"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

நேசம் என்னிடம் - 9

 


நேசம் என்னிடம் - 9

குரு வம்சி cabin ல் இருந்து வெளியே வந்து மேகா வை தேட...

மேகா bag ஐ எடுத்து கொண்டு வெளியே செல்வதை பார்த்து அவளை நோக்கி ஓடினான்...

குரு : "மேகா... மேகா நில்லு‌..."என்று கத்தி கொண்டே ஓடி வந்து அவள் கையை பிடித்தான்...

மேகா திரும்பாமல் அழுதவாறு "குரு please விடுங்க..."என்று சொல்ல.....

குரு : எதுக்கு நீ resign பண்றேன் னு சொல்ற...

மேகா : வம்சி ய மறக்க அது ஒன்னு தான் வழி... நா போறேன் குரு...

குரு : அப்படி னு நீ நினைக்காத... நீ இங்க தான் இருக்கனும்...

மேகா அவனை திரும்பி பார்க்க... அவள் கண் சிவந்து இருந்தது...

மேகா : நீங்க என்ன சொல்றீங்க...

குரு : "one minute..."என்று வேகமாக சென்று அவன் bike எடுத்து வந்தான்...

மேகா  புரியாமல் பார்க்க...

குரு : உட்கார்...

மேகா : எங்க...

குரு : சொல்றேன்... உட்கார்...

மேகா அமைதியாக நிற்க... 

குரு : சொல்றேன் ல...

மேகா கண்ணை துடைத்து கொண்டு bike ல் அமர...cabin window வழியே வம்சி அவர்களை பார்த்து  கொண்டு இருந்தான்...

நாகராஜ் : என்ன வம்சி...

வம்சி திரும்பி பார்த்து "உனக்கு என்ன வேணும்..."என்று கேட்க...

நாகராஜ் : என்ன ஆச்சு... அவங்க ரெண்டு பேரும் போறதை அப்படி பாக்குற...

வம்சி : குரு சொல்றதும் சரி தானே... நா தானே தப்பு பண்ணேன்...

நாகராஜ் : அப்படியா...

வம்சி அவனை 😠😠😠 முறைக்க...

நாகராஜ் : எதுக்கு முறைக்குற...  இந்த இடத்துல நா இருந்திருந்தா ஒரு பொண்ணு என் கிட்ட காதலை சொல்லும் போதே இல்ல மா எனக்கு கல்யாணம் ஆகிருச்சு மா னு சொல்லி இருப்பேன்... நீ avoid பண்ணது தப்பு இல்ல... உண்மைய சொல்லிட்டு avoid பண்ணி இருக்கலாம்...

வம்சி : உனக்கு எப்படி அவே பேசுனது தெரியும்...

நாகராஜ் : இந்த பக்கம் போனேன்... குரு பேசுனது அப்படியே வெளியே கேட்டுச்சு...

வம்சி : இப்ப அவங்க எங்க போறாங்க...

நாகராஜ் : "தெரியாது..."என்று செல்ல...

வம்சி வெளியே சென்றான்...

குரு office க்கு அருகில் இருந்த park ல் bike ஐ நிறுத்த...

மேகா புரியாமல் இறங்கி நின்றாள்...

குரு : "வா..."என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றான்...

மேகா : இங்க எதுக்கு குரு...

குரு : "பேசாம வா..."என்று அங்கே இருந்த bench ல் அமர வைத்தான்...

மேகா கண்ணில் இருந்து தானாக கண்ணீர் வடிந்தது...

குரு : உன் mobile எங்க...

மேகா அவனை பார்க்க...

குரு : உன்னைய தான் கேட்குறேன்... உன் mobile எங்க...

மேகா எடுத்து நீட்ட...

குரு : headset வச்சு இருக்கீயா...

மேகா : ம்ம்ம்...

குரு : எடு...

மேகா : என்ன னு சொல்லு குரு...

குரு அவளிடம் இருந்து mobile ஐ வாங்கி headset ஐ அவள் காதில் வைத்து mobile ல் song ஐ வைத்து விட்டு "கண்ணை மூடு...பாட்டை கேளு...எதுவும் பேசாத..."என்று சொல்ல...

மேகா கண் மூடி அமர்ந்திருந்தாள்....

அரை மணி‌ நேரம் கடக்க...

குரு அவள் தோளை தொட்டான்...

மேகா மெதுவாக கண் திறந்து பார்த்தாள்...

குரு : இப்ப எப்படி இருக்கு...

மேகா : feel better...

குரு : எனக்கு மனசு சரி இல்லாம போச்சு னா நா இப்படி தான் தனியா வந்து songs கேட்பேன்... Relax ஆகிரும்...

மேகா : இருந்தாலும்...

குரு : நீ எதுவும் பேசாத... எதுக்கு job resign பண்ற..

மேகா : நா அங்க இருக்குற வரைக்கும் என்னால வம்சி ய‌ மறக்க முடியாது...அதனால தான்...

குரு : ஓ... அப்படியா... வேலைய விட்டு போயிட்டா... வம்சி ய மறந்துவ அப்படி தானே...

மேகா பேசாமல் இருக்க...

குரு : நீ வேலைய விட்டு போகா கூடாது... நீ அங்க இருந்தா தான் வம்சி ய மறக்க முடியும்...

மேகா அவனை உற்று பார்க்க...

குரு : என்ன அப்படி பாக்குற... நீ அங்க இருந்து வம்சி ய ஒவ்வொரு தடவையும் பாக்கனும்...

மேகா : குரு நீ என்ன சொல்ற... தெரிஞ்சு தான் பேசுறீயா...

குரு : ஆமா தெரிஞ்சு தான் பேசுறேன்... நீ அவனை பாக்காம இருந்தா உன்னால அவனை மறக்க முடியுமா... சொல்லு மேகா... கண்டிப்பா முடியாது...இதே நீ அவனை தினமும் பாத்தா அவனை நீ காதலிச்சு ஞாபகம் வர்றத‌ விட அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சு னு தான் உனக்கு ஞாபகம் வரும்... அப்போ தான் அவனை மறப்ப...

மேகா : எப்படி குரு‌... என்னால முடியாது...

குரு : முடியும்...நீ அவனை விட்டு விலகி போனா தான் அவனோட ஞாபகம் அதிகமாகும்... குறையாது‌... நீ அங்க தான் இருக்கனும்...

மேகா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்...

குரு : "இரு வரேன்..."என்று எழுந்து சென்று சிறிது நேரம் கழித்து வந்தான்...

மேகா அங்கே விளையாடி கொண்டு குழந்தைகளை பார்த்து கொண்டு இருந்தாள்...

குரு அவள் அருகில் அமர்ந்தான்...

மேகா திரும்பி பார்த்து "எங்க போனீங்க..."என்று கேட்க...

குரு : சும்மா‌‌....

மேகா : என்ன சும்மா... எங்க போனீங்க‌...

குரு : அது வந்து ஒரு தம் அடிக்கலாம் னு போனேன்...

மேகா அவனை 😠😠😠 முறைக்க...

குரு : எதுக்கு முறைக்கிற... அடிக்கலாம் னு தான் போனேன்... ஆனா அடிக்கல... மனசு கேட்கல... வந்துட்டேன்...

மேகா : என்ன பழக்கம் இது...

குரு : ப்ச் collage படிக்கும் போது வந்துச்சு... நேத்தே விடனும் னு இருந்தேன்... இப்ப அடிக்கலாம் னு கை ல எடுக்கும் போது மனசு கேட்கல... தூக்கி போட்டுட்டு வந்துட்டேன்...

மேகா : ஏன்‌...

குரு : இல்ல நா Cigarette பிடிச்ச வம்சி Wife க்கு பிடிக்காது... என்னைய திட்டுவா...‌அது தான்... 

மேகா : ஓ...

குரு : சரி வா போலாம்...

மேகா : எங்க...

குரு : Time ஆச்சு... சாப்ட போலாம்...பக்கத்துல hotel இருக்கு... 

மேகா : இல்ல வேணாம்... எதுக்கு நீங்க சாப்பாடு எடுத்துட்டு வந்து இருப்பீங்க... Waste ஆகிரும்... நீங்க office க்கு போங்க... நா இப்படி hostel போறேன்...

குரு : நா ஒன்னும் சாப்பாடு எடுத்துட்டு வரல... இன்னக்கி hotel ல சாப்டனும்... பசிக்குது வா...

இருவரும் கிளம்பி அருகில் இருந்த hotel க்கு சென்றனர்...

குரு : என்ன சாப்டுற மேகா...

மேகா : நீங்க என்ன சாப்டுறீங்க...

குரு : எனக்கு curd rice போதும்... உனக்கு என்ன வேணும்...

மேகா : உங்களுக்கு curd rice பிடிக்குமா...

குரு : ம்ம்ம்...

மேகா : எனக்கும் பிடிக்கும்.. எனக்கும் அதையே சொல்லுங்க...

Order செய்து இருவரும் சாப்டு கொண்டு இருந்தனர்...

மேகா குரு வையே பார்த்து கொண்டு இருந்தாள்...

குரு :என்ன மேகா...ஏன் அப்படி பாக்குற...

மேகா : ஒன்னும் இல்லங்க...

குரு : சும்மா சொல்லு மேகா... எதுவும் கேட்கனுமா...

மேகா : "அது வந்து..."என்று இழுக்க...

குரு மெலிதாக சிரித்து விட்டு "என்ன வம்சி கல்யாணத்தை பத்தி தானே கேட்க நினைக்கிற..."என்று கேட்க...

மேகா மௌனமாக இருக்க...

குரு : வம்சிக்கு உண்மையா கல்யாணம் ஆகிருச்சா னு தானே யோசிக்கிற... 

மேகா : ம்ம்ம்...

குரு : சந்தேகமே வேணாம்... அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சு...

மேகா : வம்சி இங்க மூனு வருசமா work பண்றாரு...‌ஆனா இங்க யாருக்குமே அவருக்கு கல்யாணம் ஆனது தெரியல... எப்படி...

குரு : அந்த கல்யாணம்  ரகசியம் நடந்துச்சு... நா தான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்...

மேகா : அப்போ உங்களுக்கு மட்டும் தான் தெரியுமா...

குரு : ஆமா...

மேகா : வம்சி wife யாரு...

குரு : வம்சி wife நம்ம office ல எல்லாருக்கு தெரியும்... ஆனா அவங்க தான் தெரியாது...

மேகா : என்ன குழப்புறீங்க குரு...

குரு : குழப்பல... உண்மைய தான் சொல்றேன்... வம்சி wife 6 month back ல நம்ம office ல தான் work பண்ணா...

மேகா : work பண்ணாங்கனா இப்போ...

குரு : இப்ப இல்ல...

மேகா : ஏன் after marriage job க்கு போக கூடாது னு வம்சி சொல்லிட்டாரா...

குரு : cha.. cha அப்படி இல்ல...இது வேற...

மேகா : இது வேற னா...

குரு : அது வந்து ஒரு problem ஆகிருச்சு...

மேகா : என்ன ஆச்சுங்க...

குரு : "வம்சி பாவம் மேகா... அவனுக்கு இப்படி ஒரு நிலைம... அதுவும் என்னால..."என்று சொல்லும் போதே அவன் கண்கள் கலங்கியது...

மேகா table மேல் இருந்த கையை அவன் கையை  பிடித்து கொண்டாள்...

மேகா : குரு அழாதீங்க...‌எல்லாரும் பாக்குறாங்க..

தான் இருக்கும் இடம் அறிந்து கண்ணை துடைத்து கொண்டான்...

மேகா : குரு...

குரு : sorry மேகா...வேற எதுவும் சாப்டுறீயா...

மேகா : coffee...

குரு coffee order செய்து சோகமாக இருந்தான்...

Coffee அவன் முன் ஆறி கொண்டு இருக்க...

மேகா எழுந்து அவன் அருகில் அமர்ந்து அவன் தோளை தொட்டாள்...

குரு : என்ன மேல தான் தப்பு... ஆனா தண்டனை வம்சிக்கு... 

மேகா : என்ன னு சொன்னா தானேங்க தெரியும்...

குரு : "மேகா வா போலாம்..."என்று எழுந்து செல்ல...

மேகா : "அடப்பாவி bill pay பண்ணாம போறாரே..."என்று bill pay பண்ணி விட்டு குரு அருகில் வர...அவளை அழைத்து கொண்டு சென்றான்...

தொடரும்...

# நானிஷா...

Post a Comment

0 Comments