காதல் போர்க்களம் 

தொடர்: 10

இங்க பாரு ஆர்த்தி. சொல்றதை பொறுமையா கேளு. பாதிலயே முடிவு பண்ணாம முழுசா கேட்டுட்டு சொல்லு. 

ம்ம் சரி.

எங்க அப்பா ரவி சங்கர் தான். அவருக்கு 2 குடும்பம் இருக்கு. எங்க அம்மா முதல் மனைவி. எனக்கு ஒரு தம்பி இருக்கான். அவன் பிறந்த கொஞ்ச நாளுக்கு அப்புறம் தான் எங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணாரு. இந்த விஷயத்துக்கு அப்பறம் எங்க அம்மா ரொம்ப உடைஞ்சு போய்ட்டாங்க. ஆனா எங்களுக்காக எல்லாத்தையும் பொருத்துக்கிட்டாங்க. எனக்கு விவரம் தெரிஞ்ச அப்பறம் எந்த இடத்துலேயும் நான் எங்க அப்பா ஓட அடையாளத்தை வெளியே சொன்னது இல்ல.. உன்கிட்ட கூட அதுனால தான் சொல்லல.. என்னை பொருத்த வரைக்கும் அவரு சொத்துட்டாரு. எங்க அம்மா இருக்கும் போதே எப்படி அவரு இன்னொருத்தங்களை கல்யாணம் பண்ணலாம். என்னால அவரை மன்னிக்கவே முடியாது. எனக்கு எங்க அம்மா சம்மதம் போதும். அவரு சம்மதம் தேவையே இல்ல. அதே மாதிரி அவரு சொத்துல எதுக்கும் நான் உரிமை கொண்டாட மாட்டேன். நாமா சம்பாதிச்சு தான் நமக்கும் நம்ம குழந்தைகளுக்கும் எதுனாலும் பண்ணனும். இப்போ சொல்லு. உனக்கு சம்மதம் மா ?? என்னை கல்யாணம் பண்ண !!

ஆர்த்தி தாத்தா முகத்தை பார்த்த மாதிரியே...எனக்கு முழு சம்மதம் டா..

இது போதும் டி. நீ டைம் க்கு சாப்பிட்டு தூங்கு. நாளைக்கு பாக்கலாம். நான் வேண்டிய ஏற்பாடு லாம் பண்ணிட்டு சொல்றேன்.

ம்ம்..சரி டா.. 

ரெண்டு பேரும் ஒரு தெளிவோட கட் பண்றாங்க.

தாத்தா... நான் சொன்னது..

சரிதான் மா.. நான் கூட இருக்கேன். கவலைப்படாதே. நல்ல பையன். நல்ல குணம். அவனோட அம்மா அவனை நல்ல வளத்து இருக்கா..

ஆமா தாத்தா..ஆனா மாமா..அவரை எப்படி சமாளிக்குறது. 

அவன் கிடக்குறான் மா.. நான் பாத்துக்கிறேன்.

தாத்தா!! எனக்கு ஒரு டவுட். கேட்கட்டா..

கேளு மா. 

பிரவீன் மாமா..உங்க சொந்த பொண்ணோட பையன்..அவங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்கணும் ன்னு நீங்களும் தானே ஆசைப்படணும். ஆனா நீங்க ஏன் மாமா மேல வெறுப்பா இருக்கீங்க.

அது இப்போ எதுக்கு மா. வேண்டா. இன்னொரு நாள் சொல்றேன். சரியா. நீ அவனை பத்தி எல்லாம் கவலைப்படாதே. நீ சீக்கிரம் அந்த பையன் கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு. 

சரி தாத்தா.

சரி வா மா வீட்டுக்கு போவோம். நேரம் ஆச்சு. 

ம்ம்..

ரெண்டு பேரும் வீட்டுக்கு போறாங்க.

அப்பா !! என்ன இவ்வளவு நேரம். கோவில கூட்டமா என்ன ?? 

கூட்டம் லா இல்ல.. கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்து இருந்துட்டு வரோம்.

முகம் ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி இருக்கு.

ஏன் இருக்க கூடாதா மா..

அப்படி இல்ல மாமா. சும்மா தான் கேட்டேன்.

சரி வாங்க சாப்பிடலாம்.

எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டு எழுந்து அவங்க அவங்க ரூமுக்கு போறாங்க.

ஆர்த்தி தங்கச்சி மட்டும் உட்கார்ந்து படிச்சுட்டு இருக்கா.

ஹே.. எனக்கு தூக்கம் வருது டி. நீ கொஞ்சம் வெளியே உட்கார்ந்து படிச்சுட்டு வா. நான் லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்குறேன். ப்ளீஸ் 

போ!! அது லாம் முடியாது. இந்த ரூம் எனக்கும் சேர்த்து தான். என்னால வெளியே லாம் போக முடியாது. நீ வேணா வெளியே போ. 

நதியா வெளியே போ ன்னு சொன்னது ஆர்த்திக்கு டக்குன்னு ஒரு மாதிரி ஆக.. எதுவும் பேசாமல் எழுந்து வெளியே போய் படுத்துட்டா.

நதியாவும் அவ சும்மா போறா..உடனே வந்துரு வான்னு அவ படிக்கும் வேலையை பாக்குறா. 

கொஞ்ச நேரம் கழிச்சு அவ நோட் புக்ஸ் எல்லாம் எடுத்து வைச்சுட்டு ஆர்த்தி யை பாக்குறா..அவ உள்ள வரவே இல்ல. வெளியே போய் பாக்குறா. 

ஹால்ல இருக்க சோபா லா படுத்துட்டு இருந்தா.

நதியா ஆர்த்தி கிட்ட வந்து..

அக்கா!! அக்கா...சாரி..உள்ள வா.

போ டி... என்னை தூங்க விடு.

நீ உள்ள வா..ப்ளீஸ் ன்னு இம்சை பண்ண.. அவளும் எழுந்து போய் படுக்க.. நதியா அவளை கட்டி பிடிச்சுக்கிட்டு தூங்கிட்டா..

அடுத்த நாள்.. வழக்கம் போல காலேஜ் கிளம்புறா...

அப்போ அவங்க அப்பா..

ஆர்த்தி!! இன்னைக்கு ஒரு நாள் லீவ் சொல்லிரு மா.

எதுக்கு பா??

இன்னைக்கு உங்க அத்தை, மாமா உன்னை பாக்க ஊருல இருந்து வந்துட்டு இருக்காங்க.

இப்படி திடீர்னு சொன்னா என்ன பா அர்த்தம். அவங்க ஒன்னும் புது ஆளுங்க இல்ல லா.. நீங்களே பேசுங்க. நான் அவங்க கிட்ட என்ன பேச போறேன். 

இங்க பாரு மா. நான் தான் சொல்றேன் இல்ல. நீ இன்னைக்கு காலேஜ் போக வேண்டா. லீவ் போடு. நான் கடைக்கு போய்ட்டு வரேன்.

வாசுகி சமையல் அறையில் வேலை செஞ்சுட்டு இருக்காங்க.

ஆர்த்தி ரூம்க்கு வந்து அழ ஆரம்பிக்குறா..இதை பார்த்த நதியாக்கு ரொம்ப பாவமா இருக்கு.

ஏன் கா அழுகுற..உனக்கு பிரவீன் மாமா வை பிடிக்கலையா..

ஆர்த்தி ஆமா ன்னு தலை ஆட்டுறா. நீ அதை அப்பா கிட்ட சொல்லலாம் தானே.

நான் சொல்லிட்டே. ஆனா அப்பா அம்மா ரெண்டு பேரும் கேட்க மாட்டீக்குறாங்க. 

நான் வேணும் னா அப்பாகிட்ட பேசட்டா..

இல்ல வேண்டா. நான் பாத்துக்கிறேன். நீ கிளம்பு போ. உனக்கு லேட் ஆகுது.

இன்னைக்கு எனக்கு லீவ் கா. 

ஓ..சரி போய் படின்னு சொல்லிட்டு.. ஃபோன் எடுத்து அசோக் க்கு மெஸேஜ் பண்றா.

இன்னைக்கு காலேஜ் போக வேண்டா ன்னு சொல்லிட்டாங்க டா..

ஊருல இருந்து அத்தை மாமா வர்றாங்கன்னு.

இப்போ திடீர்னு சொல்றாங்க...

அசோக் மெஸேஜ் பாத்துட்டு..

இப்ப எதுக்கு வர்றாங்க.

நீ ஒன்னும் பீல் பண்ணாதா. சரியா.. நான் இருக்கேன். நீ என்ன பண்றாங்க, என்ன பேசுறாங்க ன்னு நல்லா கவனி. அவங்க போன அப்பறம் நீ கால் பண்ணு. பயப்படாத..

ஓகே வா..

ஆர்த்தியும் ஓகே ன்னு சொல்றா.

கொஞ்ச நேரத்தில் பிரவீன் அவனோட அம்மா மணிமேகலை, அப்பா வடிவேல் உள்ள வர.. பின்னாடியே இன்னும் கொஞ்சம் பேர் வர..

வாசுகி தன்ராஜ் அவங்களை வரவேற்குறாங்க.

நதியா ஓடி போய்... ஆர்த்தி கிட்ட அவங்க வந்த விஷயத்தை சொல்றா. 

ஆர்த்தி அதிர்ச்சியா !! நிறைய பேரா... எதுக்கு?? அத்தை மாமா ன்னு மட்டும் தானே சொன்னாங்க. ன்னு புரியாமல் திணறிட்டு இருக்கும் போது.. ரூம்குள்ள.. மணிமேகலை அப்பறம் இன்னும் 3 பேர் சேர்ந்து வந்து அவ அழகை பாராட்டி..இந்த டி மருமகளே இந்த புடவையை டக்குன்னு கட்டிட்டு வா.. நேரம் ஆகுது ன்னு கொடுத்துட்டு போக..

ஆர்த்தி கண்ணுல அழுகையா வர..

உடனே ஃபோன் எடுத்துக்கிட்டு பாத்து ரூம் போய் அசோக் க்கு கால் பண்றா... அவன் உடனே எடுத்துட்டு..

என்ன டி லட்டு.. போய்ட்டாங்களா..

அவ தேம்பி தேம்பி அழுகுற சத்தம் தான் கேட்குது. 

ஹே..என்ன ஆச்சு டி. எதுக்கு அழுகுற..

அது அவங்க நிறைய பேர் வந்து இருக்காங்க. புடவை கட்டிட்டு வரச் சொல்லி இருக்காங்க. 

இங்க பாரு. அவங்க என்ன வேணா பண்ணட்டும். ப்ளீஸ் நீ எதுக்கும் பீல் பண்ணி அழுதுட்டு இருக்காதா. சரியா.. இன்னைக்கு ஒன்னும் கல்யாணம் பண்ண போறது இல்ல. அவங்க எல்லாம் போகட்டும். ஈவ்னிங் நான் வரேன். உங்க அம்மா அப்பா கிட்ட பேசறேன் சரியா.

ம்ம்..

இப்போ போ.. போய் ரெடி ஆகு. 

சரி... ன்னு கட் பண்ணிட்டு போறா..

வெளியே அவங்க அம்மா வந்து..

சீக்கிரம் வா மா. லேட் ஆகுதுன்னு... அவளுக்கு புடவை கட்டி விடுறாங்க.

என்னம்மா இவ்வளவு பேர் வந்து இருக்காங்க. எதுக்கு மா ன்னு நதியா கேட்க..

அதுவா இன்னைக்கு உங்க அக்காவுக்கு பூ வைக்க வந்து இருக்காங்க.

அப்படின்னா ??

பொண்ணு பாக்க வர்றாங்க தானே..அது மாதிரி. இன்னைக்கு பூ வைச்சுட்டு நிச்சயம் பண்றா தேதி குறிப்பாங்க. 

எதுக்கு இவ்வளவு அவசரப்படுறீங்க மா..படிப்பு முடிஞ்சதும் தானு சொன்னீங்க.

இப்பவும் அதே தான் சொல்றேன். காலேஜ் முடிஞ்ச அப்பறம் தான் கல்யாணம். இது சும்மா ஒரு சில சம்பிரதாயம் தானே. இன்னும் 3 மாசம் தானே காலேஜ். காலம் போறதே தெரியாது. நாள் ரொம்ப கம்மியா இருக்கு. 

மணிமேகலை கதவை தட்ட..

இதோ வரேன் அண்ணி...ன்னு போக..

ஆர்த்தி நதியா வை கூப்பிட்டு..

நதி..தாத்தா வெளியே வந்துட்டாரா ன்னு பாரு. அவரு இல்லன்னா அவரை நான் வரச் சொன்னேன்னு சொல்லி வரச் சொல்லு.

நதி யாவும் சரின்னு போறா..

வாசுகி அதுக்குள்ள டீ யை கொண்டு வந்து ஆர்த்தி கையில கொடுத்து எல்லாருக்கும் கொடுக்க சொல்றா..

ஆர்த்தியும் வெளியே வந்து எல்லாருக்கும் கொடுத்துட்டு கடைசியா பிரவீன் கிட்ட வரா..

தொடரும்.

# Bhuvi