"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

நேசம் என்னிடம் - 4

 


நேசம் என்னிடம் - 4

குரு அறை வாசலில் சாய்ந்து நின்று வம்சி யை பார்க்க...

வம்சி : டேய் எப்போ டா வந்த...

குரு : இப்போ தான்...

வம்சி : ம்ம்ம்... இங்க பாரு... இஷா...

குரு : டேய் என்ன டா இது...

வம்சி : இஷா டா...

குரு : வம்சி Be serious...

வம்சி : இஷா குரு வந்து இருக்கான் பாரு... உனக்கு ஒன்னு தெரியுமா... இவே மறுபடியும் சிகரெட் பிடிக்கிறான்... உனக்கு பிடிக்காது னு தெரிஞ்சும் பண்றான்... என்ன னு கேளு இஷா...

குரு : வம்சி போதும் டா...நிறுத்து...

வம்சி : என்ன இஷா கிட்ட உன்னைய போட்டு விட்டுட்டேன் னு கோவமா... நிறுத்த முடியாது...

குரு : டேய் நீ தெரிஞ்சு தான் பண்றீயா...

வம்சி : ஆமா‌... சிகரெட் ஹ பிடிச்ச ல... இஷாக்கு அது பிடிக்காது... உனக்கு நடந்ததை மறந்துட்டீயா... அப்போ இஷா எப்படி பயந்தா னு தெரியும் ல‌‌...

குரு : எல்லாம் எனக்கு தெரியும் டா... ஆனா இது...

வம்சி : "என்ன இஷா இன்னும் உன் கிட்ட பேசாம இருக்கா னு நினைக்கிறீயா...அது ஒன்னும் இல்ல டா... இஷா உன் மேல கோவமா இருக்கா... அதனால‌ தான்..."என்று அவன் அருகில் வந்து "சரி வா கொஞ்ச நேரம் இஷா வ தனியா விடுவோம்... அவளே உன்னைய கூப்டுவா...நம்ம சாப்டுவோம்..."என்று அவன் தோளில் கை போட்டு அழைத்து செல்ல...

குரு வம்சி முகத்தையே பார்க்க...

வம்சி : ஏன் முகத்துல என்ன டா இருக்கு... மூனு‌ பாப்பாத்தி வைச்சு இருக்கேன்‌... குருமா மட்டும் போதுமா இல்ல சட்னியும் வேணுமா...

குரு : ரெண்டும்..

வம்சி அவனுக்கு பரிமாற...இருவரும் சாப்பிட்டனர்...

வம்சி : குரு இன்னக்கி இங்கே stay பண்றீயா...

குரு : இல்ல டா... வீட்டுல அம்மா தனியா இருப்பாங்க...

வம்சி : ஏன் உன் அத்தை பொண்ணு உன் வீட்டுல இருந்து தானே படிக்கிறா... அவ இல்லையா...

குரு : அவ இல்ல... அவ அப்பாக்கு உடம்பு சரி இல்ல னு பாக்க போயி இருக்கா...

வம்சி : உனக்கு அந்த பொண்ணோட அப்பா பிடிக்காதே... ஆனா எப்படி டா அந்த பொண்ண‌ மட்டும் உனக்கு பிடிச்சு இருக்கு...

குரு : டேய் அது வேற... இது வேற.. தேவை இல்லாம பேசாத...

வம்சி அமைதியாக இருக்க...

குரு சாப்பிடாமல் அவன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்...

வம்சி : "டேய் குரு இன்னொரு சாப்பாத்தி டா.."என்று நிமிர...

குரு அவனையே பார்ப்பதை பார்த்து "என்ன டா...ஏன் அப்படி பாக்குற..."

குரு : எத்தனை நாளைக்கி டா இப்படி...

வம்சி : எப்படி 🤨🤨🤨

குரு : எத்தனை நாளைக்கி இப்படியே பண்ணிட்டு இருக்க போற...

வம்சி : "நா என்ன பண்ணேன்..."என்று சாப்பிட...

குரு : டேய் நா உன் கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்... பதில் சொல்லு டா...

வம்சி : நா இப்ப என்ன பண்ணேன்...

குரு : நீ ஒன்னுமே பண்ணல...

வம்சி : நா சாப்டுறேன்...

குரு : வம்சி என்னைய tension ஆகாத... நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல...

வம்சி : லூசு மாதிரி என்ன டா என்னன்னமோ பேசிக்கிட்டு இருக்க...

குரு : நா லூசா...

வம்சி : ஆமா... லூசு தான்...

குரு கோவமாக எழுந்து அவனை 👋👋👋அறைந்தான்...

வம்சி கண் கலங்க... கன்னத்தில் கை வைத்து நின்றான்...

குரு :"ச்சை..."என்று முதுகை காட்டி திரும்பி கொள்ள...

வம்சி : அடி டா அடி... உனக்கு இல்லாத உரிமையா... அடி டா... நா எந்த தப்பு பண்ணலயே டா...

குரு கோவமாக திரும்பி " நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா ஒரு நாள் நீ பைத்தியம் ஆகிருவ டா மடையா..."என்று கத்த...

வம்சி : "நா பைத்தியம் ஆகிடுவேனா டா... எல்லாம் தெரிஞ்சு தான் இப்படி பேசுறீயா..."என்று கண் கலங்க அவனை பார்க்க...

குருவிற்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது...

குரு பெருமூச்சு விட்டு அவன் அருகில் சென்று தோளில் கை போட்டு "வம்சி சொன்னா புரிஞ்சுக்க டா... உன்னைய என்னால இப்படி பாக்க முடியல டா...நீயாச்சும் எனக்கு நல்லப்படியா வேணும் டா..."என்று சொல்ல...

வம்சி : "நா இப்படி தான் டா இருப்பேன்... எனக்கு இஷா தான் டா முக்கியம்..."என்று கத்த...

குரு : "இஷா இஷா இஷா எப்ப பார்த்தாலும் இஷா தானா... அவ உயிரோட இருந்தும் இல்லாத மாதிரி தான் டா இருக்கா..."என்று கோவமாக சொல்ல...

வம்சி குரு கன்னத்தில் 👋👋👋அறைந்தான்...

வம்சி 😡😡😡 முறைத்து சட்டையை பிடித்து இழுத்து " இன்னொரு தடவ என் இஷா வுக்கு உயிர் இல்ல னு சொன்னே...உன்னை கொன்றுவேன் டா..."என்று வெளியே செல்ல...

குரு சிலையாக நின்றான்...

சிறிது நேரத்தில் குரு எழுந்து வெளியே வந்து பார்க்க...

வம்சி வாசலில் அமர்ந்திருந்தான்...

குரு அவன் அருகில் அமர...

வம்சி திரும்பி பார்த்து எழ...

குரு அவன் கையை  பிடித்தான்...

வம்சி கண் கலங்க "நீ அப்படி பேசி இருக்க கூடாது டா..."என்று சொல்ல...

குரு : நா அப்படி சொல்லல டா..

வம்சி : எப்படி சொல்லல... என் இஷாவுக்கு உசுரு இல்ல னு சொல்லிட்டீயே டா...

குரு : டேய் என்ன டா‌... இஷா மேல எனக்கும் பாசம் இருக்கு டா... எனக்கு நீயும் முக்கியம் இஷாவும் முக்கியம் டா... இஷா தான் இப்படி ஆகிட்டா... நீயாவது நல்லா இருக்கனும் தானே டா சொன்னேன்...

வம்சி :நம்பிக்கை இல்லாம பேசாத டா... நீயே இப்படி பேசுனா எப்படி குரு...

குரு ஏதோ சொல்ல வர...

வம்சி : "நீ எதுவும் சொல்ல வேணாம்...எனக்கு ஒரு help பண்ணு‌... கொஞ்சம் நேரம் இங்க இரு... நா வெளிய போயிட்டு வரேன்..."என்று எழுந்து செல்ல...

குரு அவன் போவதையே பார்த்து கொண்டு இருந்தான்...

சிறிது நேரம் அங்கே அமர்ந்திருந்த குரு எழுந்து உள்ளே சென்று சாப்பிட்டு தட்டை எடுத்து கழுவி வைத்து   dinning table ஐ clean செய்து வெளியே‌ வந்து மணியை பார்க்க...

இரவு 8 மணி...

குரு வம்சிக்கு call செய்ய...மிக அருகில் சத்தம் கேட்க...

குரு வேகமாக திரும்பி பார்க்க... Sofa வில் வம்சி phone இருந்தது...

குரு :"இவனை என்ன பண்றது..."என்று நினைத்து அவன் call செய்து வம்சி வீட்டிலேயே இருப்பதாக சொல்லி வைத்தான்...

குருவின் பார்வை அருகே இருந்த அறைக்கு செல்ல...மெதுவாக அங்கே சென்றான்...

Wheel chair ல் எந்த அசைவும் இல்லாம அமர்ந்திருந்த இஷா வை பார்த்தான்...

இஷானி முதல் நாள் பார்த்தது ஞாபகம் வர‌.. அவன் கண்கள் கலங்கி போனது...

குரு :"என்னாலேயே தாங்கிக்க முடியலேயே வம்சியால எப்படி முடியும்..."என்று நினைத்துக் கொண்டு அவள் முன் மண்டியிட்டு அவள் கையை பிடித்து "ஏன் இஷா எங்க கூட இருக்கனும் னு உனக்கு ஆசை இல்லையா...வம்சி ஏன் இப்படி இருக்கான்... என்னால அவனை இப்படி பாக்க முடியல... நீ நல்லா இருந்திருந்தா வம்சி இப்படி ஆகி இருக்க மாட்டான்... அவனுக்காவது நீ சரி ஆகி வரனும் இஷா பாப்பு..."என்று அழுக...

யாரோ அவன் தோளை தொட...திரும்பி பார்க்க...மல்லிகா நின்றாள்...

குரு கண்ணை துடைத்து கொண்டு "நீங்க இன்னுமா போகலையா மல்லி மா..."என்று கேட்க...

மல்லிகா : ஏன் யா அழுகுறீங்க... அழாத யா‌‌... அம்மா சரி ஆகிருவாங்க... வம்சி தம்பி ரொம்ப நம்பிக்கை யா இருக்காரு... எல்லாம் சரி ஆகிரும்...

குரு : இஷா சரி ஆகிருவா...எனக்கும் நம்பிக்கை இருக்கு... என் கவலை எல்லாம் வம்சி ய நினைச்சு தான்...இவன் இப்படி இருக்குது பார்த்தா ரொம்ப பயமா இருக்கு...

மல்லிகா : ஏன்யா இப்படி பயப்பட்ற...‌வம்சி தம்பிக்கு ஒன்னும் ஆகாது...‌உண்மைய சொல்லனும் னா...இஷா மா முன்னாடி விட இப்ப பரவாயில்ல... கூடிய சீக்கிரம் பழையபடி எழுந்து நடந்து எல்லார்க்கிட்டையும் பேசி வேலைக்கி வர போறாங்க பாருங்க...

குரு : நீ சொன்னது மாதிரி நடந்தா...உனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தரேன்...

மல்லிகா : "அட போங்க யா நீங்க வேற... காமெடி பண்ணிக்கிட்டு‌..என் வீட்டு சாவியை விட்டுட்டு போயிட்டேன்‌‌...அது எடுக்க வந்தா நீங்க இஷா மா கை பிடித்து புலம்பி அழுதுக்கிட்டு இருக்கீங்க...அது வந்து உங்க கிட்ட பேசுனேன்... நீங்க என்னனா மிட்டாயி ரொட்டி னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க... தள்ளுங்க யா நா கிளம்புறேன்..."என்று செல்ல...

குரு 😀😀😀சிரித்து கொண்டே திரும்ப... இஷா கண் நிமிண்டினாள்...

குரு வேகமாக அவள் கையை பிடித்து "இஷா இஷா இப்ப நீ இப்ப கண் நிமிட்டு தானே...நாங்க பேசுறது உனக்கு தெரியுது ல... வேகமாக அவன் pocket இருந்து ஏதோ எடுத்து அவன் முன் நீட்டி "இங்க இங்க பாரு இஷா lighter...‌நா lighter வச்சு இருக்கேன் பாரு... என் கிட்ட இது இருந்தா நீ என்னைய திட்டுவ ல... பாரு இஷா நா உன் கண்ணு ல காட்டாம மறைச்சு வைப்பேன்‌... இப்ப பாரு நானே எடுத்து காட்டுறேன்... உனக்கு கோவம் வரலையா இஷா..."என்று சொல்ல...

அவள் கருவிழி மெதுவாக அசைந்தது...

தொடரும்...

# நானிஷா...

Post a Comment

0 Comments