காதல் போர்க்களம்
தொடர்: 7
நைட்டு முழுக்க அசோக் க்கு தூக்கம் வராமல் தவிக்க..ஆர்த்தியும் தூங்காம என்ன பண்ண போறோம் ன்னு அழுதுட்டே இருக்கா..
அடுத்த நாள் காலையில விடியுது. ஆர்த்தி எழுந்து காஃபி குடிக்க கூட வரலை.
வாசுகி அவளே எடுத்துட்டு போய் கொடுக்குறா..
எனக்கு வேண்டா மா..
ஏன் டி??? ஏன் முகம் லா வாடி போய் இருக்கு. தூங்கலாயா ??
எனக்கு தூக்கம் வரலை மா.
பிரவீன் பத்தி யோசிச்சுட்டு இருந்தீயா.
எதுக்கு மா தேவையில்லாத விஷயத்தை பத்தி பேசிட்டு இருக்கீங்க. போய் வேலைய பாருங்க.
எது டி தேவையில்லாத விஷயம்.
படிச்சுட்டு இருக்கும் போது எதுக்கு கல்யாணம் பத்தி பேசுறீங்க.
படிச்சு முடிச்ச அப்பறம் பண்றதுன்னு தானே சொன்னோம். எப்படியும் பண்ணி தானே ஆகணும்.
எதுக்கு மா அவசரப்படுறீங்க.
அப்போ தன்ராஜ் வர...
வாசுகி!! என்ன காலையில அவகூட வாக்குவாதம்..நீ போ...
வாசுகி போக.. தன்ராஜ் ஏம்மா?? பிரவீன் நம்ம பையன் தானே மா..எந்த பிரச்சனையும் வராது. உங்க அத்தை உன்னை நல்லா பாத்து ப்பா... சொந்தம் விட்டு போக கூடாது இல்ல மா.
ஆர்த்தி தன்ராஜ் முகத்தை பாவமா பாத்துட்டு.. எதுவும் பேசாமல் திரும்ப.
ஆர்த்தி.. முடிவு பண்ணது பண்ணதுதான் மா..மாத்துறது கஷ்டம்.
ஆர்த்தி உங்க இஷ்டத்துக்கு பண்றதுன்னு முடிவு பண்ண அப்பறம் எதுக்கு பா என்கிட்ட சொல்லி என் சம்மதத்தை எதிர் பாக்குறீங்க. நேரா கல்யாண நாளை அப்போவே சொல்ல வேண்டியது தானே ன்னு கேட்கணும் ன்னு தோணுது..ஆனா கேட்காமல் பாத்ரூம் குள்ள போய்ட்டா..
தன்ராஜூம் வேலைக்கு கிளம்பிட..
ஆர்த்தி காலேஜ் பஸ் வந்ததும் ஏறிட்டு... ஃபோன் எடுத்து நெட் ஆன் பண்றா.. அசோக் கிட்ட இருந்து மெஸேஜ்...ஆ வருது.
அது லாம் எதுமே படிக்காமல்..நாமா வெளியே போலாம்.. காலேஜ் கேட் கிட்ட நில்லுன்னு மெஸேஜ் பண்றா..
அவனும் ஏதோ பிரச்சினை ன்னு புரிஞ்சுக்கிட்டு சரின்னு சொல்லிட்டு ரிப்ளே பண்ணிட்டு அவளுக்காக வைட் பண்றான்.
ஆர்த்தி யும் பஸ் விட்டு இறங்கி கேட் கிட்ட வந்ததும்.. அசோக் பைக் எடுத்துட்டு வரான்.
பைக் எதுக்கு டா..
நீ வா..
ஆர்த்தி ஷால் எடுத்து முகத்தை மறைச்ச மாதிரி கட்டிட்டு ஏறி உட்காரா..
அசோக் வண்டியை மெதுவா ஸ்டார்ட் பண்ணி போக... எங்க போலாம்.
எங்காவது போ..தூரமா...
என்ன ஆச்சு டி..
அத்தை பையனுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க.
அசோக் டக்குன்னு ப்ரேக் போட... ஆர்த்தி அசோக் முதுகுல இடிக்க..
ஹே!! என்ன சொல்ற..நீ என்ன சொன்ன..
எதுவும் சொல்லல..அதுபத்தி பேச தான் வெளியே போலாம் சொன்னேன்.
அசோக் மறுபடியும் வண்டியை ஸ்டார்ட் பண்றான்..ஆனா இப்போ கோவமா வேகமா போக.. ஆர்த்தி க்கு பயமா இருக்கு..அவனை இறுக்கி கட்டி பிடிச்சுக்கிட்டு கண்ணை மூடிக்க... அசோக் க்கு கோவம் கொஞ்சம் குறையுது.
கொஞ்ச தூரம் போன அப்பறம் அங்க ஒரு சின்ன மலை பாதை இருக்கு..அங்க போய் வண்டியை நிறுத்துறான்.
அப்போ சரியா பிரவீன் கால் பண்றான்..
யாரு அது ?? அசோக் கேட்க
இது தான் என் அத்தை பையன். இவனை தான்..
போதும்.. எதுக்கு கால் பண்றான்.
தெரியல..
நீ என்ன முடிவு பண்ணி இருக்க..
என்ன கேள்வி இது..நீ தான் வேணும்.
வீட்டுல சொல்ல வேண்டியது தானே.
சொல்லி இருப்பேன். ஆனா நீ என்ன சொல்லுவன்னு தெரியல..அதா உன்கிட்ட பேசிட்டு சொல்லலாம் ன்னு.
ஆர்த்தி!! நிஜமா நீ இல்லாம என்னால வாழவே முடியாது.. உன்னை யாருக்காகவும் என்னால விட்டு தர முடியாது. நான் ஒன்னும் நீ அழகா இருக்கன்னு லவ் பண்ணால.. உன்னை பிடிச்ச மாதிரி வேற யாரையும் எனக்கு பிடிக்கல..
எனக்கு தெரியும் டா...ஆனா இப்போ வீட்டில சொன்னா என்ன பண்ணுவாங்கன்னு தெரியலையே. காலையில அப்பா... முடிவு பண்ணது பண்ணதுதான், மாத்த முடியாது ன்னு சொன்னாரு.
யோசிப்போம்.
அப்பறம்!! சரண்யா இருக்க இல்ல.
ஆமா!! அவளுக்கு என்ன ??
உன்னை லவ் பண்றா லாம்.. என்கிட்டே சொல்லி உன்கிட்ட சொல்ல சொன்னா..நீ இல்லன்னா செத்துருவேன்னு சொல்றா..
தரலாமா சாக சொல்லு. அவ சொல்லும் போது சொல்ல வேண்டியது தானே.. நான் லவ் பண்றேன் ன்னு.
அது எப்படி டா..அவ என்ன நினைப்பா..
ஹே...லூசா டி..அவ ஒரு ஆளுன்னு.. எத்தனை பிரச்சினை. ஸ்சோ.. உனக்கு ஒன்னு தெரியுமா??
என்ன ??
நம்ம க்ளாஸ் ல இருக்கானே ஆனந்த் உன்னை லவ் பண்றான்னா.. டூர் போறாம் இல்ல அப்போ உன்கிட்ட லவ் சொல்ல போறேன் னா..
ஆர்த்தி முட்ட கண்ணைப் போட்டு முழிக்குறா..
இப்படி பாக்காத டி..அழகா இருக்க.. ஏதாவது பண்ணிட போறேன்.
ஆமா அப்படியே பண்ணிட்டாலும்...ன்னு முணு முணுக்க..
ஹே...கேட்டுருச்சு டி...பண்ண விட்டா தானே..ஒரு கிஸ் ஹே மூஞ்சியை தூக்கி வைச்சுட்டு சண்டை போட்டவ தானே நீ..
அது அப்போ.. எப்பவும் ஒரே மாதிரியா இருப்பாங்க..
அடிப்பாவி!!! பின்ன சொல்ல வேண்டியது தானே..
அது லாம் சொல்லிட்டா இருப்பாங்க..டியூப் லைட்...
ஆமா டி அப்படியே நீ என்னை பெட்டஸ்மார்ட் பல்ப் மாதிரி எங்க இருக்க விடுற..
அப்போ ஃபோன் மறுபடியும் வர...
அசோக் என்னவாம் அவனுக்கு?? அட்டன் பண்ணு ன்னு ஸ்பீக்கர்ல போடுறான்.
ஹாலோ... ஆர்த்தி
சொல்லு மாமா..
எப்படி இருக்க.
ஹா நல்லா இருக்கேன்.
ம்ம்..சாப்டியா ??
அசோக் மைண்ட் வாய்ஸ் ( அவ சாப்பிட என்ன சாப்பிடலன்னா இவனுக்கு என்ன )
ம்ம்...
அப்பறம்!! காலேஜ் லயா இருக்க..
( இல்ல லண்டன் லா இருக்கா..கேட்குறான் பாரு கேள்வி)
ம்ம்..
என்ன எதுவும் பேசாமல் ம்ம் ன்னே சொல்ற??
அசோக் சொல்லு.. கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு..
மாமா..
சொல்லு ஆர்த்தி..நீ பேசுறதுக்கு முன்னாடி நான் பேசிடுறேன். கோச்சுக்காதா..
வீட்டுல சொல்லி இருப்பாங்க..நம்ம கல்யாணம் பத்தி.. உனக்கு என்னை எந்த அளவுக்கு பிடிக்கும் ன்னு எனக்கு தெரியாது. ஆனா நீனா எனக்கு உயிரு.
நீ பொறந்த அப்போ இருந்து எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உன்னை நானே தான் தூக்கி வைச்சு இருப்பேன்.
அப்பறம் நீ வளந்த அப்போ நாங்க வேற ஊருக்கு போய்டடோம். அடிக்கடி பாக்க முடியாலனாலும் உன்னை நினைக்காதா நாளே இல்ல.. உனக்காக மட்டும் தான் ஆர்த்தி நான் எனக்கு வராத படிப்பை கூட கஷ்டப்பட்டு படிச்சு இப்போ இந்த வேலையில இருக்கேன். உனக்கு என்கிட்ட என்ன பிடிக்கலானாலும் சொல்லு நான் கண்டிப்பா உனக்காக மாத்திப்பேன். ஆனா என்னை வேண்டாம் ன்னு மட்டும் சொல்லிராதா பிளீஸ்.
ஆர்த்தி என்ன சொல்றதுன்னு தெரியாமல் அமைதியா இருக்கா..
தொடரும்.
# , Bhuvi
0 Comments