நின்றாள்...
"நா தான் தர்ஷினிய கூட்டிட்டு வந்தேன்..."என்றான் பிரதீப்...
அவன் சொன்னதை கேட்டு வேகமாய் திரும்பி பார்த்த அஸ்வின் தர்ஷினியை பார்த்து ஒரு நொடி பயந்து போனவன் பிரதீப் பை முறைந்தான்...
"என்ன டா முறைக்கிற..."
அவன் சட்டையை பாய்ந்து பிடித்து அஸ்வின் "இவளை ஏன் டா கூட்டிட்டு வந்த..."
அவன் கையை தட்டி விட்டி "கல்யாணம் பண்ணி ஒரு குழந்தைய கொடுத்துட்டு விட்டுட்டு வருவ நாங்க பாத்துட்டு சும்மா இருப்போம் னு நினைச்சீயா அசிங்கமாயிடும் பாத்துக்கோ மரியாதையா அவ கூட வாழ்ற வழியா பாரு தேவை இல்லாம சாருவோட வாழ்க்கையில நுழையாத அவ சந்தோஷமா தான் இருக்கா..."
"அப்படினு அவ சொன்னாளா எனக்கு சாரு பத்தி நல்லா தெரியும் என் சாரு அவ..."
"அப்போ நா யாரு டா..."என்ற கேள்வியோடு அவனை நெருங்கி தர்ஷினி சட்டையை பிடித்து "சொல்லு நா யாரு என்னை பத்தி நினைச்சு பாத்தியா இல்ல..."என்று வாசலை நோக்கி கை நீட்டி "அந்த குழந்தைய பத்தி நினைச்சு பாத்தியா..."என்றதும் வாசலில் அமர்ந்திருந்த குழந்தையை பார்த்து பதறிய பிரதீப் "அய்யோ குழந்தை..."என தூக்கி "என்ன தர்ஷினி இப்படி குழந்தைய வீட்டுல வாசல்ல போட்டு இருக்க..."
"இவனோட குழந்தை தானே இவனுக்கே அக்கறை இல்ல நா எதுக்கு கவலைப்படனும்..."
"ஏ விடு டி..."என அவளை தள்ளி விட்ட அஸ்வின் "உன்னை தான்உன் அப்பன் வீட்டுக்கூ போக சொல்லிட்டேன்ல யாரு டி உன்னை வர சொன்னா இனி எனக்கு நீ தேவை இல்ல தாராளமா உன் வாழ்க்கைய பாரு ஏன் இதோ அவன்..."என திலீப் பை காட்டி "அவனுக்கு துணை இல்ல அவன் கூடவே உன் வாழ்க்கையை வாழு நா தடுக்க மாட்டேன்..."என்ற மறு நொடி கன்னத்தில் அவள் விரல் பதிந்து இருந்தது...
"உன் கிட்ட நா பாதுகாத்து வச்சு இருந்த கற்பை இழந்தேன்னு நினைக்கும் போது அருவருப்பா இருக்கு கட்டுன பொண்டாட்டிய பாத்து இன்னொரு சேர்ந்து வாழ சொல்றீயே நீ மனுஷன் தானா டா இதுக்கு மேலேயும் நா உன் கூட வாழனும்று நினைச்சா அது என்னைய நானே அசிங்கப்படுத்திக்கிற மாதிரி இந்த நிமிஷத்துல இருந்து உனக்கு எனக்கு இந்த உறவு முடிஞ்சு போச்சு..."என தன் கழுத்தில் இருந்த தாலியை பிடித்து இழுத்ததில் உறுந்து கையோட வர தாலி செயின் கிழித்து கழுத்தில் ரத்தம் வர அவன் முகத்தில் தூக்கி எறிந்து "நானோ என் பொண்ணோட நீ இருக்குற திசை பக்கம் கூட வர மாட்டோம் இந்த நிமிஷம் நானும் பொண்ணும் இந்த ஊரை விட்டு போறோம் தயவு செய்து எங்களை தேடி வந்துடாத..."என ஆக்ரோஷத்துடன் கத்திய தர்ஷினி தோளை தொட்டு பிரதீப் "அவசரப்படாத தர்ஷினி..."
"பேச எதுவும் இல்லை..."
"அவளே போறேன்னு சொல்றா இடையில நீ என்ன டா உனக்கும் அவளுக்கு ஏதாவது இருக்கா..."
"என்ன பிறவி டா நீ அந்த பொண்ணு எனக்கு தங்கச்சி மாதிரி டா அப்படியே அடிச்சா கொன்னு போடலாம்னு இருக்கு..."
"அத முத செய்ங்க..."என பிரதீப் கையில் இருந்த தன் குழந்தையை வாங்கி கொண்டு நகர அவளை தடுத்த பிரதீப் "இரும்மா எங்க போற வீட்டுக்கு வா பேசிக்கலாம்..."
"எதுக்கு மறுபடியும் இவன் கூட சேர்ந்து வாழ வைக்க முயற்சி செய்வீங்க அப்படி பண்ணா நா செத்துடுவேன்..."
"ரொம்ப நல்லதா போச்சு என் பொண்டாட்டி செத்து போயிட்டா என் குழந்தைக்காக நா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு என் சாருவ கல்யாணம் பண்ணி சந்தோஷமா..."
அவனை முறைத்த தர்ஷினி "நீ சந்தோஷமா இருக்குறதுக்கு ஒருத்தி செத்தா கூட பரவா இல்லைல அப்போனா நா சாக மாட்டேன் டா உசுரோட உன் கண்ணு முன்னாடி வாழந்து காட்டுவேன் டா என் வாழ்க்கைய கெடுத்துக் இல்லாம அந்த பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பாக்குறல நீ நல்லாவே இருக்கு மாட்ட டா நீ அழிஞ்சு போறத நாங்க பாக்க தான் டா போறோம்..."என கோவம் நிறைந்த கண்ணீரோடு அவனை பார்த்து சாபம் விட...
"அடி போடி நீ சாபம் விட்டா பழிக்குமா என்ன முத கண்ணு முன்னாடி இருக்காத உன் முகத்தை பாக்கும் போது எல்லாம் கோவமா வருது நா என் சாருனு வாழ்க்கைய சந்தோஷமா வாழ போறோம் இடத்தை காலி பண்ணு அப்படியே அந்த நாயையும் கூட்டிட்டு போ எனக்கு பெரிய தலைவலியே அவன் தான் அவன் இருக்கவும் தான் என் சின்னும்மா என் கூட வர பயப்படுறா..."என வெட்கமே இல்லாம பேசியவனை பார்க்க அனைவருக்குமே அருவருப்பாக இருந்தது...
அமைதியாக இருந்த திலீப் தன் அணைப்பில் இருந்த சாருவை விலகி விட்டு அஸ்வின் கன்னத்தில் ஓங்கி அறைந்து கழுத்தை பிடித்து "நானும் போனா போகுது தப்பு என் மேல தானேனு அமைதியா இருந்தா உன் எல்லைய மீறி வந்து நடந்துக்குற கொன்னு புதைச்சுவேன் ராஸ்கல் முத என் வீட்டை விட்டு வெளிய போ டா..."என கழுத்தை இன்னும் இறுக்க கண் முழி பிதுங்கி நின்றான்...
"ஏங்க விடுங்க அவனை..."என சாரு அவன் புஜத்தை பிடித்து இறுக்க "அடேய் செத்துற போறான் டா..."என பிரதீப்பும் கழுத்தில் இருந்த கையை எடுக்க முயல திலீப் கண்கள் சிவக்க இறுக்கிட மூச்சு விட சிரமமாகி கண் சொருகி போனான் அஸ்வின்...
தொடரும்...
*Nancy
0 Comments