"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

நேசம் என்னிடம் - 30

 

நேசம் என்னிடம் - 30

வம்சி office முழுவதும் சுற்றி கொண்டு இருக்க...

நாகராஜ் அவன் சுத்துவதை பார்த்து 🙄🙄🙄 திருதிருவென முழித்து கொண்டு இருந்தான்...

வம்சிக்கு கோவம் அதிகமாக அவனிடம் பேசிய அனைவரிடமும் எரிந்து விழுந்தான்...

நாகராஜ் அவனிடம் சிக்காமல் சுற்றி கொண்டு இருக்க... ஒரு கட்டத்தில் வம்சி இடம் மாட்டி கொண்டான்...

வம்சி அவன் சட்டையை பிடித்து இழுத்து "எங்க டா போன..."என்று கேட்க...

நாகராஜ் : நா... நா... நா... நா... 

வம்சி : நீ.. நீ... நீ தான்... Type அடிக்காம சொல்லு...

நாகராஜ் : நா இங்க தான் இருந்தேன்...

வம்சி : ரொம்ப நேரமா உன்னைய தேடுறேன்...

நாகராஜ் : நீ சரியா கவனிச்சு இருக்க மாட்டா...

வம்சி : யாரு நானு சரி தான்... சரி இருந்துட்டு போகுது... எங்க அதுங்கள காணாம்...

நாகராஜ் : "எதுங்கள காணாம்..."என்று புரியாதது போல் கேட்க...

வம்சி : தெரியாத மாதிரி நடிக்காத... மேகாவும் குருவும் எங்க... அந்த ரெண்டையும் இங்க காணோம்... Full ஹ தேடி பாத்துட்டேன்... 

நாகராஜ் : எனக்கு தெரியாது...

வம்சி : கொன்றுவேன்... இங்க எல்லார் கிட்டையும் கேட்டேன்‌... மேகா தான் குரு வ கூட்டிட்டு போனதா சொன்னாங்க... போகுதும் போது உன்னைய பாத்துட்டு போய் இருக்காங்க... உண்மைய சொல்லு எங்க போனாங்க...

நாகராஜ் : அவங்க ரெண்டு பேரும் Love birds எங்க வேணும்னாலும் போவாங்க... நம்ம எப்படி கேட்க முடியும்... கொஞ்சம் தனியா இருக்கலாம் னு நினைச்சு போய் இருப்பாங்க... வந்துடுவாங்க வம்சி... நீ போய் வேலைய பாரு...

வம்சி : இல்ல டா நாகா... பயமா இருக்கு... குரு நினைச்சா... நீயே பாத்த தானே... எப்படி ஆகிட்டான்... உன்ன எப்போ பார்த்தாலும் வம்பு பண்ணுவான்... இப்ப பேச கூட மாட்றான்... இப்படியே போனா... அவனுக்கு ஏதாவது ஆகிருமோ னு பயமா இருக்கு‌...

நாகராஜ் : எனக்கும் அதே நினைப்பு இருந்துச்சு... அதுக்கு தான் இப்ப மேகா அவனை வெளிய கூட்டிட்டு போய் இருக்கா...

வம்சி : எதுக்கு...

நாகராஜ் : எப்போ பார்த்தாலும் அவனை நீ கூடவே கூட்டிட்டு சுத்துற... வெளிய எங்கேயும் போகல... அப்படி இப்படி போயிட்டு வந்தான் அதுல இருந்து கொஞ்சம் வெளியே வருவான்... அதனால தான் கூட்டிட்டு போய் இருக்கா...

வம்சி : எங்க போய் இருக்காங்க...

நாகராஜ் : தெரியல...

வம்சி : அவங்க போற இடம் எதுவும் உனக்கு தெரியுமா...

நாகராஜ் : இல்ல...

வம்சி : ப்ச் எங்க னு நா போய் தேடுவேன்...

நாகராஜ் : நீ எதுக்கு தேடுற... அவங்க வருவாங்க...

வம்சி : இல்ல நாகா... அது வந்து...

நாகராஜ் : அய்யோ போ வம்சி... ஒன்னு ஆகாது...

வம்சி அரை மனதுடன் சென்றான்...

குரு Stone bench ல் கண் மூடி படுத்து மேகா மடியில் தலை வைத்து பாட்டு கேட்டு கொண்டு இருந்தான்...

மேகா அவன் தலை முடியை கோத்தி விட... அப்படியே தூங்கி போனான்...

வம்சி மேகா mobile dial செய்ய... மேகா silent mode ல் போட்டு இருக்க எடுக்காமல் இருந்தாள்...

வம்சி கடுப்பாகி நாகராஜ் ஐ இழுத்து கொண்டு வெளியே சென்றான்...

ஒரு மணி‌ நேரம் உறக்கத்தில் இருந்த குரு அசைந்து மெதுவாக கண் விழிக்க...

மேகா அவனை பார்த்து ☺️☺️☺️ புன்னகைக்க...குரு அவள்‌ முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவன் வேகமாக எழுந்து அமர்ந்தான்...

மேகா : என்ன ஆச்சுங்க குரு...

குரு : எவ்ளோ நேரம் ஆச்சு...

மேகா : just one and half hours...

குரு : அவ்ளோ நேரம் ஆச்சா...

மேகா : எதுக்கு இவ்ளோ பதற்றம்... 

குரு : இல்ல மேகா.. வம்சி தேடுவான்... இன்னேரம் அவன் தேடிட்டு இருப்பான்...

மேகா பெருமூச்சு விட்டு "நா ஒன்னு கேட்கவா..."

குரு : என்ன...

மேகா : கோவப்பட கூடாதுங்க...

குரு : சரி சொல்லு... என்ன...

மேகா : இஷாவுக்கு எப்படி இப்படி ஆச்சு...

குரு ஒற்றை 🤨🤨🤨 புருவத்தை தூக்கி பார்க்க...

மேகா : கோவமா...இல்ல அந்த சம்பவத்தை மறக்கனும்

குரு : இல்ல மா... அது மறக்குற விசயமா... ஆறு மாசமா பட்ட கஷ்டம் கொஞ்சம் இல்லையே...

மேகா அவன் தோளில் கை வைக்க...

குரு : உனக்கு ஒன்னு தெரியுமா... வம்சிக்கு ஏன் இஷா வ பிடிச்சுச்சு னு தெரியுமா...வம்சிவோட அம்மா இறந்ததுக்கு அப்புறம் அவனோட அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு கட்டுன பொண்டாட்டி பேச்சை கேட்டு வம்சி ய கை விட்டுட்டாரு... சின்ன வயசுல இருந்தே வம்சி Hostel இறந்தான்....அவனுக்கு கிடைச்சது எல்லாமே பாதி தான்... 

         ஒரு கட்டத்துல கொஞ்சம் அவனுக்கு தெளிவு வரவும்... Hostel ல இருந்து வெளிய வந்துட்டான்... படிச்சிக்கிட்டே வேலை பாத்தான்... வேலை பாத்தா இடத்துல தங்கிக்கிட்டான்... அவன் பட்ட கஷ்டம் சொல்ல முடியாது... அவனை பாக்குற எல்லாரும் கேட்ட கேள்வி உன் அம்மா அப்பா எங்க...அந்த கேள்வி கேட்ட எல்லாரையும் வெறுத்தான்... என்னைய தவிர... office ல வம்சி யார் கூடவாவது பேசி பாத்து இருக்கீயா...

மேகா இல்லை என்பது போல் தலையை ஆட்ட...

குரு : நம்ம office ல எல்லாரும்... GM, CEO, Manager னு ஒருத்தர் கூட விடல... அம்மா அப்பா என்ன பண்றாங்க... Manager வம்சி ய கூப்டும் போது எல்லாம் அவன் கடுப்பா தான் போய் இருக்காங்க... இன்னொரு விசயம் தெரியுமா...

மேகா என்ன என்பது போல் பார்க்க...

குரு : வம்சிக்கு உன்னைய‌ பிடிக்கும்...

மேகா :"என்னைய வா..."என்று புரியாமலும் அதிர்ச்சியுடனும் குழப்பத்துடனும் பார்க்க...

குரு : என்ன புரியலையா...

மேகா : "புரிஞ்சுருச்சு..."என்று அவனை நிமிர்ந்து பார்த்து "நா இது வரைக்கும் வம்சி Sir கிட்ட அவங்க அப்பா அம்மா பத்தி கேட்டது இல்ல..."என்று சொல்ல...

குரு : Wow... brilliant... Correct ஹ சொன்ன...

மேகா :"ஆனா‌..."என்று இழுக்க...

குரு : ஆனா வம்சி ஏன் உன் கிட்ட கோவமாவே நடந்துக்கிட்டான் னு தானே கேட்க வர...

மேகா ஆமா என்பது போல் தலையை ஆட்ட...

குரு : நீ அவனை love பண்றேன் னு சொன்னது... அதனால் தான் அவன் உன் மேல கோவமா இருந்தான்... நடந்துக்கிட்டான்‌.. otherwise வேற எந்த கோவமும் உன் மேல இல்ல...

மேகா : அப்போ இஷா...

குரு : இஷாவும் தான்... நாங்க கூட இஷாவோட அம்மா அப்பா இறந்துட்டாங்க னு தெரிஞ்சதும் அவங்கள பத்தி கேட்டோம்... ஆனா இஷா ஒரு வார்த்தை கூட என் கிட்டையோ வம்சி கிட்டையோ இத பத்தி கேட்கல... Friendly ஹ‌ பழகுனா... வம்சிக்கு இஷா வ பாத்ததும் பிடிச்சு இருந்துச்சு... 

         ஆனா இந்த ஒரு விசயம் இவ தான் எனக்கு எல்லாம் னு சொல்ற அளவுக்கு மாறிடுருச்சு... Suppose இஷா மட்டும் வம்சி life ல வராம இருந்திருந்தா வம்சியோட life குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி தான்... எந்த பக்கமும் திரும்பாம நேரா போயிட்டு இருந்துருப்பான்...

   Actually வம்சி life ஒரு பூஜ்ஜியம் மாதிரி... ஒன்னுமே இல்ல... Empty... அவனுக்கு னு ஒன்னு இல்ல... Life அது பாட்டுக்கு போகுது... நா அது பின்னாடியே போறேன்... அவ்ளோ தான்... இஷா வ வம்சி எப்போ பாத்தானோ total ஹ change ஆகிட்டான்...

   வம்சி life யாருமே இல்ல... I Like Alone I love Alone னு சொல்ற சங்கத்தை சேர்ந்தவன்... Anytime alone alone alone... Friend னு சொல்ல கூட‌ யாரும் இல்ல... அவனோட தோட்டத்து செடில பூத்த முதல் பூ நா தான்...

   அவனை மாதிரி தான் நானும்... உனக்கே தெரியும்... எனக்கு என் அம்மா தவிர‌ வேற யாரும் இல்ல... வம்சி anytime alone alone சொன்ன மாதிரி நா anytime அம்மா அம்மா அம்மா தான்... அந்த ராமலிங்கம் பண்ண தப்புக்கு எல்லாரைய்ம் ஒதுக்கி வச்சேன்...

    யாரையுமே கிட்ட சேர்க்கல...தனியாவே இருந்தேன்... நானும் alone சங்கத்த‌ சேர்ந்தவன் தான்...நானும் வம்சியும் பாலும்  காபி தூளாவும் இருந்தோம்.. வெறும் பாலையும் காபி தூளையும் போட்டா coffee taste நல்லாவே இருக்காது...

   கசந்து போய் இருக்கும்... முகம் சுளிக்க வைக்கும்... அப்படி தான் நாங்களும் எங்க வாழ்க்க கசந்து போய் தான் இருந்துச்சு... அந்த கசப்புக்கு இனிப்பு போட வந்த வ தான் இஷா... எங்க இஷானி... சக்கரைய போட்டு எங்க coffee ஹ ரொம்ப taste ஆகிட்டா...

   வம்சி கிட்ட அந்த கேள்வி ய கேட்டாத ஆள்... நீ நா இஷா நாகராஜ்... இப்படி எங்களுக்கு எல்லாமா இருந்த இஷா எப்படி இப்படி ஆனாங்குற கேள்வி தான் உன் மனசுக்குள்ள இருக்கு... அப்படி தானே...

மேகா : ம்ம்ம்...

குரு : அன்னக்கி இஷா என்னைய அடிச்சது மட்டும் தான் வம்சி உன் கிட்ட சொன்னான்... அதுக்கு இஷா என் கிட்ட பேசுனா... அந்த சந்தோஷத்துல நா எடுத்த அந்த முடிவு... நா ஏன் அப்படி பண்ணேன் னு தெரியல... ஆனா நினைச்ச மாதிரியே நடந்துச்சு... அதுக்கு அப்புறம் நடந்தது தான்... வம்சிக்கு எனக்கும் கிடைச்ச அதிர்ச்சி...

தொடரும்...

# Nancy....

Post a Comment

0 Comments