காதல் போர்க்களம் 



தொடர்: 8

ஆர்த்தி அமைதியா இருக்கிறதை பார்த்து அசோக் கோவமா அவளை விட்டு தள்ளி போய் நிக்க..

மாமா.. நான் அப்பறம் பேசுறேன்னு கட் பண்ணிட்டு அசோக் கிட்ட போறா..

சாரி டா.. நீ எதுக்கு இப்போ மூஞ்சியை இப்படி வைச்சு இருக்க.

என் மூஞ்சியே இப்படி தான். அவனை எதுக்கு டி மாமா ன்னு கூப்பிடுற.. நான் தானே டி உனக்கு மாமா.. என்னை ஒரு டைமாவது கூப்பிட்டு இருப்பீயா நீ.

அவ்வளவு தானே மாமா..மாமா.. கோபப்படதே மாமா...

இதுலா நான் ஒத்துக்க மாட்டேன். என்னை தவிர எவனையும் மாமா ன்னு கூப்பிட கூடாது. 

உங்க அப்பா வை கூடவா..

என்ன டி நக்கலா??..

சரி இதை விடு டா.. வீட்டுல என்ன சொல்றது.இப்ப சொல்லி அவங்க நம்ம லவ்வ ஏத்துக்காம உடனே கல்யாண ஏற்பாடு பண்ணிட்டா என்ன பண்றது.

அசோக் கொஞ்ச நேரம் அமைதியா யோசிச்சுட்டு..

ஆர்த்தி!! 

சொல்றா..

இப்ப நாமா புத்திசாலி தனமா யோசிச்சா தான் நம்ம லவ் சக்சஸ் ஆகும்.

ஆர்த்தி மைண்ட் ல வேற ஏதோ தோணா...தப்பு பண்ணணும் மா ன்னு கேட்க..

அட ச்சீ..அதுலா ஒன்னு இல்ல..

நாமா இப்போ எதுமே சொல்ல வேண்டா.. இன்னும் கொஞ்ச நாள் தான் காலேஜ். அப்பறம் நாமா ஜாப் போய்டலாம். நான் வேலைக்கு போய்ட்டா உங்க வீட்டுல பேச ஈஸியா இருக்கும்.

ஓ..அதுவா.. நான் கூட வேற ஏதோ நினைச்சு ட்டே...சாரி...ன்னு சிரிக்க.

ஆமா.. அப்படியே விட்டுட்டாலும். உன்னால வைச்சுட்டு நான் என்ன பண்ண போறேன்னு தெரியல.

என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்.

நிஜமா!!

கல்யாணத்துக்கு அப்புறம்..

அதானே பார்த்தேன். நீயாவது.. சரி வா போலாம்.

எங்க ??

காலேஜ் க்கு.

இதுக்கு அப்பறம் எங்க காலேஜ் லா..மூவி போலாமா.

நிஜமா வா டி..நம்பவே முடியல.

ரொம்ப பண்ணாத டா..வா போலாம்.

ரெண்டு பேரும் மூவி, லன்ச், கோவில் பார்க் ன்னு போய்ட்டு ஈவ்னிங் வழக்கம் போல வீட்டுக்கு போற டைம் ல வீட்டுக்கு வந்துட்டாங்க.

ஆர்த்தி முகம் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருந்தது. இதே பார்த்த வாசுகி..

பிரவீன் கிட்ட பேசுனீயா.

ஆமா.

சம்மதம் தானே.

நான் படிக்கணும் மா.. முடியுற வரைக்கும் கல்யாணம் பத்தி மாமா வை பத்தி பேச வேண்டாம் மா. ப்ளீஸ். காலேஜ் முடியட்டும்.

நாங்களும் அதே தான் டி சொல்றோம். ஆனா எங்களுக்கு தேவை உன்னோட சம்மதம்.

காலேஜ் முடிஞ்சு கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்குறேன் மா. 

வாசுகி க்கு ஒரே சந்தோஷம். ஆர்த்தி பிரவீனை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டா ன்னு நினைச்சுக்குறாங்க. 

ஆனா ஆர்த்தி அசோக் ஐ கல்யாணம் பண்ணிக்குறதை நினைச்சு தான் சொன்னா. 

தாத்தா ரூமை விட்டு வெளியவே வரலை. தாத்தா வை பாக்க உள்ள போறா.

தாத்தா சோகமா படுத்திட்டு இருக்க.. ஆர்த்தியை பார்த்து எழுந்து உட்கார்ந்து..

ஏன் மா என்கிட்ட கூட பேசுல..

தாத்தா.. திடீர்னு கல்யாணம் அது இதுன்னு சொன்னா எப்படி..அதா. இப்போதய்க்கு அது பத்தி பேச வேண்டாம் சரியா..வாங்க வெளியே போலாம்.

சரி மா.. கோவில் வரைக்கும் போயிட்டு வரலாமா..

ஓ.. தரலாமா போலாமே வாங்க. நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.

ரெண்டு பேரும் கோவிலுக்கு கிளம்பிட்டாங்க. 

சாமி கும்பிட போன இடத்துலே சரண்யா இருக்க..

ஹே.. ஆர்த்தி!! ஏன் இன்னைக்கு காலேஜ் வரலா..என்ன ஆச்சு??

தாத்தா புரியாமல் பாக்க..

அதுவா.. கொஞ்சம் உடம்பு சரி இல்லை. அதா..நாமா நாளைக்கு பேசலாம். தாத்தா வாலா ரொம்ப நேரம் நிக்க முடியாது..ன்னு அங்க இருந்து தாத்தா வை கூட்டிட்டு போறா.

ஏம்மா ??? காலையில காலேஜ் க்கு தானே போறேன்னு கிளம்பின. 

ஆமா தாத்தா. ஆனா நான் காலேஜ் உள்ள போகல.. வெளியே போய்ட்டேன். அது பத்தி பேசணும் உங்க கிட்ட..அப்பா அம்மா கிட்ட சொல்ல தைரியம் இல்ல. சொன்னாலும் அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்க அத்தை பத்தியும் பிரவீன் மாமா வை பத்தியும் தான் நினைக்குறாங்க. என்னை பத்தி யோசிக்க மாட்டிக்குறாங்க. நீங்க மட்டும் தான் என்னை நல்ல புரிஞ்சு வைச்சு இருக்கீங்க.. எனக்காக பேசுவீங்க அதா..

சரி சொல்லு மா..ஏன் காலேஜ் போகல. எங்க போன நீ ??

தாத்தா.. நான் சொல்றதை கேட்டு கோவம் மட்டும் படதீங்க. இதை பாருங்க ன்னு ஃபோன் ல இருக்க அசோக் போட்டோ காட்டுறான்.

யாரு இது?? 

இவன் அசோக் தாத்தா. என்னோட தான் படிக்குறான். இவனை பிடிச்சு இருக்கு தாத்தா. ரெண்டு பேரும் லவ் பண்றோம். என்னால இவனை ஏமாத்திட்டு மாமா வை கல்யாணம் பண்ண முடியாது தாத்தா..இது பத்தி பேச தான் காலேஜ் லீவ் போட்டேன்.

தாத்தா அமைதியா யோசிச்சிட்டு...அந்த பையன் குடும்பம் எப்படி?? யாரு யாரு இருக்காங்க. என்னா பண்றாங்க. நீ பேசி இருக்கீயா. 

ஆர்த்தி இல்லன்னு தலையை ஆட்ட..

அப்பறம் எப்படி மா..அவனை லவ் பண்ற.. அவனுக்கு ஃபோன் பண்ணு... ஸ்பீக்கர் ல போடு.. நான் சொல்ற மாதிரி பேசு.

சரி தாத்தா..

தொடரும்.

# Bhuvi