"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

காதல் போர்க்களம் - 11

 

காதல் போர்க்களம் 



தொடர்: 11

பிரவீன் கிட்ட காஃபி ப்ளேட்டை நீட்ட ...

பிரவீன் அவளையே பார்த்துட்டு இருக்க..

டேய்!! புள்ள எவ்வளவு நேரமா நீட்டிட்டு இருக்கா..எடு டா...ன்னு மணிமேகலை அதட்ட!

தேங்க்ஸ் ஆர்த்தி.. காஃபி யை ஒரு வாய் குடிச்சுட்டு.. காஃபியும் உன்னை மாதிரியே சூப்பரா இருக்கு. 

ஆர்த்தி வாயே திறக்காமல் வேண்டா வெறுப்பா நிக்குறா. 

சுத்தி இருப்பவங்களாம் ஆளு ஆளுக்கு பேசிட்டு...3 பேர் எழுந்து வந்து ஆர்த்தி தலையில பூவை வைச்சுட்டு..

அடுத்த வெள்ளி கிழமை நிச்சயம் பண்ணிக்கலாம் ன்னு சொல்லிட்டு கிளம்புறாங்க.

அவங்க கிளம்பின உடனே அசோக் க்கு கால் பண்றா.

ஏன் ஆச்சு.. கிளம்பிட்டாங்களா..

இப்போ தான் போறாங்க. பூ வைச்சுட்டு அடுத்த வெள்ளி கிழமை நிச்சயம் பண்ணிக்கலாம் ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. இப்போ என்ன பண்றது. இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. காலேஜ் முடிஞ்ச உடனே கல்யாணம் ன்னு சொல்லி இருக்காங்க. எனக்கு பயமா இருக்கு.

ஹே..லூசு !! எதுக்கு பயப்படுற நீ. 

நான் இருக்கேன்ல. எதுக்கும் பயப்படாத. நம்ம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டேன். ஓகே வா. நீ ம்ம் ன்னு சொன்னா போதும். உடனே பண்ணிக்கலாம். 

ம்ம்...( ஆர்த்தி)

ஹே !! நிஜமா வா?? அப்பறம் அங்க வந்து நின்னுட்டு அம்மா பாவம், அப்பா பாவம் ன்னு என்ன பாவம் ஆக்கிற மாட்டா இல்ல. 

மாட்டேன். நாமா பண்ணிக்கலாம். இவங்களை நான் பாவம் ன்னு நினைக்க மாட்டேன். ஒரு வார்த்தை கூட எனக்கு சம்மதம் மா , எனக்கு பிடிச்சு இருக்கான்னு ஒரு தடவை கூட நினைக்காதவங்களை பத்தி நான் ஏன் நினைக்க போறேன். 

அப்போ சரி..எப்போ பண்ணலாம். 

நல்ல நாள் பார்த்துட்டு சொல்றேன். 

சரி.. சீக்கிரம் பாத்துட்டு சொல்லு. இப்போ என்ன வேலை. 

சும்மா தான் இருக்கேன். 

ஹே....( அசோக்) சரி வீடியோ கால் பண்றேன்..ன்னு பண்றான்.

ஹே... என்ன டி... புடவை கட்டி இருக்க..

ஆமா.. நான் தான் சொன்னேன் தானே. நல்ல இருக்கேன் னா.

சும்மா இருக்கேன் ன்னு தானே டி சொன்ன..

டேய் கேடி. நான் வெட்டியா இருக்கேன் ன்னு சொல்ற சும்மா சொன்னேன். புத்தி எப்படி எல்லாம் யோசிக்குது எருமைக்கு. 

என்ன டி. இப்படி ஏமாத்திட்ட..

அடி வாங்குவ.. போய் வேலைய பாரு.

சரி சரி...சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். செம அழகா இருக்க. எப்படி சேன்ஞ் பண்ணேன் பாத்தியா உன் மைண்ட் ஆ..

ஓ..நீ அப்படி வரீயா.. புத்திசாலி தான். 

சரி வெளியே வரீயா..நேருல பாக்கணும் போல இருக்கு.

ம்ம்.. ஏதாவது சொல்லிட்டு வரேன். எங்க வரட்டும்.

கடைவீதிக்கு வா..

சரி.. வரேன் ன்னு கால் கட் பண்ணிட்டு ட்ரஸ் மாத்திட்டு வெளியே வரா.

நதியா அவளை பார்த்ததும்..

எங்க அக்கா கிளம்பிட்ட..

இவ ஒருத்தி எங்காவது கிளம்பும் போது தான் எங்க போறான்னு கேட்பா.

கடைவீதி க்கு போறேன். கூட வரேன் ன்னு சொல்லாத. நான் கொஞ்சம் தனியா இருக்கணும். 

போ!! நானும் வருவேன்.. நானும் வருவேன்.. கூட்டிட்டு போ.

வாசுகி நடுவுல வந்து..

எதுக்கு டி இப்போ கடைவீதி க்கு. நிச்சயித்து க்கு ரெடி ஆக ஏதாவது வாங்கணும் மா.

ஆர்த்தியும் ஆமான்னு தலையாட்ட..

அப்போ சரி போய்ட்டு வா. அவளையும் கூட்டிட்டு போ. 

ஆர்த்தியும் என்ன சொல்றதுன்னு தெரியாமல் கூடவே கூட்டிட்டு போறா.

அசோக் அவளுக்காக அங்க முன்னாடியே வந்து வைட் பண்ணிட்டு இருக்கான். 

ஆர்த்தியும் அங்க வர..அவளை பார்த்த அவனுக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா நதியா வை பார்த்ததும் என்ன பண்றதுன்னு தெரியாமல்.. அவளுக்கு மெஸேஜ் பண்றான்.

எதுக்கு டி அவளை கூட்டிட்டு வந்து இருக்க. 

நான் இல்ல டா. அவளா தான் வந்தா. அம்மாவும் கூட்டிட்டு போக சொன்னாங்க. 

அவளை எப்படியாவது சமாளிச்சு அனுப்பு டி..

ஆர்த்தியும் திருதிருன்னு முழிக்க..

அக்கா!!! ன்னு ஒரு மாதிரி கொஞ்சிட்டே கூப்பிட..

என்ன டி!! 

கோச்சுககாத.. நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து படம் பார்க்க பிளான் பண்ணி இருந்தே. ஆனா எப்படி வெளியே போறதுன்னு புரியாமல் இருந்தேன். அப்போ தான் நீ வெளியே போறேன்னு சொன்ன..அதா வந்துட்டேன். தயவு செஞ்சு ஓகே சொல்லு ப்ளீஸ். அப்பா அம்மா கிட்ட மட்டும் சொல்லி ராதா.

ஆர்த்தி முகத்துல அவ்வளவு சந்தோஷம். உடனே சரி பாத்து போய்ட்டு பத்திரமா இதே இடத்துக்கு வா. நான் வைட் பண்றேன்.

நதி யாவும் தேங்க்ஸ் சொல்லிட்டு அவ ப்ராண்ட்ஸ் கூட ஜாலியா போறா.

ஆர்த்தியும் அசோக் கிட்ட வரா.

To be continued...

# Bhuvi

Post a Comment

0 Comments