நேசம் என்னிடம் - 10
Beach ல் கடல் அலைகளை பார்த்தவாறு குரு அமர்ந்திருக்க... மேகா அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்...
நேரம் கடந்து இருள் சூழ தொடங்க...
மேகா மணியை பார்க்க... 7 என்று காட்டியது...
மேகா : குரு இப்படியே எவ்ளோ நேரம் உட்கார்ந்து இருக்க போறீங்க...
குரு : 6 மாசமா செத்துக்கிட்டு இருக்கேன் மேகா...
மேகா : தெளிவா சொல்லுங்க என்ன ஆச்சு...
குரு : இஷானி...
மேகா : "இஷானி..."என்று புரியாமல் விழிக்க...
குரு : ஆமா இஷானி... வம்சி wife... இஷானிக்கு வம்சி எந்த அளவுக்கு பிடிக்குமோ...அதே அளவுக்கு என்னைய பிடிக்கும்... எப்போ பார்த்தாலும் என் கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருப்பா... நா cigarette பிடிச்சா அவளுக்கு கோவம் வரும்...என் கன்னத்துல ஓங்கி அறைஞ்சுருவா... யோசிக்கவே மாட்டா...
3 years வம்சியும் நானும் நம்ம office ல தான் work பண்றோம்... 2 years back ல இஷானி நம்ம office ல join பண்ணா... அதுக்கு முன்னாடியே அவளை நாங்க அவளை பாத்து இருக்கோம்...
மேகா : எங்க பாத்தீங்க...
குரு கண் கலங்க பழைய நினைவுகளில் முழங்கி போனான்...
குருவும் வம்சியும் signal ல் நின்று கொண்டு இருக்க...
குரு வம்சி யிடம் பேசிக்கொண்டு இருக்க...
வம்சி : டேய் குரு அமைதியா இரு டா...
குரு பேச்சை நிறுத்தாமல் ஏதேதோ பேசி கொண்டு இருக்க...
வம்சி : ப்ச் பேசாத டா...
குரு : டேய் அந்த bike தான் வாங்கனும்.. செம்மையா இருக்கும் டா...
வம்சி எரிச்சலாகி " இப்ப நீ வாய மூடல னு வைய்யி உன் பல்லை கழட்டிருவேன்.."என்று சொல்ல...
குரு : ஆத்தி முதலுக்கே ஆபத்து வருதே...பல்லை கழட்டுனா எப்படி சாப்டுறது...
குரு 🤐🤐🤐 வாயை மூடி கொண்டான்...
வம்சி : "இப்ப அமைதியா இருக்கு..."என்று வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க...
Signal ல் ஒரு பெண் குழந்தைகளை road cross செய்து கொண்டு இருந்தாள்...
வம்சி அவளையே பார்த்து கொண்டு இருந்தான்...
வம்சி : டேய் குரு யாரு டா அது...
குரு : "........................."
வம்சி : குரு உன்னைய தான் டா...யாரு டா அது...
குரு : ".........................."
வம்சி திரும்பி அவனை பார்க்க...
குரு 🤫 வாயில் விரல் வைத்து கொண்டு அமர்ந்திருந்தான்...
வம்சி : டேய் வாயில இருந்து விரலை எடு டா...
குரு விரலை எடுக்க...
வம்சி : நா கேட்டுக்கிட்டே இருக்கேன்... நீ பேசாம உட்காந்து இருக்க...
குரு : ".............................."
வம்சி : டேய் வாய தொறந்து பேசு டா...
குரு : நீ தானே பேசாத...இல்லே னா பல்லை கழட்டிருவேன் னு சொன்ன...
வம்சி : இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...கேட்டதுக்கு பதில் சொல்லு டா ...
குரு : sorry நீ சொன்னத நா கவனிக்கல...
வம்சி : அது யாரு னு கேட்டேன்..
குரு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு "யார டா கேட்குற..."என்று கேட்க...
வம்சி : ப்ச் அங்க பாரு டா...
குரு : அங்க னா எங்க டா பக்கி...
வம்சி : எரும அங்க பாரு Road cross பண்றா...
குரு நிமிர்ந்து பாத்து விட்டு "டேய் வம்சி என்ன டா நீ இது கூட தெரியலையா உனக்கு..."என்று சொல்லி 😄😄😄 சிரிக்க...
வம்சி: "இப்ப எதுக்கு சிரிக்கிற..."என்று கடுப்பாக கேட்க...
குரு : பின்ன என்ன டா... அது பொண்ணு டா... இது கூட தெரியாமலா இருக்க...அப்போ சிரிக்காம என்ன பண்ணுவேன்...
வம்சி திரும்பி முறைக்க...
குரு : இதுக்கு ஏன் டா slow motion ல திரும்பி பாக்குற...
வம்சி : உன்னைய முறைக்கிறேன் டா பக்கி...
குரு : ஓ... இது தான் முறைக்கிறதோ... சரி எதுக்கு முறைச்ச...
வம்சி : எனக்கு தெரியாத அது பொண்ணு...அந்த பொண்ணு யாரு னு கேட்டேன்...
குரு : யாருக்கு தெரியும்..
வம்சி : என்ன டா...
குரு : என்ன நொண்ண டா...
வம்சி : தெரியும் னா தெரியும் னு சொல்லு... தெரியாது னா தெரியாது னு சொல்லு... அத விட்டுட்டு இப்படி பேசுனா...
குரு : உன்னைய கொல்ல போறேன்...
வம்சி : என்ன இப்படி சொல்ற...
குரு : பின்ன... ஏன் டா யாரோ ரோட்டுல போற பொண்ணை காட்டி யாரு னு கேட்டா எனக்கு என்ன டா தெரியும்...
வம்சி : அதுக்கு னு இப்படி தான் பேசுவீயா...
குரு : டேய் இப்ப நீ பேசாம இருக்க மாட்ட...
வம்சி : டேய் குரு அந்த பொண்ணு...
குரு : நீ போய் கேளு...
வம்சி : நா எப்படி டா...
குரு : அதுக்கு வாடகைக்கு ஆளையா பிடிக்க முடியும்...
வம்சி : இது நல்லா இருக்கே... நீயே போய் கேட்டுட்டு வாயேன்...
குரு அவனை முறைத்து கொண்டு "ரோடு னு பாக்க மாட்டேன் friend னு பாக்க மாட்டேன்...என் வாயில நல்ல நல்ல வார்த்தையா வந்துரும் பாத்துக்கோ..."என்று சொல்ல..
வம்சி : எனக்காக பண்ண மாட்டீயா...
குரு : "கொல்ல போறேன்... உன் சகவாசமே வேணாம் டா சாமி...நா போறேன்..."என்று bike ல் இருந்து இறங்கி நடக்க...
வம்சி வேகமாக இறங்கி அவன் பின்னால் ஓடி "டேய் டேய் டேய் சும்மா சொன்னேன் டா... வா டா..."என்று கெஞ்ச...
குரு : உன் சோலி பாத்துட்டு போடா...
வம்சி : "ஏய் வா டா..."என்று அவனை இழுத்து தோள் மேல் கை போட்டு அழைத்து செல்ல...
குரு : கைய எடு டா...
வம்சி : கோச்சுக்காத டா குரு... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்...
குரு : friend ங்குற ஒரே காரணத்துக்காக உன்னையே சும்மா விடுறேன்...
Horn sound கேட்க...
குரு திரும்பி பார்த்து விட்டு "டேய் Signal விழுந்திருச்சு டா... bike ஹ எடு...பின்னாடி எல்லாரும் horn அடிக்கிறாங்க...காது கிழியுது டா..."என்று சொல்ல...
இருவரும் ஓடி போய் bike ஐ எடுத்தனர்...
வம்சி signal ஐ பாத்து விட்டு bike ஐ கிளப்பி அவளை பார்த்து கொண்டே சென்றான்...
Signal cross செய்யும் போது சுற்றி முற்றி பார்க்க...
குரு அவன் தலையில் தட்டி "முன்னாடி பாத்து ஓட்டு டா..."என்று கத்த...
வம்சி யோசனையுடன் வண்டியை கிளப்பினான்...
வம்சி office ல் signal ல் பார்த்த பெண்ணை பத்தியே யோசித்து கொண்டு இருந்தான்...
அனைவரும் வம்சியை கவனித்து கொண்டு இருந்தனர்...
குருவை பார்ப்பவர்கள் அனைவரும் "என்ன குரு வம்சி இன்னக்கி ஒரு மாதிரி இருக்கான் னு..."என்று கேட்க..
குரு தூரத்தில் இருந்து வம்சி யை பார்க்க... வம்சி system ஐ தட்டி கொண்டு இருக்க...
சிறிது நேரத்தில் குரு அவன் அருகில் வந்து "வம்சி அந்த manager வர சொன்னாரு...என்ன கேட்டுட்டு வந்துரு.."என்று சொல்ல...
வம்சி system மையை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்...
குரு : வம்சி...
வம்சி இடம் இருந்த எந்த பதிலும் வராமல் இருக்க..
குரு அவன் முதுகில் அடித்தான்...
வம்சி : "ஸ்ஆஆஆ... ஏன் டா எருமை மாடு அடிச்ச...பக்கி பையலே...
குரு : எங்க டா இருக்க நீ...
வம்சி : ம்ம்ம் அமெரிக்கா ல டிரம்ப் ஹ பாக்க போய் இருக்கேன்...
குரு : ஹிஹிஹி...மச்சி செம்ம காமெடி மச்சி ...ஆனா இப்ப சிரிப்பு வர மாட்டேங்குது... அப்புறம் ஞாபகப்படுத்து சிரிக்கிறேன்... இப்ப போய் manager ஹ பாரு...
வம்சி : எதுக்கு...
குரு : டேய் அந்த மனுசன் தான் டா உன்னையே வர சொன்னாரு... போய் பாரு...
வம்சி : any grass...
குரு : New join...
வம்சி : எந்த department...
குரு : No idea...
வம்சி : male or female...
குரு : female...
வம்சி : age...
குரு : டேய் அங்க போய் interview எடு னு சொன்னா என் கிட்ட interview எடுக்குற... எழுந்து போடா முத...
வம்சி : "போறேன்..."என்று எழுந்து manager room க்குள் சென்று "good morning sir..." என்று சொல்லி விட்டு திரும்பி பார்த்து அப்படியே சிலையானான்...
தொடரும்...
# நான்சி....

0 Comments