நேசம் என்னிடம் - 13
வம்சி மூச்சு வாங்க படுத்திருக்க..
இஷா : என்னாச்சு...
வம்சி : சாப்பாடு ready... வா சாப்டலாம்...
இஷா : அதுக்குள்ள சமைச்சுட்டிங்களா...
வம்சி : ம்ம்ம்... நா தான் எல்லாத்தையும் பண்ணேன்...
தூரத்தில் இருந்து குரு கரண்டியை அவன் மேல் எறிந்தான்...
குரு : கொல்ல போறேன் டா உன்னைய.. சமைச்சது நானு.. சமைக்க help பண்றேன் னு எனக்கு வேலைய இழுத்து விட்டு நீ சமைச்சியா... உதப்படுவ படவா...
வம்சி : "டேய் சும்மா இரு டா..."என்று "வா இஷா சாப்டலாம்..."என்று கை பிடித்து அழைத்து சென்றான்...
இஷாவிற்கு table ல் recipe ஐ பார்த்து தலை சுற்றியது...
இஷா : என்ன இது இவ்ளோ...காய்ச்சல் ல இது எல்லாம் சாப்டலாமா... முத சாப்ட முடியுமா...
வம்சி : நா தான் சொன்னேன் ல... நீ கேட்டியா...
குரு :"எதே..."என்று அவனை மேலும் கீழுமாக பார்த்தான்...
வம்சி 🙄🙄🙄திருதிருவென முழிக்க...
வம்சி : டேய் என்ன டா சமைக்க போற...
குரு : வேற என்ன மிளகு ரசம் தான்...
வம்சி : ச்சீ... என்ன டா பொசுகு னு மிளகு ரசம் னு சொல்லிட்ட... ஒரு விருந்துக்கு ready பண்ற மாதிரி பண்ணு டா பக்கி பயலே...
குரு : லூசா டா...அவ காய்ச்சல் ல இருக்கா... இப்ப போய் விருந்துக்கு சமைக்கிற மாதிரி சமைக்கனுமா...
வம்சி : யாரு நா லூசா... டேய் பக்கி அவ காய்ச்சல் ல தொண்டை கசந்து போய் இருக்குமே னு சொன்னே...
குரு : "இருந்தாலும்... இப்ப..."என்று இழுக்க...
வம்சி : சொன்னத செய் டா...
வம்சி சொன்னதை நினைத்து பார்த்து குரு வம்சியை முறைக்க....
வம்சி : டேய் சாப்பாடு போடு டா... முறைச்சுக்கிட்டு இருக்குற... வா டா...
இஷா : எதுக்கு இவ்ளோ...
குரு : இங்க பாரு மா... இவ்ளோ சமைச்சாலும் உன் காய்ச்சலுக்கு செரிமானம் ஆகுற மாதிரி தான் பண்ணி இருக்கேன்...
வம்சி : எது இந்த சாம்பார் பொரியலா...
குரு : "வாய மூடு டா..."என்று அதட்டி விட்டு " இந்த சாம்பாரும் முட்டைகோஸ் பொரியலும் எங்களுக்கு..."
வம்சி : சரி...
குரு : இது மிளகு ரசம்... சளிக்கு நல்லது...
வம்சி : பார்ரா...
குரு : இது உருளைக்கிழங்கு நல்லா வேக வச்சு மிளகு தூள் போட்டு செஞ்சு இருக்கேன்...இதுவும் சளிக்கு நல்லது செரிமானம் ஆகும்...
வம்சி : அப்புறம்..
குரு : இது வேக வச்ச முட்டை... இது தக்காளி சூப்...காய்ச்சலுக்கு நல்லது...
வம்சி : அடடடா... கழக்கிட்ட போ...
குரு : நசுக்கிருவேன் டா உன்ன...
இஷா அவனையே பார்த்தாள்...
குரு : என்ன இஷா...
இஷா : இவ்வளவும் எனக்காக வா...
குரு : "ம்ம்ம்..."என்று ஒரு தட்டில் சாதம் வைத்து ரசம் ஊற்றி உருளைக்கிழங்கு முட்டை வைத்து ஒரு கிண்ணத்தில் சூப் ஊற்றி வைத்தான்...
இஷா : நீங்க சாப்டல...
குரு : "இதோ சாப்ட போறோம்..."என்று "டேய் வம்சி உட்காரு டா..."என்று தட்டை எடுத்து வைத்து சாதம் வைத்து சாப்டான்...
மூவரும் சாப்டு முடிக்க...குரு எல்லாத்தையும் எடுத்து வைத்து சுத்தம் செய்து வந்து அமர...
வம்சி sofa அமர்ந்து முன்னால் இருந்த table மேல் கால் வைத்து ஆட்டி கொண்டு காதில் headset மாட்டி பாட்டு கொண்டு இருந்தான்...
குரு கடுப்பாகி sofa மேல் இருந்த pillow வை அவன் மேல் எறிந்தான்...
வம்சி : ஏன் டா...
குரு : வேலை எல்லாம் பார்த்தது நானு... Rest எடுக்குது நீயா...
வம்சி : நானும் வேலை செஞ்சேன் டா...
குரு : எது ஒன்னுக்கு ரெண்டு வேலைய இழுத்து விட்டீயே...அந்த வேலையா...
வம்சி : கோச்சுக்காத மச்சி...
குரு : ச்சீ வாய மூடிட்டு கிளம்பு... ஒரு வயசு பொண்ணு தனியா இருக்குற வீட்டுல ரெண்டு வயசு பசங்க ரொம்ப நேரம் இருந்தா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க...
வம்சி : டேய் அந்த காலத்து ஆளுங்க மாதிரி பேசாத டா...
குரு : லூசு... நா ஒன்னும் அந்த மாதிரி type இல்ல... காலத்துக்கு ஏத்த மாதிரி எல்லாரும் மாறிக்கிறாங்க தான்... இப்பவும் அந்த மாதிரி ஆளுங்க இருக்க தான் செய்யுறாங்க...
வம்சி : நீ சொல்றது எனக்கு புரியுது... ஊர் ஆயிரம் பேசும் அதுக்காக நம்மள மாத்தி முடியுமா...
குரு : டேய் அரைவேக்காடு மாத்தி வேணாம்... ஆனா... இங்க இருக்குற இஷா டா... அவளை எப்படி எல்லாம் பேசுவாங்க னு யோசிச்சு பாத்தியா...
வம்சி அமைதியாக இருக்க...
குரு : வம்சி சொன்னா புரிஞ்சுக்கோ... வா போலாம்...
வம்சி எதுவும் பேசாமல் அவனுடன் சென்றான்...
இஷா வம்சியையே பார்த்து கொண்டு இருந்தாள்...
அவள் மனம் முழுவதும் வம்சி முகம் மட்டுமே பதிந்து இருந்தது...
ஒரு வாரம் கடந்தது...
இந்த ஒரு வாரம் குரு எவ்வளவு அழைத்தும் இஷா பார்க்க மறுத்தான்...
குரு மட்டுமே இஷா வை பார்த்து விட்டு வந்தான்...
இஷாவின் மனம் வம்சியை தேடியது...
குரு இஷா வை பார்க்க வரும் போது எல்லாம் வம்சி யை கேட்டு கொண்டேன் இருந்தாள்...
இஷா : ஏன் குரு வம்சி வரல...
குரு : அது வந்து New Material வந்து இருக்கு... அவங்க கொடுக்கு இருக்குற time கம்மி... CEO கொடுத்து இருக்குற time குள்ள முடிக்கனும்... அதுக்கு நீ தான் பொறுப்பு னு சொல்லிட்டாரு... வம்சி முத மேல office க்கே வர்றது இல்ல... கீழ Knitting லேயே தான் இருக்கான்...
இஷா : இல்ல... வம்சி வேணும் தான் avoid பண்றாரு... எனக்கு தெரியும்... என் மேல் கோவம்...
குரு : அடடடா... இங்க பாரு இஷா...நா பொய் சொல்றேன் னே நினைச்சா... நாளைக்கி தான் office க்கு வர போற ல... வந்து கேட்டுக்கோ...
இஷா அமைதியாக இருக்க... குருவிற்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது...
இஷா விடம் சொல்லி கிளம்பினான்...
நேராக office க்கு சென்று வம்சி யிடம் சண்டையிட்டான்...
குரு : டேய் உனக்கு என்ன டா பிரச்சனை...
வம்சி நிதானமாக "எனக்கு என்ன நா நல்லா தானே இருக்கேன்..."என்று கேட்க...
குரு : கொன்றுவேன் டா... ஏன் டா இப்படி பண்ற... பாவம் இஷா... நீ வரல னு ரொம்ப வருத்தப்பட்டா...
வம்சி : அதுக்கு நா என்ன பண்றது...
குரு : லூசு... நீ அவளை love பண்ற தானே...
வம்சி : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்...
குரு : உன் காதலி கஷ்டப்படுறா... நீ இங்க ஜாலியா இருக்க...
வம்சி : நீ என்னைய தப்பா நினைச்சுட்டு ல...
குரு : இல்ல... நீ எதுக்காக இப்படி பண்ற னு புரியாம இருக்கேன்...
வம்சி : அடுத்த தடவ இஷா வீட்டுக்கு போகும் போது உரிமையோடு போகனும்...
குரு : என்னது...
வம்சி : அவளோட புருஷனா போகனும்...அப்போ யாரும் தப்பு நினைக்க மாட்டாங்க... பேச மாட்டாங்க...
குரு : டேய் அன்னக்கி பேசுனதுக்கா டா இப்படி பண்ற...
வம்சி : நா இன்னும் என் காதலேயே சொல்லல...இஷா. வந்த உடனே என் காதலை சொல்லனும்...
குரு : ஓ... அப்போ போய் சொல்லு...
வம்சி : "இல்ல அது வந்து..."என்று இழுக்க..
குரு : டேய் டேய் நிறுத்துங்க டா... காதல் வந்துச்சு னா முத போய் சொல்லுங்க டா... ஏன் டா இம்சை பண்றீங்க... இப்படி சொல்லாம இழுத்தடிச்சுக்கிட்டே இருந்துட்டு அப்புறம் அவ கிட்ட வேறா யாராவது காதலை சொல்லி அவ ஏத்துக்கிட்டா... அவ என்னை ஏமாத்திட்டா... இல்ல காதல் தோல்வி னு புலம்பிக்கிட்டு சுத்தறது... ஏன் டா இந்த வேலை...
வம்சி : அடேய் ஏன் டா எதுக்கு இப்படி எல்லாம் கற்பனை பண்ற... நீ சொல்றத பார்த்தா எனக்கா இப்பவே வயித்துல புளிய கரைக்கிது... அவ office க்கு வரட்டும் நா சொல்றேன் னு சொல்ல வந்தேன் டா... அதுக்குள்ள நீ என்னன்னமோ சொல்ற..
குரு : நா General ஹ நடக்குறத சொன்னே...
வம்சி : நல்லா சொன்ன போ... ம்ஹீம் இது சரி வராது... நீ ஏதேதோ சொல்லி பீதிய கிளப்பி விட்டுட்ட... நா இப்பவே போய் சொல்றேன்...
குரு : எதே...
வம்சி : "வா டா..."என்று அவனை இழுத்து கொண்டு இஷா வீட்டை நோக்கி சென்றான்....
இஷா TV பார்த்து கொண்டு இருக்க... குருவும் வம்சியும் வாசலிலேயே நின்றனர்...
குரு : டேய் எதுக்கு டா இங்க கூட்டிட்டு வந்த...
வம்சி : "பேசாம இரு..."என்று கதவை தட்ட...
இஷா திரும்பி பார்த்து வேகமாக எழுந்து நின்று "வம்சி குரு வாங்க...ஏன் வெளியவே நிக்கிறீங்க..."என்று அருகில் சென்றாள்....
இஷா வம்சி யையே பார்த்து கொண்டு இருந்தாள்...
வம்சி முகம் அவளையே பார்த்தான்...
குரு இருவரையும் மாறி மாறி பார்த்து "ம்க்கும்...உள்ள போலாமா..."என்று கேட்க...
இஷா வேகமாக "ஏய் sorry வாங்க உள்ள..."என்று அழைக்க...
வம்சி குருவை முறைத்து கொண்டே உள்ளே சென்றான்....
இஷா : இருங்க நா coffee எடுத்துட்டு வரேன்...
குரு : ஏது நீயா...
இஷா : ஆமா... இருங்க வரேன்...
குரு : அம்மாடி ஒரு நிமிசம்...நீ வந்து sofa ல மட்டும் உட்கார்... நா போய் coffee போட்டு எடுத்துட்டு வரேன்...
இஷா : ஏன் குரு...
குரு : "நேத்து coffee னு ஒன்னும் போட்டு கொண்டு வந்து கொடுத்தீயே... உன் coffee ல மயங்கிட்டேன்... மறுபடியும் என்னால மயங்க முடியாது... நா போய் போட்டு வரேன்... நீ இங்க உட்காரதே நல்லது..."என்று அவள் தோளை பிடித்து அழைத்து வந்து sofa வில் அமர வைத்து kitchen க்கு சென்றான்...
வம்சி புரியாமல் "குரு என்ன சொல்லிட்டு போறான்..."என்று கேட்க...
இஷா : "அது வந்து எனக்கு சமைக்க தெரியாது... coffee எப்படி போடுறது னு தெரியாது... டீ தூளைபால் கொதிக்க வைச்சுட்டு காபி தூளையும் போட்டு sugar போடாம salt ஹ போட்டுட்டேன்..."என்று மென்று முழுங்கி சொல்ல...
வம்சி விழுந்து விழுந்து சிரித்தான்.....
தொடரும்...
# Nancy...

0 Comments