நேசம் என்னிடம் - 33
"இஷா....."
மேகா குரு முதுகை தடவி கொடுத்து தன்னோடு அணைத்து கொண்டாள்...
குரு : என்னால தான் மேகா... என்னால வம்சி எவ்ளோ கஷ்டப்பட்டான்...நா தான் காரணம்...
மேகா : இல்ல குரு... நீங்க இல்ல...
குரு அவளிடம் இருந்து விலகி "இல்ல மேகா... என்னைய காப்பாத்த தான் வந்தான்... அவ வரலைனா இல்ல... இல்ல.. நா போக இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா... இந்த cigarette ஹ பிடிக்க ஆசப்பட்டு தானே நா போனேன்... அது வாங்கனும் எதையும் கவனிக்காம போனது என் தப்பு தானே...
மேகா பேசாமல் இருக்க...
குரு : சொல்லு மேகா... என் தப்பு தானே...
மேகா : இல்லங்க... அது தெரியாம நடந்திருச்சு... இதுல உங்க தப்பு இல்ல...
குரு : "இல்ல... இல்ல... எல்லா எல்லா இந்த cigarette ஆல வந்துச்சு...ஒரு நிமிசம்..."என்று தன் pocket ல் இருந்து ஒரு box ஐ எடுத்து அவள் கையில் கொடுக்க...
மேகா புரியாமல் வாங்கினாள்...
குரு : இது என்ன னு தெரியுதா...
மேகா : ம்ம்ம்...
குரு : cigarette box... Open பண்ணி பாரு...
மேகா திறந்து பார்க்க... அதில் ரத்தக்கறை படிந்த cigarette இருந்தது...
குரு : இது இஷா accident ஆகுறதுக்கு முன்னாடி வம்சி எனக்காக வாங்க போன cigarette... இஷா வ Ambulance ல ஏத்தும் போது வம்சி கையில இருந்து கீழ விழுந்துச்சு...
மேகா : இத எதுக்கு இன்னும் வச்சு இருக்கீங்க...
குரு : "இஷா கண்ணு முன்னாடியே இத தூக்கி ஏறியனும்... உண்மைய சொல்லனும் னா...அன்னக்கி எதுக்காக அவ்ளோ கெஞ்சி cigarette வாங்குனேன் னு தெரியுமா... இஷாவுக்கும் வம்சிக்கும் கல்யாணம் ஆனதுக்கு என்னோட gift ஹ இந்த cigarette ஹ வாங்கி இஷா முன்னாடியே இந்த cigarette மேல சத்தியம் பண்ணி இனிமே இந்த பழக்கத்தை வச்சுக்க மாட்டேன் சொல்றதுக்கு தான்... ஆனா இப்படி ஆகும் னு நா நினைச்சு கூட பாக்கல..."என்று அவன் கண்ணில் கண்ணீர் வடிய...
மேகா கண்ணை துடைத்து விட்டு தன் மார்போடு அணைத்து கொண்டாள்...
***********
நாகராஜ் திருதிருவென 🙄🙄🙄 முழித்து கொண்டு இருக்க...
வம்சி கையில் இருந்த watch ஐ வாசலையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான்...
நேரம் போனதே தவிர... மேகாவும் குருவும் வரவில்லை...
வம்சி நாகராஜ் ஐ 😠😠😠முறைக்க...
நாகராஜ் mind voice : அடேய் குமரகுருபரா எங்க டா இருக்க... வந்து தொல டா... எனக்கு சங்கு ஊத வச்சுடுவ போல... என் bike இருந்திருந்தா கூட நைசா தழுவி escape ஆகி இருப்பேன்... ஆனா நீ என் bike ஹ தானே தூக்கிட்டு போய் இருக்கீங்க... நா எப்படி டா போறது... சீக்கிரம் வாங்க டா...
வம்சி : உன்ன மிதிக்கனும்...
நாகராஜ் : "நா என்ன டா பண்ணேன்..."என்று பாவமாக
வம்சி அவனை ஏற இறங்க பார்த்து விட்டு "மணி என்ன..."
என்று கேட்க...
நாகராஜ் பேசாமல் இருக்க...
வம்சி :"ஹான்... கேட்கல..."என்று காதில் கை வைத்து அவன் பக்கத்தில் காதை கொண்டு போக...
நாகராஜ் : நா இன்னும் சொல்லவே இல்ல...
வம்சி : ம்ம்ம் சொல்லு...
நாகராஜ் : மணி 8...
வம்சி : ம்ம்ம்... எப்படி போறது...
நாகராஜ் : bike ல...
வம்சி : நீ...
நாகராஜ் : நானும் தான்...
வம்சி : உன்னோட bike...
நாகராஜ் : அது தான் ரெண்டு தூக்கிட்டு போயிடுச்சே...
வம்சி : அறிவில்ல...
நாகராஜ் : என்ன டா பொசுக்கு னு இப்படி சொல்லிப்புட்ட...
வம்சி : பின்ன. அவங்க தான் கேட்டாங்க னா... உனக்கு எங்க போச்சு... என் கிட்ட வந்து சொல்லி இருக்கலாம் ல...
நாகராஜ் : சரி இப்ப என்ன பண்ணலாம்...
வம்சி : "இப்ப கேளு..."என்று கத்த...
நாகராஜ் : ப்ச் கோவப்படாத டா... உடனே வந்துடுவேன் னு சொல்லி தான் அந்த குள்ளச்சி சொல்லிட்டு போச்சு... இப்ப இவ்ளோ நேரம் ஆச்சு...
வம்சி :"குள்ளச்சி..."என்று உதட்டோரம் மெலிதாக புன்னகை வர...
நாகராஜ் "ஆமா..."என்று பாவமாக தலையை ஆட்ட...
வம்சி வாய் விட்டு சிரித்து "இந்த குள்ளச்சி விசயத்த அவ இருக்கும் போது சொல்லிறாத உன்னைய குள்ளமாகிருவா..."என்று சொல்ல...
நாகராஜ் 😀😀😀 சிரிக்க...
Bike சத்தம் கேட்க... இருவரும் திரும்பி பார்க்க... மேகாவும் குருவும் வந்தனர்...
வம்சி இடுப்பில் கை வைத்து அவர்களை முறைத்து கொண்டு இருக்க...
இருவரும் bike ஐ நிறுத்தி விட்டு வம்சி நோக்கி வர...
நாகராஜ் வம்சி பின்னால் இருந்து வம்சி கோவமாக இருப்பதாக சைகை செய்ய...
குரு :"நா பாத்துக்கிறேன்..."என்று சைகை செய்தான்...
குரு அருகே நெருங்க நெருங்க வம்சி அவன் முகத்தை உற்று பார்த்தான்...
குரு முகத்தில் மாற்றம் தெரிய... அவன் கோவம் எங்கேயோ சென்று விட்டது...
குரு : வம்சி அது வந்து...
வம்சி தடுக்க...
குரு அவனை பார்க்க...
வம்சி : ஏன் இவ்ளோ late... சரி போலாமா...இஷா இன்னும் வரல னு பதற்றதோட இருப்பா...
குரு : கோவம் இல்லையா...
வம்சி : என்ன டா கோவம்... எதுக்கு கோவப்படனும்... பேசாம வா டா... மணி ஆச்சு...
நாகராஜ் mind voice : அடப்பாவி இவ்ளோ நேரம் தாம் தூம் குதிச்சான்... இப்ப எதுக்கு கோவப்படனுமா... நா தான் உங்களுக்கு கிடைச்சேனா...
வம்சி : போலாமா...
குரு : போலாம்... ஆனா மேகா எப்படி இந்த நேரத்துல தனியா போவா...
வம்சி : ஆமா இப்ப கேளு... வரும் போதே அவளை விட்டுட்டு வந்து இருக்கலாம் ல...
குரு அசடு வழிய சிரிக்க...
வம்சி : சரி விடு...சகிக்கல... நாகா விட்டுவான்... நீ வா...
குரு : இவன் கூட வா...
வம்சி : ம்ம்ம்...
குரு : இவனை நம்பி எப்படி அனுப்புறது...
நாகராஜ் கடுப்பாகி "நம்பாத... நீ கூட்டிட்டு போ... யாரு இப்ப கூப்டது... முத என் bike key ஹ கொடு... நா கிளம்புறேன்... உங்க ரெண்டு பேருக்கும் நா தான் ஊறுகாய் ஹ..."என்று குருவிடம் இருந்து key பிடிங்கி கொண்டு செல்ல...
மேகா நாகா சட்டையை பிடித்து
இழுத்து " ரொம்ப பண்ணாத.... ஒழுங்கா என்னைய hostel ல விட்டுட்டு போ..."என்று சொல்ல...
நாகராஜ் : எதுக்கு மா... உன் ஆளு தான் என்னைய நம்பலையே...
மேகா : ஏய் ச்சீ வா... அவர் சும்மா உன் கிட்ட வம்பு பண்றாரு...
குரு : ஆமா.. ஆமா வம்பு பண்றேன்...
வம்சி குரு முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்...
குரு : ஏன் டா அப்படி பாக்குற...
வம்சி : இப்ப தான் டா நீ பழைய குரு வ தெரியுற... இத்தனை நாளா எங்க டா போன...
குரு : நா ஒன்னும் மாறல... அப்படியே தான் இருக்கேன்...
நாகராஜ் : Ok... Mr.குமரகுருபரன்... வாங்க போயிட்டு வரோம்...
குரு வேகமாக வம்சி கையில் இருந்த bag பிடிங்கி "அடிங் கொய்யல உனக்கு எத்தனை தடவ டா சொல்றது... பிச்சு புடுவேன் பிச்சு..."என்று சொல்ல...
நாகராஜ் ம் வம்சியும் சிரித்தனர்...
குரு : எதுக்கு டா சிரிக்கிறீங்க...
வம்சி : இப்ப தான் மாறல னு சொன்ன...
நாகராஜ் : ஆனா நா குமரகுருபரன் னு சொல்லவும் கோவப்படுற...
குரு : ஏன்... ஏன்.. ஏன்.. நா எப்பவும் நாகா இப்படி சொல்லு போது கோவப்படுவேன் தானே...
நாகராஜ் : "இல்ல கொஞ்சம் நாளா நா குமரகுருபரன் னு பல தடவ சொல்லி இருக்கேன்... ஆனா நீ அது கண்டுக்கவே மாட்ட... ஆனா இப்ப மறுபடியும் கோவப்படுற... நீ பழையபடி மாறுனது ரொம்ப சந்தோஷம் டா..."என்று அவனை 🤗🤗🤗கட்டி கொண்டான்...
நாகராஜ் குரு விடம் இருந்து விலக... அவன் கண் கலங்கி இருந்தது...
குரு :டேய் Snake king என்ன டா கண்ணு வேர்க்குதா...
நாகராஜ் : "ஆமா fan போட்டு விடு...உண்மையா நா உன்னை ரொம்ப miss பண்ணேன் டா... எப்பவும் உன்னை நினைச்சு வம்சியும் மேகாவும் feel பண்ணிட்டே இருப்பாங்க... நானும் feel பண்ணா அவங்க கூட சேர்ந்த மாதிரி ஆகிரும்...
அப்புறம் கடைசி வரைக்கும் அப்படியே இருக்க வேண்டிய தான்... அதனால் தான்...நா அப்பப்போ எதாவது பண்ணி சிரிக்க வைப்பேன்... ஆனா தனியா போய் உன்னையே நினைச்சு அழுவேன் டா... என்னைய Snake king னு நீங்க ரெண்டு பேரும் தான் கூப்டுவீங்க...
அதிகமா கூப்டுறது நீ தான் டா குரு... அந்த பேர கேட்காம ஒரு மாதிரி இருந்துச்சு டா...எனக்கு அந்த பேர வச்சதே நீ தான் னு எனக்கு தெரியும் டா... உண்மை சொல்லனும் னா சின்ன வயசு ல இருந்தே எனக்கு friends னு யாரும் இல்ல...
அப்படியே யாராவது பேசுனா... எதாவது தேவைக்கு மட்டும் தான்... யாரும் பார்த்தா Hi hello அவ்ளோ தான்... இங்க தான் நீங்க ரெண்டு பேரும் தான்... Friendly jolly என் கூட பேசுனீங்க... எந்த பொண்ணுமே என் கிட்ட பேச மாட்டாங்க...
College படிக்கும் போது ஒரு பொண்ணை love பண்ணேன்... Propose கூட பண்ணேன்... அந்த பொண்ணு என்னைய பிடிக்கல னு சொல்லி இருந்தா கூட பரவா இல்ல... ஆனா அந்த பொண்ணு என்ன சொன்னா னு தெரியுமா...
நீ ஆள் பாக்க நல்லா இருக்க... என் Boy friend னு பந்தா காட்டலாம்... ஆனா உன் பேரு தான்...உன் பேர எப்படி என் பேருக்கு பின்னாடி போடுறது னு வேணாம் னு சொல்லிட்டா...
அவ பேரு ஹரிணி... ஹரிணி நாகராஜ் னு சொன்னா நல்லவா இருக்கு னு கேட்டா... ஆனா இப்ப அவளை நினைச்சா சிரிப்பா இருக்கு... அவ married... அவ husband name என்ன னு தெரியுமா... சாமிக்கண்ணு...
என் பேரு style இல்ல னு சொன்னா... இப்ப அவ பேரு ஹரிணி சாமிக்கண்ணு... சாமி பேர பழிச்சா இப்ப பாரு... எப்படி ஆகிருச்சு னு... எப்பவும் தனியா தான் இருப்பேன்... ஆனா உங்கள மாதிரி friend கிடைக்க தான் அந்த ஆண்டவன் என்னைய தனியா வச்சு இருந்தானோ என்னவோ..."என்று கண் கலங்க...
வம்சிவும் குருவும் அவனை🤗🤗🤗 கட்டி கொண்டனர்...
தொடரும்...
# Nancy...
0 Comments