ரணமாய் - 34
"நா கிளம்புறேன்..."என்றவளை அனைவரும் வெறித்தனர்...
"என்ன ஆச்சு ஏன் அப்படி பாக்குறீங்க..."என்று கேட்ட தர்ஷினியிடம் "எங்க போற..."என்றான் பிரதீப்...
"ஊருக்கு தான் வேற எங்க போக முடியும்..."
"ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போலாம் தர்ஷினி..."
"நான் லீவு சொன்னதே ரெண்டு நாள் தான் அதுவே முடிஞ்சு போச்சு நான் கிளம்புறேன் இன்னொரு டைம் வரேன்..."என்று தன் குழந்தை சாருஷாவை அழைத்து கிளம்ப...
"ஒரு நிமிஷம் தர்ஷினி..."என்றதும் திரும்பி பார்க்க அவள் அருகில் வந்த சாரு "உங்களுக்கு என் மேல கோவம் இல்லையா..."
"எதுக்கு கோவப்படணும்..."
"இல்ல உங்களோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம் தானே..."
"அப்படி நீங்க நினைச்சா அது உங்க தப்பு அவனுக்கு பழைய ஞாபகங்கள் எதுவுமே இல்லனு தெரிஞ்சும் அவர கல்யாணம் பண்ணிக்கிட்டது என் தப்பு இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கு என்ன கனவா வந்து சொல்லுச்சு அவனோட கடந்த கால வாழ்க்கையில நீங்க இருக்கீங்கன்னு..."
"இருந்தேன் பிழை திருத்தம் இப்ப இல்ல யாரும் இல்லை நினைக்க வேண்டாம் ஒவ்வொரு லீவுக்கு இங்க வாங்க உங்களுக்காக இங்கே ஒரு குடும்பம் இருக்காங்க..."என அவளை அணைத்து கொள்ள...
அவள் வயிற்றை தொட்டு பார்த்து "குழந்தை பிறந்ததும் சொல்லு நான் வந்து பார்க்கிறேன்..."
"கண்டிப்பா..."
"நா வரேன்..."என கிளப்பி சென்றிட
அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்த திவாகர் தாரணி தோள்பட்டையை சொரிந்து "Who is she..."
"தர்ஷினி.."
"அது தெரியுது ஆனா யாரு..."
"சாரு ex-lover wife..."
"What..."என சாருவையும் திலீப்பையும் பார்த்திட அவர்கள் தங்கள் வேலையை செய்தனர்...
"இல்ல புரியல சாருவோட ex-lover wife எதுக்கு சாருவை பாக்க வந்தா..."
"அவ சும்மா தான் வந்தா..."
"அந்த பொண்ணு பேசினத வச்சு பார்த்தா உங்க ஹஸ்பண்ட் கூட இல்ல போல..."
"ஆமா கொஞ்சம் பிரச்சினை..."
"சாருவ வச்சா..."
"அப்படின்னு சொல்லலாம் ஆனா சாறு தான் காரணம் சொல்ல முடியாது..."
"ரொம்ப குழப்புற..."
"இவ்ளோ பிரச்சனை எங்களாலேயே புரிஞ்சுக்க முடியல தெரியாத உங்களுக்கு எப்படி புரியும்..."
"ஒன்னு சொல்லு இல்ல விட்டுடு ஏன் இப்படி..."
"நா சொல்றேன் திவா..."என வயிற்றை பிடித்து கொண்டு சோஃபாவில் அமர்ந்த சாரு "உங்களுக்கே நல்லா தெரியும் நான் தாரணி திலீப் பிரதீப் அப்புறம் பிரதீப் வைஃப் அனிதா எல்லாம் ஒரே காலேஜ் தான் அப்போ திலிப் என்ன ஒன் சைடா லவ் பண்ணிட்டு இருக்காரு அது எங்க யாருக்குமே தெரியாது பிரதீப் தவிர...."என நடந்ததை சொல்ல
கண் முடி அமர்ந்திருந்த திலீப் "தப்பு என் மேல தான் எல்லாத்துக்கும் காரணமும் நா தான் இப்ப அந்த பொண்ணு தனியா அவஸ்தைப்படுறது என்னால தான் என்னோட சுயநலத்துக்காக எத்தனை பேரோட வாழ்க்கை போச்சு..."
"ப்ச் திலீப் அப்படி நினைக்காதீங்க..."
"தர்ஷினிக்கு ஏதாவது நல்லது நடக்கனும் அன் மனசுக்குள்ள அது ஒன்னு உறுத்திக்கிட்டே இருக்கு..."
"எனக்கு ஒரு சந்தேகம்..."என திவாகர் மெதுவாய் கை தூக்கி "அந்த பையன் அதாவது சாருவோட முன்னால் காதலன் என்ன ஆனான்..."
"அத நா சொல்றேன்..."என பிரதீப் அவன் பக்கத்தில் அமர்ந்து "அன்னக்கி நடந்த பிரச்சினைல திலீப் அவன் கழுத்தை நெருக்கி கொன்னு இருப்பான் பாவி எப்படியோ அவனை காப்பாத்துனா திமிரெடுத்தவன் அப்பவும் அடக்கல..."என்று அன்றைய நிகழ்விற்கு சென்றான்...
திலீப் கோவத்தில் அஸ்வின் கழுத்தை இறுக்கி கொண்டே இருக்க பிரதீப் இருவரையும் கடினப்பட்டு பிரித்து விட்டான்...
"அவன் செத்துடுவான் டா..."என பிரதீப் திலீப்பை தள்ளி விட
"அவன்..."என ஏதோ சொல்ல வர
"நீ இருக்கற வரைக்கும் எனக்கு பிரச்சினை தான் டா நீயா போயிட்டா உனக்கு நல்லது இல்ல ஒரு தடவ எனக்கும் என் சின்னும்மாவுக்கு இடையில வந்து பிரிச்சது போதும் மரியாதையா போயிடு..."என்று கத்திய அஸ்வினை ஆத்திரத்துடன் சாரு தள்ளி விட்டதில் தடுமாறி விழுந்து விட்டான்...
சாருவிற்கு கோவமும் அழுகையும் கலந்திட பின்னால் நகர்ந்தவன் திலீப் மேல் மோத அவன் பிடித்து கொள்ள திரும்பி அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்...
விழுந்து எழுந்த அஸ்வின் "வேணாம் சாரு என் கூட வந்துடு அய்யோ அவனை கட்டி பிடிக்காத டி என்னால பாக்க முடியல கஷ்டமா இருக்கு டேய் அவளை விடு டா முத சாரு நீயா டி இது நா நா உன் அஸ்வின் டி என்னை பாக்க கூட மாட்ற சொன்னா கேளு டி அவன் வேணாம்..."
"அய்யோ..."என காதை பொத்தி கொண்டு அங்கே அமர்ந்து "உன்னை தெரியாம காதலிச்சுட்டேன் ஏன் இப்படி இம்சை பண்ற மறுபடியும் என்னால முடியாது என்னை விட்டு போ..."என தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டி "நல்லா பாரு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு இவரு தார் என்னோட புருஷன் அவன் என் குழந்தை எனக்கும் திலீப்க்கும் பொறந்த குழந்தை என்னோட பையன் நா சந்தோஷமா தான் இருக்கேன் என் குடும்பத்தோட மறுபடியும் நீ வராம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு தோணுது..."என கத்தியவள் மூச்சை இழுத்து விட்டு நிதானமாகி அஸ்வினை நெருங்கி தயக்கத்தோடு அவன் கையை பிடித்து "புரிஞ்சுக்கோ அஸ்வின் எல்லாம் முடிஞ்சிடுச்சு இது தான் என்னோட வாழ்க்கை அது தான் உன்னோட வாழ்க்கை..."என தர்ஷினியை காட்டி "I know நீ தர்ஷினிய கல்யாணம் பண்ணும் போது யாரோவா இருந்த but நா தெளிவா தான் இருந்தேன் முழு மனசோட தான் திலீப் ஹ கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அவர் என்னைய நெருங்கும் போது முழுசா ஏத்துக்கிட்டு உன்னோட காதலிய நா அவர் கூட வாழல அவரோட மனைவியா தான் வாழ்ந்து இருக்கேன் இப்ப கூட நீ நா காதலிச்சு அஸ்வின் இல்ல இன்னொருத்தியோட புருஷன் எனக்கு புரியுது உன்னோட கஷ்டம் இது தான் உண்மை நீ காதலிச்சு சாருமதி இப்ப இல்ல சாருமதி திலீப் என் குழந்தைக்கு உன் பேரோட பாதி தான் வச்சு இருக்கேன் ஆனா அப்பா திலீப் தான் அஸ்வத் திலீப் நீ என்னை உண்மையா காதலிச்சிருந்தா என்னை விட்டு போயிடு உன்னையே கெஞ்சி கேட்குறேன்..."என கை கூப்பி மண்டியிட்டு அழுதவளை கண்டு கண் கலங்கி பின்னால் நகர்ந்தான் அஸ்வின்...
தொடரும்...
# nancy
0 Comments