ரணமாய் - 36

அதிர்ந்து போய் வாயை பிளந்து கொண்டு அமைந்திருந்தான் திவாகர்...

"செத்துட்டானா..."என சற்று சத்தமாகவே கேட்டு அவளை பார்க்க அவன் வாயை பொத்திய தாரணி "ஏன் கத்துறீங்க மெதுவா பேசுங்க..."என்க அவள் கையை எடுத்து விட்டு மெதுவாக "செத்துட்டானா..."என்றிட 

தாரணி மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்...

"அட அப்புறம் தலையில அடிச்சுக்கலாம் நீ சொல்லு நல்லா இருக்கு..."

"ஏதே நல்லா இருக்கே நா என்ன கதையா சொல்றேன் என்னங்க ஆச்சு உங்களுக்கு ஆளே வேற மாதிரி இருக்கீங்க..."என வருத்தத்துடன் அவனைத் தொட்டு பார்க்க..

"எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் எப்படி செத்தான் அவன்..."

பெருமூச்சு விட்டு "ஆக்சிடென்ட்..."என்றிட...

"உனக்கு எப்படி தெரியும்..."

"இது நடந்த ஒரு ரெண்டு மாசம் இருக்கும் அன்னக்கி நானும் திலீப்பும் எதார்த்தமா தான் பாத்துட்டோம் பக்கத்துல ஒரு காபி ஷாப் சரி ஒரு காபி குடிக்கலாம்னு போனோம் ரொம்ப நேரம் உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தோம் பில் பே பண்ணிட்டு கரெக்டா வெளியே வந்தோம் ரோடு அந்த இடத்துல அங்க ஒருத்தன் குடி போதையில் தாடி எல்லாம் வளர்த்து ஆளு அடையாளம் தெரியாமல தள்ளாடிக்கிட்டு ரோட்டை கிராஸ் பண்ணான் அவனோட நேரம் சரி இல்ல போல ஒரு லாரி வேகமா வந்துச்சு போதையிலும் அவன் அதை பாத்துட்டான் லாரி கிட்ட இருந்து தப்பிக்கிறதுனு பின்னாடி நகர்ந்தான் ஒரு வேன் அவன் மேல் மோதிடுச்சு பறந்து போய் இன்னொரு வேன் மோதி விழுந்தான் அங்கே அவனும் காலி நாங்களும் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு அப்படின்னு தான் பாத்துட்டு இருந்தோம் எனக்கு தான் அவன உத்து பாக்க எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு யோசனையிலேயே தான் அவன் பக்கத்துல போய் பாத்தேன் அது அஸ்வின் சத்தியமா சொல்றேன் திவா அவனை சுத்தமா அடையாளம் தெரியாத ஆளே ஒரு மாதிரி இளைச்சு கறுத்து போய் தாடியும் மீசையும் வளர்ந்து வெட்டாம பிச்சைக்காரன் கூட நல்லா இருப்பான் அவ்ளோ கேவலமா இருந்தான் அவன் இறந்துட்டான்னு என் மண்டைக்கு ஏர்றதுக்கு முன்னாடி என்ன டா இது ஆளே மாதிரிட்டான்னு தான் தோணுச்சு அப்புறம் தான் அவன் இறந்துட்டான்னு நினைப்பு வந்துச்சு நான் சொல்லி தான் திலீப்பும் அவனை பாத்தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா முடிஞ்ருச்சுனு சொல்லிட்டாங்க அவன் தப்பு பண்ணி இருக்கலாம் இருந்தாலும் உயிர் இல்லையா மனசு கேட்கல அவனோட அப்பா அம்மாவ தேடி போனேன் அஸ்வின் இறந்தத சொல்லாம அவனை பாக்கனும்னு கேட்டேன் அவன் செத்துட்டான் எங்களை பொறுத்தவரைக்கும் அவனை தேடி இனி இங்க வராத அவனோட அப்பா தான் சொன்னா ஆனா அவன் அம்மா அவன் உண்மையா செத்து இருந்தாலும் பரவால்ல ஒரு பெண்ணை ஏமாத்தவன் இருக்கணும்னு அவசியம் இல்லனு சொல்லிட்டாங்க அவங்க என்னை பேசவே விடல நான் எவ்வளவோ முயற்சி பண்ணியும் அவங்க என்னை பேச விடாம அவங்களே பேசி என் வாயை அடக்க பாத்தாங்க ஒரு அளவுக்கு மேல பொறுக்க முடியாம கத்திட்டேன் உண்மையா உங்க பையன் இறந்துட்டான் பிணமா ஹாஸ்பிடல் கிடக்காரன்னு சொன்னேன் உங்க முகத்தில் இந்த உணர்ச்சியும் இல்லை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக சொன்னாங்க கூட்டிட்டு போய் காட்டுனேன் அவங்க முகத்துல எந்த உணர்ச்சியும் இல்லை உசுரு இல்லாத அந்த உடம்பு பாத்துக்கிட்டே இருந்தாங்க ஃபார்மாலிட்டி எல்லாத்தையும் முடிக்க சொன்னாங்க நாங்களும் பக்கத்துல இருந்து முடிச்சு கொடுத்தோம் பாடி எடுத்துட்டு போய் எரிச்சிட்டாங்க யாருக்குமே சொல்லல ஏன் அவங்க சொந்தக்காரர்களுக்கு கூட பையன் இறந்துட்டான்னு சொல்லல அவங்க ரெண்டு பேருமே இருந்து காரித்தை முடிச்சிட்டாங்க கூட நானும் திலீப்பும் மட்டும் தான் இருந்தோம் எங்க நாலு பேரை தவிர வேற யாருக்குமே அஸ்வின் இறந்தது தெரியாது அவன் அப்பா அம்மா எங்க கிட்ட கேட்டுகிட்ட ஒரே விஷயம் இவன் இறந்த விஷயத்த யாருக்கும் சொல்ல வேண்டாம் முக்கியமா தர்ஷினி கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டாங்க இவனால அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டுட்டா தனியா சந்தோஷமா வாழட்டும் இவன் இறந்துட்டான்னு பூவும் பொட்டும் இழக்க வேண்டாம் தனியா இருக்கிற அந்த பொண்ணுக்கு அது தான் பாதுகாப்பு அவங்க அப்பா அம்மா அந்த பொண்ண ஏத்துக்கல இங்கேயும் அந்த பொண்ணு வரமாட்டா கண்டிப்பா அந்த பொண்ணால இங்க சந்தோஷமா இருக்க முடியாது அதனால தான் நாங்களும் வற்புறுத்தி வர சொல்லல கட்டுண புருஷன் கூட இல்லாம அதுவும் ஒரு விதவை ஒரு சின்ன பொண்ணை வச்சுக்கிட்டு தனியா வாழ்றது எவ்ளோ கஷ்டம் இந்த ஊர் உலகம் அந்த பொண்ண நல்லா வாழ விட்டுடுமா அந்த பூ பொட்டு இருந்தா கூட அவ புருஷன் ஏதோ வெளிநாட்டுல வேலை பாக்குறதா சொல்லிக்கலாம் இந்த பாவியால பட்ட கஷ்டம் போதும் அவன் பண்ண பாவத்துக்கு இந்த ஜென்மத்துல அவனுக்கு தண்டனை கிடைச்சிருச்சு போதும் நாங்களும்  இந்த ஊரை காலி பண்ணிட்டு வேற எங்கயாவது போய்விடுறோம் கையெடுத்து கும்பிட்டு போய்ட்டாங்க அது தான் நாங்க அவங்களையும் கடைசியாக பார்த்தது அடுத்த நாள் அவங்களை பாக்க போனோம் யாருமே இல்ல ராத்திரியோட ராத்திரியா காலி பண்ணிட்டு போயிட்டாங்கனு பக்கத்துல சொன்னாங்க நாங்களுக்கு ஒரு மாசமா தேடி பாத்தோம் கிடைக்கல என்ன பண்றது அப்படியே விட்டாச்சு திலீப் இத பத்தி சாரு கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டான் ஏற்கனவே குற்றவுணர்வுல இருக்கா இதுவும் தெரிஞ்சா அவ்ளோ தான் தாங்க மாட்டானு சொன்னான் எனக்கும் அது தான் சரின்னு தோணுச்சு ரெண்டு மாசம் ஆச்சு நீங்க தர்ஷினிய பாத்தீங்க தானே கஷ்டப்பட்டாலும் சந்தோஷமா தான் இருக்கா சாரு நல்லா இருக்கா தேவை இல்லாம இத சொல்லி எதுக்காக அந்த சந்தோஷத்தை கெடுக்கனும்னு தான் மறச்சோம் தயவுசெய்து இத பத்தி சாரு கிட்ட சொல்லாதீங்க..."என்று சொல்லி முடிக்க 

திவாகர் யோசனையாய் பார்த்தான்...

"என்ன ஆச்சுங்க..."

"தப்பில்லை தாரணி..."

"நல்ல விசயத்துக்கு பொய் சொல்லலாம்..."

கதவை தட்ட...

"உள்ள வந்து ரொம்ப நேரம் ஆச்சு அவங்க என்ன நினைப்பாங்க..."என திவாகர் எழுந்து போய் கதவை திறக்க திரும்பி நின்ற பிரதீப் "என்ன சகோ disturb பண்ணிட்டேனா..."

என நக்கலாக கேட்டிட...

"அப்படி இல்ல சகோ வந்து..."என இழுக்க "நீங்க வாங்க அவனுக்கு வேற வேலை இல்ல..."என அவன் கையை பிடித்து பிரதீப்பை தள்ளி விட்டு வெளியே செல்ல 

"எனக்கு வேலை இல்லையா நீ நடத்து நடத்து பட்டபகலிலேயே புருஷனை கூட்டிட்டு ரூம்க்குள்ள போய் கதவை அடைவ தானே நீ..."என்க வேகமாய் அவன் அருகில் வந்து வாயை பொத்தி "ஏன் டா மானத்தை வாங்குற நா என் புருஷனை தானே டா கூட்டிட்டு போனேன்..." 

"அதுக்கு நாங்க எல்லாரும் இருக்கும் போதா இப்படி பண்ணுவ..."என தாரணியை வம்பிழுத்து கொண்டு இருந்த பிரதீப் தலையில் ஒரு அடி வைத்த திலீப் "நீ வா தாரணி அவனுக்கு வேற வேலை இல்ல..."என கூட்டி செல்ல...

தலையை தடவி கொண்டு "சரி தான் எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்க நடத்துங்க.."என புலம்பிய பிரதீப் தோளில் கை போட்டு "வா சகோ பேசிக்கலாம்..."என்று சந்தோஷமாக இருந்தனர் 

நாட்கள் ஓடியது...

பிரசவ அறையில் அலறி கொண்டு இருக்கும் தன்‌ மனைவியின் குரல் கேட்டு காதை பொத்தி கொண்டு கண்ணை மூடி அமர்ந்திருந்தான் திலீப்..

பிரதீப் தாரணி திவாகர் மூவரும் காத்திருக்க பிரசவ அறையில் இருந்த வந்த டாக்டர் புன்னகையுடன் "பெண் குழந்தை..."என்றிட அங்கே சந்தோஷம் பரவியது 

சின்னதாய் மேடிட்டு இருந்த தாரணி வயிற்றை தொட்டு திவாகர் "குட்டி அக்கா பொறந்து இருக்கா உனக்கு..."என்றான்...

வார்டுக்கு மாறியதும் முதலில் திலீப் சாருவை தான் பார்த்தான் அவள் கையை பிடித்து கொண்டு "பொண்ணு பொறந்து இருக்கா..."என சொல்ல "ஆமா பொண்ணு..."என கன் கலங்க‌ அவள் நெற்றில் முத்தமிட்டான்...

"டேய் அங்குட்டு போய் லவ் பண்ணுங்க டா நாங்க எங்க குட்டிமாவ பாக்கனும்னு..."என பிரதீப் குழந்தை தூக்கி கொஞ்ச தாரணி அவன் முதுகில் அடித்து "அவன் கிட்ட குழந்தைய கொடு டா..."என்றிட அவனும் திலீப் கையில் குழந்தையை கொடுக்க 

குழந்தையை கையில் ஏந்தியதும் திலீப் சாரு விடம் குழந்தையை காட்டிட புன்னகையுடன்  அவள் பார்த்திட திவாகர் கையை பிடித்திருந்த அஸ்வத் கட்டிலில் ஏறிய திலீப் முதுகை கட்டி கொண்டு எட்டி குழந்தையை பார்த்திட அந்த காட்சியை புகைப்படமாக எடுக்க அழகாய் அமைந்தது...

சுபம்...