நேசம் என்னிடம் - 7
"சாட்சி நா இருக்கேன்..."என்று யாரோ சொல்ல...
மேகா அதிர்ச்சியாக திரும்பி பார்க்க...
நாகராஜ் இடுப்பில் கை வைத்து கொண்டு தலையை வலது புறம் திரும்பி பார்த்தவாறு நிற்க...
குரு எட்டி பார்க்க... நாகராஜ் குருவை பார்த்து எல்லாம் பல்லும் தெரிய சிரிக்க... குரு துப்ப...நாகராஜ் முகத்தை சுளித்து கொண்டு நேராக நின்றான்...
Staff 1 : என்ன நாகராஜ் உனக்கு என்ன தெரியும்...
நாகராஜ் : எனக்கு எல்லாம் தெரியும்...
மேகா எச்சிலை விழுங்கி கொண்டு நின்றாள்...
Staff 4: அப்போ வம்சி மேகா கிட்ட misbehave பண்ணாருங்குறது உண்மை னு இப்போ தெரியும் ல உனக்கு...
குரு : தெரியும் தெரியும் இப்ப தெரியும்... Mr. Snake king Tell me what happened..
நாகராஜ் : சொல்லிட்டா போச்சு... ஒன்னும் இல்லங்க... நேத்து என்ன ஆச்சு னா... வம்சி canteen போனாருங்க... உண்மைய சொல்லனும் னா love touture பண்ணது வம்சி இல்ல... இந்த மேகா madam தான்... இன்னொரு உண்மை தெரியுமா வம்சிக்கு
குரு : டேய்...
நாகராஜ் : மன்னிச்சுக்கோங்க... வம்சிக்கு மேகா வ பிடிக்கல... மேகா வ பாக்கும் போது எல்லாம் வம்சி விலகி தான் போனாரு...மேகா தான் விடல... நேத்து canteen ல உண்மையா நடந்தது என்ன தெரியுமா...
வம்சி மேகா கிட்ட misbehave பண்ணல... செவுளு கிழியுற மாதிரி ஒன்னு கன்னத்துல விட்டாரு... அவரு கொடுத்ததும் நா ஆடி போயிட்டேன்... ஆத்தி என்ன அடி...இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு...வேற எதுவும் நடக்கல...
மேகா வேகமாக "இல்ல இல்ல நாகராஜ் பொய் சொல்றான்... நா தான் வம்சி ய அடிச்சேன்... அவன் என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணதும் நா கோபப்பட்டு நா தான் அடிச்சேன்... நாகராஜ் வம்சியோட friend... அவன் சொல்றத யாரும் நம்பாதீங்க... Friend காப்பாத்த இப்படி சொல்றான்...
குரு : "அப்படியா நாகராஜ்... நீ என் friend வம்சி தேவனை காப்பாத்த பொய் சொல்றீயா..."என்று நக்கலாக சிரித்து கொண்டே கேட்க...
நாகராஜ் : "நீங்களே சொல்றீங்க... வம்சி உங்க friend னு... அப்புறம் எப்படி அவரு என் Friend ஹ இருக்க முடியும்..."என்று சிரிக்க...
மேகா : என்ன பேசுறீங்க நீங்க ரெண்டு பேரும்...
குரு : "நீ சொன்னதை தான் பேசுறோம்.."என்று நாகராஜ் ஐ பார்த்து "என்ன snake king நீ சொல்றது பொய் ஹ..."
நாகராஜ் : ஓ...இப்படி தான் சொல்லுவாங்களா... எனக்கு தெரியாதே... நா கண்ணுல பாத்ததை தானே சொன்னே...அது எப்படி பொய்யாகும்... இந்த ஊருல உண்மைய சொன்னா பொய் சொல்ற மாதிரி யா...
Staff 4 : என்ன நடக்குது னு தெரிஞ்சுக்கலாமா...
Staff 1 : அதானே...நீங்க என்ன விளையாடுறீங்களா...
Staff 3: எவ்ளோ பெரிய விசயம் நடந்திருக்கு நீங்க என்னடானா நக்கல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க...
குரு : Hello Mr... நாங்க நக்கல் பண்ணல... உண்மைய தான் நாகராஜ் சொன்னான்...
மேகா : இல்ல இது பொய்...
குரு : சரி விடு... இப்ப வம்சி தப்பு பண்ணான் னு வச்சுக்குவோம்...
வம்சி : "குரு..."என்று கத்த..
குரு : அட இரு டா.. இவே வேற... இவ்ளோ நேரம் என்ன வேலை பாத்தீயோ அந்த வேலையே பாரு...
வம்சி : டேய் விடு டா... என்ன தான் நடக்குது னு பாக்கலாம்...
குரு : "இரு டா... Miss.மேகா என்ன தான் சொல்ல வராங்க னு பாக்கலாம்..."என்று மேகா விடம் "சொல்லுங்க madam இப்ப என்ன பண்ணலாம்..."என்று கேட்க...
மேகா : இந்த விசயம் வெளிய தெரிஞ்சா என்ன ஆகும்... என் மானம் போச்சு... என் வாழ்க்கை போச்சு... இனி நா என்ன பண்ணுவேன்... என்னைய யாரு கல்யாணம் பண்ணிக்குவா...
குரு : so...
மேகா :"so..."என்று இழுக்க...
குரு : ம்ம்ம்...
மேகா : வம்சி என்னைய கல்யாணம் பண்ணிக்கனும்...
வம்சி :"what..." என்று அதிர்ச்சியாக...
குரு : "ஓ...அப்படியா..."என்று நிதானமாக கேட்க...
நாகராஜ் : அட அட அட... சூப்பர்...
குரு மேகா அருகில் சென்று "நல்ல தண்டனை தான்... ஆனா வம்சி தப்பு பண்ணானா னு இன்னும் தெரியலையே மா... அப்புறம் எப்படி..."என்று இழுக்க...
மேகா : இந்த மாதிரி விசயத்துல யாராவது பொய் சொல்லுவாங்களா...
நாகராஜ் : நீ சொல்றீயே மா...
மேகா : யாரு நானா...
நாகராஜ் : ம்ம்ம்...
மேகா : இல்ல நா பொய் சொல்லல...
குரு : சரி...ஆனா எப்படி வம்சி ய கல்யாணம் பண்ணிக்குவ... அது முடியாதே...
வம்சி : டேய் குரு வேணாம்...
குரு : சும்மா இரு டா... எனக்கு தெரியும்...இனி பேசாம இருக்க முடியாது...
வம்சி : அதுக்காக
குரு முறைக்க...வம்சி அமைதியானான்...
மேகா : ஏன் முடியாது... இப்பவே தாலி வாங்கிட்டு வந்து என் கழுத்துல கட்ட சொல்லுங்க...
குரு : அது தான் முடியாதே மா...
Staff 4 : ஏன் sir முடியாது...தப்பு பண்ணி இருக்காரு ல...
Staff 2 : அந்த பொண்ணோட வாழ்க்கைக்கு என்ன பதில்...
குரு : யோவ் இருங்க யா...சும்மா... ஒரு பொண்ணுக்கு ஏதாவது னா உடனே வாங்க...ஒரே ஒரு வார்த்தை அந்த பொண்ணு சொல்லவும் வேகமாக எல்லாரும் சண்டைக்கு வந்து நிக்கிறீங்க... அந்த பொண்ணு சொன்னது உண்மையா பொய்யா னு கூட விசாரிக்க மாட்டீங்களா...
வம்சி : அது எதுக்கு பண்றாங்க... நா வந்ததும் என் கிட்ட வந்து உங்க மேல இப்படி ஒரு complaint வந்து இருக்கு... அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க... உண்மையா பொய்யா னு கேட்டு இருக்கனும்... அத விட்டுட்டு ஒரு பொண்ணு சொன்னா னு எத பத்தியும் விசாரிக்காம யோசிக்காம ஆளாளுக்கு பேசுறாங்க... இதே உங்க மேல இந்த பொண்ணு இப்படி ஒரு பழி போட்டா இப்படி தான் நடந்துக்குவீங்களா...
Staff 1 : இப்ப நீங்க உண்மைய ஒத்துக்க போறீங்களா இல்ல...
Staff 2 : மேகா வ நீங்க தான் கல்யாணம் பண்ணிக்கனும்...
Staff 4 : ஆமா... கல்யாணம் பண்ணிக்க கும்...
Staff 3 : இல்லைனா police வரும்...
Police என்று சொன்னதும் மேகா திருதிருவென முழிக்க...
குரு : டேய் தங்கம் வா டா வா டா... இப்ப தான் டா நீ சரியா பேசி இருக்க... அத முத பண்ணு டா...
மேகா : இல்ல வேணாம்... Police case னு போனா...என் மானம் போயிடும்...
Staff 2 : அதுவும் சரி தான்...
Staff 4 : இப்ப என்ன பண்றது...
நாகராஜ் : அடேய் தப்பே நடக்கல டா... நடக்காத விசயத்துக்கு போய் எதுக்கு டா Argument...
குரு : அதானே எதுக்கு Argument...
இப்ப என்ன பண்ணனும்... வம்சி மேகா வ கல்யாணம் பண்ணிக்கனும்... அப்படி தானே...
All staff : ஆமா...
குரு : எதுக்கு இந்த கோரஸ்... நீங்க தலை கீழாக நின்னாலும் நடக்குது...
Staff 2 : ஏன் நடக்காது...
குரு : because he's already married...
All staff :"what..." என்று அதிர்ச்சியாக பார்க்க...
மேகா : இல்ல பொய்... நா நம்ப மாட்டேன்... நீங்க உங்க friend ஹ காப்பாத்த பொய் சொல்றீங்க...
குரு : அட நீ வேற ஏன் மா... நானும் வந்தது ல இருந்து பாக்குறேன்... பொய்ங்குற வார்த்தை தவிர வேற வார்த்தையை use பண்ண மாட்ற... நா எதுக்கு மா பொய் சொல்லனும்...நீ வேணும் னா அவனையே கேளு...
மேகா : வம்சி குரு சொல்றது உண்மையா...
வம்சி : எனக்கு கல்யாணம் ஆகிருச்சா இல்லையா னு நா உனக்கு சொல்லனும் னு அவசியம் இல்ல...
மேகா : சொல்லி தான் ஆகனும்... எனக்கு நீங்க பதில் சொல்லனும்...
குரு : "ச்சீ வாய மூடு...நானும் போனா போகுது னு பொறுமையா பேசிட்டு இருந்தா ரொம்ப பண்ற..."என்று நாகராஜ் ஐ பார்த்து "டேய் போய் எடுத்து வா டா..."என்று சொல்ல...
நாகராஜ் தலையை ஆட்டி வேகமாக அங்கே இருந்து நகர்ந்தான்...
வம்சி : டேய் எதுக்கு டாஸிங்க நிக்கனும்... வா டா போய் வேலை ய பாக்கலாம்...
குரு : டேய் இரு டா....CEO கிட்ட complaint போய் இருக்கு... நீ தப்பு பண்ணாமலே உன் மேல பழி விழுந்திருக்கு... அத சரி பண்றது இல்லையா... CEO உன் கூப்டு கேட்டா என்ன டா சொல்லுவ...
வம்சி : அது நா பேசிக்கிறேன்...
நா தப்பு பண்ணல னு எனக்கு தெரியும்...எப்படி சொல்லனுமோ அப்படி நா சொல்லிக்குவேன்...
குரு : அங்க சொல்லிக்குவ... ஆனா இவங்க...
வம்சி : கண்டவங்கள பத்தி எனக்கு கவலை இல்லை...
நாகராஜ் வேகமாக அங்கே ஓடி வந்தான்...
குரு : என்ன ஆச்சு...
நாகராஜ் : done...
குரு : For everyone's attention...sorry for the disturbance...Take a look at this...
அனைவரும் அவன் காட்டியதை பார்த்தனர்...
அதில் மேகா வம்சியிடம் ஏதோ பேச... வம்சி கோவமாக பேச... மேகா வம்சி கையை பிடித்து ஏதோ சொல்ல... வம்சி கையை உதறி விட்டு அவள் கன்னத்தில் அறைந்து எச்சரித்து விட்டு நகர்ந்தான்...
தொடரும்...
# நானிஷா....

0 Comments