"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

நேசம் என்னிடம் - 12

 


நேசம் என்னிடம் - 12

நாட்கள் விரைவாகவும் அழகாகவும் நகர்ந்தது...

வம்சிக்கு இஷானியை மிக பிடித்திருந்தது...

அது காதல் ஈர்ப்பு அல்ல என்பது மட்டும் குரு நன்றாக தெரிந்திருந்தது...

வம்சி எந்த காரணத்தால் இஷானியை காதலித்தானோ அதே காரணத்தால் குருவுக்கு அவளை பிடித்திருந்தது...

இஷானி யை தன் தங்கையாக பார்த்தான்...

இருவரும் தன்னிடம் பழகும் விதமாக அவர்களின் குணம் அன்பு பாசம் அக்கறை எல்லாம் இஷானிக்கும் பிடித்திருந்தது...

இஷானிக்கும் வம்சி மேல் காதல் வளர்த்தது...

குரு மேல் ஒரு தனி பாசம் வந்ததது...

இத்தனை நாட்களாக தனக்கு யாரும் இல்லை என்று நினைத்து கொண்டு இருந்தவள் மனதில் தனக்கென்று இவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டாள்...

இஷானி இருவரும் தவறு செய்தால் உரிமையோடு கண்டித்தாள்...

குரு வம்சியிடம் "எத்தனை நாள் இப்படி இருக்க போற... இஷா கிட்ட உன் காதலை சொல்லு டா..."என்று சொல்ல...

வம்சி : சரியா நேரம் வர மாட்டேங்குது டா...

குரு : என்ன ஜாதகம் பாக்கலாமா...

வம்சி : கிண்டல் பண்ணாத டா...

குரு : பின்ன என்ன டா... காதலிச்சா உடனே போய் சொல்லிடனும்... இப்படி இழுத்திட்டுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்...திடீர் னு இஷா நா ஒருத்தனை love பண்றேன் னு சொன்னா என்ன பண்ணுவ...

வம்சி : "டேய்..."என்று கோவமாக கத்த..

குரு : என்ன கோவம் வருதா... இது மாதிரி தான் எனக்கும்... Love ஹ சொல்லாம daily என் உசுர‌ போட்டு வாங்கிட்டு இருக்க... போடா முத...இதுல இஷா வேற இன்னக்கி வர... என்னைய என்ன பாடு படுத்தி போறீயோ தெரியல...

வம்சி : "என்னது இஷா வரலையா..."என்று அதிர்ச்சியாக

குரு : அப்போ உனக்கு தெரியாதா...நானா தான் உலரிட்டேனா...

வம்சி குரு சட்டையை பிடித்து "இஷா உண்மையா வரலேயா..."என்று கேட்க...

குரு : ஆமா...

வம்சி : என் கிட்ட ஏன் சொல்லல...

குரு : நீ rounds ல இருந்த... அது தான் சொல்லல...

வம்சி : நா வந்து எவ்ளோ நேரம் ஆச்சு... வந்த உடனே சொல்லி இருக்கலாம் ல...

குரு : இப்ப சொல்லலாம் னு தான் அப்போ சொல்லல...

வம்சி அவனை முறைத்து கொண்டு "ஏன் வரல..."என்று சொல்ல...

குரு : I'm suffering from fever since last night...The doctor had advised me to take 5 days rest...

வம்சி கடுப்பாகி அவன் தலையில் கொட்ட...

குரு :"ஸ்...ஆ..."என்று கத்தி தலையை  கொண்டே "லூசு பயலே எடுக்கு டா கொட்டுன..."என்று 😠😠😠 முறைக்க...

வம்சி : comedy பண்ணிக்கிட்டு இருக்கீயா...

குரு : எனக்கு வேற வேலை இல்ல... அவ தான் என்னமோ school leave letter எழுதி கொடுக்குற மாதிரி எனக்கு call பண்ணி அப்படி சொன்னா... சொன்ன ஆளை விட்டுட்டு என்னைய கொட்டுறான்...

வம்சி : அவ fever னு சொல்லி இருக்கா... நீ இவ்ளோ cool ஹ இருக்குற...

குரு : அடங்கு... நீ Rounds போய் எவ்ளோ நேரம் ஆச்சு...

வம்சி : two hours...

குரு : ம்ம்ம்... நா இப்ப தான் office க்கு வரேன்...

வம்சி : நீ எப்போ வந்தா எனக்கு என்ன...

குரு : அது சரி நா எல்லாம் உன் கண்ணுக்கு எப்படி தெரிவேன்... நா office க்கு கிளம்பி வெளிய வந்தேன்... இஷானி எனக்கு call பண்ணி fever னு சொன்னா... நா உடனே அவளை hospital க்கு கூட்டிட்டு போய் காட்டிட்டீ வீட்டுல விட்டுட்டு தான் வரேன்... வந்து five mins ஆகுது...

வம்சி : இஷா நல்லா தானே இருக்கா...

குரு : இப்ப கேளு...high fever... எழுந்திரிக்க கூட முடியல... Cab book பண்ணி தான் கூட்டிட்டு போனேன்...

வம்சி : "இப்ப நல்லா இருக்கு ல..."என்று பதற்றதுடன் கேட்க...

குரு : ம்ம்ம்... Ok தான்... Tablet கொடுத்து படுக்க வைச்சுட்டு வந்து இருக்கேன்... அவ apartment ல security கிட்ட ஏதாவது Emergency னா call பண்ண சொல்லி இருக்கேன்...

வம்சி : நா இஷா வ பாக்கனும்...

குரு : "போய் பாரு..."என்று நகர...

அவன் சட்டையை பிடித்து  "நீயும் வா..."என்று இழுத்து செல்ல...

குரு : "டேய் டேய் எனக்கு வேலை இருக்கு டா..."என்று கத்த கத்த...

அவன் இழுத்து கொண்டு சென்றான்...

வம்சி இஷா வீட்டிற்குள் நுழைந்து முன்னே "இஷா...இஷா..."என்று கத்தி கொண்டு செல்ல...

குரு : டேய் எதுக்கு டா இங்கேயே கத்துற...

வம்சி : வாய மூடிட்டு fruits ஹ எடுத்துட்டு வா...

குரு : எதே...

வம்சி : "வா‌ டா..."என்று உள்ளே நுழைய...

குரு :"சரி தான்...எல்லாம் என் நேரம்..."என்று தலையில் 🤦🏻🤦🏻🤦🏻 அடித்து கொண்டான்...

இஷா வம்சியை பார்த்தவுடன் எழ முயற்சிக்க...முடியாமல் படுத்து கொண்டாள்...

வம்சி : ஏய் இஷா படு..ஏன் எழுந்திரிக்க‌‌...

இஷா : வா வம்சி... நீ வந்து இருக்க... உனக்கு ஒரு coffee கூட போட்டு தர முடியல‌...

வம்சி : இப்ப யாரு உன் கிட்ட coffee கேட்டா...நீ பேசாம படு...

இஷா : இல்ல வம்சி வீட்டு வந்தவங்களுக்கு குடிக்க தண்ணியாவது கொடுக்கனும் ல... அது கூட என்னால பண்ண முடியல..

வம்சி : இப்ப என்ன நா coffee குடிக்கனும் ...அவ்ளோ தானே...அந்த தடுமாடு இருக்கான்...அவனை போட சொல்றேன்... Coffee செம்மையா போடுவான்...

இஷா : "தடிமாடா... யாரு..."என்று புரியாமல் பார்க்க..

"இஷா அவன் என்னைய தான் சொல்றான்..."

இஷா திரும்பி பார்க்க... குரு கவருடன் நின்றான்...

இஷா : வா குரு..என்ன கையில...

குரு : இவன் உனக்கு fruits வாங்குனான்‌‌...உள்ள வந்தவன் எடுத்துட்டு வராம என்னைய எடுத்துட்டு வர சொன்னான்...Fruits எல்லாம் நல்லா சாப்டு... நல்லா தேறி வா..நீ இல்லாம இவன் என் உயிரை வாங்குறான்...

வம்சி குரு வை முறைக்க...

குரு :"ஆத்தி முறைக்கிறானே‌...ஓடிரு டா..."என்று நினைத்துக் கொண்டு "இரு இஷா நா போய் coffee போட்டு எடுத்துட்டு வரேன்...உனக்கும் எடுத்துட்டு வரேன்...

இஷா : இல்ல குரு எனக்கு வேணாம்...

குரு : நீ சும்மா இரு‌...நா கொண்டு வரேன்‌‌...

குரு செல்ல...இஷா வம்சியை பார்த்தாள்‌‌...

வம்சி : என்ன பாக்குற... குரு நல்லா போடுவானா னு யோசிக்கிறீயா... அது எல்லாம் நல்லா போடுவான்... Cooking கூட செம்மையா பண்ணுவான்... நீ அவன் சமைச்சு சாப்டது இல்லை ல...

இஷா : குரு போகும் போது கஞ்சி வச்சு கொடுத்துட்டு தான் போனான்... அதுக்கும் மேல காய்ச்சலுக்கு னு சொல்லி ஒரு கசாயம் வேற வச்சு கொடுத்தான்...

வம்சி : ஓ...

இஷா : office க்கு‌ போகல...

வம்சி : ம்ம்ம் போனேன்...குரு சொன்னான்...வந்துட்டேன்... இப்ப எப்படி இருக்கு...

இஷா : ம்ம்ம்... Feel better now...

வம்சி  : ஹான்...

இருவருக்கு பேச வார்த்தைகள் வர வில்லை... ஏனோ இன்று பேசி கொள்ள உதடுகள் துடித்தது... பேச முயற்சித்தும் முடியாமல் போனது...

அங்கே நிலவிய மௌனத்தை கலைப்பதற்காகவே வந்து சேர்ந்தான் குரு...

குரு : "Excuse Me...Your order..."என்று உள்ளே நுழைந்தான்...

வம்சி : ஏன் டா...

குரு : எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க... ஏன் மா இஷா உன் வாய் பேச்சு எல்லாம் என் கிட்ட மட்டும் தானா..‌

இஷா : சும்மா இரு குரு...

குரு : "சரி எழுந்திரி..."என்று அவள் அருகில் சென்று இடது புறம் கையை பிடிக்க...

வம்சி வேகமாக எழுந்து இடமிருந்து வலமாக சென்று வலது கையை பிடிக்க...

இருவரும் அவளை தூக்க முயற்சிக்க...

இஷா : "hey guys...அவ்ளோ scene எல்லாம் இல்ல... இப்ப கொஞ்சம் நல்லா தான் இருக்கேன்... நானே எழுந்திரிக்க முயற்சி பண்றேன்..."என்று அவளே மெதுவாக எழுந்து அமர...

குரு : Good...

வம்சி :Ok தானே...

இஷா : ம்ம்ம்... Ok...

குரு : சரி இந்தா coffee குடி...

இஷா : first time வீட்டுக்கு வந்து இருக்கீங்க... சாப்பாடு கூட என்னால போட முடியல...

வம்சி : அவ்ளோ தானே... நீ ஏன் feel பண்ற... முத coffee குடி... நல்ல சமைச்சு சாப்டலாம்...

இஷா : நா சாப்ட ஏதாவது ready பண்றேன்...

வம்சி : ஏ... இரு... நீ எங்க போற...

இஷா : சமைக்கிறது இல்லையா...

வம்சி : "நீ ஒன்னும் சமைக்க வேணாம்... நாங்க பாத்துக்கிறோம்..."என்று குரு வை பார்த்து "டேய் போய் சாதம் வடிச்சு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் அப்பளம் எல்லாத்தையும் ready பண்ணு..."என்று சொல்ல...

குரு அவனே மேலும் கீழுமாக பார்த்து விட்டு "இத குரு பார்த்துக்குவான் னு சொல்லனும்... நாங்க பாத்துக்கிறோம் னு பந்தா வேற..."என்று முறைக்க...

வம்சி : கோச்சுக்காத டா... போய் சமையலை பாரு...

குரு : சமைச்சு வச்சா நல்ல சாப்ட தெரியுமா...

வம்சி : அத சிறப்பா பண்ணுவேன் டா...

குரு : த்து...

வம்சி : It's ok...உனக்கு வெங்காயம் தக்காளி எதுவும் cut பண்ணனுமா...

குரு : "வந்து அதையாவது செய்..."என்று "இஷா நீ படுத்து நல்லா rest மா... நாங்க சமைச்சு எடுத்துட்டு வரோம்..."

இஷா : என்னால உங்களுக்கு தான் கஷ்டம்...

குரு : அப்படினா என்ன...

வம்சி : அதானே...

இஷா 🙂🙂🙂 சிரிக்க... இருவரும் சமையல் அறைக்குள் நுழைந்தனர்...

இஷா கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்க... வம்சி வேகமாக வந்து கட்டிலில் விழுந்தான்...

தொடரும்..‌

# Nancy...

Post a Comment

0 Comments