நேசம் என்னிடம் -28
வம்சி பதறி அடித்து கொண்டு எழுந்து 🏃🏻🏃🏻🏃🏻ஓட...
குரு நாகராஜ் மேகா புரியாமல் விழித்தனர்...
குரு எழுந்து வம்சி பின்னாலேயே 🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️ஓட...
நாகராஜ் : இப்ப நம்ம என்ன பண்றது...
மேகா : போலாமா வேணாமா...
வெளியே ஓடிய குரு Cabin door ஐ திறந்து "நீங்க ரெண்டு பேரும் இருங்க... நா என்ன னு பாத்துட்டு வரேன்..."என்று ஓடினான்...
நாகராஜ் : நம்ம குழப்பத்துக்கு பதில் கிடச்சுருச்சு...
மேகா : நாகா be serious... எப்பவுமே fun பண்ணிக்கிட்டே இருக்காத... வம்சி ஏன் அவ்ளோ பதற்றமா போனாரு...
நாகராஜ் : அது தான் பின்னாடி குரு போய் இருக்கானே... சொல்லுவான்...
மேகா : இருந்தாலும் பயமா இருக்கு...
நாகராஜ் : வா வந்து வேலைய பாரு... Three days ஹ நம்ம நாலு பேரும் ஒன்னா சுத்திக்கிட்டு work பண்ணாம இருக்கோம் னு எல்லாரும் பேசிக்கிட்டு இருக்காங்க... அவங்க பேசுறதுக்கு ஏற்ற மாதிரி நம்ம ஏன் நடந்துக்கனும்...
மேகா : நா அங்க போய் உட்கார்ந்து தான் இருக்க போறேன்...
நாகராஜ் : "உட்காந்து இருக்குறதே எவ்ளோ பெரிய வேலை னு தெரியுமா... நல்ல வேலை ய பாக்குறதுக்கு இவ்ளோ சலிச்சுக்கிற... வேலைய பாரு..."என்று அங்கே இருந்து நகர...
மேகா தன் site க்கு சென்றாள்...
வம்சி பதற்றதுடன் parking ல் இருந்து bike ஐ எடுத்து பின்னால் நகர்த்தி வந்து அமர போக... தள்ளாடி bike உடன் விழ போக...
பின்னால் ஓடி வந்து குரு வேகமாக வந்து வம்சியை பிடிக்க... Bike கீழே விழுந்தது...
குரு : டேய் என்ன ஆச்சு...
வம்சி கண் கலங்கி இருந்தது...
குரு bike நிமிர்த்தி நிறுத்தி வைத்தான்...
குரு வம்சி யை பார்த்து அவன் கண்களில் கண்ணீர் வடிந்தது...
குரு :"டேய் என்ன டா...என்ன ஆச்சு..."என்று அவன் கண்ணை துடைக்க...
வம்சி : இஷா... இஷா... என் இஷா...
குரு : இஷா வா... இஷா என்ன டா... யாரு call பண்ணா.. என்ன சொன்னாங்க... என்ன ஆச்சு னு சொல்லு...
வம்சி : "முத bike எடு... வீட்டுக்கு போலாம்..."என்று பதற்றதுடனும் கோவத்துடனும் சொல்ல.
குரு : "Ok... Ok... Relax... போலாம்..."என்று bike start செய்ய...
வம்சி பின்னால் அமர்ந்தான்...
குரு bike ஐ நிறுத்த... வம்சி வேகமாக இறங்கி 🏃🏻🏃🏻🏃🏻ஓட... குரு stand போடாமல் bike ஐ கீழே போட்டு விட்டு 🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️ஓடினான்...
மல்லிகா எதிரே வர...
வம்சி அவர் முன் நின்று மூச்சு வாங்க "இஷா... இஷா எங்க மல்லி மா..."என்று கேட்க...
மல்லி : உள்ள தான் வம்சி தம்பி...
வம்சி வேகமாக உள்ளே சென்றான்...
குரு ஓடி வர... மல்லி அவனை தடுத்தாள்...
மல்லி : இருங்க குரு தம்பி...
குரு : மல்லி மா... வம்சி...
மல்லி : உள்ள...
குரு : என்ன ஆச்சு மல்லி மா...
மல்லி : என்ன குரு தம்பி உனக்கு விசயமே தெரியாதா...
குரு : எங்க... இவனுக்கு ஒரு call வந்துச்சு... உடனே வேகமாக ஓடி வந்துட்டான்... நானும் என்ன னு தெரியாம வந்துட்டேன்...இஷா னு மட்டும் தான் சொன்னான்...இஷா என்ன மல்லி மா... அவளுக்கு ஒன்னும் இல்லையே...
மல்லி சிரித்து கொண்டே "இரு குரு தம்பி... தெரியும்..."என்று நகர்ந்தார்...
குரு :"அச்சோ என்ன ஆச்சு னு தெரியலையே..."என்று பயத்துடன் குழப்பத்துடன் இஷா அறையை நோக்கி சென்றான்...
குரு அறைக்குள் நுழைய... இஷா கட்டிலில் படுத்து இருக்க... வம்சி அவளை கட்டி பிடித்து இருந்தான்..
குரு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்....
வம்சி : எனக்கு தெரியும்... என் இஷா எனக்கு கிடைச்சுருவா னு எனக்கு தெரியும்...
குரு : "இஷா..."என்று நடுங்கிய குரலில் அழைக்க...
வம்சி இஷா விடம் இருந்து அவனை பார்க்க...
குரு இஷா வையே பார்த்து கொண்டு வந்தான்...
இஷா அருகில் கீழே மண்டியிட்டு அவள் கரத்தை பிடித்து கதறி 😭😭😭அழுதான்...
"குரு..."என்று மெல்லிய குரலில் இஷா அழைக்க...
குரு வேகமாக நிமிர்ந்து பார்த்தான்...
இஷா கண் சிமிட்டி மெதுவாக தலையை ஆட்ட...
குரு : என்னால தானே இது எல்லாம்...
இஷா :"இல்லை..."என்பது போல் தலையை ஆட்டினாள்...
குரு கண்ணை துடைத்து கொண்டு வம்சியை பார்த்து "எப்படி டா..."என்று கேட்க...
வம்சி : மல்லி மா தான் call பண்ணாங்க...மல்லி மா hall clean பண்ணிட்டு இருந்திருக்காங்க... அப்போ இஷா room ல இருந்து ஏதோ உடையுற சத்தம் கேட்டு இருக்கு.. போய் பாத்து இருக்காங்க... இஷா எழுந்து உட்கார try பண்ணிட்டு இருந்திருக்கா...
குரு எழுந்து இஷா நெற்றில் 😗😗😗 முத்தமிட்டு அவள் தோளில் முகம் புதைத்து 😭😭😭 அழுதான்...
குரு அவளை விட்டு விலகாமலே " வம்சி Doctor க்கு call பண்ணு டா.."என்று சொல்ல...
வம்சி வேகமாக mobile எடுத்து Doctor call செய்தான்...
இருவரும் இஷா அருகிலேயே அமர்ந்திருந்தனர்...வலது புறம் கையை குருவும் இடது புறம் கையை வம்சி பிடித்திருந்தனர்...
இஷா மெல்லிய குரலில் "எத்தனை வருசம் ஆச்சு..." என்று கேட்க...
வம்சா பதறி போய் வேகமாக "இஷா என்ன மா... வருசமா அப்படி எல்லாம் இல்ல மா.."
குரு : மாசம் தான்... ஆறு... ஆறு மாசமா நரக வேதனை தான் இஷா... உன்னோட இந்த நிலைக்கு நா தான் காரணம் னு இரப்பகலா தூங்கமா உன்னையே இந்த நிலையில பார்க்க முடியாம எவ்ளோ கஷ்டப்பட்டேன் னு தெரியுமா இஷா...அதே நேரம் வம்சிய பாக்கும் போது எல்லாம் குற்ற உணர்வு... அவனை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்... நீ மட்டும் கடைசி வரைக்கும் இப்படியே இருந்திருந்தா... நா செத்தே போய் இருப்பேன்....
வம்சி அவனை 👋👋👋 ஓங்கி அறைந்தான்...
இஷா : வம்சி...
வம்சி : "இப்படி தான் இஷா... எப்போ பார்த்தாலும் பைத்தியக்காரத்தனம் பேசிக்கிட்டு இருக்கான்... அப்போ கோவம் வருமா வராதா..."என்று கோவமாக கத்த...
Doctor வந்தார்....
Doctor இஷா வை check up செய்து விட்டு "Mr.வம்சிதேவன்... No problem... She's perfectly all right...
But hospital க்கு கூட்டிட்டு வாங்க... test and scan எடுத்து பாத்துக்கலாம்..."என்று சொல்ல...
வம்சி : இஷாக்கு...
Doctor : "she's fine... nothing worry... Just ஒரு formality னு நினைச்சுக்கோங்க... அவன் That's all..."என்று வம்சி தோளை தட்டி " உங்க நம்பிக்கை வீணா போகல..." என்று செல்ல....
வம்சி குரு வை கட்டி கொண்டு " என் இஷா... என் இஷா டா..."என்று 😭😭😭அழுதான்...
குரு அவன் முதுகை தடவி கொடுத்து " ஆமா டா இஷா தான்...நம்ம இஷா எப்பவும் நம்ம கூட தான் இருப்பா..."
குரு mobile கத்தி கொண்டே இருந்தது...
இஷா : குரு...
குரு வேகமாக இஷா அருகில் சென்று அவள் கையை பிடிக்க...
இஷா : இனிமே...
குரு : feel பண்ண மாட்டேன்...
வம்சி : இஷா hospital போலாமா...
இஷா : "ம்ம்ம்..."என்று அழ முயற்சிக்க..
வம்சி : Hey இஷா... இரு நா உன்னைய தூக்கிட்டு போறேன்...
இஷா : வேணாம்...
குரு : "இல்ல... ஆறு மாசமா எந்த ஒரு அசைவு இல்லாம இருந்த... உன்னால நடக்க முடியாது இஷா..."என்று வம்சியை பார்த்து "டேய் வம்சி இஷா வ தூக்கு டா..."என்று சொல்ல...
வம்சி இஷா வை தூக்க...
குரு car எடுக்க சென்றான்...
குரு முகம் முழுவதும் சந்தோஷம் நிறைந்து இருக்க... வம்சி இஷா கையை தன் கைக்குள்ளே வைத்து இருந்தான்...
வம்சி : குரு பாத்து போ டா...
குரு : எனக்கு தெரியும் வம்சி... சைக்கிள் வேகத்துல தான் போவேன்...
வம்சியும் இஷாவும் சிரித்தனர்...
**************
மேகா : "டேய் நாகா..."என்று கத்த...
நாகராஜ் பயந்து போய் கையில் வைத்து இருந்த file ஐ கீழே போட்டான்...
நாகராஜ் : என்ன மா வேணும் உனக்கு...
மேகா : அவரு call attend பண்ணவே மாட்றாரு...
நாகராஜ் : அதுக்கு நா என்ன பண்றது...
மேகா : உனக்கு வம்சி Sir வீடு தெரியும் தானே...
நாகராஜ் : ம்ம்ம்...
மேகா : அங்க போய் பாக்கலாம்...
நாகராஜ் : எதே... சரி போலாம்... Evening போலாம்...
மேகா : இல்ல இப்ப போலாம்...
நாகராஜ் : அப்போ நீ போ... நா வரல...
மேகா : எனக்கு அவரு வீடு தெரியாது னு தானே... உன்னைய கூட்டுறேன்... வா டா...
நாகராஜ் : என்னது டா வா... என்ன இருக்க இருக்க மரியாதை குறையுது...
மேகா : இப்ப நீ வரலைனா... இன்னும் மரியாதை குறையும்...
நாகராஜ் : "ஆத்தி... எதுக்கு வம்பு..."என்று நினைத்து கொண்டு " வா மா... போலாம்..."என்று bike key ஐ எடுத்து கொண்டு செல்ல...
மேகாவும் பின்னாலேயே சென்றாள்...
வம்சி இஷா வை check up க்கு உள்ளே அழைத்து செல்ல...
குரு வெளியே காத்திருந்தான்...
Check up முடிந்து ஒரு மணி நேரம் கழித்து இஷாவும் வம்சியும் வர...
குரு பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான்....
தொடரும்...
# Nancy...
0 Comments