ரணமாய் - 32

ஆறு மாதத்திற்கு பிறகு...

"சாரு சாரு சாரும்மா நில்லு டி சொல்ற கேளு அடம் பிடிக்காத நா சொன்னா கேட்க மாட்டியா அம்மாடி தங்கம் செல்லம் குட்டிமா நில்லும்மா..."என்று திலீப் சாரு பின்னாலேயே ஓடாத குறையாக செல்ல சோஃபாவில் அமர்ந்து அதை பார்த்த தாரணி தலையை பிடித்து கொள்ள அவள் அருகில் அமர்ந்து இருந்த திவாகர் சிரித்து கொண்டு இருந்தான்

"சிரிக்காதீங்க திவா அவங்க இப்படி தான்..."

"இல்ல நல்லா இருக்கு அது தான் பேசாம இவங்க கூடவே இருந்திடலாம் போல Jolly type ஹ இருக்காங்க..."

"அப்படி தான் தெரியும் ஆனா அவங்க கொஞ்சிக்கிறத பார்த்தா கடுப்பாகும்..."

"அப்படியா..."என திவா தாரணியை நெருங்கி அமர்ந்து "அப்போ நம்ம கொஞ்சிக் கிட்டு அவங்கள கடுப்பாக்குவோம்..."என அவளை முத்தமிட நெருங்கி திவா தொடையில் அடித்த தாரணி "சும்மா இருங்க..."என்று பக்கத்தில் இருந்த அஸ்வத்தை கண் காட்ட 

"அவன் குழந்தை இப்போதைக்கு அவனோட கவனம் எல்லாம் அந்த மொபைல்ல இருக்கு அவன் பாக்க மாட்டான் அதனால.."என திவா உதட்டை குவித்து காட்ட 

"சும்மா இருங்க திவா..."

"அவங்களுக்கு கல்யாணம் ஆகி ஐந்து ஆறு வருசம் ஆகிடுச்சு அதுங்களே குழந்தை இருக்கேனு கூட பாக்காம கொஞ்சிக்கிட்டு இருக்காங்க நமக்கு கல்யாணம் ஆகி  ஒரு வாரம் தான்‌ம்மா ஆகி இருக்கு நமக்கு என்னம்மா..."

"ப்ச் அவங்க ஒன்னும் கொஞ்சிக்கல She's pregnant அது தான் அந்த பயப்புள்ள இந்த தாங்கு தாங்குது.."

"என் புருஷனை தாங்குறாரு உனக்கு என்ன டி பிரச்சினை..."என்று திலீப்பிடம் இருந்து தப்பிக்க நடையோ நடை நடந்து கலைத்து போய் வந்து நின்ற சாரு "கொஞ்சம் தள்ளி உட்காருங்க திவாகர் உட்காரனும்..."என மூச்சு வாங்க நின்றவளை மேலும் கீழுமாக பார்த்து விட்டு நகர்ந்து உட்கார தன் சிறிது மேடிட்டி வயிற்றை பிடித்தவாறு தாரணி திவாகருக்கு இடையில் அமர்ந்தாள்...

"தங்கமே இத மட்டும் குடி டி..."என்று விடாமல அவள்‌ முன் டம்ளரை நீட்டிய திலீப்பை பார்த்து பெருமூச்சு விட்டாள் சாரு...

"அட என்ன சகோ உங்களுக்கு என்ன இந்த டம்ளர் காலி ஆகனும் அவ்ளோ தானே..."என திவா டம்ளரை பிடிங்கி குடித்து காலி டம்ளரை கொடுக்க திலீப் முறைத்து தள்ள சாரு வாயை பொத்தி சிரித்தாள்...

"போச்சு இப்ப நீங்க தான் ஜுஸ் ஹ ரெடி பண்ணி கொண்டு வரனும்.."என்று தாரணி தலையை பிடிக்க...

"நீங்க ஏங்க அது வாங்கி குடிச்சீங்க போங்க பிரிட்ஜ்ல ஃப்ரூட்ஸ் இருக்கும் ஜூஸ் அடிச்சு கொண்டு வாங்க இல்ல இவன் என்னைய சும்மா விட மாட்டான்..."

"தேங்க்ஸ் திவா என்னைய காப்பாத்திட்டீங்க..."என்று சிரித்து கொண்டே சொன்ன சாரு வெறித்து "நா மாட்டிக்கிட்டேனே..."என்று திலீப்பிடம் "என்ன ஜுஸ்..."என்றிட 

"என்னத்த குடிச்ச..."

"ஆப்பிள் ஜுஸ்..."

"போ..."

திவாகர் சோகமாய் எழுந்து சென்று கொண்டே "ஆமா இந்த கிச்சன் எங்க இருக்கு..."

"கண்டு பிடி டா 50 ரூம் ஹ இருக்கு..."என சாரு அருகில் அமர்ந்த திலீப் "வர வர நீ ரொம்ப அடம் பிடிக்கிற சாரு நா பாவம் இல்லையா‌..."

"முடியலங்க..."என்று தாரணி தோளில் சாய்ந்து கொண்டாள் சாரு...

"சோர்வா இருக்கா டி வேற ஜுஸ் போட்டு வரட்டா..."

சாரு சினுங்க...

"படுத்தாத டா அவளை 24 மணி நேரமும் அவளுக்கு எதாவது கொடுத்துக்கிட்டே இருக்காத திலீப் சாரு எவ்ளோ தான் சாப்டுவா  பாவம் இல்லையா கொஞ்சம் பிரேக் விடு..."என தாரணி சாருவுக்கு ஆதரவாய் பேச

"உனக்கு தெரியாது தாரணி இது தான் எங்க காதலோட அடையாளம் அஸ்வத்தும் எங்க காதல் அடையாளம் தான்..."என அவள் வயிற்றை தொட்டு "இந்த குழந்தை ரெண்டா பேரோட காதலை முழுசா வெளிப்பட்டதுக்கு அப்புறம் உருவான குழந்தை சொல்றேன்னு தப்பி நினைக்காத தாரணி நாங்க ரெண்டு பேரும் சேரும் போது எல்லாம் முழு அன்போட காதலோட சேர்ந்தோம் எங்க காதல் ஞாபகம் உருவான குழுந்தை ஒரு வரம் தானே அந்த வரம் எந்த பொக்கிஷம் தானே எங்களுக்கு ஒரு பெண் குழந்தை வேணும்னு ஆசை இந்த ஜீவன் பொண்ணா இருக்கும்னு நினைச்சாலும் இந்த பொக்கிஷம் ஆண் குழந்தை தான் பிறக்கனும்னு நினைக்கிறோம்..."

"என்ன திலீப் சொல்ற..."

"எங்க பொக்கிஷம் பொண்ணா இருந்தா கல்யாணம் வயசுல வெளிய அனுப்பு மனசு வராது தாரணி எங்களால தாங்க முடியாது இதே பையனா இருந்தா கூடவே இருப்பான்ல கடைசி காலம் வரைக்கும் எங்க காதல் பொக்கிஷம் எங்க கூடவே இருக்குனு சந்தோஷமா இருக்கும்ல அது தான்..."

"காதல் என்னென்னெல்லாம் பண்ணதுனு பாத்தியா தாரணி..."என்று ஜீஸ் உடன் வந்த திவா மூவருக்கு கொடுத்த தானும் ஒன்னு எடுத்து கொண்டு தாரணி அருகில் அமர்ந்தான்...

"காதல் தான் திவா அந்த காதலால் எவ்ளோ பிரச்சினை வந்துச்சு உன் பொண்டாட்டிக்கு நல்லாவே தெரியும் அதனால் தான் அவ காதலிக்கல..."

"போதும் திலீப் நல்லா போயிட்டு இருக்கு தேவை இல்லாம எதுக்கு அனாவசியமான பேச்சு பேசுற முடிஞ்சத ஞாபகப்படுத்தாத..."

"நா தெரியாம தான் கேட்குறேன் தாரணி கோச்சுக்காத உங்களுக்குள் ஏதோ முன் கதை இருக்குனு நினைக்கிறேன் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி கல்யாணத்துக்கு அப்புறமும் சரி திலீப்பும் சாருவும் இவ்வளோ காதலிக்கிறாங்க ஆனா காதலை பத்தி பேசுனா சாரு சோகமாகிடுறாங்க நீ கோவப்படுற ஒன்னுமே புரியல என் கிட்ட சொல்லனும்னா சொல்லுங்க இல்லைனா வேணாம்..."

"ஏங்க அது ஒன்னும் அவ்ளோ பெரிய பரம ரகசியம் இல்லங்க நா பிரதீப் சாரு திலீப் எல்லாரும் ஒரே காலேஜ்னு உங்களுக்கு தெரியும் இதுல தெரியாத விஷயம் திலீப் சாருவை one side ஹ காதலிச்சது தான் பிரதீப்க்கு தவிர வேற‌யாருக்கு இந்த விசயம் தெரியாது இது தெரியாம சாரு வேலைக்கு போன இடத்துல ஒரு பையனை காதலிச்சா..."

"அட நல்லா இருக்கே you continue..."என கதை கேட்பது போல் நன்றாக நிமிர்ந்து தாரணியை‌ பார்த்து அமர்ந்தான் திவாகர்...

தொடரும்...

# nancy