"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

காதல் கண்ணாமூச்சி - 1

 


             காதல் கண்ணாமூச்சி - 1

காலையில இளஞ்சூரியன் மெல்ல எழுந்து தரிசனம் தர...🌄

கௌசல்யா :

எப்பவும் ஊருக்கு முன்ன, எழுந்து கோலம் போடுவா !..ஆனா இன்னைக்கு பாரு..வேணும்னே இழுத்து போர்த்தி தூங்குறா !! ன்னு முணுமுணுத்துக்கிட்டே வாசல்ல தண்ணி தெளிக்குறாங்க..

உள்ள வந்து அடியேய் !! நேரம் ஆகுது டி .. எழுந்து கோலம் போட்டுட்டு குளி அபி..

அபி : போமா..நைட் லேட்டாதான் படுத்தேன் மா..தூக்கமே வரலை.. இப்போ தான் வருது.

கௌசல்யா : இது மட்டும் உங்க அப்பா கேட்டாரு காலையிலேயே சாமி ஆடிடுவாரு !! டி

அபி :  "நீ இப்படியே கத்திட்டே இரு..ஆடாமா என்ன பண்ணுவாரு"ன்னு போர்வையை எடுத்து சோம்பல் முறிக்குறா..

இவதாங்க நம்ம கதையோட நாயகி..

இன்னைக்கு இவளை பொண்ணு பார்க்க வராங்க.. அதுக்கு தான் அபியோட அம்மா கௌசல்யா இவ்வளவு டென்ஷன் ஆகுறாங்க.

அபி : நீயே போட வேண்டியது தானே மா..

கௌசல்யா : நீ போட்டா தான் டி அழகா இருக்கும். இன்னைக்கு வெள்ளி கிழமை வேற

அபி : சரி..போடுறேன் விடுன்னு போய் கோலம் போடுறா....

அப்படியே போய் ப்ராஸ் பண்ணிட்டு முகத்தை கழுவிட்டு

"அம்மா" காஃபி எங்க மா..இன்னுமா வைக்குல..

கௌசல்யா : எல்லாம் போட்டாச்சு..வந்து எடுத்துக்கோ.

அபி : ரஸ்க் எங்க மா ?? 😩

கௌசல்யா : அடியேய் !! எதுவும் தேடி பாக்க மாட்டியா !! என்ன தான் பொண்ணோ. எல்லாத்துக்கும் நானே வரணும்.

இந்தன்னு எடுத்து தராங்க..

அபி : 😁😁 தேங்க்ஸ் மா..ஆமா என்ன காலையிலேயே என்னமோ பண்ணிட்டு இருக்க.

கௌசல்யா : மைசூர் பாக் டி..

அபி : என்ன திடீர்னு !!🤔🤔

கௌசல்யா : அதுவா ?? இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க..

அபி : சும்மா விளையாடாதா மா. 😆😆

கௌசல்யா : நிஜமா டி..ஒரு வாரம் முன்னாடி கூட அப்பா சொன்னாரு இல்ல

அபி : ஹா..ஆனா நான் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டா எம்.பி.ஏ பண்ணாணும்னு சொன்னேன்னே. அவரும் சரின்னு சொன்னாரு🥺🥺🥺

கௌசல்யா : அதுலா மாப்பிள்ளை வீட்டுல பேசியாச்சு.. கல்யாணத்துக்கு அப்புறம் படிக்கலாம் ன்னு சொல்லிட்டாங்க.

அபி : அம்மா !! 😭😭 எனக்கு கல்யாணம் வேண்டா மா...

கௌசல்யா : 😳😳 ஹே..பாப்பா ஏன் டி அழுகுற ?? யாரையாவது லவ் கிது பண்றீயா ??

அபி : 🤔🤔 லவ் பண்றேன்னு சொன்னா கல்யாணம் பண்ணா மாட்டிங்களா ??

கௌசல்யா : உங்க அப்பா உசுராயே விட்டுரு வாடி..

அபி : அம்மா என்ன பேச்சு பேசுற..வாயை கழுவு.. நான் உங்களை தவிர வேற யாரையும் லவ் பண்ணால..எனக்கு படிக்கணும் உங்க கூடவே இருக்கணும் அவ்வளவு தான்.

அபி அப்பா கணபதி : எங்களுக்கு என்ன உன்னை தூரத்தி விடணும்னு ஆசையா மா..இது எங்களோட கடமை மா..

அபி : பா... கொஞ்ச நாள் போகட்டும் பா..

கணபதி : இங்க வா மா.. இப்படி உட்காரு.

அபி : சொல்லுங்க பா..

கணபதி : இங்க பாரு மா..என் உடம்பும் முதல்ல இருந்த மாதிரி இல்ல. உனக்கு அப்பறம் ப்ரியா இருக்கா.. அவளையும் பாக்கணும். இப்ப வந்து இருக்க மாப்பிள்ளை நல்ல இடம் மா.. எதுவும் விசாரிக்காமா முடிவு பண்ணாலை. பையன் பேரு அர்ஜூன். பெரிய கம்பெனி லா வோர்க் பண்றான்.

அபி : 🥺🥺🥺

கணபதி : இந்த அப்பா காக சரின்னு சொல்லு மா..

அபி : சரி பா..

கணபதி : இதுதான் என் பொண்ணு..சரி போ மா..போய் குளிச்சுட்டு ரெடி ஆகு.

அபி போய் குளிச்சுட்டு ஒரு கார்ட்டன் சுடி போட்டுட்டு வரா..

இது ஓகே வா மா..

கௌசல்யா : ஏய் !! பொண்ணு பாக்க வராங்க டி... டேபிள் ல புது புடவை வைச்சு இருக்கேன் பாரு.அது கட்டு., நேரம் ஆகுது.

அபி : வந்து கட்டி விடு மா.. எனக்கு தா கட்ட தெரியாது இல்ல..

கௌசல்யா : போய் ப்ளவுஸ் போடு வரேன்.

அபி : மா வா...போட்டாச்சு..

கௌசல்யா புடவை கட்டி விட்டு தலைவாரி விடுறாங்க..

அபி !! நீ இன்னும் சின்ன பொண்ணு இல்ல. நல்லா பொறுப்பா இருக்கணும்.போறா இடத்துல நல்ல பேரு வாங்கி  தரணும்.

அபி : ஏன் மா ?? இப்ப இருக்குற பேரு நல்லா இல்லையா ?? 😂😂😂

கௌசல்யா : இந்த கிண்டல் தானே வேண்டாம்கிறது. இதுலா இங்கயே மூட்டை கட்டி வைச்சு போ.

அபி : மா.. மாப்பிள்ளை போட்டோ இருக்கா. மாப்பிள்ளை என் போட்டோ பாத்து இருக்காங்களா ?? எனக்கு மாப்பிள்ளை யை பிடிக்கலைன்னா ??

கௌசல்யா : ஏன் டி ?? அதுலா பிடிக்கும். நல்லா அழகா தா இருக்காரு. போட்டோ ப்ரியா தான் வைச்சு இருந்தா., வாங்கி பாரு.

அபி : ப்ரியா !! எங்க டி இருக்க.

ப்ரியா : இங்கதான் இருக்கேன். என்ன போட்டோ வேணுமா. தர மாட்டேனே ; 😉😋😋

அபி : ஏய் தா டி.. நேரம் ஆகுது.. எப்படி இருக்கான்னு பாக்கலாம்.

ப்ரியா : செமயா இருக்காரு கா... உனக்கு வேண்டாம்னு சொன்னா நானே பண்ணிக்கிறேன்.

அபி : ரொம்ப சந்தோஷம். நீயே பண்ணிக்கோ. அப்பாகிட்ட சொல்றேன். பா..

ப்ரியா : அச்சோ நான் சும்மா சொன்னேன். நீ அப்பாகிட்ட சொல்லாதா. இரு போட்டோ எங்க வைச்சேன்னு தேடுறா..

வாசல்ல 2 கார் வந்து நிக்குது. 🚗🚙

அபி : 😳😳 போச்சு வந்துட்டாங்க.

இனி என்ன ஆகும்னு நாளைக்கு பாக்கலாம்.

தொடரும்...

# Bhuvi

Post a Comment

17 Comments