முயற்சி
ஒரு குட்டி தீவில் பல கிளிகள் வசித்து வந்தன. ஒரு நாள் அந்த கிளிகளுக்குள்ள ஒரு பந்தயம் நடத்தின...
தொலை தூரத்தில் ஒரு தீவு இருந்ததது . அந்த தீவுக்கு யார் அங்கு செல்வார்கள் என்று போட்டி...
நூற்றுக்கணக்கான கிளிகள் இறக்கைகள் விரித்து பட பட பறக்க தொடங்கின...
சிறிது தூரம் பறந்து சென்று பின்பு சில கிளிகளுக்குள் தெரிந்து விட்டது...இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.
முடியவே முடியாது” கிளிகளுக்குள்ள ஒரு கூட்டம் சிறிய தூரத்தில் சில நிமிடங்களில் விலக தொடங்கின..
இன்னும் கொஞ்ச தூரம் பறந்ததும் மீதி இருந்த சில கிளிகள் கணிசமான விலகி கொண்டது... இன்னும் சிறிய தூரத்தில் போனால் கீழ தண்ணீர் ல விழுந்து மீன்களுக்கு இறையாகிடுவோம் என கீச் கீச் கத்தி பேசிட்டே திருப்பி சென்றது...
ஒரே ஒரு கிளிகள் மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பட பட பறந்து முன்னேறிக் கொண்டே இருந்தது...
சிறிது தொலைவில் இருந்த கிளிகள் எல்லாம் கீச் கீச் சத்தம் கேட்டது போட்டன...
இன்னும் போனால் திரும்ப வர முடியும் கீழே தண்ணீர் இருக்கு சொல்லியது...
எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் புதிய தீவில் உள்ள ஒரு மரத்தை அடைந்தது...
எல்லா கிளிகளுக்கும் ஆச்சரியம் எப்படி இந்த சிறிய கிளியால் மட்டும் ஜெயிக்க முந்தது என்று??
அந்த சிறிய கிளியின் சகோதரர் ரகசியத்தை போட்டு உடைத்தான்...
அவனுக்கு காது கேட்காது என்று...
நாமும் சில சமயங்களில் இப்படி தான் இருக்க வேண்டும்..
வெற்றியை நோக்கி செல்லும் போது யார் எது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது..
நம்மை சிதைக்க எப்பேர்ப்பட்ட மோசமான நிகழ்வுகளை சொன்னாலும் நாம் எதையும் பொருட்படுத்தக் கூடாது..
ஆறு நீரோட்டம் போல முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்...
சில சமயங்களில் தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை....
முற்றும்.
0 Comments