நேசம் என்னிடம் - 31
Flashback...
குரு இஷா முன் சென்று அவன அடி வாங்குவதும் இஷா அடி கொடுப்பதும் வாடிக்கையாகி விட...
அவன் அடி வாங்கினால் யாரும் கண்டு கொள்வது இல்லை...
இப்படியே ஒரு வாரம் கடந்து செல்ல...குரு இஷா வை பார்த்தால் தலை குனிந்து கன்னத்தில் கை வைத்து சோகமாக நின்று கொள்வான்...
இஷாவிற்கு குரு இருந்த கோவம் குறைய...
குரு சோகமாக தலை குனிந்து நிற்பதை பார்த்து சிரிப்பு வர... முகத்தை திருப்பி சிரிப்பை மறைத்து கொண்டு செல்வாள்...
ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுக்க முடியாத குரு கோவமானான்...
குரு : இன்னக்கி மட்டும் இஷா என் கிட்ட பேசல வை வம்சி... நா என்ன பண்ணுவேன் னு எனக்கே தெரியாது...
வம்சி : என்ன பண்ணுவ...
குரு : என்ன பண்றேன் னு மட்டும் பாரு...
வம்சி : "அது தான் டா நானும் கேட்குறேன்..."என்று நிதானமாக
குரு : "ஓ... நா விளையாட்டுக்கு சொல்றதா நினைக்கிறீயா..."என்று சற்று கோவமாக சொல்லி "வந்து பாரு..."என்று எழுந்து வேகமாக செல்ல...
வம்சி ஒரு நிமிடம் பயந்து தான் போனான்...
குரு கோவமாக செல்ல... வம்சி பின்னாடியே சென்றான்...
குரு சென்ற வேகத்தில் இஷா கையை பிடித்து இழுத்து வர...
எதிரே வந்த வம்சி "டேய் என்ன டா பண்ற..."என்று கேட்க...
குரு இஷாவுடன் வம்சி cabin க்குள் நுழைய...வம்சியும் வேகமாக ஓடி உள்ளே நுழைய...
குரு தரையில் கிடக்க...இஷா வாயில் 🤭🤭🤭 கை வைத்து சிரித்து 😄😄😄 கொண்டு இருந்தாள்...
வம்சி : ஏய் என்ன நடக்குது இங்க...
குரு : அம்மாடி இதுக்கு நா என்ன பண்றது னு தெரியல..தயவு செய்து பேசு மா... இன்னும் கூட என்னைய நல்லா அடிச்சுக்கோ... ஆனா பேசாம இருக்காத இஷா..
இஷா சிரித்து கொண்டே "டேய் எழுந்திரி டா... இப்ப எதுக்கு டா கால் ஐ விழுந்த..."என்று கேட்க...
குரு : என் மேல இருக்குற கோவம் போச்சு னு சொல்லு அப்போ தான் எழுந்திரிப்பேன்...
வம்சி : இல்லைனா...
குரு :"டேய் நீ சும்மா இரு டா..."என்று வம்சி இடம் கத்தி விட்டு "சொல்லு இஷா... மன்னிச்சுட்டேன் னு சொல்லு..."என்று ரெண்டடி முன்னால் நகர்ந்து ஊர்ந்து இஷா கால் ஐ பிடிக்க...
இஷா : குரு விடு டா...
குரு : முடியாது... நீ என் கூட பேசு...
இஷா : இப்ப உன் கூட பேசாம வேற யார் கூட பேசிட்டு இருக்கேன்...
குரு யோசித்து விட்டு வேகமாக நிமிர்ந்து பார்க்க... இஷா இடுப்பில் கை வைத்து கொண்டு அவனை பார்க்க...
குரு வேகமாக எழுந்து "அப்போ நீ என்னைய மன்னிச்சுட்ட..."என்று கேட்க...
இஷா ஓங்கி ஒரு அறை 👋👋👋 விட்டு விட்டு " இப்ப மன்னிச்சுட்டேன்..."என்று சொல்ல...
குரு கன்னத்தில் கை வைத்து கொண்டு அவளை பார்த்து 😀😀😀 சிரித்தான்...
வம்சி : என்ன டா சிரிக்கிற...
குரு : "பழகி போச்சு டா..."என்று இஷா வை பார்த்து " இன்னும் கூட அடிச்சுக்கோ... ஆனா இனி என் கூட பேசாம இருக்காத..." என்று அவள் கையை பிடிக்க...
இஷா : உன் கூட பேசாம எப்படி டா என்னால இருக்க முடியும்... இனிமே நீ cigarette பிடிக்கிற னு எனக்கு தெரிஞ்சுச்சு... உன்ன கொன்றுவேன்...
குரு : ச்சீ... ச்சீ... அது எல்லாம் இப்ப நா தொட்டு கூட பாக்குறது இல்ல...
வம்சி : "ஓ அப்படியா..."என்று அருகில் வந்து அவன் pant pocket ல் கை விட்டு ஏதோ எடுத்து " அப்போ இது எதுக்கு டா..."என்று காட்ட...
வம்சி கையில் இருந்த lighter ஹ பார்த்து இஷா குருவை 😠😠😠 முறைக்க...
குரு : இஷா இங்க பாரு... கோவப்படாத... இந்த lighter costly...தூக்கி போட மனசு வரல... Candle பத்தி வைக்க use ஆகும் ல... அதுக்கு தான் வச்சு இருக்கேன்...
இஷா அவனை 😠😠😠முறைத்து கொண்டே " இனி இது என் கண்ணுல பட்டுச்சு... அப்புறம் நா..."
குரு : கொன்றுவ... அப்படி தானே...
இஷா : அப்படியே தான்...
குரு : நா பண்ண தப்புக்கு பிரசித்தமா நா ஒன்னு பண்ணலாம் னு இருக்கேன்...
இஷா : என்ன...
குரு : சொல்றேன்... ஆனா கோவப்பட கூடாது...
வம்சி : அது நீ சொல்ற விசயத்த பொறுத்து...
குரு : பாத்தீயா... ஆரம்பத்திலேயே முட்டு கட்ட போடுற...
இஷா : நீ சொல்லு...
குரு : எனக்காக பண்ணனும்...
இஷா : என்ன னு முத சொல்லு...
குரு : நீயும் வம்சியும் கல்யாணம் பண்ணிக்கனும்...
வம்சி : டேய் அதுக்குள்ள என்ன டா அவசரம்...
இஷா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்...
குரு : எனக்கு அவசரம் இல்ல டா... பேசுற வாய மூடனும்... அதுக்கு தான்...
வம்சி இஷா வை பார்க்க...
இஷா 🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️ தோளை உலுக்க...
வம்சி யோசனையில் மூழ்கினான்...
******************
Two weeks later...
"ஏதோ செய்கிறாய் என்னை
செய்கிறாய்...
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்..."
என்று வம்சி பாடி கொண்டே தலை முடியை சீவி கொண்டு இருக்க...
குரு வேக வேகமாக வந்தவன் அவனை மேலும் கீழுமாக பார்த்து விட்டு "என்ன டா பாட்டு எல்லாம் பாடுற... சந்தோஷமா இருக்கீயா..."என்று கேட்க...
வம்சி : பின்ன இருக்க மாட்டேனா...இன்னக்கி என்ன நாள் னு தெரியும் ல... நா ரொம்ப ரொம்ப ரொம்ப happy ஹ இருக்கேன் டா...
குரு : ம்ம்ம்... சந்தோஷமா இரு டா...ஆமா எங்க இஷா...
வம்சி : அவளும் ரொம்ப சந்தோஷமா இருக்கா... கிளம்பிட்டு இருக்கா...
குரு : "ஓ சரி நா இஷா வ பாத்து வரேன்..."என்று நகர
வம்சி : டேய் நில்லு டா...
குரு : என்ன மச்சி....
வம்சி : என்ன ஆச்சு... எல்லாம் ok தானே... Ready ஹ தானே இருக்கு... அப்புறம் அது இல்ல இது இல்ல னு சொல்ல கூடாது... நா பொல்லாதவனா ஆகிருவேன் பாத்துக்கோ....
குரு : "ரொம்ப பேசாத டா பக்கி....எல்லாம் ready ஹ தான் இருக்கு...நீங்க மட்டும் தான் இனி ready ஆகனும்...சீக்கிரம் கிளம்புங்க..."என்று இஷா வை பார்க்க சென்றான்...
குரு கதவை தட்ட...
இஷா : யாரு...
குரு : இஷா நா குரு...
இஷா : வா டா... எதுக்கு டா கதவை தட்டுற... உள்ள வர வேண்டியது தானே..
குரு : அது எப்படி ஒரு பொண்ணு room க்குள்ள இருக்கும் போது கேட்காம நுழையுறது...தப்பு இல்லையா...
இஷா : நீ ரொம்ப பேசுற...நீ தான் இது எல்லாத்துக்கும் காரணமா...
குரு : சாட்சாத் நானே தான்... எத்தனை நாள் தான் இப்படியே இருக்க முடியும்... அது தான் இப்படி பண்ணேன்...
இஷா : இரு டா எல்லாம் நல்லப்படியா முடியட்டும்... அப்புறம் இருக்கு உனக்கு...
குரு : சரி அது அப்புறம் பாத்துக்கலாம்... இப்ப போலாமா... Time ஆச்சு மா...
இஷா :"I'm ready..." சிரித்து கொண்டே குரு முன் நின்று "போலாமா குரு... வம்சி ready ஹ..."என்று கேட்க...
குரு : "ம்ம்ம் வா போலாம்..."என்று அழைத்து கொண்டு சென்றான்...
வம்சி மேகா வை பார்த்து கொண்டு இருந்தான்...
இஷா : என்ன டா அப்படி பார்க்குற...
வம்சி : பாக்கல... ரசிக்கிறேன்... அழகா இருக்க டி...
இஷா 😊😊😊 கன்னம் சிவந்து வெட்கத்துடன் தலை குனிய...
வம்சி : அச்சோ... இப்போ இன்னும் அழகா இருக்க டி செல்லம்... உன் கிட்ட இருந்து என் கண்ணு நகர மாட்டேங்குது...
குரு இருவரையும் மாறி மாறி பார்க்க...
இஷா : "வம்சி சும்மா இரு..."என்று வெட்கத்துடன்..
வம்சி : என்னமோ பண்ற டி நீ... ஆள அப்படியே இழுக்குது...
குரு : அவ என்ன Magnet ஹ இழுக்க...
இருவரும் திரும்பி அவனை பார்க்க...
குரு : கிளம்புங்க...மணி ஆகுது... Romance பண்ணி என் வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க...
வம்சி : அது வயித்தெரிச்சல் இல்ல பொறாமை...
குரு : இருந்துட்டு போகுது... கிளம்புங்க...
வம்சி : அட இரு டா... இஷா வ கொஞ்சம் ரசிச்சுக்கிறேன்...
குரு : "ரெண்டு பேரும் எங்கேயோ கெட்டு போங்க...எனக்கு என்ன வந்துச்சு..."என்று அங்கே இருந்து நகர...
இஷா :"டேய் நில்லு டா..."என்று அவன் கையை பிடித்தாள்...
வம்சி : உடனே கோவம் வந்துடுமே... சும்மா கொஞ்சம் வெறுப்பேத்தலாம் னு தான் அப்படி பண்ணேன்... Sorry டா... போலாம்...
குரு : Single சாபம் உன்னையே சும்மா விடாது டா...
வம்சி : "சரி சரி வா... tension ஆகாத..."என்று இஷா வை அழைத்து கொண்டு முன்னால் செல்ல...
குரு அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு பின்னால் வந்தான்...
தொடரும்...
# Nancy...
0 Comments