காதல் போர்க்களம்
தொடர்: 2
ஆர்த்தி, அவங்க தாத்தா அப்பா அம்மா தங்கச்சி கார்ல கிளம்பிட்டாங்க.
ஏன் பா திடீர்னு கோவிலுக்கு போறோம்..
அதுவா இப்போ நாமா போற கோவில் பிரம்மா கோவில் மா..இந்த கோவிலுக்கு போலாம் ன்னு நினைச்சா உடனே போய்ட்டு வந்தரணும்.. நாள் கிழமை பாத்துட்டு இருந்தா அவ்வளவு சீக்கிரம் போக முடியாது அதனால் தான்.
ஆர்த்தி அமைதியா கேட்டுட்டு வந்தா..
அது சரி பா..இப்போ எதுக்கு பிரம்மா கோவிலுக்கு??
ஏய் !! பெரிய மனுஷி மாதிரி கேள்வி கேட்கமா கம்முன்னு கண்ணை மூடி தூங்கு.
ஏம்மா ?? சந்தேகம் கேட்டா திட்டுற.
கோவிலுக்கு போறதுல்ல எல்லாமா சந்தேகம் வரும். அவ உன்னை விட பெரியவ தானே...அவ அமைதியா வரல..நீ மட்டும் ஏன் டி இப்படி வாய் பேசுற..
அவ வாயில பிள்ளை.. நான் வாய் உள்ள பிள்ளை மா..
ஆமாடி தங்கம்..நீ எங்க போனாலும் பிழைச்சுப்ப..ன்னு தாத்தா சிரிக்க..
ஆர்த்தி கம்முன்னு கண்ணை மூடி தூங்கிட்டா..
மத்தா 4 பேரும் பேசிட்டு கொஞ்ச நேரத்தில லைட்டா கண்ணு அசைந்து தூங்கிட்டாங்க.
6 மணிக்கு சரியா கோவிலுக்கு வந்துட்டாங்க..
ஆர்த்தி எழுந்ததும் போனை எடுத்து அசோக் நம்பரை பாக்குறா..அவன் ஆன்லைன் வரவே இல்ல..
காரை விட்டு இறங்கி முகத்தை நல்லா கழுவி..தலை முடியை சரி பண்ணிட்டு சாமி கும்பிட போய்ட்டு சாமியை நல்லா தரிசனம் பண்ணிட்டு வந்தாங்க.
அக்கா...என்ன உம்முன்னே இருக்க..
தலைவலிக்கு டி..
ஓ...சரி கொஞ்சம் கோச்சுக்காம செல்ஃபி எடுக்குறீயா கா..ப்ளீஸ்...
சரி வா...ஆர்த்தியும் முகத்தை சந்தோஷமா வைச்ச மாதிரி அவ குடும்பத்தோட செல்ஃபி எடுத்து ஸ்டேட்ஸ் போடுறா..
ஏம்மா!! இந்த ஹோட்டல் போகலாமா?? பாரு..
இது வேண்டாங்க. சைவம் அசைவம் இரண்டும் இருக்கு.. சைவம் மட்டும் இருக்க ஹோட்டல் லா பாத்து போங்க..
இவங்க சாப்பிட ஹோட்டல் பாத்துட்டு இருக்கும் நேரத்துல.. ஆர்த்தி அசோக் க்கு கால் பண்றா..
ரிங் போது..ஆனா அவன் எடுக்க மாட்டிக்குறான்.
ஸ்சோ...இப்போ நான் யாருகிட்ட இவனை பத்தி கேட்குறது... நார்மல் மெஸேஜ் பண்றா...இப்போ மட்டும் நீ கால் அட்டன் பண்ணாலன்னா இனி எப்பவும் நான் பேச மாட்டேன். இது சும்மா சொல்லல...சாமி சத்தியமா சொல்றேன். இதுதான் லாஸ்ட். ன்னு அனுப்புறா..
ஆர்த்தி!!! என்ன பண்ற...உள்ள வான்னு தன்ராஜ் கூப்பிட
வரேன் பா...உள்ள போறா..
நீங்க சாப்பிடுங்க பா.. நான் ப்ரண்டு கிட்ட பேசிட்டு கை கழுவிட்டு வரேன் ன்னு போறா..
கை கழுவும் இடத்துல இருந்து அசோக் க்கு கால் பண்றா.
அவனும் அட்டன் பண்றான்..
அறிவு இருக்கா இல்லையா?? இது தான் நீ லவ் பண்றதா... எத்தனை கால் பண்ணி இருக்கேன்; பாத்தியா , இல்லையா.. ஏன் டா கை கட் பண்ணி இருக்க.. நான் என்ன அப்படி கேட்டுட்டேன் ன்னு இப்படி என்னை அழ விடுற நீ...
அவன் சைடு இருந்து எந்த சப்தமும் இல்ல..அவன் லைன்னா இருக்கான்னான்னு பாத்துட்டு...ஹாலோ..ஹாலோ .. நான் பேசுறது கேட்குதா..இல்லையா..பேசு டா...
அப்பவும் அமைதி... அசோக்... பேச போறீயா ?? இல்லையா ??
....... அமைதி மட்டும் தான்..
இது தான் கடைசி நான் உன்கிட்ட பேசுறது. பாய்.. எல்லாமே முடிஞ்சு ன்னு கால் கட் பண்ணிட்டா.
கை, முகத்தை கழுவிட்டு சாப்பிட போறா.. ஃபோன் ஆஃப் பண்ணி வைச்சுட்டா..
அதுக்கு அப்புறம் அவங்க சமயபுரம், ஸ்ரீ ரங்கம் பக்கத்தில இருக்கிற கோவிலுக்கு போய்ட்டு நைட் தான் வீட்டுக்கு வராங்க. வந்த உடனே தூங்க போய்ட்டா.
அடுத்த நாள் காலையில ஆர்த்தி சாதாரணமா கிளம்பி போறா..
கேண்டீன்க்கு போகமா நேரா க்ளாஸ்க்கு தான் போறா.
ஹே...என்ன நேத்து சொல்லமா லீவ் போட்டுட்டு கோவில் போய்ட்டா.. ஸ்டேட்ஸ்ல பாத்தேன்...ன்னு சரண்யா கேட்க. ( ஆர்த்தி க்ளாஸ் மேட்)
ஹா... திடீர்னு முடிவு பண்ணது..அதா சொல்லாம போய்ட்டேன்.
சரி சரி..உனக்கு விஷயம் தெரியுமா?? நேத்து அசோக் அவன் கையை கட் பண்ணிக்கிட்டான்.
ஏன் ?? என்ன ஆச்சு??
ஏன்னு தெரியலை..பசங்க பேசிக்கிட்டாங்க.
அவன் நேத்து காலேஜ் வந்தான்னா ?? ஆர்த்தி ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்க..
இல்ல வரல..
அப்போ அசோக் ப்ரண்டு ரமேஷ் உள்ள வந்தான்.
ரமேஷ் ஒரு நிமிஷம் இங்க வா..
சொல்லு ஆர்த்தி...
நேத்து என்ன ஆச்சு?? அசோக் ஏன் கை கட் பண்ணிக்கிட்டான்.
அவங்க வீட்டுல ஏதோ பிரச்சினை...அந்த கோபத்துல அப்படி பண்ணிட்டா.
இப்போ எப்படி இருக்கான். அவன் வீடு எங்க இருக்கு.
ஏன் நீ போய் பாக்க போறீயா..ன்னு ரமேஷ் கேட்க.
ஏன் போக கூடாதா..நம்ம க்ளாஸ் மேட் தானே..நாமா எல்லாருமே போலாம்.
அதுலா தேவையே இல்ல.. அவன் வந்துட்டான். கேண்டீன் போய் இருக்கான்..வந்துருவான்.
கேண்டீன் கா..ன்னு ஆர்த்தி முழிச்சுட்டு...சரி இருங்க வரேன்.
எங்க டி போற...இரு டி வரேன் ன்னு வேக வேகமா போறா...
கேண்டீன்ல போய் பார்த்தா அசோக்யை காணோம்..சுத்தி முத்தி தேடி பார்த்துட்டு க்ளாஸ் க்கு வரா...
அங்க அசோக் உட்கார்ந்து இருக்கும் இடத்தை சுத்தி ஒரே கூட்டம்.
ஆர்த்தி அவனை பார்க்க பக்கத்துல போக.. க்ளாஸ் க்கு மேடம் வர.. எல்லாரும் அவங்க அவங்க இடத்துலே உட்காராங்க. மேடம் க்கு அசோக் கை கட் பண்ணிக்கிட்டது தெரியாது..அவங்க எப்பவும் போல க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.
ஆர்த்தி க்ளாஸ் கவனிக்காம அசோக் யையே பாத்துட்டு இருக்கா..
மச்சா... ஆர்த்தி உன்னையே பாக்குறா டா.. ( ரமேஷ் சொல்ல)
உன் வேலையை பாரு டா...ன்னு சொல்றான்னே தவிர..ஆர்த்தியை பார்க்கவே இல்ல.
க்ளாஸ் முடிஞ்சு மேடம் போனதும் ஆர்த்தி எழுந்து அசோக் பக்கத்துல வர ... அசோக் எழுந்து வெளியே போய்டுறான்.
ஆர்த்திக்கு அழுகையே வர ஆரம்பிக்க...அதை மறைக்க உடனே வாஸ் ரூம் போய் முகத்தை கழுவிட்டு லைப்ரரி போய் ஒரு ஓரமா உட்கார்ந்து அழுக ஆரம்பிச்சுட்டா..
அசோக் திரும்பி வந்து ஆர்த்தியை பாக்குறான்..அவளை காணோம்..அவ க்ளாஸ்க்கு வரவே இல்ல..
லன்ச் டைம் ஆகுது. அசோக் கேண்டீன் போய் பாக்குறான். அங்க அவளை காணோம்..யோசிச்சுட்டு லைப்ரரி போய் அவளுக்கு எதிரே உட்கார்ந்து அவ முகத்தை பாக்குறான்..அவ நல்லா அழுது இருக்கான்னு அவளை பாத்ததும் நல்லவே புரிஞ்சுக்குறான்.
ரெண்டு பேரும் பேசாம ஒருத்தரை ஒருத்தர் பாத்துட்டு இருக்காங்க.
தொடரும்.
# Bhuvi
1 Comments
❤😍🤩💥💯
ReplyDelete