காதல் போர்க்களம் 



தொடர்: 4

டேய் !! அசோக்...நில்லு டா ன்னு ரமேஷ் பின்னாடியே போறான்.

என்ன டா ?? ன்னு கோவமா திரும்ப.

என்ன ஆச்சு?? ஏன் இப்படி கோவப்படுற.

பின்ன ?? கோபப்படாம?? ஆர்த்தி யாருன்னு நினைச்ச ?? அவன் எப்படி அவளை... அதுவும் என்கிட்டயே சொல்ற நீ ??

மச்சா !! சத்தியமா புரியல...

அசோக் ரொம்பவே கோவமா...

மச்சா... நானும் ஆர்த்தியும் ரொம்ப நாளா லவ் பண்றோம்..ஆனா அது யாருக்கும் தெரியாது. 

என்ன டா சொல்ற?? ஷாக் ஆ கேட்க.

ஆமா டா..நாங்க லவ் பண்றோம். சாரி டா உன்கிட்ட கூட சொல்லலாமா இருந்ததுக்கு.

அடேய்!! எப்படி டா.. க்ளாஸ் லா நீங்க பேசுறதும் இல்ல.. எப்படி டா..

அது லாம் அப்படி தான். கேண்டீன் ல பாத்துப்போம். ஃபோன் ல பேசிப்போம்.

இந்த பூனையும் பால் குடிக்குமா ன்னு இருந்தீங்களே டா..

அது லாம் விடு டா..நீ என்ன பண்ணுவே ன்னு லா எனக்கு தெரியாது. அவன் ஆர்த்தி கிட்ட வரக்கூடாது பாத்துக்கோ.

சொல்லிட்ட இல்ல..விடு நான் பாத்துக்கிறேன்.

ம்ம்... இரண்டு பேரும் க்ளாஸ் க்கு போக..

ஆர்த்தி அசோக் வருவதை பார்க்குறா... ரமேஷ் மும் கவனிக்குறான். 

ரமேஷ் பாக்குறதை பார்த்து ஆர்த்தி எதார்த்தமா திரும்பிக்குறா.

ஆர்த்தி!!! சரண்யா கூப்பிட

சொல்லு டி..

உன்கிட்ட ஒன்னு சொல்றேன்..நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணணும். ஆனா யார் கிட்டயும் சொல்லக்கூடாது.

சரி சொல்லு..

அது ?? அது..

எது ??? சொல்லு டி சீக்கிரம்.

அவரப்படுத்ததே !!! இரு... சொல்றேன்.

ஆர்த்தி அவளையே பாக்க...

சரண்யா மெல்ல தயங்கி தயங்கி சொல்றா..

ஆர்த்தி நான் ரொம்ப நாளா அசோக் ஆ லவ் பண்றேன்.

ஆர்த்தி ஷாக் ஆ...என்ன ???

ஏன் டி!! இப்படி ஷாக் ஆகுறா..சாரி உன்கிட்ட சொல்லாம மறைச்சாதுக்கு.

ஹே!! என்னடி சொல்றே!! அவனுக்கு தெரியுமா??

ஒரு பொண்ணு லவ் பண்றான்னா !! அது அந்த பையனுக்கு தெரியாமல்லா இருக்கும். அவனுக்கு தெரியும் தானு நினைக்குறேன். இருந்தாலும் நான் சொன்னது இல்ல..அதா கன்ஃபர்ம் பண்ண உன்கிட்ட ஹெல்ப் கேட்குறேன்.

சரண்யா!!! நீயா எதுவும் நினைச்சு முடிவு பண்ணாம அவன்கிட்ட ஆரம்பத்துலயே சொல்லி இருக்கலாம் தானே.

ஏன் ?? இப்படி சொல்ற ??

அது... ஒருவேளை அவன் வேற யாரையாவது லவ் பண்ணா என்ன பண்றது.

சரண்யாக்கு டக்குன்னு முகமே மாறுது. 

ஆர்த்தி??? இப்படி லா கேட்காத.. நான் ரொம்ப கடுப்பாகிடுவேன். அசோக் எனக்கு தான்..நீ எனக்காக அவன்கிட்ட என்னோட லவ் ஆ சொல்லு போதும். ஓகே வா!!

ஆர்த்தி திருதிருன்னு முழிச்சுட்டு தலையை மட்டும் ஆட்டுறா

சரி எப்போ சொல்ற?? 

அது..அது...நீயே சொல்லு..

இப்போ வேண்டா..நாமா டூர் போறாம் இல்ல..அங்க சொல்லு.. அப்போ தான் நல்லா இருக்கும்..நீ வீட்டுல நல்லா ப்ரீப்பேர் பண்ணிட்டு வா..அவன் கிட்ட!! நான் அவனை ரொம்ப லவ் பண்றேன். நீ இல்லன்னா அவ உயிரோடவே இருக்க மாட்டா..நீ தான் எல்லாமே இது மாதிரி இன்னும் என்னென்ன சொல்ல முடியுமோ எல்லாமே சொல்லு...

ஆர்த்தி சரிங்கர மாதிரியே தலையை ஆட்டுறா. 

தொடரும்.

# Bhuvi