நேசம் என்னிடம் - 6
குரு வேகமாக வண்டியை எடுத்து கொண்டு main road க்கு வந்தான்...
நெரிச்சலுடன் இருந்தாலும் அவசர அவசரமாக அனைவரும் செல்ல...
ஏதோ யோசித்தவாறு வண்டியை ஓரமாக நிறுத்தினான் குரு...
Helmet கழற்றி மணியை பார்க்க... 8.30 என்று காட்ட...
குரு 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️ தலையில் அடித்து கொண்டு "போச்சு office க்கு time ஆச்சு..."என்று வண்டியை வளைத்து வம்சி வீட்டை நோக்கி சென்றான்...
வம்சி இஷா அருகில் சென்று பார்க்க...இஷா அசையாமல் அமர்ந்திருக்க...
குரு கதவை வேகமாக திறந்து கொண்டு வர...
வம்சி பயந்து போய் திரும்பி பார்க்க...குரு வேகமாக உள்ளே நுழைய...
வம்சி : ஏன் டா இப்படி...
குரு : எரும எரும.. மணியை பாரு டா... Office க்கு போறது இல்லையா...
வம்சி மணியை பார்த்து "அய்யய்யோ..."என்று வேகமாக கிளம்ப சென்றான்...
அரைமணி நேரத்தில் இருவரும் கிளம்பி வந்தனர்...
வம்சி : டேய் ரெண்டு பேரும் ஒரே வண்டில் போலாம்...
குரு : ம்ம்ம்...
வம்சி : medicine வாங்கிட்டீயா...
குரு : இல்ல அதுக்கு போகும் போது தான் ஏதார்த்தமா மணிய பாத்து வந்துட்டேன்... Eveing வரும் போது வாங்கிட்டு வரலாம்...
குரு வண்டியை நிறுத்த... வம்சி இறங்கி சென்று விட...
அங்கே வந்த நாகராஜ் "குமரகுருபரன் Sir..."என்று அருகில் வர...
குரு எட்டி 🦵🦵🦵 உதைக்க... நாகராஜ் உதைத்த இடத்தில் தடவி கொண்டே "யோவ் ஏன் யா உதைக்கிற..."என்று கேட்க...
குரு : கொன்றுவேன் பாத்துக்கோ...உன் கிட்ட பல தடவ சொல்லிட்டேன்... அப்படி சொல்லாத னு...
நாகராஜ் : தெரியாம வந்துருச்சு...
குரு : "காலைலேயே கடுப்ப கிளப்பிக்கிட்டு போ டா..."என்று கத்தி விட்டு சென்றான்...
நாகராஜ் : குரு... குரு ஒரு நிமிசம் நில்லு...
குரு : "என்ன டா..."என்று கத்த...
நாகராஜ் : நேத்து ஒரு சம்பவம் நடந்து இருக்கு தெரியுமா...
குரு : என்ன...நேத்து வம்சி உன்னைய அடிச்சது தான் சம்பவம்...
நாகராஜ் : அத வேற ஏன் ஞாபகப்படுத்தாத... விசயம் அது இல்ல... முத வேகமாக போய் வம்சி ய பிடி...
குரு : என்ன டா... Shock ஆகுற மாதிரி சொல்ல போறீயா...
நாகராஜ் : அய்யோ நேத்து மேகா வ வம்சி அடிச்சுட்டாரு... அவ இப்ப CEO கிட்ட complaint பண்ணி இருக்கா...
குரு :என்னது வம்சி மேகா வ அடிச்சானா... இது எப்போ டா நடந்துச்சு...
நாகராஜ் : இப்ப அது முக்கியம் இல்லை...என்ன complaint போய் இருக்கு னு தெரியுமா...
குரு : "என்ன..."என்று பதற்றதுடன்...
நாகராஜ் : வம்சி என்னைய love torture பண்ணிட்டு இருந்தான்... நா முடியாது னு சொல்லி avoid பண்ணிட்டு இருந்தேன்... நேத்து என் கிட்ட misbehave பண்ணான் னு complaint பண்ணி இருக்கா... இந்த விசயம் office முழுக்க தெரிஞ்சுருச்சு...
குரு : "அய்யய்யோ..." என்று வேகமாக ஓட...
வம்சி office க்குள் நுழைய... அனைவரும் அவனை பார்த்து தங்களுக்கு பேசி கொண்டனர்...
வம்சி ஒன்றும் புரியாமல் அனைவரையும் கடந்து தன் cabin க்குள் நுழைந்தான்...
குரு ஓடி வர...
Staff 1: என்ன குரு sir வம்சி sir ஹ இப்படி பண்ணாரு...
Staff 2: என்னால நம்ப முடியல AHR sir...
Staff 3: பிடிக்கல னு சொன்னதுக்கு அப்புறம் எதுக்கு இப்படி பண்ணாரு...
Staff 4:இப்படிப்பட்டவன் இனி இங்க இருக்க கூடாது... முத வேலைய விட்டு தூக்கனும்... இல்லைனா strike பண்ணி போராட்டம் பண்ணனும்... முத இவனை police கிட்ட ஒப்படைக்கனும்...
குரு கடுப்பாகி "டேய் வாய மூடுங்க டா...என் நண்பனை பத்தி உங்களுக்கு என்ன டா தெரியும்..."என்று கத்த...
சத்தம் கேட்டு வம்சி வேகமாக வெளியே ஓடி வந்தான்...
குரு : "என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க எல்லாம்... இனி ஒத்த வார்த்தை யாராவது பேசுனீங்க... நா மனுசனா இருக்க மாட்டேன்..."என்று கடும் கோவத்துடன் கத்த...
வம்சி :"டேய் என்ன டா ஆச்சு... எதுக்காக இப்படி கத்திக்கிட்டு இருக்க...எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் டா... இப்படி பண்ணாத..."என்று கையை பிடித்து இழுக்க...
குரு :"விடு டா..."என்று கையை உதறி விட்டு "என்ன நடக்குது னு உனக்கு புரியல... நேத்து நீ என்ன டா பண்ண..."என்று கேட்க...
வம்சி : நா ஒன்னுமே பண்ணலயே டா...
குரு : மேகாகிட்ட நீ misbehave பண்ண னு CEO கிட்ட complaint பண்ணி இருக்கா...
வம்சி : "What.. "😦😦😦அதிர்ச்சியாக...
குரு : எனக்கு இப்ப தான் நாகராஜ் சொன்னான்...
வம்சி 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️ தலையில் கை வைத்து அமர...
குரு : "எத்தனை வருசமா வம்சி இங்க work பண்றான்... அவனை பத்தி உங்களுக்கு தெரியாது... ஒரு பொண்ணு வந்து சொல்லவும்.. என்ன ஏதுனு கூட விசாரிக்காம ஆளாளுக்கு பேசுறது..."என்று கத்த...
வம்சி :"குரு விடு டா... என்ன தான் நடக்குது னு பாக்கலாம்..."என்று சோகமாக சொல்ல...
குரு : நீ வாய மூடு டா... எல்லாம் உன்னால் தான்... படிச்சு படிச்சு சொன்னேன்... உண்மைய சொல்லு டா னு கேட்டீயா...
"Hello Mr.குருபரன்... என்ன நடந்துச்சு னு தெரியாம பேசாதீங்க Sir..."என்று மேகா அங்கே வந்தாள்...
குரு : வா... உன்னையே தான் தேடிக்கிட்டு இருந்தேன்... என்ன தெரியல...
மேகா : "உங்க friend எனக்கு love touture கொடுத்தாரு... நா முடியாது எவ்ளோ தடவ சொல்லியும் கேட்கல... நேத்து எல்லையை மீறி என் கிட்ட..."என்று கண்ணீர் வடிக்க...
Staff 2 : நல்ல கேட்டுக்கோ Sir... இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க...
குரு : வாங்க Sir வாங்க... Meeting ல வாயவே திறக்க மாட்டீங்க... இப்ப முத ஆளா பேசுறீங்க...
Staff 2 : இந்த இடத்துல யாரா இருந்தாலும் பேச தான் செய்வாங்க...
குரு : என்ன யா பேசுவாங்க... இல்ல என்ன பேசுவாங்க கேட்குறேன்...முத என்ன நடந்துச்சு னு தெரியுமா...
Staff 3 : என்ன நடக்கனும்... அது தான் அந்த ஆளே வாய மூடிக்கிட்டு இருக்கானே... அதுல இருந்தே தெரியல... தப்பு பண்ணி இருக்கான் னு...
குரு : அமைதியா இருந்தா அவன் தப்பு பண்ணான் னு அர்த்தமா... சரி நா தெரியாம தான் கேட்குறேன்... உன் பொண்டாட்டி ஏன் உன்னைய விட்டுட்டு போனா..
Staff 3 பேசாமல் தலை குனிந்து நிற்க...
குரு : இப்ப நீ எதுக்கு டா பேசாம தலை குனிஞ்சு இருக்க...எதுவும் பேச முடியல ல... பேசாம இருந்ததால நீ தான் தப்பு பண்ணியா...
Staff 3 : வேணாம் குரு... தேவை இல்லாம என் குடும்ப விசயத்துல தலையிடுறீங்க... நல்லா இல்ல... என் மேல ஒன்னும் தப்பு இல்ல...
குரு : அதே மாதிரி தான் இதுவும்... தேவை இல்லாம எதுவுமா தெரியாம ஒருத்தி சொன்னா னு பழி போடுறது நல்லா இல்ல... உன் பொண்டாட்டி இன்னொருத்தனை காதலிச்சா அவனை மறைக்க முடியாம கல்யாணம் ஆனா மறு நாளே ஓடிட்டா... இதுல உன் தப்பு இல்ல...
மேகா : Mr.குருபரன் இப்ப நடக்குறதை பேசுங்க... தேவை இல்லாத பேச்சு எதுக்கு... எனக்கு நியாயம் கிடைக்கனும்...
குரு : அவன் என்ன தப்பு பண்ணான்...
மேகா : என்ன தப்பு பண்ணான் னு அவன் கிட்டையே கேளுங்க சொல்லுவாரு...
குரு : ஓ... அப்படியா...ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா...
மேகா வம்சியை பார்க்க...வம்சி அவளை முறைக்க...
மேகா : வம்சி.. வம்சி என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான்..
வம்சி அவளை வேகமாக எரிப்பது போல் பார்க்க...
குரு : எங்க மா நடந்துச்சு...
மேகா : canteen ல...
Staff 1 : இதுக்கு என்ன பதில் சொல்றீங்க Mr.குருபரன்...
குரு : பதில் தானே சொல்றேன்... Miss.மேகா வம்சி உங்க கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணான் னு சொல்றீங்க அப்படி தானே...சரி என் கேள்விக்கு பதில் சொல்லுங்க...யாராவது ஒரு பொண்ணு கிட்ட அப்படி நடந்துக்கனும் நினைச்சா இப்படி தான் எல்லாரும் வந்து சாப்டு போற இடமா பாத்து அப்படி ஒரு விசயத்தை பண்ணுவாங்களா...
மேகா திருதிருவென முழிக்க...
குரு : தப்பு பண்றவங்க யாரா இருந்தாலும் யாருமே இல்லாத இடத்துலே தான் தப்பு பண்ணனும் னு நினைப்பாங்க... எல்லாருக்கும் தெரியும் மாதிரியா பண்ணுவாங்க...சரி இதுவும் இருக்கட்டும்...CCTV camera தான் இங்க இருக்கே... அப்புறம் எப்படி... தப்பு பண்ணா மாட்டீங்கறோம் னு தெரியாதா...
மேகா :"அது அது வந்து அவர் வந்து எனக்கு love torture கொடுத்தாரு... நா முடியாது னு சொல்லிட்டேன்... அந்த கோவத்துல தான் எங்க இருக்கோம் னு மறந்து அப்படி நடந்துக்கிட்டாரு...
குரு : இதுக்கு யாராவது சாட்சி...
மேகா அமைதியாக இருக்க...
குரு : இங்க பாரு மேகா... வம்சி தப்பு பண்ணி இருந்தா நானே அவனுக்கு தண்டனை வாங்கி தரேன்...
மேகா mind voice : இவனை வச்சு எப்படியாவது வம்சி ய கல்யாணம் பண்ணிக்கனும்...
குரு : பதில் சொல்லுங்க மேகா...
மேகா : அப்போ யாருமே இல்ல...
குரு : அப்படியா...யாருமே பாக்கல... வம்சி உங்க இல்ல உன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டான்... அப்படி தானே...
மேகா : ஆமா அப்படி தான்...
"சாட்சி நா இருக்கேன்..."என்று யாரோ சொல்ல...
அனைவரும் திரும்பி பார்த்தனர்....
தொடரும்...
# நானிஷா...

0 Comments