ரணமாய் - 33


"நா உள்ள வரலாமா..."

திலீப் குரல் வந்த திசையில் பார்த்து "ஏய் என்ன நீ புதுசா கேட்டுட்டு வர்ற மாதிரி வர்ற..."என எழுந்த வந்த திலீப் பிரதீப் கையை பிடித்து இழுக்க பிரதீப் பின்னால் திரும்பி பார்க்க அவன்‌ முதுகு பின்னால் இருந்து தர்ஷினி நகர்ந்து வந்தாள்...

"தர்ஷினி..."

தர்ஷினி தயக்கத்துடன் "நல்லா இருக்கீங்களா..."

"நா ரொம்ப நல்லா இருக்கேன் மா நீங்க எப்படி இருக்கீங்க குழந்தை எப்படி இருக்கா..."

"நல்லா இருக்கா அனிதா கிட்ட விட்டுட்டு வந்தேன்..."

"உள்ள வாங்க..."என தர்ஷினியை உள்ளே அனுப்பி விட்டு பிரதீப் சட்டையை பிடித்தே இழுத்து "அந்த பொண்ணை ஏன் டா கூட்டிட்டு வந்த உள்ள சாரு தாரணி திவா எல்லாரும் இருக்காங்க..."

"நா என்ன டா பண்ணட்டும் ஆறு மாசத்துக்கு அப்புறம் அனிதாவ பாக்க வந்தா தாரணி தான் இங்க வந்து இருக்கேன் நீயும் வா டானு சொன்னா சரி வரலாம்னு அனிதா கிட்ட சொல்லிட்டு கிளம்புனேன் அத கேட்ட இந்த பொண்ணு நானும் வரட்டானு கேட்டா எனக்கு என்ன சொல்றதுனு தெரியல இல்ல வேணாம் நீங்க வராதீங்கனா சொல்ல முடியும் பாவம் டா அந்த சம்பவத்துக்கு அப்புறம் இன்னக்கி தான் வந்து இருக்கா அந்த பொண்ணை பாக்கும் போது ரொம்ப சங்கடமா போச்சு டா இதுக்கு நானும் ஒரு காரணமா தானே இருந்தேன் நான் மட்டும் அன்னக்கி இப்படி ஒரு ஐடியா கொடுக்காம இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது இல்ல நான் கிறுக்கு தனமா பண்ண போயி என்னன்னமோ ஆகி போச்சு..."

"நீ என்ன வேணும்னா பண்ண ஏதோ ஹெல்ப் பண்ண போய் தானே இது எல்லாம் நடந்துச்சு பின்னாடி நாங்க இருக்கோம்னு தெரிஞ்சா பண்ணு இல்ல தானே எதுவும் நினைக்காத டா..."

"இல்ல திலீப் கஷ்டமா இருக்கு இப்ப அந்த பொண்ணு புருஷன் கூட இல்லாம தனியா கஷ்டப்படுறத பாக்கும் போது என்னமோ மாதிரி இருக்கு டா..."

"சரி வா உள்ள போலாம்..."என அழைத்து சென்றான்..

சாரு முன் தர்ஷினி நிற்க சாரு தர்ஷினி குழந்தையுடன் விளையாடி கொண்டு இருந்தாள்...

"தர்ஷினி உட்காருங்க ஏன் நிக்கிறீங்க..."

தர்ஷினி தயக்கத்துடன் அமர்ந்தான்...

"சங்கடம் வேணாம்..."என்றதும் மெலிதாய் சிரித்தாள்

திவாகர் தாவணியை பார்த்து "யாரு இது..."என கண்ணால் கேட்க...

"சொல்றேன்..."என சைகை செய்தாள்...

சாரு நிமிர்ந்து பார்க்காமலே "எப்படி இருக்கீங்க தர்ஷினி..."என்று கேட்க...

"நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க எத்தனை மாசம்..."

"அஞ்சு..."

என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக இருக்க...

"தர்ஷினி நீங்க இப்ப எங்க இருக்கீங்க..."

"திருச்சி நல்ல வேலை கிடைச்சது இங்க இருக்க கூடாதுனு கிளம்பிட்டேன்..."

"சென்னைல இருந்து ஏன் போனீங்க எல்லாரும் அங்க இருந்து இங்க வருவாங்க..."

"எனக்கு சென்னை ஞாபகம் வர கூடாதுனு தான் அங்க போனேன் தனியா இருக்குற மாதிரி இருந்துச்சு அது தான் ஒரு ரெண்டு நாள் லீவ் சொல்லிட்டு ஊரு பக்கம் வந்தேன் எனக்குனு சொல்லிக்க யாரும் இல்ல அனிதா பிரதீப் அண்ணாவ தவிர..."

சாரு புருவம் முடிச்சிட்டு அவளை பார்க்க...

"அப்பா அம்மாக்கு என் மேல கோபம் கிடைச்ச வாழ்க்கைய வாழ தெரியலனு அவன் என்னை விட்டுட்டு போய் அப்புறம் என் தேடி வந்திருந்தா கூட ஏத்துக்கிட்டு இருந்திருப்பேன் ஆனா அவன் பேசுன பேச்சு என்னால மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது என்னால அவன் கூட வாழ முடியாதுனு சொன்னதுக்கு என் அப்பா கூட ஒன்னும் சொல்லல ஆனா என் அம்மா ஆம்பளைங்கனா ஆயிரம் தப்பு செய்வாங்க தான் அதுல இதுவும் ஒன்னும் உன் புருஷன் எத்தனை பொம்பளைய தேடி போனாலும் கட்டுன பொண்டாட்டி புருஷன் கூட இருந்தா தான் டி மரியாதை இது தான் உன்னோட வாழ்க்கை னு சொல்லிட்டாங்க என்னால எதுவும் பண்ண முடியாதுனு நினைச்சாங்களோ என்னவோ அவன் பேசுனத மன்னிக்க முடியல அத மறந்து அவனோட எப்படி வாழ்வேன் சத்தியமா உங்களை நா என் கூட பொறந்த அண்ணனா நினைக்கிறேன்..."என திலீப் பை பார்த்த சொன்னதும் இமை மூடி கண்ணீரை அடக்கினான் திலீப்...

தர்ஷனியை அணைத்த தாரணி "அன்னக்கி நடந்ததை நா பார்க்கல ஆனா எல்லாத்தையும் கேள்விப்பட்டேன் இவங்க சொன்னதை விட உன்னோட வார்த்தையில இருக்குற வலிய என்னால உணர முடியுது முடிஞ்சத பேசி உன்னையே நீயே கஷ்டப்படுத்திக்க வேணாம் எதையும் நினைக்காத..."

"அதுக்காக தானே இந்த ஊரை‌ விட்டு போனேன் யாருமே இல்லாம இருக்கேனே நா என்ன தப்பேன் தப்பு பண்ண அவன் நல்லா தான் இருக்கான் தப்பே பண்ணாம நா தண்டனை அனுபவிச்சுட்டு என் குழந்தையோட கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் இங்க வந்ததும் நேர என் அம்மா பாக்க தான் போனேன் என்னை பார்த்ததுமே மூஞ்சில அடிச்ச மாதிரி கதவை சாத்திட்டாங்க என்ன பண்றதுன்னு தெரியாம தான் நம்பிக்கையே இல்லாம தான் நா அனிதாவ பாக்க போறேன் அவளும் என்னை ஒதுக்கிடுவாளோனா பயந்தேன் அப்படி இல்ல அனிதா அமைஞ்ச வாழ்க்கைய நினைச்சு நா சந்தோஷப்படுறேன் பிரதீப் அண்ணா அவளை ரொம்ப நல்லாவே பாத்துக்குறாரு நா இருக்க வந்து நிம்மதியா உட்கரவே ஒரு நாள் ஆச்சு அனிதாவும் பிரதீப் அண்ணாவும் இல்லைனா நா என்ன ஆகி இருப்பேனே தெரியல‌ரொம்ப நன்றி பிரதீப் அண்ணா..."என பிரதீப்பிடம் கை கூப்பி அழுதாள்...

"தர்ஷனி என்ன இது சங்கடமா இருக்கு..."என கையை பிடித்து இறக்கி விட்டான்...

அமைதியா நடப்பதை பார்த்த சாரு "எத்தனை நாள் இப்படியெ இருக்க போற உனக்குனு ஒரு வாழ்க்கை..."என்ற போதே அவள் பேச்சை கத்தரித்து "ப்ளீஸ் சாரு என்னை மன்னிச்சுடு என்னால் முடியாது என் வாழ்க்கையில் இன்னொருத்தனை கொண்டு வந்தா எனக்கு அவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு எனக்கு என்‌ பொண்ணு என்‌ பொண்ணுக்கு நா இது தான் என்னோட வாழ்க்கை இப்படியே இருந்துட்டு போறேனே இது கூட நல்லா இருக்கு single parent ஹ இருக்குறது ரொம்ப கஷ்டம்னு சொன்னாங்க கஷ்டம் தான் அதுலேயும் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கும்..."என மெலிதாய் தர்ஷினி புன்னகைக்க 

திலீப் வலிகள் நிறைந்த பார்வையோடு அவளை பார்த்தான்...

தொடரும்...

# nancy