நேசம் என்னிடம் - 34
ரெண்டு வருடங்களுக்கு பிறகு....
நண்பர்கள் சூழ்ந்துள்ள அந்த இடத்தில் முகம் முழுவதும் சந்தோஷம் நிறைந்து இருக்க...
குரு மேகா கழுத்தில் தாலி கட்டினான்...
வம்சியும் இஷாவும் மலர்கள் தூவ... நாகராஜ் மலர் தூவ... அவன் அருகில் இருந்த ஒரு பெண் நாகராஜ் கையை பிடித்து கொண்டு மலர் தூவினாள்...
குருவும் மேகாவும் எழுந்து வந்து மேகா அப்பா காலில் ஆசிர்வாதம் வாங்க...
மேகா அப்பா : "நல்லா இருங்க... நல்லா இருங்க... எப்பவும் சந்தோஷமா இருக்கனும்..."என்று குரு கையை பிடித்து "தாய் இல்லாத பொண்ணு பா... எதாவது தப்பு பண்ணா மன்னிச்சுக்கோ பா....மேகா மேல கோவப்படுறாத பா..."என்று சொல்ல...
குரு : அய்யோ இல்ல மாமா... ரெண்டு வருசமா மேகா வ எனக்கு தெரியும்... நா பாத்துக்கிறேன்... நீ கவலைப்படாதீங்க...
மேகா அப்பா : செல்லமா வளர்த்துட்டேன்...
குரு : "அதனால என்ன மாமா... நானும் செல்லமா வச்சுக்கிறேன்..."என்று அவள் கையை பிடிக்க...
மேகா கண் கலங்க...
குரு : என்ன டி...
மேகா : "ஒன்னும் இல்ல..."என்று சிரித்து கொண்டே கண்ணை துடைத்தாள்...
இஷா சிரித்து கொண்டே "Mr.Snake எப்போ நீ ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்க..."என்று கேட்க...
நாகராஜ் : அய்யோ இஷா அக்கா... இப்ப தான் நாங்க love பண்ண ஆரம்பிச்சோம்... அதுக்குள்ள எப்படி... கொஞ்சம் நாள் அப்படியே Jolly இருக்கோமே...
இஷா : டேய் உன் கிட்ட பல தடவ சொல்லிட்டேன்... என்னைய அக்கா னு சொல்லாத னு...
நாகராஜ் : அது என்னமோ தெரியல அக்கா... அக்கா தான் சொல்ல வருது இஷா அக்கா...
இஷா : "அச்சோ..."என்று தலையில் 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️கை வைத்தாள்...
வம்சி : ஏன் டா... சும்மா இருக்க மாட்ட...
குரு : இஷா...
இஷாவும் வம்சியும் திரும்ப...
குரு இஷா வை கட்டி 🤗🤗🤗 கொண்டான்...
இஷா அவன் முதுகை தடவி கொடு " என்ன டா... Happy ஹ..."என்று கேட்க...
குரு : ம்ம்ம்...
வம்சி : வாழ்த்துக்கள் டா குரு...
குரு : Thanks டா... அனாதையா இருந்த எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருக்கீங்க... ரொம்ப நன்றி டா...
இஷா : மேகா இவனை நாலு அடி போட்டுக்கவா...
மேகா : எதுக்கு கேட்குறீங்க... போடுங்க நல்லா...பேசுற பேச்ச பாரு...
குரு : உண்மைய தானே சொன்னேன்...
நாகராஜ் : உனக்கு நேரம் சரி இல்ல டா...
குரு அவனை 😠😠😠 முறைத்து விட்டு அவன் அருகில் இருந்த பெண்ணை பார்த்து "அம்மாடி அனிதா உன் வருங்காலத்த கொஞ்சம் வாய் மூடிட்டு இருக்க சொல்லு... இல்ல வழக்கம் போல் தான்... என் கிட்ட நல்லா வாங்கிக்குவான்... அப்புறம் என் கிட்ட கோவிக்க கூடாது..."என்று சொல்ல...
அனிதா சிரித்து கொண்டே "நா எதுக்கு கோவிக்க போறேன்...நீங்களாச்சு உங்க friend ஆச்சு... நீங்க என்ன பண்ணாலும் நா ஒன்னும் கேட்க மாட்டேன்..."என்று சொல்ல...
நாகராஜ் : அடிப்பாவி நா உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் டி... சரி தான் நீயும் அவங்க கூட சேர்ந்துட்ட... நடத்துங்க டா... நடத்துங்க...
அனிதா : எங்க அவங்க சும்மா உங்க கிட்ட வம்பு பண்றாங்க... இதுக்கு போய்..
நாகராஜ் : அவங்க பண்ணாங்க சரி...அப்போ நீ...
அனிதா : நானும் தான்...
நாகராஜ் : "போ நீ பேசாத..."என்று திரும்பி கொள்ள...
அனிதா : "அச்சோ..."என்று அவன் கையோடு கோர்த்து தோளில் சாய்ந்து கொண்டாள்...
சடங்குகள் முடிந்து மணமக்களை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தனர்...
இஷாவும் அனிதாவும் ஆரத்தி எடுத்தனர்...
குருவும் மேகாவும் Sofa வில் அமர்ந்தனர்...
நாகராஜ் : அப்புறம் மச்சான்... Honeymoon எங்க...
குரு : Honeymoon ஹ plan பண்ணலையே...
வம்சி : But நாங்க plan பண்ணிட்டோமே...
குரு : "என்னது நீங்களா... டேய் உங்களுக்கு கல்யாணம் ரெண்டு வருசம் ஆச்சு டா... இப்ப போய்..."என்று இழுக்க...
வம்சி ஒற்றை 🤨🤨🤨புருவத்தை தூக்கி பார்த்து "ஏன் டா நாங்க போக கூடாதா..
ரெண்டு வருசம் ஆனா என்ன... எங்களுக்கு கல்யாணம் மட்டும் தான் டா ஆச்சு..."என்று சொல்ல...
குரு : ரெண்டு வருஷம் ஆச்சே டா...
வம்சி : யாரு இல்ல னு சொன்னது... இஷா முடிவா சொல்லிட்டா...
குரு : என்னது...
வம்சி : "உனக்கு ஒரு நல்லது நடக்குற வரைக்கும் நமக்குள்ள எதுவும் நடக்க வேணாம் னு சொல்லிட்டா..."என்று சலிப்பாக சொல்ல...
குரு : என்ன இஷா இது...
இஷா புன்னகையுடன் "நாங்க நல்லா இருக்கனும் நீ நினைக்கிற...நீ மட்டும் தனியா இருப்ப... நாங்க கல்யாணம் பண்ணி சுத்தனுமா... அதுக்கு தான்..."என்று சொல்ல...
குரு அவனையே பார்க்க...
இஷா : என்ன டா அப்படி உற்று பாக்குற...
குரு : இல்ல... நீ போ... சும்மா தான் பாத்தேன்...
இஷா : "என்னமோ சரி இல்ல..."என்று வம்சி யை பார்த்து " அவங்களும் Room Ready பண்ணனும்... எழுந்திரி..."
வம்சி : ம்ம்ம் பண்ணலாம்... முத அவங்களும் பாலும் பழமும் கொடு...
இஷா : நா கொடுத்துக்கிறேன்... நீ போ...
வம்சி : "டேய் நாகராஜா வா போலாம்..."என்று எழுந்து அவனை தேட...
சற்று தள்ளி நாகராஜ் அனிதா தோள் மேல் கை போட்டு பேசி கொண்டு இருந்தான்...
அனிதா...
(அங்க Office ல store room ல work பண்றா... New join one year ஆச்சு... நாகராஜ் ம் அனிதாவும் ரொம்ப பேசிக்கிட்டது இல்ல... ஆனா நாகராஜ் அப்பா அம்மா அவனுக்காக பார்த்த பொண்ணு அனிதா... நாகராஜ் அனிதா photo வ பார்த்த உடனே சரி னு சொல்லிட்டான்...
நாகராஜ் அனிதாவும் கிட்ட எதுவும் சொல்லாம பொண்ணு கேட்டு போனான்... பொண்ணு கேட்டு வந்தது நாகராஜ் னு அவளுக்கு தெரியாது... நாகராஜ் ஐ பார்த்ததும் அதிர்ந்தாள்... நாகராஜ் உடனே சம்மதம் சொல்ல... அனிதாவும் சம்மதம் சொன்னாள்...
மறுநாள் அனிதா office வரும் போது நாகராஜ் அவளை பார்த்து கொண்டே இருக்க...அவள் அவன் அருகில் சென்று ரெண்டு நாள் முன்னாடியே பொண்ணு பாக்க வர்றதா சொன்னாங்க... நீங்க என்னைய இங்க பாத்தீங்களே... ஒரு வார்த்தை நா தான் உன்னையே பாக்க வரேன் சொல்லி இருக்கலாம் ல ஏன் சொல்லல னு கேட்க...
அது சும்மா shock கொடுக்கலாம் னு தான் அப்படி பண்ணேன்... என்னைய உனக்கு பிடிச்சு இருக்கு தானே என்று கேட்க...அவளும் வெட்கத்துடன் ஆமா என்று சொல்லி ஓடி விட்டாள்... இவர்களுக்கு நிச்சயம் முடிந்து ஒரு மாதம் ஆகி விட்டது...இன்னும் மூன்று மாதத்தில் இவர்கள் இருவருக்கு கல்யாணம்...)
வம்சி 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️தலையில் அடித்து கொண்டு அவன் அருகில் சென்று எதுவும் பேசாமல் அவன் இழுத்து செல்ல...
அனிதா அவனையே பார்க்க...
வம்சி : "அம்மாடி உன் வருங்காலத்த ஒன்னும் பண்ண மாட்டேன்... இங்க தான் மாடிக்கு கூட்டிட்டு போறேன்... நீ கொஞ்ச அங்க உட்கார்ந்து இருக்காங்க ல அங்க கிட்டேயும் பேசு... எப்போ இவன் கூடவே பேசிக்கிட்டு... அப்படி என்னத்த தான் பேசுவீங்களோ... தெரியல.."என்று செல்ல...
அனிதா சோகமாக வந்து அவர்களுடன் அமர...
மேகாவும் இஷாவும் அவளை பார்த்து சிரித்தனர்...
அனிதா சினுங்கி கொண்டே "சிரிக்காதீங்க..."என்று சொல்ல...
அவர்கள் இன்னும் அதிகமாக சிரித்தனர்...
மேகாவையும் குருவையும் அறைக்குள் விட்டுட்டு வம்சியும் இஷாவும் வர...
நாகாவும் அனிதாவும் அவர்கள் இழுத்து கொண்டு தனி அறையில் தள்ளி தள்ளிட்டனர்...
வம்சி கதவை தட்ட...இஷா பேசாமல் நின்றாள்...
வம்சி : இஷா என்ன இது...எதுக்கு உள்ள தள்ளி விட்டாங்க...
இஷா கை காட்ட...வம்சி திரும்பி பார்க்க...
அறை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இருந்தது...
நாகராஜ் : "இன்னக்கி உங்களுக்கு சாந்தி முகூர்த்தம் தான்..."என்று வெளியே இருந்து கத்த...
வம்சி : இது எப்போ பார்த்த வேலை டா...
நாகராஜ் : "இதற்கு காரணம் நான் அல்ல... குரு... அவன் தான் என்னைய தனியா கூட்டிட்டு போய் இப்படி பண்ண சொன்னான்... நீங்க உங்க life ஹ start பண்ணுங்க... நாங்க எங்க feature பத்தி discuss பண்றோம்..."என்று சென்று விட்டான்...
வம்சி இஷா அருகில் செல்ல...
குரு மேகா நோக்கி செல்ல...
நாகா அனிதா தோளில் கை போட...
முதல் தளத்தில் வம்சியும் இஷாவும் தங்கள் வாழ்க்கையை தொடங்க...
ரெண்டும் தளத்தில் குருவும் மேகாவும் தங்கள் பயணத்தை பயணிக்க...
மாடியில் நிலவொளி தங்களை வாழ்க்கை எப்படி நகர்த்துவது என்று பேசி கொண்டு இருந்தனர் நாகாவும் அனிதாவும்...
இஷா பழைய படி அதே வேலைக்கு சென்றாள்...
அவளை பார்த்த அனைவரும் சந்தோஷம் அடை...
இஷாவின் விருப்பப்படியே வம்சியும் இஷாவும் தங்களுக்கு திருமணம் ஆனதை அனைவருக்கும் தெவித்தனர்...
அடுத்த மூன்று மாதத்தில் நாகா அனிதாவை தனக்கு சொந்தமாகி கொள்ள...
அந்த நல்நாளில் இஷா தான் கர்ப்பமாக இருப்பதை சொல்ல...
இரட்டிப்பு சந்தோஷத்தில் அனைவரும் இருக்க...
மேகா கவலை கொண்டாள்...அதை கவனித்த இஷா ஆதரவாக கை பிடித்தாள்...
இஷாவின் வளைகாப்பு நெருங்கும் நேரத்தில் அனிதா தன் கர்ப்பத்தை சொல்ல...
மேகா சோகத்தில் மூழ்கினாள்...
அனைவரும் அவளை சமாதானம் செய்தனர்...
மேகா வை நினைத்து குரு வருந்தி கொண்டு இருக்க...
இஷாவிற்கு பிரசவ வலி வந்தது...
வம்சி இஷாவிற்கு ஆண் குழந்தை பிறக்க...
அந்த குழந்தை பிறந்த நேரமோ மேகா மயக்கமடைய...
அவளை பரிசோதித்த மருத்துவர் அவள் தாய்மை அடைந்ததாக சொல்ல...
அனைவரும் அளவில்லா சந்தோஷத்தில் இருந்தனர்...
அனிதாவிற்கு பெண் குழந்தை பிறக்க.. அடுத்த மேகாவும் பெண் குழந்தையை பெற்றதாள்...
இப்பவும் குரு தப்பு செய்தால் இஷா உரிமையோடு கண்டித்தாள்...
குருவுடன் இப்போது நாகாவும் சேர்ந்து கொள்ள...
குருவும் நாகாவும் என்ன தப்பு செய்தாலும் அனிதாவும் மேகாவும் உடனே இஷாவிடன் தெரிவிக்க...
இஷா அவள் பாணியில் பேசாமலேயே அவர்களை கண்டித்தாள்...
இருவரும் சோகமாக வம்சியிடம் வர...அவர்களை பார்த்து சிரிப்பான்...
அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக பயணித்தனர்...
சுபம்...
# Nancy...
0 Comments