நேசம் என்னிடம் - 32
குரு car 🚗 ஐ drive பண்ண... வம்சியும் இஷாவும் சிரித்து பேசி கொண்டு வந்தனர்....
குரு : டேய் வம்சி உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு... கொஞ்சம் நேரம் அமைதியா வாங்க... இல்ல சும்மா இருக்க மாட்டேன்... என்ன பண்ணுவேன் னு எனக்கே தெரியாது...
இஷா வம்சியை பார்க்க...
வம்சி : நீ விடு மா... அவன் ஒரு Jealous fellow...அவனுக்கு Love பண்ண யாரும் இல்லையே னு அப்படி பேசுறான்...
குரு mirror வழியாக வம்சியை😠😠😠 முறைக்க...
வம்சி கண்டு கொள்ளாமல் இஷா விடம் பேசிக்கொண்டே வந்தான்...
குரு car ஐ நிறுத்த...
வம்சி : என்ன டா...
குரு : டேய் வந்தாச்சு டா... இறங்குங்க...
வம்சியும் இஷாவும் இறங்க...
குரு இறங்கி வந்து 'இருங்க நா இப்ப வந்துருறேன்..."என்று ஓடினான்...
சிறிது நேரத்தில் வேகமாக வந்து குரு "வம்சி வா டா... எல்லாம் ok...
உங்கள வர சொல்றாங்க... வாங்க போலாம்..."என்று சொல்லி ஒரு cover ஐ எடுத்து கொண்டு செல்ல...
வம்சி இஷா வை பார்த்து கொண்டு கையை நீட்ட...
இஷா சிரித்துக் கொண்டே அவன் உள்ளங்கையில் தன் கையை வைக்க...
வம்சி இருக்க மூடி கொண்டு "இப்ப பிடிச்சு கையை எப்பவும் நா விட மாட்டேன் இஷா... கடைசி வரைக்கும் விட மாட்டேன்..."என்று அழைத்து சென்றான்...
வம்சிவும் இஷாவும் உள்ளே நுழைய...அனைவரும் கையை தட்ட...
அதில் ஒருவர் இருவரையும் பார்த்து "நீங்க தான் கல்யாணம் பண்ணிக்க போறவங்களா..."என்று கேட்க...
இருவரும் தலையை ஆட்ட...
Register : Proof கொடுங்க...
குரு எடுத்து கொடுக்க...
Registrar: இதுல sign பண்ணுங்க...
இருவரும் sign போட...
Registrar : Witness sign போடுங்க...
குருவுடன் சேர்ந்து இன்னும் மூன்று பேர் witness sign போட...
அதை தொடர்ந்து குரு வம்சியிடம் தாலி கொடுக்க...
வம்சி இஷாவின் சங்கு கழுத்தில் மூன்று மூடிஞ்சிட...
குரு மாலையை எடுத்து தர...இருவரும் மாலையை மாத்தி கொள்ள...
குரு தன் phone ல் photo எடுத்தான்...
அனைவரும் சென்று விட... குரு வம்சி இஷா மூவரும் பேசிக் கொண்டே வெளியே வந்தனர்...
குரு : Happy married life வம்சி... வாழ்த்துக்கள் இஷானி... இல்ல இல்ல... Mrs.இஷானி வம்சி தேவன்...
இஷா 😀😀😀 சிரிக்க...
வம்சி : thanks மச்சி...நீ இல்லனா இது எல்லாம் நடந்திருக்காது... நீ தான் எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணி கல்யாணம் பண்ணி வச்சு இருக்க...எங்களுக்காக நீ ரொம்ப கஷ்டப்பட்டு இருப்ப னு எனக்கு தெரியும்... ரொம்ப thanks டா...
குரு : அம்மாடி இஷா... உன் புருஷனை உன்னோட Permission வோட நாலு போடு போடவா...
இஷா : ஏன் டா...
குரு : பின்ன...என்ன பேசுறான் னு பாரு... என்னைய யாரோ மாதிரி நினைச்சு thanks எல்லாம் சொல்லிட்டு இருக்கான்...
வம்சி : sorry மச்சி...
குரு : இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை... கல்யாணம் ஆகிருச்சு... ஒழுங்கா எனக்கு treat கொடு...
வம்சி : உனக்கு இல்லாததா...என்ன வேணும் னு கேளு மச்சான்...
குரு : இப்ப எனக்கு ஒரு தம் மட்டும் வாங்கி கொடு டா...
வம்சி : "டேய் இஷா இருக்கா டா..."என்று சொல்லி திரும்ப...
குரு எச்சிலை விழுங்கி கொண்டு இஷா வை பார்க்க...
இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து கொண்டு இருந்தாள்...
குரு : இஷா இன்னக்கி மட்டும் plz...ஒன்றே ஒன்று மட்டும் தான்... அதுக்கு அப்புறம் நீ சொன்னா கூட தம் அடிக்க மாட்டேன்...
வம்சி (m.v) : அவ எப்படி டா உன்னைய தம் அடிச்சுக்கோ னு சொல்லுவா... நீ அன்னக்கி அந்த room ல மாட்டி fire ஆகி smoke ல நீ பட்ட கஷ்டத்தை பாத்தோமே... Hospital போய் serious இருந்த... இப்ப சரி ஆகி இருக்க... தவளை தன் வாயால் கெடும் னு சொல்லுவாங்களே... அது மாதிரி இப்ப உன் வாயால் நீயே கெட்டு நல்லா வாங்க போற...
குரு : plz இஷா...உங்க marriage celebration க்கு தான்... ஒன்னு மட்டும்... உன் மேல சத்தியம் இதோட பிடிக்க மாட்டானே.... plz...plz...plz...
இஷா அவனை 😡😡😡முறைத்து கொண்டே இருக்க...
வம்சி : டேய் குரு... வேணாம்... இப்ப இஷா உன் கிட்ட பேசுறா...
குரு : "நீ சும்மா இரு டா..."என்று இஷா வை பார்த்து " இஷா ஒன்னு மட்டும்... Please... at least ஒன்னு வாங்கி half மட்டும் smoke பண்றேன்..."என்று கெஞ்ச...
இஷா சிரித்துக் கொண்டே "ஒன்னு தானே..."என்று கேட்க...
குரு :"ஆமா.."என்று ஆர்வத்துடன் தலையை ஆட்ட...
வம்சி வேகமாக திரும்பி இஷா வை பார்க்க...
இஷா :"சரி போங்க..."என்று சொல்ல...
குரு : "டேய் மச்சி permission கிடைச்சுருச்சு டா...
வம்சி : இஷா வேணாம்... எனக்கு சரியா படல...
இஷா : இன்னக்கி ஒரு நாள்... அதுவும் இப்ப ஒன்னு மட்டும்... இனி வாழ்க்கை ல அது பத்தி நினைச்சு கூட பாக்க கூடாது...
குரு : கண்டிப்பா... நினைக்கவே மாட்டேன்...
வம்சி : ஒன்னே ஒன்னு பிடிக்கிறதுக்கு இவ்ளோ கெஞ்சு கெஞ்சுறான்... பின்னாடி பிடிக்க மாட்டானா என்ன...
குரு : டேய் உனக்கு புண்ணியமா போகுது... தயவுசெய்து பேசாம இரு... உனக்கு டீ...எனக்கு தம்... சரியா வா டா..மனசு மாறிட போற..."என்று சந்தோஷமாக வம்சியை இழுத்து கொண்டு ஓட...
இஷா சிரித்துக் கொண்டே பின்னால் வர...
இருவரும் ரோட்டை கடந்து மறு புறம் செல்ல... வம்சி முன்னால் செல்ல...
பின் வந்த குரு சந்தோஷத்துடன் ஓட...
ரோட்டை கவனிக்காமல் குரு செல்ல...அவன் மேல ஒரு வேன் மோத வர...
அதை பார்த்த இஷா "குரு..."என்று கத்த...
குரு நடு ரோட்டில் நின்று திரும்பி இஷா வை பார்க்க...
இஷா வேகமாக ஓடி வந்து அவனை பிடித்து தள்ளி விட...
இஷா நிற்பதை பார்த்து வேன் ஒதுங்கி போக...
பின்னால் வந்த லாரி நடுரோட்டில் நின்ற இஷா மேல் மோத... தூக்கி அடிக்கப்பட்டாள்....
கீழே விழுந்து எழுந்த குரு திரும்பி பார்க்கு தூக்கி விசப்பட்டதை பார்த்து அதிர்ந்தான்...
குரு : "இஷா..."என்று கத்தியவாறு ஓடி வந்து அவளை தூக்கி தன் மடியில் கிடத்த...
பின் தலையில் இருந்து இரத்தம் வந்தது...
குரு கண் கலங்கி "இஷா ஒன்னும் இல்ல இஷா... நம்ம hospital போயிடலாம்..."என்று சொல்ல...
அவன் கண்ணில் இருந்து கண்ணீர் சொட்டு அவள் கன்னத்தில் விழ...
இஷா தன் இரத்தக்கறை படிந்த கையால் குரு தலை மூடியை கோத்தி விட்டி "உனக்கு... உனக்கு ஒன்னு
இ... இல்லயே.."என்று கேட்க...
குரு :"அய்யோ இஷா..."என்று தன்னோடு அணைத்து கொண்டு "நா நல்லா தான் இருக்கேன்... உனக்கு என் மேல் எதுக்காக இவ்ளோ பாசம்..."என்று கதற...
இஷா : அண்ணா...
குரு தன்னிடம் இருந்து இஷா வை விலகி அவள் முகத்தை பார்த்தான்....
சத்தம் கேட்டு திரும்பி பார்த்த வம்சி சுத்தி இருந்த கூட்டத்தை நோக்கி வர... குரு மடியில் இரத்த வெள்ளத்தில் இருந்த இஷா பார்த்து வேகமாக குரு அருகில் அமர்ந்து வம்சி இஷா கன்னத்தை தட்டி "இஷா இங்க பாரு..."என்று அவளை தன்னோடு அணைத்து கொள்ள...
அவள் கழுத்தில் தொங்கிய தாலியை தூக்கி பார்த்து "உன் கழுத்துல தாலிய கட்டி அந்த மஞ்சளோட ஈரம் கூட காயல...அதுக்குள்ள இரத்தக்கறை படிஞ்சுருச்சேன்..."என்று தலையில் 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️அடித்து கொண்டு அழுதான்....
குரு : என்னால் தான்... எல்லாம் என்னால தான்... நா ஏன் இப்படி இருக்கேன்... என்னைய காப்பாத்த போய் தான் இவளுக்கு இப்படி ஒரு நிலைம... நானே அடிப்பட்டு இருந்திருக்கலாமே... அச்சோ எல்லா என்னால தான்... என்னைய காப்பாத்த தானே உனக்கு இப்படி ஆச்சு...
யாரோ ambulance க்கு call செய்து இருக்க... Ambulance வந்தது...
இஷா வை ambulance ல் ஏற்ற...அவளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது...
வம்சி இஷா கையை பிடித்து கொண்டு அவளையே பார்த்தான்...
குரு பின்னால் car ல் வந்தான்...
குரு என்ன செய்வது என்று புரியவில்லை... கண்களில் கண்ணீர் வடிந்தது...
அவன் கண் முன் இஷாவின் ரத்தம் வடிந்த முகம்...ICU கதவையே பார்த்தான்...
வம்சி இடிந்து போய் அமர்ந்திருக்க... குரு சிறு குழந்தை தேம்பி தேம்பி அழுதான்...
வெகு நேரத்திற்கு பிறகு Doctor வெளியே வர...
குரு வேகமாக எழுந்து அருகில் வர... வம்சி அசைவற்று அமர்ந்திருந்தான்...
குரு : "Doctor இஷாக்கு ஒன்னு இல்ல ல..."என்று பயத்துடனும் பதற்றதுடனும் கேட்க...
வம்சி குரு சத்தம் கேட்டு வேகமாக வந்தான்...
Doctor : treatment போயிட்டு இருக்கு... தலையில பலமான அடி... அவங்க வரும் போதே நினைவு இல்ல... இப்ப எதுவும் சொல்ல முடியாது...48 hours ஆனா தான் சொல்ல முடியும்...
வம்சி உடைந்து போய் அங்கே கீழே விழுந்தான்...
குரு :"ஏன் இஷா என்னைய காப்பாத்துன... இப்படி நா கஷ்டப்படுறதுக்கா... "என்று கூறி அழுது கொண்டே " இஷா..."என்று கத்தினான்...
தொடரும்...
# Nancy...
0 Comments