காதல் கண்ணாமூச்சி -6
அர்ஜூன் : கார்ல உட்காருங்க.
அபி : ம்ம்..
கௌசல்யா : பாத்து போய்ட்டு வா.. தயவு பண்ணி உன் பேச்சு திறமையை மாப்பிள்ளை கிட்ட காட்டாதா டி.
அபி : சேரி மா.. நான் வரேன்னு கார்ல ஏறுறா..
அர்ஜூன் காரை ஸ்டார்ட் பண்ணி போறான்.
எங்க போலாம்.
அபி : பார்க் போலாம்.
அர்ஜூன் : கோவிலுக்கு வேண்டாம் மா ??
அபி : இல்ல அங்க போய் நாமா பேசிட்டு தான் இருக்க போறோம்.
அர்ஜூன் : ஆமா.. அதுக்கு ஏன் கோவில் வேண்டா.
அபி : இல்ல..மத்தவங்கலா சாமி கும்பிட தான் வருவாங்க. அப்போ நாமா மட்டும் பேசிட்டு இருந்தா நம்மலை தான் பாப்பாங்க. வேற ஊரு கோவில்னா பிரச்சினை இல்ல. இது எங்க ஊரு கோவில்..அங்க வர எல்லாருக்கும் என்னை தெரியும். சோ தேவையில்லாம எல்லாருக்கும் பதில் சொல்லணும்.
அர்ஜூன்: ரொம்ப நல்ல திங்க் பண்றீங்க.. இப்படி தான் இருக்கணும். ஓகே பார்க் போக வழி சொல்லுங்க.
அபி : ம்ம் சொல்றேன்னு ரூட் சொல்றா..
5 நிமிடம் கூட இல்ல..பார்க் வந்துட்டாங்க.
ரெண்டு பேரும் அங்க இருந்த ஒரு கல் படுக்கையில உட்காருராங்க.
கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அமைதியாவே இருக்காங்க.
அபிக்கு என்ன பேசுறது எப்படி ஆரம்பிக்குறதுன்னு யோசிச்சுட்டு இருந்தா.
அர்ஜூன் அப்போ தான் அபியை நல்லா பார்குறான்.
கனகாம்பரம் கலர் கார்ட்டன் புடவை..மெரூன் கலர் பொட்டு. உதட்டுக்கு கீழே குட்டியா ஒரு மச்சம். அடர்த்தியான புருவம்.. கண்ணில் நீளமான இமைகள். பார்க்கவே அழகா இருந்தா..
அதுல அவ போட்டு இருந்தா ஜிமிக்கி கம்மல் வேற இதுக்கும் அதுக்கும் ஆடிக்கிட்டு..
கையில சிம்பிள ஒரு வளையல் அப்பறம் வாட்ச்.
அர்ஜூன் : (டேய் அர்ஜூன் ஏன் டா இவளை இப்படி பாக்குற..நாமா வந்தது கல்யாணத்துக்கு நோ சொல்ல..)ன்னு அவனுக்குள்ளே சொல்லிக்கிட்டாலும் அவன் பார்வை அபியை விட்டு போகலை.
அர்ஜூன் அபியை பாக்குறதை பாக்குறா..
அபி : ஏன் இப்படி பாக்குறீங்க..
அர்ஜூன் : அது அது ஒன்னும் இல்ல.. நீங்க என்கிட்ட பேச இல்ல சொல்ல ஏதாவது இருக்கா.
அபி : ம்ம்..ஆமா நிறைய ??
அர்ஜூன் : தரலாமா கேட்கலாம்.
அபி : அது..வந்து எனக்கு ன்னு சொல்ல வரும் போது...ஒரு பெரிய சத்தம் டோம்முன்னு...
அபி ஒரு நிமிஷம் பயந்துட்டா.. அம்மா ன்னு அர்ஜூன் கையை இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு கண்ணை மூடிக் கிட்டா...
அர்ஜூன் : என்ன ஆச்சுன்னு பாக்குறான்.
அபி கொஞ்சம் நார்மாலா கண்ணை திறந்து சாரின்னு சொல்லிட்டு கையை விட்டுட்டு எழுந்து பாக்குறா.
பார்க் வெளியே ஒரு ஆக்ஸிடென்ட்..
ரெண்டு பேரும் ஓடுறாங்க..
ஒரு சின்ன மினி டெம்போ ஒரு சைக்கிள் ரிக்க்ஷா மேல மோதி அதுலா இருந்த தக்காளி கூடை எல்லாம் கீழே கொட்டி இருந்தது.
அபி : அந்த ரிக்க்ஷா காரரை தூக்கி விடுறா.. அவருக்கு பக்கத்துல இருந்த ஒரு பாட்டியை தூக்கி விடுறா..
அந்த பாட்டி அச்சோ என் முதல்லே போச்சே.. எல்லாம் கெட்டிடுச்சேன்னு அழுகுறாங்க..
அபி : பாட்டி ஒன்னும் ஆகாலை..கீழே தான் கெட்டி இருக்கு..எடுத்து போட்டுறாலாம்.நீங்க அழாதீங்க. உங்களுக்கு அடி எதுவும் படலை இல்ல..
பாட்டி : இல்ல மா..
அங்க ஒரு கூட்டமே வந்துருச்சு..
அபி : ப்ளீஸ் கொஞ்சம் எல்லாரும் சேர்ந்து இதை எடுத்து வைச்சா சீக்கிரம் ரூட் க்ளீயர் பண்ணிடலாம்.
அர்ஜூன் ( ரொம்ப நல்ல பொண்ணா இருக்கலே..இவளை நாமா கல்யாணம் பண்ணி இவ வாழ்க்கையை நாமா கஷ்டப்படுத்த வேண்டா..ன்னு நினைக்குறான் )
அபி : என்ன பாக்குறீங்க..நீங்களா ஹெல்ப் பண்ண மாட்டீங்களா ??
அர்ஜூன் : பண்ணா மா என்ன ?? பண்றேன்னு அவனும் தக்காளி யை எடுத்து போடுறான்.
ஒரு மணி நேரம் இந்த வேலையை பாத்துட்டு இருந்து இருப்பாங்க.
பாட்டி : மகராசி !! நீ 100 வருஷம் நல்லா இருக்கணும் மா..நீ இல்லன்னா இந்நேரம் இந்த பழம் லா சாக்கடை க்கு தான் போய் இருக்கும்.
நீ குழந்தை குட்டியோட நல்லா இருப்ப மா
அபி : ம்ம் சரி பாட்டி.. தேங்க்ஸ்.. நீங்க பாத்து போய்ட்டு வாங்க..
பாட்டி :. இது யாரு மா..உன் புருஷனா..ஜோடி நல்லா இருக்கு.
அபி : இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகாலை பாட்டி. இப்போ தான்..
பாட்டி : ஓ.. புரியுது மா..உங்க மனசு போல நல்லா இருப்பீங்க.
தம்பி நல்ல பொண்ணு..விட்டுறாதா...காலம் முழுக்க உன்னையும் உன் குடும்பத்தையும் அவ குடும்பம் மாதிரி பாத்துப் பா...
அந்த பாட்டி சொன்னா இந்த வார்த்தை அர்ஜூனை அபிகிட்ட கல்யாணம் வேண்டாம்னு சொல்ல தோணாலை.
அர்ஜூன் : ம்ம் சரி பாட்டி.
அபி : நாங்க வரோம் பாட்டி..
அர்ஜூனும் காரை எடுக்கிறான்.
அபி : சாரி..
அர்ஜூன் : எதுக்கு
அபி : இல்ல நீங்க என்கிட்ட பேச தான் வந்தீங்க..ஆனா பேசவே இல்ல
அர்ஜூன் : பரவாயில்லை..பேசுறதை விட நீ எப்படின்னு பாத்தே புரிஞ்சுக்கிட்டேன்.
அபி : ம்ம்..
வீட்டு வாசல்ல கார் வந்து நிக்குது..
அபி கீழே இறங்குறா..
அர்ஜூனும் வரான்.
கணபதி : மாப்பிள்ளை..வாங்க சாப்பிடலாம்.
அர்ஜூன் : இல்லாங்க.. நேரம் ஆச்சு.
கௌசல்யா : அது லாம் முடியாது.. சாப்பிட்டு தான் போகணும் வாங்க.. இது நம்ம வீடு மாப்பிள்ளை. வாங்க.
கணபதி : மா மாப்பிள்ளையை கூப்பிட்டு உள்ள வா..
அபி : வாங்க.. சாப்பிட்டு போலாம்.
அர்ஜூன் : ம்ம்.. சரி ன்னு வரான்..
ப்ரியா : ஹாய்..மாமா..
அர்ஜூன் யாருன்னு தெரியாமா முழிக்குறான்.
அபி : என் தங்கச்சி..
பிரியா : என்ன மாமா இப்படி முழிக்குறீங்க..அப்போ இவ என்னை பத்தி சொல்லவே இல்ல யா..
அபி : ஏய்.. அப்பறம் சொல்றேன்.. இப்போ அவரை சாப்பிட விடு..
பிரியா : பாரு டா..இப்போவே புருஷன் மேல அக்கறை.
அபி : வாயைக் கொஞ்சம் க்ளோஸ் பண்ணிட்டு போ..
சாரிங்க..அவ பேசுனதுக்கு.
அர்ஜூன் : பரவாயில்லை..
ன்னு கை கழுவிட்டு வரான்.
கௌசல்யா : இந்த நீ பரிமாறு..
அபி : போ..நீயே பரிமாறு..
கௌசல்யா : ஏன் டி... வருங்கால புருஷன் தானே.
அபி : நான் அப்படி சொன்னேன்னா ??
கௌசல்யா: ஏய் தலையில குண்டு போடாதா டி.
அபி : போ..போய் நீ முதல்ல வந்தவாருக்கு சாப்பாடு போடு...
கணபதி : உள்ள ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க..
கௌசல்யா : தோ வரேன்..
அபி வாடி ன்னு கூட்டிட்டு போறாங்க.
அபியும் பரிமாறுறா..
அர்ஜூன் கொஞ்சமா சாப்பிட்டு எழுந்துட்டான்.
சரி நான் வரேங்க..டைம் ஆச்சு.
கணபதி : ம்ம்..சரிங்க மாப்பிள்ளை..போய்ட்டு வாங்க.
வாசல் வரை போறாங்க.
அபி அவ ரூம்க்கு போய்ட்டா..
அர்ஜூன் அபியை தேடுறான். அவளை காணோம்.
கார் ஸ்ராட் பண்றா..
அபி ஏன்னே தெரியாமா ஓடி வந்து பால்கனில நின்னு பாக்குறா..
அவ பாக்கும் போது அர்ஜூனும் பாத்துடுறான். லைட்டா சிரிச்சுட்டே போறான்.
தொடரும்...
# Bhuvi
22 Comments
Story super 🥰🥰🥰 sister
ReplyDeleteThanks pa
DeleteSuper sis 😍😍naan than 1st 😊😊
ReplyDeleteOhh..thank you so much ma
DeleteHaa haa semma super sisyyy ethirpakave ila semmaya iruku 🤩😍😍😍😍
ReplyDeleteThank you ma 😊
DeleteSuper akka story.. Arjun kalyanathukku ok solluvara.... Waiting for next episode sekrama podungha akka
ReplyDeleteKandipa marriage nadakum pa..
DeleteSema story
ReplyDeleteThanks pa
DeleteThanks pa
DeleteSemma super sis... Keep rocking
ReplyDeleteThanks pa
DeleteSema story akka
ReplyDeleteThanks pa😊
DeleteSema story akka
ReplyDelete😊 thanks pa
Deletesuper sister
ReplyDeleteThanks pa
DeleteSuper 👌 😄 sis
ReplyDeleteThanks pa
DeleteEpudi...naanga ( abi) enagla epdi venamnu sola mudiyum un manasa maatha vandhavan dhaan arjun abi adhayum purinjiko...thank god..
ReplyDelete