சிறு கதை
போட்டி
ஒரு ஜூவுல மூன்று நெருங்கிய நண்பர்கள் சந்திக்குறாங்க...
இதுல மூன்று பேரும் வேறு வேறு வேலைகளை பார்ப்பவர்...
சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியர், அக்ரிகல்ச்சர் ஆகிய வேலைகளை செய்பவர்கள் ஓரு நாள் ஒரு ஜூவுல மீட் பண்ணாங்க...
மூன்று பேரும் பள்ளி பருவத்தில் கிளாஸ் மேட்...இதுல ஒருத்தன் நம்மளல யாரு பெஸ்ட்னு ஒரு சின்ன போட்டி வெச்சுப்பார்க்கலாம்னு முடிவு பண்ணார்கள்... மூன்று பேரும் அங்க ஒரு குரங்கு இருந்ததை பார்த்து அதை சிரிக்க வைக்கலாம் னு முடிவா இருந்துச்சு...
முதல்லா சிவில் இன்ஜினியர் அந்த குரங்கிடம் சென்று பேசியே சரிக்கட்டுற திறமையை பயன் படுத்தி நகைச்சுவையா சொன்னான்........குரங்கு அசையவே இல்ல....
அடுத்து எலக்ட்ரிகல் இன்ஜினியர் கோமாளி மாதிரி சேட்டைபண்ணி காட்டுனான். சைகையையும் காட்டுனான். ம்ஹூம்..குரங்கு கொஞ்சம் கூட ரியாக்சன் காட்டவே இல்ல....
அடுத்து அக்ரிகல்ச்சர் அவர் குரங்கு பக்கத்துல போய்காதுல என்னமோ சொன்னான். உடனே குரங்கு பயங்கரமா சிரிக்க ஆரம்பித்தது...
மற்ற இரண்டு பேருக்குமே ஆச்சரியம், இருந்தாலும் தோல்வியை ஒத்துக்காம, சரி இன்னொரு ரவுண்டு வெச்சுக்கலாம்.ஆனால் இந்த தடவை குரங்கை அழ வைக்கனும்னு முடிவு பண்ணார்கள்...
மறுபடியும் முதலில் சிவில் இன்ஜினியர் தனக்கு நடந்த சோகமான உருக்கமான விஷயங்களை குரங்கிடம் சொன்னான்...குரங்கோ கண்டுக்கவே இல்லை.
அடுத்து எலக்ட்ரிகல் இன்ஜினியர் வேலை செய்பவர் அழுகுற மாதிரி குரங்கிடம் ஆக்ட் பண்ணி காட்டுனான். அதையும் குரங்கு சட்டை பண்ணவே இல்லை...
இறுதியாக அக்ரிகல்ச்சர் வந்து மறுபடியும் குரங்கின் காதில் போய் என்னமோ சொன்னான். உடனே குரங்கு ஓன்னு அழ ஆரம்பிச்சிடுச்சு...
இரண்டு பேருக்கும் மறுபடியும் அதிர்ச்சியாக இருந்தது, இதையும் இரண்டு பேரும் தோல்வியை ஒத்துக்காம கடைசியாக ஒரு டெஸ்ட் வெக்கனும்னு முடிவு பண்ணாங்க. இந்த தடவை குரங்கை ஓட வைக்கனும்னு சொல்லிட்டாங்க...
வழக்கம் போல சிவில் இன்ஜினியர் முதல்ல வந்தான். குரங்க பார்த்து குரைச்சான் . பய முறுத்துனான். எந்திரிச்சி ஓடுன்னு கெஞ்சிப்பாத்தான். வழக்கம் போல குரங்கு பாட்டுக்கு பேசாம உக்காந்திருந்தது...
எலக்ட்ரிகல் இன்ஜினியர் வந்து குரங்கை பிடித்து தள்ளிவிட்டான். விரட்டி பார்த்தான். குரங்கு அசரவே இல்ல...
அக்ரிகல்ச்சர் இந்தவாட்டியும் குரங்கு காதுல போய் என்னமோ சொன்னான். அதைக் கேட்டதும் உடனே குரங்கு தலைதெறிக்க ஓடி போய்டுருச்சு....
கடைசியா வேறவழி இல்லாம இரண்டு பேரும் தன் தோல்விய ஒப்புக்கிட்டாங்க. சிவில் இன்ஜினியர் அப்படி குரங்கு காதுல என்ன தான் சொன்னேன்னு கேட்டானுங்க.
அக்ரிகல்ச்சர் சொன்னான்.
முதலில் நான் குரங்கிடம் விவசாயத்தில். வேலை செய்றேன்னு சொன்னேன், உடனே சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு,
அடுத்து என்னோட சம்பளத்த சொன்னேன், அது அழுதுடுச்சு.
கடைசியா விவசாயத்தில் வேலைக்கு ஆள் எடுக்கதான் இங்க வந்திருக்கேன்னு சொன்னேன்........ அது ஓடியே போய்டுச்சி.....
முற்றும்...
#Ram krs
0 Comments